Social Icons

Pages

Friday, April 20, 2007

கவலைப்படாத காரிகையர் சங்க ஆண்டுவிழா!(forவிவாசபோ)


கவலைப்படாத காரிகையர் சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழா!

சவிதா வர்ஷா பவித்ரா வினயா சுமேகா என ஐவர் குழு (பஞ்சவர்ணக்கிளி சின்னம் )கொண்ட கலகலப்பான சங்கத்தின் ஆண்டுவிழாவிற்கு சிறுவசிறுமியரைக்கொண்டு நிகழ்ச்சிநடத்த திட்டமிட்டார்கள்.

அதுபற்றி ஐவரும் ஒன்றுகூடி பேச ஆரம்பித்தார்கள்

'நல்ல ஐடியாதான்..பசங்கள இப்போவே ரெடிசெய்யணும்..விழாக்கு இன்னும் பத்தேநாள்தான் இருக்குது ,,.'

"அதெல்லாம் நம்ம பசங்க கற்பூரபுத்தி டக்குனு சொன்னதப் பிடிச்சிப்பாங்க"

'தமிழ்லயே நடத்தணும்..நோ இங்கிலீஷ் ப்ளீஸ்!'

'sure'

'yup!'

'ஆமா விழாவுக்குத் தலைமைதாங்க யாரை அழைக்கலாம்?'

'நம்மகாலனியின் ஆஸ்தானஜோதிடர்வாசுதேவனை?'

'ஐயோ! அவர் விழாநடத்தற மேடை,வாஸ்துப்படி சரி இல்லை..அது இதுன்னு ஏதாவது சொல்லுவார்..'

'வாசுதேவனா வாஸ்துதேவனா?'

'புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆதிகேசவன் எப்படி? நம்மகாலனில கிராமத்து பாணில ஒருவீட்டைக்கட்டி வச்சிருக்காரே பார்த்தியா சவிதா?"

'பாக்கபோனேனே? அப்போதான் அவரு வாம்மா இதான் என் கனவுஇல்லம்..பாத்துப்பாத்து கட்டி இருக்கேன்..புதுமைப்பெண்ணான நீ இங்கவந்ததுல ரொம்ப மகிழ்ச்சி.வா வா வீட்டுக்கு உன்னை அழைச்சிப்போறேன்..நுழைஞ்சதும் முத்தம்...'அப்படீன்னாரே பாக்ணும்?'

'அய்யோ 2muchya!அநியாயம்..'

'நானுமமுதல்ல பயந்துதான் போனேன் அப்புறமாத்தான் வீட்ல நுழஞ்சதும் வரும் முற்றத்தை அவர் அப்படிச்சொன்னார்னு அதைக்காட்டினதும் புரிஞ்சிபோனது'

'பழைய பெருமை பேசியே அவர் போரடிச்சிடுவார் ஆதிகேசவன் வேண்டாம்டி'

'காலனிமக்கள்வேணாமே புதுசா வெளியே இருந்து அழைக்கலாமே?'

'எனக்கு ஒரு ஐடியாடி..'

'என்ன என்ன?'

'வருத்தப்படாத வாலிபர்சங்கம்னு ஒண்ணு இருக்காம் ..'.

'wow! young guys,right?'வர்ஷா ஜொல்லுவிட்டா.

'hope so....அவங்களுக்கும் ஆண்டுவிழாவாம் அவங்களைஅழைக்கலாமா?'

'எல்லாரும்வருவாங்களா, busy pple!விழாபோட்டின்னு மும்முரமா இருக்காங்கபோல?'

'வருவாங்க..மலேசியாடூர் போகறதுக்குமுன்னடி அவங்களை அமுக்கணும் ..சிங்கம் அவங்கசின்னம்..அதனால அவங்க வரப்போ சிங்கநடைபோட்டு சிகரத்திலேறு பாட்டு வரவேற்புல போட்டு அலற வைக்கணும்..'

' நம்ம புத்திர பக்கியங்கள் சிங்கங்கள் முன்னாடி அசிங்கமா நடந்துக்காம இருக்கணும்..வாலுங்க...ம்ம்..முதல்ல அவங்க வருவாங்களா விசாரி. வர்ஷா தான் கல்யாணம் ஆகாத பொண்ணு வேலைக்கும் போறா..மத்தபடி நாம வெட்டியா இருக்கொம் அவங்க அப்படியா?'

