பாதுகாப்புப் பெட்டறையில்
உன் கடிதம்.
அவ்வப்போது
எடுத்துப் பார்க்கிறேன்
பிரிக்கும்போதே
மடிப்புகளில் விரிசல்
பழுப்பேறிவிட்டாலும்
பழைய தாளிலும்
உன் பளிங்கு உடல் வாசம்.
முத்தான கையெழுத்து
உன் முறுவலைப்போல.
ஒவ்வொருவருக்கும்
கையெழுத்து
பிரத்தியேகமாம்
தனி மனித அந்தரங்கம்
மன நிஜத்தின் நிழல்.
கையெழுத்தில் அவரவர்தம்
தலையெழுத்தைக் கூறலாமாம்
எனக்குத் தெரியவில்லை
சிலவிஷயங்கள்
தெரியாமலிருப்பதே
நல்லதுதான்.
கவிதையாய் எழுதிவிட்டுக்
கடிதமெனச் சொல்வாய்
கவிதைக்குத்தான் பொய் அழகு
வாழ்க்கைக்கு அல்ல
உண்மைகளை உதறிவிட்டு
ஒருநாள் சென்றுவிட்டாய்
மறந்தேதான் போனாயா
மறைந்தேதான் போனாயா?
என்றாவது நீவருவாயென்று
காத்திருக்கிறது
என்னோடு
உன் கடிதமும்
**********************
Tweet | ||||
ஷைலூஊஊஊஊ
ReplyDelete///சிலவிஷயங்கள்
தெரியாமலிருப்பதே
நல்லதுதான்///
ம் என்ன ஆச்சும்மா எல்லோருக்கும்
காத்திருத்தலும், வலியும்:-)
மது!
ReplyDeleteஉங்க கவிதை படிச்ச பாதிப்புதான் வேறென்ன?:)
ஷைலஜா
வாவ்...! ரொம்ப நல்லா இருக்கு..
ReplyDelete(உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கலாம்...)
சேதுக்கரசி நன்றி! நீங்க கவிதாயினி என்று நினைக்கறேன் சரியா?
ReplyDelete...
அட போங்க.. நீங்க வேற!! :))
ReplyDeleteIt is good, probably you could split it into 2-3 kavithai's under the same heading.
ReplyDelete/கவிதையாய் எழுதிவிட்டுக்
ReplyDeleteகடிதமெனச் சொல்வாய்/
/கையெழுத்தில் அவரவர்தம்
தலையெழுத்தைக் கூறலாமாம்
எனக்குத் தெரியவில்லை
சிலவிஷயங்கள்
தெரியாமலிருப்பதே
நல்லதுதான்./
/மறந்தேதான் போனாயா
மறைந்தேதான் போனாயா?/
மிக அழகான வரிகள். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!
//ம் என்ன ஆச்சும்மா எல்லோருக்கும்
ReplyDeleteகாத்திருத்தலும், வலியும்:-)//
அதேதான் என் கேள்வியும்... என் மேல எந்த தப்பும் இல்லைங்க...
Nalla kavithai, continue :)
ReplyDelete//கவிதையாய் எழுதிவிட்டுக்
ReplyDelete//கடிதமெனச் சொல்வாய்
கவிதையாய் ஒரு கடிதமா.. நன்று.
//சேதுக்கரசி said...
ReplyDeleteஅட போங்க.. நீங்க வேற!! :)) //
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!!
//மறந்தேதான் போனாயா
மறைந்தேதான் போனாயா?/
மிக அழகான வரிகள். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!//
நன்றி தாரிணி!
Udhayakumar said...
//ம் என்ன ஆச்சும்மா எல்லோருக்கும்
காத்திருத்தலும், வலியும்:-)//
அதேதான் என் கேள்வியும்... என் மேல எந்த தப்பும் இல்லைங்க//
அப்படியாஉதய்?:) வரேன் வரேன் உங்க ப்ளாக் வந்து இதுக்கு பதில் தரேன்!!
ஹனீஃப்! சாத்வீகன்! நன்றிங்க
ஷைலஜா
சிலவிஷயங்கள்
ReplyDeleteதெரியாமலிருப்பதே
நல்லதுதான்
மிகச் சரியாகச்சொன்னீர்கள்
via sathyans blog
ReplyDelete//பிரிக்கும்போதே
மடிப்புகளில் விரிசல்
பழுப்பேறிவிட்டாலும்
பழைய தாளிலும்
உன் பளிங்கு உடல் வாசம்.
//
ரொம்ப அருமை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி adiya!
ReplyDeleteஷைலஜா
நல்ல இருந்தது.அழகான வரிகள்.
ReplyDeleteஅக்கா பின்னிட்டீங்க :) அசத்தல் கடிதம், என் மன நிலையை அப்படியே பிரதி எடுத்தது...:)
ReplyDeleteநன்றி
ஸ்ரீஷிவ்...:)
நன்றாக இருக்கிறது. கொஞ்சம் செதுக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என ஒரு தோணல்.\
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html
உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html
ReplyDeleteஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html
ReplyDelete