Social Icons

Pages

Monday, May 26, 2008

மயிலே! மயிலே!






நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்
எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக மயிலை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்று
யோசித்தால் அதற்கு காரணம் தெரியவரும்.


மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர் ஆச்சர்யமான அபூர்வமான
ஒழுங்குமுறை மயில்களிடம் உள்ளன.!*

மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குலமன்னர்கள். இவர்கள்
மயில்போன்றுமுறை தவறாதவர்களாம் அதென்ன மயில்முறை?

*ராமனுக்கு பட்டம் சூட்ட அரச சபை ஆயத்தமாகிவிட்டது

..அயோத்திநகரம்.கோலாகலமாய் இருக்கிறது. அப்போது கூனி வருகிறாள்.


கைகேயியைப்பார்த்து," ராமனுக்கு பதிலாய் உன்மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம்
செய்யச்சொல்லு" என்றதும் முதலில் கைகேயி இப்படித்தான் சீறினாளாம்.(பிறகு மனம்
மாறிய கதை யாவரும் அறிந்ததே)



*" மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை*
*செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்*..."



(செயிர் உறபுலச்சிந்தை எனில் குற்றம்காணும் எண்ணம் என நினைக்கிறேன்...தமிழ்
வல்லுனர்கள் விளக்கலாம் தயவு செய்து)


கம்பன் குறிப்பிடும் இந்த மயில்முறைதான் என்ன என்கிறீர்களா?

மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருவர்*

மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.*


மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண
நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்
என்று,

*அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.

மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகை* *விரித்தாடிய* *சந்தர்ப்பத்தில் அந்த
பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.

* அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.*

கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?*

வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.*

ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*

'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...'*

*செய்யுளில் அமையப்பெற்றதனால் இது யாவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல்
போய்விட்டது. இதையெல்லாம் அண்மையில் ஒரு தமிழ்பெரியவர் மூலம் நான் அறிந்து அதை
இங்கு இடுகிறேன்...


குயில்கூவும் ;மயில் அகவும் என்று சொல்லவேண்டுமாம்!!!மயில்கூவினால் கேட்க
சகிக்காது!!*

*திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நிறைய மயில்களைக்காணலாம்.விராலிமலையிலும் ரொம்பவே உண்டு. *



*பெண்களை மயிலோடு இலக்கியகாலம்முதல் ஒப்பிடுகிறார்கள்..ஆண்மயில்தான்
தோகைவிரித்தாடும்.

எனினும் 'மயில் போல பொண்ணு ஒண்ணு 'என்று பாடல் வேறு!!!

சிக்குபுக்குசிக்குபுக்கு ரயிலே சிக்குவாளா சிக்குவாளா மயிலே என்ற பாட்டு
வந்தபுதுசுல என்ன போடு போட்டது?:) அசைந்தாடும் மயில் ஒன்று என்ற பாடலை சுதாரகுநாதன் பாடிக்கேட்கவேண்டும்.*

வேறென்ன புகழ்பெற்ற மயில்பாடல்கள்?

முருகன் மயில்வாகனன். *

மயில் ராவணன் என்று ஒரு பெயர் அது எதனால் எப்படிவந்தது?*

*மயிலாப்பூருக்கும் மயிலுக்கும் சம்பந்தம் உண்டா?*
*மயிலாடுதுறை ஊருக்கு கதை இருக்கு..*
* *
*மயில்துத்தம் என்று ஒரு மருத்துவப்பொருள் உண்டோ?*
* *
*மயூர் என்றால் சம்ஸ்க்ருததில் மயில்.. மயூராசனம் கூட இருக்கிறது.*

*மயிலிறகில் விசிறி உண்டு..மயிலிறகுகளை புத்தக நடுவில் சின்னவயசில் சேர்த்து
ஒளித்துவைத்திருக்கிறோம் அல்லவா?