'அங்கயும் ஒருவெட்டி(பயல்)இருக்காரு கேட்டுப்பாக்றேன்..'

'அட ராமா! பேரே வெட்டியா?'

'ஆ!ராமான்னதும் நினைவுக்கு வர்து..இராம்னு ஒருத்தர் வவாசங்கம்ல இருக்கார்..ஒருவாட்டி லால்பாக்குல பாத்திருக்கேன்.. சங்கம் சார்புல அவரை தலைம தாங்க வரச்சொல்லிக் கேட்டுப்பாக்றேனே?'


'ஹேய்ராம்? எப்படி இருப்பாரு?looks smart?'


'வர்ஷா..பார்வையிலே இராம், பாலகன்; எழுத்திலே பிதாமகன்.'

'விக்ரம்படமா?'

'ச்சீ இல்லடி.பிதாமகன் பீஷ்மர் மாதிரி ஞானம் அறிவு!'

ஓ?

சவிதா போனில் இராமைப்பிடிச்சிட்டா!.

அடக்கத்துடன் மறுத்துப்பின் சவிதாவின் அன்புத்தொல்லைதாங்காம வவாச வின் இளம் சிங்கம் ரரயலு இராம் அழகியதமிழே நிகழ்ச்சிக்குத் தலமை தாங்க ஒப்புக்கிட்டாரு
*******************************************************************************

சுரேஷ் கொஞ்சம் இந்த சேரைஅப்டிபோடுங்க.டேபிள்மேல சுருக்கம் இல்லாம விரிப்பு போடுங்க..'ஐபாட்'ல பாரதி இல்லேன்னா பாரதிதாசன் பாட்டா போடுங்க...விழாவுக்கு வரவங்க அசந்துபோகணும்..'

'சவிதா!இது ஓவராத் தெரில்ல உனக்கு? கா.க .ச ல எண்ணி 5பேரு.. பஞ்சவர்ண'கிலி'கள்.உங்க குடும்பநிகழ்ச்சியை விழாஅது இதுன்னு சொல்லி நோட்டீஸ் அடிச்சி காலனிமுழுக்க வினியோகம் செஞ்சி, இதுக்கு உப்புமா கேசரி காபினு என்னவோ பொண்ணுபாக்கவரமாதிரி....ஒண்ணூம் நல்லா இல்ல..'

'உங்க திருவாய்ல எதுதான் நல்லாருக்குனு வந்திருக்கு ? '

'ஒரு கார்ஷெட்டை விழா ஹாலாமாத்தும் துணிச்சல் நெஜம்மா உங்க கவலைபடாத காரிகையர்சங்கத்துக்குதான் வரும்..'

'சங்கம் கொஞ்சம்பிரபலமானா டொனேஷன் கேக்கலாம். நாலுகாசுவரும் அப்றோம் கம்யுனிடிஹால் காமராஜர் ஹால்லுனு போவோம் இப்போ நீங்க மானத்தைவாங்காம கொஞ்சம் கோஆபரேட் செய்யுங்களேன் ..'


வழக்கமாய் ஜீன்ஸிலும் சூடிதாரிலும்,சல்வாரிலும் இருக்கும் க கா ச. உறுபினர்கள்எல்லாரும் சேலைகட்டும் பெண்களாய் மாறிய அரியகாட்சியை ஆச்சரியமாய் பார்த்த சவிதாவின் மாமியார்," இதுக்காகவே தினம் ஆண்டுவிழா நடத்தலாம்டியம்மா" ன்னு சொன்னாங்க

'தலைவர் வந்திட்டார் !வந்திட்டார்!'

பவித்ரா கூவவும்,

இராம் வெட்கமும்தயக்கமுமாய் கைகுவித்தபடியே மேடை ஏறிவந்தாரு.சேர்ல உக்காந்தாரு.

ஐபாட் அப்போ பார்த்து,' மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?'ன்னு பாடவும் சவிதா சுரேஷை முறைச்சா.

தமிழ்ப்பாடல்கள் (ஆங்கில மொழிமாற்றம் செஞ்சிதான்)எல்லாம் ஜெராக்ஸ்ப்ரதி எடுத்து மேடையில் ஒருக்கமா உக்காந்திருந்த சிறுவசிறுமியர்கைகளில் கொடுத்தாங்க.

