Social Icons

Pages

Sunday, April 30, 2017

காரேய் கருணை இராமானுஜ!

இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த  அரவரசப்
பெருஞ்சோதி  அனந்தன் என்னும்   ..என்று ஆழ்வார் பெருமான்  அருளியதுபோன்ற ஆயிரம்பைந்தலையுடைய  அனந்தனின்  அவதாரமான  பெரும்பூதுர்மாமுனியின் ஆயிரமாவது திருநட்சத்திர கோலாகலம்  பாரதம் மட்டுமின்றி அயல்நாடுகளில் சில இடங்களிலும் கொண்டாடப்படுகின்றன. (1.5.2017)இத்தகைய அனுபவம் கிடைக்க வேண்டிய பேறுடையவர்களாக நாம்  இக்காலக்கட்டத்தில் வாழ்வதும் பெருமைக்குரியதே!
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் பிறந்தவரை
தெலுங்கு மொழியிலும்போற்றிப்பாடுகிறார்கள் .கர்னாடகத்தில் கன்னடத்தில் ராமானுஜ நூற்றந்தாதியை  வைத்துக்கொண்டு மழலைத்தமிழில் பாடுகிறார்கள். மேல்கோட்டில்  ராமானுஜ வைபவம்  காணக்கண் ஆயிரம் வேண்டும்.
ஆந்திர மக்களின்அதுவும் ஒடுக்கப்பட்ட தெலுங்கு மக்களின் 
இராமானுஜ அன்பு அலாதியானது! மார்கழியில்ஆந்திராவில்இராமானுச கூடங்கள்ராமானுஜ கூடாலுகளில் கூட்டம் அலைமோதும்
சங்கீத மும்மூர்த்தியான தியாகராஜருக்கும்  முன்னமே இருந்தவர்அன்னமாச்சார்யர் என்பவர் அவர்ஒரு தனிக் கீர்த்தனை  ராமானுஜர் மீது பாடி உள்ளார!

கதுலன்னி கிலமைன கலியுக மந்துனு என்று துவங்கும்  சுந்தரத்தெலுங்கு கீர்த்தனையில்
மலசி ராமானுஜுலு
மாடலாடே தெய்வமு..ஈதடே ராமானுஜூலு
இகபர தெய்வமு..
நயமை ஸ்ரீவேங்கடேசே (அன்னமய்யா)நாக மெக்க வாகி தன்னு
தய சூசிதய சூசி
ராமானுஜ தெய்வமு

ஆமாம்  யார் இந்த ராமானுஜர்ஆயிரமாவது ஆண்டை இப்படிக்கொண்டாட என்ன காரணம்!  ஒன்றா இரண்டா அதற்கும் ஆயிரம் காரணம் உண்டல்லவா! எளிமைக்கு இலக்கணம்  , கருணைக்கு அர்த்தம்  எம்பெருமானார் எனப்படும் எங்கள் ராமானுஜரே!

என்னைப்புவியில் ஒரு பொருளாக்கி, மருள்சுரந்த

முன்னைப் பழவினைவேறறுத்து, ஊழிமுதல்வனையே

பன்னப்பணித்த இராமானுசன், பரன்பாதமுமென்

சென்னித்தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே. 

(ராமானுஜ நூற்றந்தாதி)

தனக்குப் புகழ் சேர்த்துக் கொள்ளாது,தன் சீடர்களில்தன்னை விட இளையோர்க்கும் புகழ் சேர்த்த பிரான்
தனக்குத் தரப்பட்ட சிறப்புப் பெயர்களைத் தான் வைத்துக் கொள்ளாது,உடனே தன் சீடர்களுக்குக் கொடுக்கும் குணம்
(
யக்ஞமூர்த்திக்கு = அருளாளப் பெருமாள் எம்பெருமானார்..எம்பெருமானார் என்ற பட்டத்தையும் கொடுத்து விட்ட உள்ளம் தான் என்னே!)
கூரத்தாழ்வார்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
அமுதனார்
போன்ற மூத்தவர்களையும்
முதலியாண்டான்
பிள்ளை உறங்கா வில்லி
எம்பார்
அனந்தாழ்வான்
வடுக நம்பி
கிடாம்பி ஆச்சான்
தொண்டனூர் நம்பி
போன்று இளையவர்களையும்
பல்வேறு சாதிகளில்பல்வேறு மதங்களில்பல்வேறு கோட்பாடுகளில்
 
பல தரப்பினரையும்தன் பால் ஒருங்கே அரவணைத்த
 கருணைக்கடலின்கழல்போற்றி!.