*க்ருஷ்ணர் தலையில் மயிற்பீலி இருக்கும்.*

*மயிலாட்டம் நாட்டிய நிகழ்ச்சியில் சிலர் இன்னமும் ஆடறாங்க..*

மயில் செய்திகள் இன்னும் நிறைய இருக்கும் மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாமே?

*(பதினாறுவயதினிலே படத்து மயிலு இதுல வரலாமா?:)) *

30 comments:

  1. Anonymous4:02 PM

    GReat reserch about Mayil. and the most interesting debatalble point is 16 vayathinale mayil ithil varalamaa?. How you are able to think like this. Congrats

    ReplyDelete
  2. Anonymous4:05 PM

    Thiruvalluvar sollyirukkar. Mayir peli aaanulum adhigamanaal achu udayum enru

    ReplyDelete
  3. padippavan said...
    GReat reserch about Mayil. and the most interesting debatalble point is 16 vayathinale mayil ithil varalamaa?. How you are able to think like this. Congrats

    3:32 AM
    நன்றி படிப்பவரே! அந்த 16வயது மயிலு இதுல வருமா என்றுகேட்டது வழக்கம்போல பதிவை கலகலப்பாக்கத்தான்! சீரியசா எழுதவே வரதில்ல எழுதினாலும் முடிவுல இப்படி வந்துடுது என்ன செய்ய?:0 நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  4. மயிலே, மயிலே இறகு போடுன்னா போடாது - அப்படின்னு ஒரு பழமொழி உண்டு தெரியுமா?...

    ReplyDelete
  5. Anonymous8:33 AM

    Wow.. great post... mayil- ku pinna ivlo vishayam irukka...
    thanks for sharing this shyla akka...

    ReplyDelete
  6. படிப்பவனுக்கு!
    "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்"
    குறள் கரெக்டா?

    அம்மிணி
    மூத்தோனுக்கே உரிமை.சரிதான்.
    ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்" என்ற இலக்கிய வரிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

    மயிலெண்ணை என்று ஒன்று உண்டு. வாதத்துக்கு நல்லது. அதன் தயாரிப்பைச் சொல்வது தொழில் தர்மம் ஆகாது

    மயிலிறகு உங்கள் புத்தகத்தில் குட்டி போட்டதுண்டா?

    முன்பெல்லாம் மைல் கல் என்று இருக்குமே அதற்கும் மயிலுக்கும் தொடர்பு உண்டா?
    என்னுடைய பிளாக்கில் விளிம்புக்கு ஒரு களிம்பு பகுதிக்கு உங்களிடமிருந்து ஒரு கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. மயிலே மயிலே உன் தோகை எங்கே பாட்டு - சூப்பரோ சூப்பர்! அதையும் பதிவில் போடுங்க!

    //பதினாறுவயதினிலே படத்து மயிலு இதுல வரலாமா//

    இன்னுமா வரலை? :-)
    எங்க ஸ்ரீதேவி படத்தோடு உடனே போடுங்க! :-)))

    ReplyDelete
  8. மயில் முறைக் குலத்துரிமைக்கு இதான் பொருளா?
    மயில் தகவல்கள் சூப்பரா அள்ளித் தந்திருக்கீங்க ஷைல்ஸ்!

    ஜைனர்களும், இஸ்லாமியரும் கூட மயில் தோகைப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள்!

    மயிலுக்கு எம்மதமும் சம்மதம்! :-)

    ReplyDelete
  9. மதுரையம்பதி said...
    மயிலே, மயிலே இறகு போடுன்னா போடாது - அப்படின்னு ஒரு பழமொழி உண்டு தெரியுமா?...//


    >>>> பழமொழி எனக்குத்தெரியும் ஆனா மயிலுக்கு நம்ம மொழி தெரியுமா ?:)

    ReplyDelete
  10. Ezhilanbu said...
    Wow.. great post... mayil- ku pinna ivlo vishayam irukka...
    thanks for sharing this shyla akka...

    ??தாங்க்ஸ் ப்ரியா தங்கச்சி!