வினயாவின் ஆறுவயதுபையன் வருண் அதில கப்பல் செய்ய ஆரம்பிச்சான் பாருங்க வந்திருந்த பத்து குழந்தைகளும் அதைபார்த்து தங்கள் கையிலிருந்த பேப்பரை மடிக்க ஆரம்பிக்க சவிதா ஒருசத்தம் போடவும் கப்சிப் ஆனாங்க.


"சவிதா...இது உன் கல்யாணப்புடவையா?ஏலக்கா பச்சைல அரக்கு பார்டர்.சரவணா ஸ்டோர் விளம்பரத்துல ஸ்நேகா இதையேதான் கட்டிக்கிறா! நீயும் அன்னிக்கு மணமேடைல கட்டிட்டுப் பாத்தது.. ஹ்ம்ம்.எட்டு வருஷத்துக்கப்றோம் இப்பதான் திரும்ப எடுத்துக்கட்டிக்கறேன்னு நினைக்கறேன் சரியா?"


மாமியாரின் கேள்வியில் தொனித்த கிண்டலை அலட்சியம் செய்த சவிதாமேடையில் அங்கும் இங்குமாய் ஓடிட்ருந்த குழந்தைகளை அடக்க என்ன வழின்னு
யோசிச்சா. அதற்குள் வர்ஷா, ஸ்ருதிபெட்டி எடுத்து வந்து உட்கார்ந்து அதில் ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்கவும் குழந்தைகள் கவனம் மாறிப்போகுது.

"வர்ஷா..பாட்டு கத்துண்டியா என்ன? யார்ட்ட, பாம்பேஜய்ஸ்ரீ கிட்டயா? உண்னிக்ருஷ்ணன் கிட்டயா? மருகேலரா ஓ ராகவா ..மானச சஞ்ஜரரே..ஸ்ருதியோட பாடுவியா இல்லேன்னா அலைபாயுதே..?"

'சவிதாவின் மாமியார் ஆரம்பிச்சிட்டாங்க ஆரம்பிச்சிட்டாங்க இனி அலைகள் ஓய்வதில்லை'

பவித்ரா வர்ஷாவின் காதில் முணுமுணுத்தா.

'
"என்ன ஜாக்கெட் இதுடிம்மா வினயா? முதுகெல்லாம் காத்தாட இருக்கே ஜாக்பாட்ல குஷ்பூபோட்டுக்றாப்ல?""அந்த நாள்ள பண்டிகை,பகிர்தம்னா இப்படித்தான் கிராமத்துல வீடுகளில் சேர்வோம் நாங்களும்..ஹ்ம்ம்..அது ஒருகனாக்காலம்..'

'மாமி கொஞ்சம் புலம்பாம இருகீங்களா?'


"let us start ya" பவித்ரா கிசுகிசுத்தா பொறுக்கமுடியாம.

இருபதுபேர் அடங்கிய அந்தமாபெரும் கூட்டதைக்கண்டு அஞ்சியோ என்னவோ ராயலு இராம் அமைதியாகவே இருந்தார்.

'முதலில் தமிழ்ப்பாடல் கடவுள் வாழ்த்துசிறுமி பபிதா பாடுவாள் எல்லாரும் இருந்து கண்டுகளிக்கணும் சரியா?' பெப்சிஉமா போல சிரித்தபடி சவிதா சொன்னா.

மைக்கைபிடித்து,பபிதா அசைந்துநெளிந்துவந்து பாடஅரம்பித்தது.

' துன்றத்திலே துமரனுக்கு தொண்டாட்டம்..'

இராம் திகைப்புடன் சங்கடமாய் பார்க்க, சவிதா அவர் காதருகில் 'ஹிஹி குழந்தைக்கு 'க' வரலை.. மழலை போகலை.. குன்றத்திலே குமரனுக்குக்கொண்டாட்டம் பாட்டு பாட்றது.. புரியுதோ தலைவருக்கு?'எனகேட்க

இராம் பாடு திண்டாட்டமாயிடிச்சி!

அடுத்து திருக்குறள் சிறுவன்சதீஷ்

'சொல்லுசொல்லு'

சதீஷ் அப்படியேமுழித்தபடி நின்றுகொண்டிருக்க சுமேகாஅருகில்போய் அகரமுதல எழுத்தெல்லாம்' என ஆரம்பித்துக்கொடுத்தாள்.அபப்டியும் சதீஷ் அழுத்தமாய் இருக்கவும் முதற்றேஉலகு என்பதுவரை அவளே சொல்லிமுடித்து,'குழந்தைக்கு உடம்பு சரி இல்லை.இல்லேன்னா பத்துகுறள் மனப்பாடம்"என அடித்துவைத்தாள.

