Social Icons

Pages

Saturday, December 22, 2012

இதுவும் ஒரு கணக்கு!
நாள்தோறும் கிழக்கே உதித்து
மேற்கே மறைகின்ற
பகலவன் என்று ஒரு கணக்கு!
திங்கள் தோறும் தேய்வது என்றும்
வளர்வது என்றும்
வான்மதி என்று ஒரு கணக்கு!
எண்ணிலா நட்சத்திரங்கள் கோள்கள்
எல்லாமே கணக்குத்தான்!
எதற்காக இவை
என்றெண்ணிப்பார்த்ததில்
இத்தனையும்
இறைவன் போட்ட கணக்கு
என்பது புரியலாகும்!
சீனிவாச ராமானுஜன்
என்றொரு கணிதமேதை
நானிலத்தில் இனியதமிழ்நாட்டில்
பிறந்ததுமோர்
கணக்கே என்பேன்!
பதினொன்றாம் வயதுக்குள்
ராமானுஜன்
பதித்தார் கணக்கிலேதன்
மேதைமையை!
புதிதுபுதிதாய்
இலக்கணங்கள் பலவற்றை
கணிதமேதை ஆக்கிவைத்தார்!
முன்னொரோர் ராமானுஜன் உதித்து
வைணவத்தை வளர்த்தார்
பின்னர் வந்த ராமானுஜன்
கணிதத்தை வளர்த்தார்!
மேதைகள் நெடுநாட்கள்
வாழ்வதில்லை
இப்படியும் ஓர்
கணக்குண்டோ
இ்றைவனுக்கு?
கணக்கிலடங்காப்புகழ் குவித்த
கணிதமேதை ராமானுஜனை
தாரணியும் தவிப்போடு
இழந்ததன்றோ?
உடல்நிலைகுன்றிய நிலையி்ல்
உற்ற நண்பர் ஹார்டி பார்க்கவந்தவர்
குரல் உடைந்து
‘நான் வந்த காரின் எண் 1729ன்
துரதிர்ஷ்டம் போலும்’
என வருந்தி நிலைகுலைந்தார்
ராமானுஜரோ
அந்த அ ந்திம திசையிலும்
’நண்பரே வருந்தல் வேண்டா
1729 அற்புதமான எண்ணே ஆகும்!
1729 அற்புதமான எண்ணே ஆகும்!
1x1x1+12x12x12=1729
9x9x9+10x10x10=1729
என்றார் சிரித்தவாறே!
அதுகேட்டு
ஹார்டியும்
வியந்தேபோனார்!
மேதைபோட்ட கணக்கு
பிசகாதன்றோ?
மேன்படுவோம் அவர்தம்
கணக்கை வாழ்வில் கொண்டு!
(இன்று கணிதமேதையின் பிறந்தநாள்! கூகுளை யாரும்கவனித்தீர்களோ ?:)

9 comments:

 1. கணித மேதை இராமானுஜம் பிறந்த நாளை நினைவூட்டும் வகையில்
  அவரால் முன் நிறுத்தப்பட்ட
  1729 எனும் அற்புதமான எண்ணையும் நினைவுறுத்தியதற்கு நன்றி.

  அவரது உலகம் எண்களின் படிகளையும் படிமங்களையும் பரிணாமங்களையும் சார்ந்தது.

  இன்னமுமே அவரது சில குறிப்புகள் கையெழுத்து புத்தகமாகவே இருக்கின்றன.

  அந்த ஹார்டி இல்லயென்றால் இந்த கணித மேதை உலகின் கண்களுக்கு புலப்பட்டிருக்கமாட்டான்
  என்பதும் உண்மையே.

  இன்றைய நாளில் காச நோய் ஒரு குணப்படுத்தக்கூடியது.
  அன்று இல்லை என்பது நமது கணித உலகம் அதிருஷ்டம் செய்யவில்லை.

  இறைவன் போட்ட கணக்கு என்னவென‌
  இன்னும் இருபது முறை பிறந்தாலும் புரியாது.

  கூகிளில் போட்டிருக்கும் முகப்பு இராமானுஜம் கையெழுத்து போல் இல்லையே !!

  இருந்தாலும் அதில் காணும் பை 22 / 7 மதிப்பு என்ன என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது...
  எங்கு முடியும் இந்த வரிசை என வியக்கவைக்கிறது அல்லவா ?


  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 2. கணித மேதைக்கு நல்லதொரு அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்!
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. கணித மேதை ராமானுஜம் அவர்களைப்பற்றி நினைவு கூர்ந்து தாங்கள் எழுதியுள்ள கவிதை அஞ்சலி மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete

 4. நானும் என் பங்குக்கு ராமானுஜனின் மேஜிக் எண்கள் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.(சில நாட்களுக்கு முன்.)

  ReplyDelete
 5. நல்லதொரு கவிதை தந்துள்ள உங்களுக்கு ஏதாவது நான் தரணும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

  சரி, என் பதிவுப்பக்கம் வாங்கோ.

  சூடான சுவையான அடை காத்திருக்கிறது.

  இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 6. Good that you posted a nice poem on this special day.....

  Thanks for sharing....

  ReplyDelete
  Replies
  1. அன்பு ஷைல்ஸ்
   நேரத்திற்கும் நாளுக்கும் ஏற்ற பதிவைப் போட்டு இருக்கிறீர்கள். இராமானுஜம் என்னும் ஆத்மா எல்லோர் நெஞ்சகங்களிலும்0
   வாழ்வதை அருமையாகக் கவிதையாக வடித்திருக்கிறிர்கள்.
   மிக மிக நன்றி.

   Delete
 7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 8. புத்தாண்டு வாழ்த்துக்கள்.How Are You

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.