    ReplyDelete
  11. Ezhilanbu said...
    Wow.. great post... mayil- ku pinna ivlo vishayam irukka...
    thanks for sharing this shyla akka...

    ??தாங்க்ஸ் ப்ரியா தங்கச்சி!

    ReplyDelete
  12. லதானந்த் said...
    படிப்பவனுக்கு!
    "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்"
    குறள் கரெக்டா?>>

    கரெக்ட்டுங்க!

    அ//ம்மிணி
    மூத்தோனுக்கே உரிமை.சரிதான்.
    ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்" என்ற இலக்கிய வரிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்//

    >>> மயில்முறை விஷய்த்துல நான் எழுதினது சரி..உங்க இலக்கிய வரிகளுக்கு அது சரி!!! எனக்கு விவாதம்னா அலர்ஜிங்க லதானந்த்:)

    //மயிலெண்ணை என்று ஒன்று உண்டு. வாதத்துக்கு நல்லது. அதன் தயாரிப்பைச் சொல்வது தொழில் தர்மம் ஆகாது//

    அப்படியா? ஏன் சொல்லக்கூடாதாம்?

    //மயிலிறகு உங்கள் புத்தகத்தில் குட்டி போட்டதுண்டா?//

    குட்டிபோடும்னு குட்டிப்பொண்ணா இருக்கறப்போ நினச்சதுண்டு!

    //முன்பெல்லாம் மைல் கல் என்று இருக்குமே அதற்கும் மயிலுக்கும் தொடர்பு உண்டா?//

    சுத்தமா இல்ல!!

    //என்னுடைய பிளாக்கில் விளிம்புக்கு ஒரு களிம்பு பகுதிக்கு உங்களிடமிருந்து ஒரு கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.//

    கட்டுரையா? அல்லது பின்னூட்டமா? சரி படிச்சிட்டு சொல்றேன் 4நாளா ஊர்ல இல்ல அதான் லேட் :)நன்றி வருகை+கருத்துக்கு.

    1:24 AM

    ReplyDelete
  13. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    மயிலே மயிலே உன் தோகை எங்கே பாட்டு - சூப்பரோ சூப்பர்! அதையும் பதிவில் போடுங்க!>>>

    ஆமா நல்லபாட்டாச்சே?? இருங்க தேடி போட்றேன்.

    //பதினாறுவயதினிலே படத்து மயிலு இதுல வரலாமா//

    இன்னுமா வரலை? :-)
    எங்க ஸ்ரீதேவி படத்தோடு உடனே போடுங்க! :-)))

    >>>>ஸ்ரீதேவிரசிகரா ரவி?:) அதெல்லாம் உங்க பதிவுல..எங்க பதிவுல நாங்க ஏன் அனாவசியமா நடிகை போட்டோ போடணுமாம்?:):)
    (நடி)கன் இருக்க (நடி)கை கவர்ந்தற்று!!!

    ReplyDelete
  14. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    மயில் முறைக் குலத்துரிமைக்கு இதான் பொருளா?
    மயில் தகவல்கள் சூப்பரா அள்ளித் தந்திருக்கீங்க ஷைல்ஸ்!//


    எல்லாம் படிச்சி தெரிஞ்சிட்டதுதான் ரவி!

    ஜைனர்களும், இஸ்லாமியரும் கூட மயில் தோகைப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள்!//

    ஆமாம்....இப்போ நினைவுக்கு வர்து.

    //மயிலுக்கு எம்மதமும் சம்மதம்! :-)//>>>
    :):) ஆமா மயில்போல பொண்ணு ஒண்ணு எல்லா மதத்திலயும் இருக்காங்களே!!

    ReplyDelete
  15. "கான மயிலாட
    கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுபோல"

    இவ்ளோதான் ஞாபகத்துல இருக்கு.

    நாங்களும் பள்ளிக்கூடமெல்லாம் போய் படிச்சோமாக்கும் சொன்னா நம்பனும்.