பொதுஅறிவு கேள்விகள்..

'தொல்காப்பியம் எழுதியவர்யார்?'

தொல்காப்பியர்

கம்பராமாயணம் எழுதியவர்?

கம்பர்.

பொங்கலன்று என்ன செய்வார்கள்?

பொங்கல்

'பாத்தீங்களா பசங்க திறமையை?' இராமிடம் கேட்ட

சவிதாவின் திறமையை அவள் கணவர் சுரேஷ் நமுட்டுசிரிப்பு சிரிச்சிட்டே ரசிச்சாரு..

கடைசியாக் தமிழில் பக்திப்பாடல்கள்!

சவிதா ஹாலில் உட்கார்ந்திருந்த குழந்தைகளிடம்,"எல்லாரும் முதல்ல கண்ணை மூடிட்டு அமைதியா கைகூப்புங்க..'என்றதும் அவர்கள் கண்ணைமூடிய அந்த அரைக்கணத்திற்கு சவிதாவின் மாமியார் அநியாயப்பெருமைபட ஆரம்பிச்சாங்க


"அதான் குழந்தைகள் என்கிறது..பவ்யமா உக்காந்துண்டு சமத்தா இருக்குகள் பாரேன்...அதிலும் என் பேரன் அபிஜித்து இப்படி அடங்கி ஒரு இடத்துல உக்காந்து நான்பார்த்ததே இல்ல.இந்தக்காணக் கிடைக்காத காட்சியைப்பார்க்கக் கொடுத்துவைக்காம அவன் தாத்தா நாலு வருஷம் முன்னே போய்ச்சேர்ந்துட்டாஆஆஆஆஆரேஏஏ" சர்ரென புடவைத்தலைப்பில் மூக்கச்சிந்தினாப்ங்க

"அடடா...கொஞ்சம் சும்மா இருங்களேன் ப்ளீஸ்?"

சவிதா பொறுமை இழந்தா..

"கூல் சவிதா...பெருசுங்கன்னா அப்படித்தான்.நாமதான் கண்டுக்காம போகணும்"

"ஆமாடி இந்தப் பெருசுங்களுக்கும் சிறுசுங்களுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிட்டே நம்ம வாழ்க்கை போய்டும்போல்ருக்கு..நம்ம பதிகளும் இப்போபாத்து ஒதுங்கிடுவாங்க நைசா.. அங்கபாரு ஓரமா கூடிநின்னுட்டு ரொம்பஅவசியமான டாபிக்கு இப்போ நமீதாவை சினிமால காணமாம்
அலசறாங்க அதை..'

'நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக்கெழிலொழுகும்.சொல்லுங்க'

'கண்ணும் கண்ணும் நோக்கியா..' என்றாள் மூன்றுவயது ப்ரிதி.

'அதுவேண்டாம்..இதுபாடு.. பத்துநாளா ப்ராக்டீஸ் செய்துவச்சோம் இல்ல? கண்ணூம் கண்ணும் என்ன நோக்கியா ?'

"பட் ஐ லைக் இட் "-- ப்ரீதிகுட்டி

"கண்ணும் கண்ணும் நோக்கியா..'

ப்ரீதியோடு மற்றவால்களும் கத்த,திடீர்னு பபிதா'எனக்கு ஒன்பாத்ரூம் போகணும்' சொல்லவும். இதரவால்களும் "எனக்கு எனக்கும் எனக்கும்" பின் பாட்டுபாடிட்டே எல்லாம் பாத்ரூமுக்குப்படையெடுத்திடிச்சி.

"இந்தக் கூச்சலில் எனக்கு ஸ்ருதி சேரவே இல்லை.சே..எல்லாம் மைக்கை முழுங்கினமாதிரின்னா கத்தற்து?" வினயாஸ்ருதிப் பெட்டியை மூடினா.

'நான் நீராடும் கடலுடுத்த சமத்தா அழகா பாடுவேனே?' விஜய் இப்படிசொல்லவும்

"சமத்து சக்கரைகட்டி.."

சவிதாவின் மாமியார் கொஞ்சவும் அது வீறிட்டது

பாட்டி என் கன்னத்துல கிள்ளிட்டாங்க'

"கிள்ளலை... ஆசையாக் கொஞ்சினேன்.."

பாட்டி என்னக் கிள்ளீட்டாங்காஆஆஆ'

"சரிசரி....பாடு விஜய் நீராடும்..'

