Social Icons

Pages

Tuesday, January 15, 2008

வாழ்க்கைப் பாடம்.

எல்லாப்பூக்க்களையும் பறித்தபின்னும்
எப்போதும்போல இயல்புடன் இருக்கும் செடி

அத்தனை இலைகளும் உதிர்ந்தபின்னும்
அப்படியே நிமிர்ந்து நிற்கும் மரம்

இடியையும் மின்னலையும் தாங்கி
மழைபொழிந்தபின்னும்
கலங்காத தெளிந்த வானம்

மண்ணில் விழுந்ததும்
துள்ளி எழுந்து நிற்கும் கன்று

கொஞ்சம்கொஞ்சமாய் தேய்ந்துபோனாலும்
முழுமையாய் ஒருநாள் முகம்காட்டும் பௌர்ணமிநிலவு...

எல்லாமே வாழ்க்கைப்பாடம் நடத்துகின்றன
எதிலும் நம்பிக்கை இழந்த மனிதர்களுக்கு.

12 comments:

  1. தூள் நீங்க குட்டீஸ் நஒக உண்மை கதை படிச்சீங்களா....

    ReplyDelete
  2. Baby Pavan said...
    தூள் நீங்க குட்டீஸ் நஒக உண்மை கதை படிச்சீங்களா....
    //




    நன்றி பேபிபவன்..... என்ன கதை அது எங்க இருக்கு படிக்க ஆவலாய் இருக்கிறேன்

    ReplyDelete
  3. Anonymous9:24 AM

    கவிதை சூப்பர்!

    ReplyDelete
  4. நல்ல நம்பிக்கை வரிகள்!!

    ReplyDelete
  5. நல்ல கவிதை..;)

    ReplyDelete
  6. இந்த கவிதை எல்லாம் எப்பிடி படிக்கிறதுன்னு கொஞ்சம் சொல்லிகுடுங்களேன்.

    ReplyDelete
  7. Anonymous10:27 AM

    உங்கள் கவிதை சிறப்பாக இருப்பதால் எனது கவிதை வலைப்பூவையும் அலங்கரிக்க அனுமதி கோருகிறேன்.

    ReplyDelete
  8. நவன் said...
    உங்கள் கவிதை சிறப்பாக இருப்பதால் எனது கவிதை வலைப்பூவையும் அலங்கரிக்க அனுமதி கோருகிறேன்.//

    அல்ங்கரிக்க அனுமதியே தேவை இல்லை நவன்! மிக்க நன்றி.

    ReplyDelete
  9. நவன் said...
    உங்கள் கவிதை சிறப்பாக இருப்பதால் எனது கவிதை வலைப்பூவையும் அலங்கரிக்க அனுமதி கோருகிறேன்.//

    அல்ங்கரிக்க அனுமதியே தேவை இல்லை நவன்! மிக்க நன்றி.

    ReplyDelete
  10. பாச மலர் said...
    நல்ல நம்பிக்கை வரிகள்!!

    கோபிநாத் said...
    நல்ல கவிதை//

    நன்றி பாச்மலருக்கும் கோபிக்கும்.

    ReplyDelete
  11. நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  12. Anonymous7:29 PM

    தோல்வி என்றொரு பயம்
    தொடர்ந்திடும்போது
    தூரமாய் போகும் வெற்றி
    ந‌ம்பிக்கையின்றி...


    ந‌ம்பிக்கை ஏற்ப‌டுத்துகிறது
    உங்கள் க‌விதை.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.