..அதேபோல
அத்துழாய்,ஆண்டாள்,பொன்னாச்சி,தேவகி,அம்மங்கி,பருத்திக் கொல்லை அம்மாள்,திருநறையூர் அம்மாள்,
*
எதிராச வல்லி
என்று எத்தனை பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,
சமூகமே அறியும் வண்ணம்,பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்கள் கொடுத்து
பெண் குலம் தழைக்க வந்த  எங்கள் எதிராஜரின் திருவடி போற்றி!
**மேலக்கோட்டையில் அனைவரையும்திருக்குலத்தார் என்று உள்ளே நுழைத்துக் காட்டிய  இளையாழ்வார் திருவடி போற்றி!
.
தமிழ் வேதம் முன் ஓதிச் செல்லபெருமாள்தமிழைப் பின் தொடர
வடமொழி வேதங்கள் பின்னே தான் ஓதிச் செல்லும் நிலையைக்கொணர்ந்தவர்..
பைந்தமிழ் முன் செல்ல
பைந்தமிழின் பின்னே செல்பச்சைப் பசுங் கொண்டலே
என்று பெருமாள் புறப்பாட்டை  அருணகிரியார் பாடுகிறார் எனில் ஆலயப்புரட்சி இதுதானே! மதத்தில் புரட்சி செய்த மகானின் திருவடி போற்றி!

சோழன் துரத்தத் துரத்த நடந்து, மேலக்கோட்டை செல்வப் பிள்ளையின் சிலையைப் பெறவடநாடு பக்கம் நடந்து,
 
திருப்பதியில் பிரச்சினை வந்த போதுவயதான காலத்திலும்அங்கு செல்ல நடந்து, தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்து
  
ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்க கோபுர  உயரத்திற்குநடந்து
-- சமயம் பெரிதல்ல சமூகமே பெரிதென உணர்த்த  பயணம் நடந்து… நடந்து…நடந்தகால்கள் நொந்ததோ  என ஆழ்வார் பாடியதுபோல அந்த வேதனையை சற்றும் பொருட்படுத்தாத பிறர்நலம் பேணும் பெருமானின் திருவடி போற்றி!
ஹொய்சாள அரசன்சமணத்தில் இருந்து வைணவம் மாறினாலும்..அவன் மனைவி மாறாமல்சமணத்திலேயே இருந்தாள்
அவளை அப்படியே இருக்கவிடு,  உன் வழிக்கு
நெருக்காதே என்று சொன்ன  அன்பாளன் திருவடி போற்றி!
சமயப் போரில் வாதிட்டுத் தோற்றவர்களை எல்லாம்
அரசியல் பலத்தால்கழுவில் ஏற்றி காலம்
ஆனால் வாதில் தோற்றவர்களையும்தன் மடங்களில் வைத்து அரவணைத்து,அப்படி விரும்பாதவர்களைஅவர்கள் போக்கில் விட்டு்விட்டபண்பாளர் பாஷ்யக்காரர் திருவடி போற்றி!

 “நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்” என்று ராமானுஜருக்கு 400வருடங்கள்முன்பாக தோன்றியஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றிய கோயில் அண்ணரின் குமுதத்திருவடி போற்றி!

திருப்பாவை பாசுரங்களில் தீராக்காதல்கொண்ட  பேரருளாளன் பக்தரின் பங்கயத்திருவடி போற்றி!

*************************************************************************

எம்பெருமானாருக்கு  அரங்கனுக்கு உடையவருக்கு  ஒருபாடலை நான் எழுதிப்பாடியதை  இணைப்பில்காண்க! யுட்யூப் வடிவமைத்த  மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு நாகராஜன் அவர்களுக்கு  மிக்க நன்றி.
மேலும் படிக்க... "காரேய் கருணை இராமானுஜ!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.