"மாட்டேன்..எனக்கு இப்போ மூட் இல்ல..பாட்டி கிள்ளீட்டா.. எனக்கு வலிக்கறது... உவ்வா வந்துடுத்து கன்னத்துலமருந்துபோட்டுக்கபோறேன்..."

விஜய் எழுந்து வீட்டிற்குள், ஒருரூமுக்குப்போகவும் இன்னும் சில வாண்டுகள் அவனைப்பின்தொடர்ந்திடிச்சி.

'அம்மா...போரடிக்கற்து .. ..."

என்ற தன்மகனை கெஞ்சலாய்ப்பார்த்த சவிதா,'தமிழ்ப்பாடல்டா கண்ணா..அமெரிக்கால உன் வய்சுப்பசங்கள் ஆர்வமா கத்துக்கறாங்க.....நீதானே எல்லார்க்கும் பெரியவன் 7வயசாறது நீயே இப்படி பண்ணினா மத்தகுழந்தைகள் என்னடா செய்யும்? போய்சமத்தா உக்காந்து பாடுமா கண்ணா?"ன்னுதாஜா பண்ணீப்பாத்தா.

அதற்குள் விஜய் ரூமில் எதையோ தள்ளிவிட்ட சத்தம் கேட்க ஓடினா.

மருந்து டப்பாவை கீழேதள்ளி ஏதோ ஒரு ஆயின்மெண்ட் ட்யூபின் மீது யாரோ கால்வைத்து அத்தனையையும் 'கொயக்' என்று பிதுக்கித், தரையில் காலால் தேச்சி...

அதுங்கள சமாதானப்படுத்தி மறுபடி கார் ஷெட்டுக்கு தள்ளீட்டுவர பஞ்சவர்ணக்கிளிகள் படாதபாடுபட்டத இராமும் பாத்துட்டிருந்தாரு.வருத்தபடாத வாலிபராச்சே அதனால ஒண்ணும் ரியாக்ஷனை அப்போ காட்டல..


" அம்மா, நான் போயி கேம்பாய் வீடியோகேம் விளையாட்றேன்.." அபிஜித் விர்ரென கோபமாய் நகர்ந்தான்

"கோபத்துல அப்படியே அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாம பொறந்திருக்காண்டியம்மா..இந்தகாலக்குழந்தைகளுக்கு யார்ட்டயும் லவலேசம் பயமே இல்ல.."

மாமியாரின் புலம்பலில் சவிதா எரிச்சலுடன் கத்தினா.

"டேய் அப்பீஜ்ஜ்ஜ்ஜித்த்?"

அவன் விளையாடப்போகவும் கூடவே அர்ஜுன், தன்வின் இருவரும் கழண்டுகிட்டாங்க

"என்னடி வினயா இது நம்ம பசங்க இப்படிபடுத்தறாங்க?"

"சவிதா...நேரமாற்தேடிம்மா... கேசரி உப்புமா கொண்டுவரட்டும்மா?'

'இருங்க மாமி..பக்திப்பாடல் நாலு பாடி நிகழ்ச்சியை முடிக்கலாம் அப்றோம் சாப்பிடலாம்"

'குழந்தைகளா..இப்போ பக்திப்பாட்டு...சொல்லுங்க ஏழுமலைதேவனே..'

ப்ரீதிக்கு திடீர்னு சந்திரமுகி திரைப்பாடல் நினைவில் வர,'தேவுடா தேவுடா'ன்னு சந்தோஷமுகியானது.

'ஷ்...அதெல்லாம் பஜனைல சேர்த்தி இல்ல...சரி , வேறபாட்டு அம்பா சக்தி ஆதரிதாயே பாட்லாமா?"

"வேண்டாம் ஆண்ட்டீ...தேவுடா தேவுடா ஏழுமல தேவுடா அர அர அர..'

'ஹர ஹரன்னு குழந்த தேமேன்னு நன்னாதானே பாட்றது சவிதா ஏந்தான் கோச்சிக்கறாளோ?'

" மாமி ப்ளீஸ்..குழந்தைங்களா..சலங்கைகட்டி ஓடி ஓடிவாகண்ணா சொல்லலாமா? வீரமாருதி கம்பீரமாருதி சொல்லி முடிச்சிடலாமா அட்லீஸ்ட்?"

