Social Icons

Pages

Thursday, May 17, 2007

வீதிச் சித்திரங்கள்!(கவிதை)

மேனிக்கு நீலம்.
மயிற்பீலிக்குப் பச்சை.
கழுத்துமணி மாலைக்குச் சிவப்பு.
ஊது குழலுக்குப் பழுப்பு.
கேசத்திற்கு முழுதும் கறுப்பு.
புன்னகைப் பற்களுக்கு வெள்ளை.
நவரத்தின மாலைக்கு
நவ வர்ணக் கலவை.
பட்டாடைக்கு இளம் ஊதா.
மேலங்கிக்கு மெலிதான மஞ்சள்.

வர்ணச் சாக்கட்டிகள் கொண்டு
வடிவான சித்திரம் தீட்டிவிட்டு
விரித்த சாக்குத் துணி மீது
விழப்போகும் சில்லரைக்காய்
வறுமையின் வர்ணத்தை
விழிகளில் தேக்கியபடி
தன்னை வரைந்து முடித்த
வீதிச் சித்திரக்காரனுடன்
வெய்யிலில் ஸ்ரீகிருஷ்ணரும்!

18 comments:

  1. மேடம்,

    ஒரே வரியிலே சொல்லனுமின்னா........

    அட்டகாசம்.

    ReplyDelete
  2. Good. Nalla Aarambam. Vivaranai. Mudivu konjam saatharanamaa irunthaalum, nalla kavithai. Aarambam madiriye mudivum nalla vara madiri ungalaala seiya mudiyum. try pannunga. illai enraal, arambam kodukira ethirpaarpai mudivu kuraithu vidukirathu. - PK Sivakumar

    ReplyDelete
  3. இப்படி கவுஜயா எழுதித் தள்ளுனா நாங்க எல்லாம் வந்து என்ன சொல்லறது?

    ReplyDelete
  4. Anonymous3:01 PM

    Nice one... -Raji

    ReplyDelete
  5. //இராம் said...
    மேடம்,

    ஒரே வரியிலே சொல்லனுமின்னா........அட்டகாசம்.//

    இராம்! பாலசிங்கமே வாம்மா வா!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராம்!

    ReplyDelete
  6. //வறுமையின் வர்ணத்தை
    விழிகளில் தேக்கியபடி//

    arumaiyaana varikal... aaramba varikallathaan konjan enakku theriyaatha vaarthaikalaa irunthathu :)))

    ReplyDelete
  7. wow! PKS! what a surprise! வசிஷ்டர் வாயால நல்ல ஆரம்பம்னு சொன்னதுல குஷிதான் போங்க:)முடிவையும் நீங்க சொன்னதுபோல மாத்தி அமைக்க முயல்கிறேன் நன்றி இங்க சிவமயமானதற்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  8. கிருஷ்ணரின் பார்வையில் சொன்ன கவிதை அழகு! வறுமையின் வர்ணத்தை அவர் கண்களில் தீட்டிய வீதிச் சித்திரக்காரன் அருமை!

    ReplyDelete
  9. அருமை.
    கண்ணனும் நிறங்களும்.
    சொன்ன ஷைலஜாவின் வார்த்தைகள் ஜாலம் தான்.

    ReplyDelete
  10. //இலவசக்கொத்தனார் said...
    இப்படி கவுஜயா எழுதித் தள்ளுனா நாங்க எல்லாம் வந்து என்ன சொல்லறது//


    உங்கள மாதிரி ஏதய்யாகதியும் பின்நவீனத்துவமும் எனக்கு சத்தியமா எழுதவராது ஏதோ இப்படி கவிதைன்னு கிறுக்கதான் வருது இலவசம்!:)

    ReplyDelete
  11. அன்புடன் கவிதைப் போட்டி ஒலிக்கவிதைப் பிரிவில் சிங்கைக் கவிஞர் கதுமு. இக்பால் மற்றும் அறிவியல் கட்டுரையாளர் கவிஞர் சி. ஜெயபாரதன் ஆகியோர் நடுவராக இருக்க, அவர்கள் தெரிவில் இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  12. //சேதுக்கரசி said...
    அன்புடன் கவிதைப் போட்டி ஒலிக்கவிதைப் பிரிவில் சிங்கைக் கவிஞர் கதுமு. இக்பால் மற்றும் அறிவியல் கட்டுரையாளர் கவிஞர் சி. ஜெயபாரதன் ஆகியோர் நடுவராக இருக்க, அவர்கள் தெரிவில் இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா! //

    சூப்பருங்கோ! வாழ்த்துக்கள்! கேட்டேன்! இரசித்தேன்! அருமை!

    ReplyDelete
  13. கடைசி வரி ஹைகூ effect கொடுத்தது பிரமாதம்!.
    ஸிஃபி யில் இந்தக் கவிதை வந்திருந்ததைப் பார்த்தேண், வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. Anonymous said...
    Nice one... -Raji>>>>



    thankyou Raji

    ReplyDelete
  15. //காட்டாறு said...
    கிருஷ்ணரின் பார்வையில் சொன்ன கவிதை அழகு! வறுமையின் வர்ணத்தை அவர் கண்களில் தீட்டிய வீதிச் சித்திரக்காரன் அருமை//

    நன்றி காட்டாறு,இந்த கருத்துக்கும் அன்புடன் போட்டி கவிதை படித்தும் கேட்டும் பாராட்டியதற்கும்

    ReplyDelete
  16. சேதுக்கரசி said...
    //அன்புடன் கவிதைப் போட்டி ஒலிக்கவிதைப் பிரிவில் சிங்கைக் கவிஞர் கதுமு. இக்பால் மற்றும் அறிவியல் கட்டுரையாளர் கவிஞர் சி. ஜெயபாரதன் ஆகியோர் நடுவராக இருக்க, அவர்கள் தெரிவில் இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா!//

    நன்றி சேதுக்கரசி
    அந்தக் கவிதையை பிறகு பதிவிட வேண்டும். சிறந்த இருநடுவர்களுக்கும் என்நன்றி.

    ReplyDelete
  17. ஜீவா (Jeeva Venkataraman) said...
    //கடைசி வரி ஹைகூ effect கொடுத்தது பிரமாதம்!.
    ஸிஃபி யில் இந்தக் கவிதை வந்திருந்ததைப் பார்த்தேண், வாழ்த்துக்கள்//


    மிக்க நன்றி ஜீவா வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  18. ஜி said...
    //வறுமையின் வர்ணத்தை
    விழிகளில் தேக்கியபடி//

    //arumaiyaana varikal... aaramba varikallathaan konjan enakku theriyaatha vaarthaikalaa irunthathu //
    வா ஜீ வா ஜீ! நலமா?
    ஆரம்ப வரிகள்தான் தெரியாத வார்த்தைகளா இருந்ததா?:) ஓ, அதுல கொஞ்சம் சீனமொழி கலந்ததால் இருக்குமோ அப்படியே இருந்தாலும் சீனப்பாட்டுக்கு தமிழ் பாட்டு எழுதிக் கலக்கிய ஜீ போன்ற கோடம்பாக்கக் கவிஞர்களுக்குப் புரிந்திருக்கணுமே?:)
    நன்றி ஜீ வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.