    ReplyDelete
  16. ஆகா...ஆகா...நிறைய கதைகள் இருக்கும் போல இருக்கு...தகவலுக்கு நன்றி அக்கா ;)

    ReplyDelete
  17. 'செயிர் உறபுலச் சிந்தையால்'

    செயிர் -குற்றம் கோபம் போர்க்குணம் வருத்துகை என்று பொருள்விரியும்.
    உறப்பு -செறிவு
    புலம் -அறிவு கூர்மதி

    'செயிர் உறபுலச் சிந்தை' -என்பதற்கு குற்றம் செறிந்தஅறிவுடைய சிந்தை என்றுபொருள்.
    (அதாவது குற்றம் காணுகிற அறிவு என்று பொருள்)

    அன்புடன் அகரம்.அமுதா

    ReplyDelete
  18. அகரம்.அமுதா said...
    'செயிர் உறபுலச் சிந்தையால்'

    செயிர் -குற்றம் கோபம் போர்க்குணம் வருத்துகை என்று பொருள்விரியும்.
    உறப்பு -செறிவு
    புலம் -அறிவு கூர்மதி

    'செயிர் உறபுலச் சிந்தை' -என்பதற்கு குற்றம் செறிந்தஅறிவுடைய சிந்தை என்றுபொருள்.
    (அதாவது குற்றம் காணுகிற அறிவு என்று பொருள்)//>>>

    ரொம்ப நன்றி அமுதா. அழகா சொல்லிட்டீங்க! செயிர் அர்த்தம் தெரிந்தது உறபுல மட்டும் புரியல விளக்கிட்டீங்க மிக்க நன்றி.

    ReplyDelete
  19. கோபிநாத் said...
    ஆகா...ஆகா...நிறைய கதைகள் இருக்கும் போல இருக்கு...தகவலுக்கு நன்றி அக்கா ;)


    //

    நன்றி கோபிநாத்!

    ReplyDelete
  20. மங்களூர் சிவா said...
    "கான மயிலாட
    கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுபோல"

    இவ்ளோதான் ஞாபகத்துல இருக்கு.

    நாங்களும் பள்ளிக்கூடமெல்லாம் போய் படிச்சோமாக்கும் சொன்னா நம்பனும்.

    //

    வா சிவா..நலமா?
    நானும் அங்க இங்க படிச்சி கேட்டுத்தான் தெரிஞ்சிட்டேன்...! நீங்கள்ளாம் ஆபீஸ் போய் வேலை பாக்லயாக்கும் எனக்கு அதெல்லாம் தெரியுமா? அதுபோலத்தான்:0 வருகைக்கு நன்றி தம்பி.

    ReplyDelete
  21. ////மங்களூர் சிவா said...
    "கான மயிலாட
    கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுபோல"

    இவ்ளோதான் ஞாபகத்துல இருக்கு.

    நாங்களும் பள்ளிக்கூடமெல்லாம் போய் படிச்சோமாக்கும் சொன்னா நம்பனும்.

    //

    வா சிவா..நலமா?
    நானும் அங்க இங்க படிச்சி கேட்டுத்தான் தெரிஞ்சிட்டேன்...! நீங்கள்ளாம் ஆபீஸ் போய் வேலை பாக்லயாக்கும் எனக்கு அதெல்லாம் தெரியுமா? அதுபோலத்தான்:0 வருகைக்கு நன்றி தம்பி.////

    மீதியை நான் சொல்கிறேன்!

    கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுவாகப் பாவித்துத் -தானுந்தன்
    பொல்லாச் சிறகை விரித்தாடி நாற்போலும்
    கல்லாதவன் கற்ற கவி!

    குறிப்பு:-
    ஒளவைப் பாடல்கள் எனக்கு அத்துப்படி!

    ReplyDelete
  22. அகரம்.அமுதா said...
    ////மங்களூர் சிவா said...
    "கான மயிலாட
    கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுபோல"

    இவ்ளோதான் ஞாபகத்துல இருக்கு.

    நாங்களும் பள்ளிக்கூடமெல்லாம் போய் படிச்சோமாக்கும் சொன்னா நம்பனும்.