"அதெல்லாம் இல்ல. அந்நியன் படத்துலேந்து ரண்டக்க ரண்டக்க அண்டங்காக்கா கொண்டைக்காரி ரண்டக்கரண்டக்கா இல்லேனா சுட்டும்விழிசுடரே பாட்டு கஜனிலேந்து பாட்லாம்..'

அய்..சுட்டும்விழிசுடரே..!

சுட்டும்விழிசுடரே!

கோரசாய் எல்லாம் இந்தசினிமாபாட்டுபாட...

சவிதா தலையில் கைவைச்சி உக்கார..மற்ற கிளிகள் ஊமைக்கிளிகளா தவிக்க..

விழாத்தலைவர் ராயல் இராம் மைக்குபிடிச்சாரு" வணக்கம். குழந்தைங்க இயற்கையா இருக்கறதும் ஒரு அழகுதான்..அருவிமாதிரி ஓடி உருண்டு புரண்டு கொட்டிஉற்சாகமா இருக்கற வயசு..திறமையும் ஆர்வமும் இருந்தா எதுவும் எப்பவும் நம், வசம்..எனக்கு இந்தக் குழந்தைகள பாக்குறப்போ மதுரைல சின்ன வயசு நினைவு வந்திடிச்சி.."இன்னமும் எங்க போனாலும் குழந்தைகளை கண்டா குஷி வந்துரும், அவங்க கூட போயி அவங்ளோட கிள்ளைமொழி கேட்கிறது அப்பிடியொரு அழகாக உணர்வேன்." அப்படீன்னு என் பதிவுல கூட எழுதி இருக்கேன். அதனால சவிதா மேடம்! கவலையவுடுங்க,..வழக்கம்போல கவலைப்படாத காரிகையராகவே நீங்கள்ளாம் இருங்க..நன்றி ,என்னய வருத்தப்படாதவாலிபர்சங்க பிரதிநிதியா அழைச்சதுக்கு .."

எல்லாரும் கைதட்ட க.கா.ச விழா இனிமையா முடிஞ்சிது!
*************************************************************************************
கண்டுகளித்து இங்கு அளித்த ஷைலஜா, இதைசமர்ப்பணம் செய்வது வவாச ஆண்டுவிழா போட்டிக்கு!

Links to the Post:

V V Sangham

22 comments:

 1. பாலகன் ராயலை இப்படித் திட்டமிட்டுக் கொடுமைப் படுத்திய க.கா.சங்கத்தினரை வன்முறையாக கண்ணடிக்கிறேன். (ஐயோ வழக்கமா போடற கமெண்டு இங்க தப்பா அர்த்தமாகுதே. எதுக்கும் ஸ்பெல்லிங் மிஷ்டேக் இல்லாமலேயே படிச்சிக்குங்க.)

  இது பற்றி முதலவர், பிரதமர், அதிபர், மனித உரிமைக் கழகம், ஐநா என எல்லா இடங்களுக்கும் தந்தி அடிக்கும் போராட்டம் நடக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  (ஆமா இந்த தந்தி சேவையை நிறுத்தியாச்சாமே, அது உண்மைதானே. நான் பாட்டுக்கு வாயை விட்டுக்கிட்டு இருக்கேன்.)

  :)))

  ReplyDelete
 2. ககாச ஆண்டுவிழாவில் ஒரு ஓரமாக நின்று கலந்துக்கொண்டதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
  மிகவும் ரசித்து அனுபவித்தேன். என்னா, கேசரி, உப்புமா கிடைக்காமெ போயிடிச்சி. பரவாயில்லை. எப்படியும் கிடைக்காமெயா போயிடும்?

  இந்த விழாவை தொடர்ந்துக்கொண்டாடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

  விழாவை பற்றிய உங்கள் கட்டுரை முத்தமிழிலும் மீள் பதிவு செய்யப்படுகிறது.

  ReplyDelete
 3. //'வருத்தப்படாத வாலிபர்சங்கம்னு ஒண்ணு இருக்காம்
  'wow! young guys,right?
  'hope so....//

  ஆகா, வவாச-க்கே உள்குத்தா? :-)

  பாவம் ராயலு! பாவம் வெட்டி!
  சங்கத்தின் சிங்கங்களே! இன்னுமா தூங்கறீங்க?
  பொறுத்தது போதும்! பொங்கி எழுங்க!!

  ReplyDelete
 4. வருத்தப்படாத வாலிபர் சங்கம் கவலைப்படாத காரிகையர் சங்கம்

  - சபாஷ் சரியான போட்டி!
  சங்கத்தின் வலைதளம், தலைதளம், தலைவி, logo, எல்லாம் patent செய்து, சீக்கிரம் வெளியிடுங்க ஷைல்ஸ்!

  சிரிப்பாய் சிரிக்க வைப்பது - வவாச-வா, ககாச-வா என்று சன் டிவியில் ஒரு பட்டிமன்றம் போட்டுறலாம்! :-))

  ReplyDelete
 5. ஷைலாக்கா, ஏற்கனவே தமிழ்ச்சங்கத்துல நீங்க ஆத்துற பொலமை போதாதா? க.கா.ச வேறையா. அதுவும் பாலகனை கூட்டி வெச்சி ரேகின்ங் பண்ணி இருக்கீங்க.

  நான் ரசிச்சு சிரிச்ச வரிகள்


  //'தமிழ்லயே நடத்தணும்..நோ இங்கிலீஷ் ப்ளீஸ்!'

  'sure'

  'yup!'//


  //'ச்சீ இல்லடி.பிதாமகன் பீஷ்மர் மாதிரி ஞானம் அறிவு!'//

  ReplyDelete
 6. வாங்க கொத்ஸ்! ஸ்பெல்லிங் மிஷ்டேக்கே இல்ல உங்க மடல்ல போதுமா?:) யப்பா இனம் இனத்தோட சேருது..பாலகனுக்குப் பெரிய படையே கிளம்பும்போல?::):)

  ReplyDelete
 7. கவலைப் படாத காரிகையரா:-)
  இந்த விழால எல்லோருக்கும் டென்ஷன் அள்ளிண்டு
  போகிறதே.

  மாமியார் வேற கூடக் கூட.

  ReplyDelete
 8. //மஞ்சூர் ராசா said...
  ககாச ஆண்டுவிழாவில் ஒரு ஓரமாக நின்று கலந்துக்கொண்டதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
  மிகவும் ரசித்து அனுபவித்தேன். என்னா, கேசரி, உப்புமா கிடைக்காமெ போயிடிச்சி. பரவாயில்லை. எப்படியும் கிடைக்காமெயா போயிடும்?

  இந்த விழாவை தொடர்ந்துக்கொண்டாடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்//
  வாங்க மஞ்சூர்ராசா! வரலாறுகாணாத கூட்டமோஅதான் கேசரி உப்புமா உங்களுக்கு வரலயோ?:0
  விழா மறு ஒளி(லி)பரப்பு செய்தால் அழைக்கிறேன் வாங்க!

  ReplyDelete
 9. //annabiran, RAVI SHANKAR (KRS) said...
  //'வருத்தப்படாத வாலிபர்சங்கம்னு ஒண்ணு இருக்காம்
  'wow! young guys,right?
  'hope so....//

  ஆகா, வவாச-க்கே உள்குத்தா? :-)

  பாவம் ராயலு! பாவம் வெட்டி!
  சங்கத்தின் சிங்கங்களே! இன்னுமா தூங்கறீங்க?
  பொறுத்தது போதும்! பொங்கி எழுங்க//

  என்னபாவம் பாவம்னு அனுதாபக்கொடி பிடிக்றீங்க ரவீ?:0ராயலை உயர்ந்த இடத்துல கொண்டுவச்சதுக்கு சிங்கங்களக் கிளப்பிவிடறீங்களே நியாயமா?:)

  ReplyDelete
 10. kannabiran, RAVI SHANKAR (KRS) said...


  - சபாஷ் சரியான போட்டி!
  சங்கத்தின் வலைதளம், தலைதளம், தலைவி, logo, எல்லாம் patent செய்து, சீக்கிரம் வெளியிடுங்க ஷைல்ஸ்!

  சிரிப்பாய் சிரிக்க வைப்பது - வவாச-வா, ககாச-வா என்று சன் டிவியில் ஒரு பட்டிமன்றம் போட்டுறலாம்! :-)) //

  விட்டுக்கொடுப்பதே பெண்கள் வழக்கம்,ஹ்ம்ம்...போட்டில அவங்களே ஜெயிச்சிட்டுப்போகட்டுமே?:)

  ReplyDelete
 11. //ILA(a)இளா said...
  ஷைலாக்கா, ஏற்கனவே தமிழ்ச்சங்கத்துல நீங்க ஆத்துற பொலமை போதாதா? க.கா.ச வேறையா. அதுவும் பாலகனை கூட்டி வெச்சி ரேகின்ங் பண்ணி இருக்கீங்க//