    .////

    >>>>மீதியை நான் சொல்கிறேன்!

    கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுவாகப் பாவித்துத் -தானுந்தன்
    பொல்லாச் சிறகை விரித்தாடி நாற்போலும்
    கல்லாதவன் கற்ற கவி!

    குறிப்பு:-
    ஒளவைப் பாடல்கள் எனக்கு அத்துப்படி!

    >>>>>ஆ மிக்க மகிழ்ச்சி அமுதா ஔவை பற்றி நானே எழுத நினைத்தேன் நிங்க ஆரம்பிங்களேன் ஜோதில நானும் கலந்துக்கறேன்.

    ReplyDelete
  23. எனக்குக் கட்டுரை எழுதுவதில் அவ்வளவாக நாட்டம் இருப்பதில்லை. இருப்பினும் நீங்கள் சொல்வதால் எழுதலாம் என்றாலும் என்ன எழுதுவது என்றுத் தெரியவில்லை. என் மின் மடலுக்குக் குறிப்பு கொடுப்பீர்களே யானால் நிச்சயம் எழுதுகிறேன்

    ReplyDelete
  24. அகரம்.அமுதா said...
    எனக்குக் கட்டுரை எழுதுவதில் அவ்வளவாக நாட்டம் இருப்பதில்லை. இருப்பினும் நீங்கள் சொல்வதால் எழுதலாம் என்றாலும் என்ன எழுதுவது என்றுத் தெரியவில்லை. என் மின் மடலுக்குக் குறிப்பு கொடுப்பீர்களே யானால் நிச்சயம் எழுதுகிறேன்

    //இது கண்டு உடனே மடல் அனுப்பினேன் திரும்பிவிட்டது அமுதா.

    ReplyDelete
  25. நல்ல மயிலாராய்ச்சி.. மயிலாடுதுறைக்காரன் என்ற முறையில் எங்கள் ஊர் பற்றி எழுதியதில் சந்தோஷம்..

    நீங்களே.. கேட்டதனால... விட்டுப் போன ஒன்று... நம்ம திருவிளையாடல் படத்திலே.. சிவாஜி (மண்டபத்திலே..) எழுதுவாரே ஒரு கவிதை..

    மயிலியல்
    செறியெயிற் றரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீயறியும் பூவே.

    அதை விட்டு விடீங்களே..

    அன்புடன்,
    சீமாச்சு..

    ReplyDelete
  26. 48 AM
    Seemachu said...
    நல்ல மயிலாராய்ச்சி.. மயிலாடுதுறைக்காரன் என்ற முறையில் எங்கள் ஊர் பற்றி எழுதியதில் சந்தோஷம்..//

    >>.வாங்க சீமாச்சு நலமா? உங்க ஊர் கதை இதுக்கு இருக்கே அதை விவரமா நீங்க சொல்லலாமே?

    //நீங்களே.. கேட்டதனால... விட்டுப் போன ஒன்று... நம்ம திருவிளையாடல் படத்திலே.. சிவாஜி (மண்டபத்திலே..) எழுதுவாரே ஒரு கவிதை..

    மயிலியல்
    செறியெயிற் றரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீயறியும் பூவே.

    அதை விட்டு விடீங்களே..

    அன்புடன்,
    சீமாச்சு..//

    ஆமா சீமாச்சு எனக்கு நினைவுக்கு வரல அதான் விட்டுட்டேன்..நன்றி இங்க அளித்தமைக்கும் வருகைக்கும்.

    8:02 AM

    ReplyDelete
  27. மயில்துத்தம் -- copper sulphate

    ReplyDelete
  28. மயில்துத்தம் -- copper sulphate

    ReplyDelete
  29. இது சம்பந்தமாக நான் இப்போதுதான் பதிவு போட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2010/03/blog-post_3615.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. rjgpal8:34 AM

    Gana Mayilada ... Naaladyaar yena ninaikkiren...Avvaiyaara yenna?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.