  வாங்க இளா!
  என்னங்க ப்ரதர் நீங்களும் பாலகனை ராக்கிங் னே சொல்றீங்க, மேடைல தலைமைல உக்கார வச்சது கண்ல தெரில்லயா?:) வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி,மறக்காம அடுத்த ஆண்டுவிழாக்கும் வாங்க:)

  ReplyDelete
 12. //
  வல்லிசிம்ஹன் said...
  கவலைப் படாத காரிகையரா:-)
  இந்த விழால எல்லோருக்கும் டென்ஷன் அள்ளிண்டு
  போகிறதே.//

  வாங்கோ வல்லிமா..காரிகையர்க்குக் கவலை இல்ல மத்தவங்களுக்கு டென்ஷன்! சரியா சொன்னீங்க:) நன்றி.

  ReplyDelete
 13. மேடம் வந்திட்டேன்.... :)

  //
  'ஹேய்ராம்? எப்படி இருப்பாரு?looks smart?'/

  இது கொஞ்சம் ஓவராதான் இருக்கு :))

  //'ச்சீ இல்லடி.பிதாமகன் பீஷ்மர் மாதிரி ஞானம் அறிவு!'//

  ஞானம் அறிவா அது யாது அங்கடி'லே சிக்கிது'றீ.... சொல்லுப்பா ஏழிறீ... நான் இரடு கேஜி தக பர்த்தீனி :)

  ReplyDelete
 14. /இராம் வெட்கமும்தயக்கமுமாய் கைகுவித்தபடியே மேடை ஏறிவந்தாரு.சேர்ல உக்காந்தாரு.//

  பின்னே பூராவும் பொண்ணுகளா இருந்தா அப்பிடிதான் இருக்கும் :)))

  ReplyDelete
 15. இராம் said
  /பின்னே பூராவும் பொண்ணுகளா இருந்தா அப்பிடிதான் இருக்கும் //

  எல்லாம் பெரியக்கா லெவல்ல இருந்துமா அப்படி ஒரு வெக்கம் பாலகனுக்கு?! சும்மா கிட்டிங் ராம்..கோச்சிக்காத என்ன?:0

  ReplyDelete
 16. //பாலகன் ராயலை இப்படித் திட்டமிட்டுக் கொடுமைப் படுத்திய க.கா.சங்கத்தினரை வன்முறையாக கண்ணடிக்கிறேன்.//

  கொத்ஸ்,

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

  ReplyDelete
 17. /வாங்க கொத்ஸ்! ஸ்பெல்லிங் மிஷ்டேக்கே இல்ல உங்க மடல்ல போதுமா?:) யப்பா இனம் இனத்தோட சேருது..பாலகனுக்குப் பெரிய படையே கிளம்பும்போல?::):)//

  ஐயோ மேடம்,

  கொத்ஸ் கமெண்ட்'ஐ நீங்க சரியா படிச்சீங்களா??? அவரு உங்க க.கா.ச'லே இருக்கிற எல்லாரையும் பார்த்து கண்ணடிக்கிறாரு..... :)

  அதுதான் நானும் அவ்வ்வ்'ன்னு சொன்னேன்... ஹி ஹி

  ReplyDelete
 18. //இராம் said...


  ஐயோ மேடம்,

  கொத்ஸ் கமெண்ட்'ஐ நீங்க சரியா படிச்சீங்களா??? அவரு உங்க க.கா.ச'லே இருக்கிற எல்லாரையும் பார்த்து கண்ணடிக்கிறாரு..... :)

  அதுதான் நானும் அவ்வ்வ்'ன்னு சொன்னேன்... ஹி ஹி //

  அய்யே அது புரிஞ்சிதானே நானும்
  அப்படி சொன்னேனாம்?:0 வெண்பா வடிக்கறவருக்கு பெண்பால் கண்டிக்கற தைரியம் கொத்ஸுக்கு இருக்கா என்ன ஹஹ்?:)

  ReplyDelete
 19. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!! :-)

  ReplyDelete
 20. போட்டியில கலக்கிட்டீங்க.
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் ஷைலஜா
  தொடட்டும் உங்க வெற்றி

  ReplyDelete
 22. சிவிஆர்! கண்மணி !அருண்குமார்!
  உங்களுக்கு நன்றியும் வெற்றிக்கு வாழ்த்தும்!
  ஷைலஜா

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.