Social Icons

Pages

Wednesday, November 05, 2008

புதன் கிடைத்தாலும் பொன்மொழிகள் கிடைக்குமா?!

கடவுள் அடிக்கடி நம்வீட்டிற்குவருகிறார், ஆனால் நாம்தான் அவர்வரும்போது வீட்டில் இருப்பதில்லை

-பிரான்ஸ்

கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை இந்தமூன்றும் -மனிதனை நாசமாக்கிவிடும்

-முகமதுநபி


கரைந்துப்போன வாழ்க்கையை நினைப்பதால் மனிதன் விசித்திரமான ஓர் இனிமையை உணர்கிறான்
-காண்டேகர்


வாழ்க்கையின் பிற்பகுதியில் உங்களுக்குப்பிடித்தமான அன்பான நண்பர்களை நீங்கள் அடையலாம் ஆனால் உங்கள் தாயின் மூலமாக உங்களுக்குக் கிடைத்த அளவில்லாத அன்பை பாசத்தை கண்னியத்தை வேறியார்மூலமாகவும் உங்களால் பெறமுடியாது.

சொன்னவர்..மெக்காலே
******************

27 comments:

 1. \\புதன் கிடைத்தாலும் பொன்மொழிகள் கிடைக்குமா?!"\\

  எங்களுக்கு கிடைச்சிடுச்சி அக்கா ;))

  நன்றி ;)

  ReplyDelete
 2. 1 comments: கோபிநாத் said...

  \\புதன் கிடைத்தாலும் பொன்மொழிகள் கிடைக்குமா?!"\\

  எங்களுக்கு கிடைச்சிடுச்சி அக்கா

  நன்றி ..///


  இந்த நாள் இனிய நாளாகட்டும் கோபி!

  ReplyDelete
 3. அருமையான பொன் மொழிகள். தமிழ் பிரவாகத்தின் காலை வணக்க இழைக்கு இன்றையிலிருந்து ஒவ்வொரு பொன் மொழியாக சுடப் போறேன் இங்கேருந்து.. :)

  ReplyDelete
 4. அக்கா.. அவங்க சொன்னதெல்லாம் சரி, நீங்க எங்களுக்கு என்ன அருளாசி வழங்கப் போறீங்க?

  ReplyDelete
 5. பொன்மொழிகளுக்கு நன்றி.

  ReplyDelete
 6. ஸ்வாதி said...
  அருமையான பொன் மொழிகள். தமிழ் பிரவாகத்தின் காலை வணக்க இழைக்கு இன்றையிலிருந்து ஒவ்வொரு பொன் மொழியாக சுடப் போறேன் இங்கேருந்து.. :)

  9:46 AM
  <>>>>> பர்மிஷன் சாங்ஷன்ன்ன்ன்ன்ண் டு!!!

  ReplyDelete
 7. Raghav said...
  அக்கா.. அவங்க சொன்னதெல்லாம் சரி, நீங்க எங்களுக்கு என்ன அருளாசி வழங்கப் போறீங்க?

  10:24 AM
  >>>>>>அப்பனே! யான் பிற்காலத்தில் ஷைலஜானந்தா(தி?:) ஆகும்போது அருள் ஆசி அட்சதை அரிசி எல்லாம் வழங்குவோம்:)

  ReplyDelete
 8. குட்டிபிசாசு said...
  ரசித்தேன்
  >>>>

  நான் உங்க பேரை ரசிச்சேன்!

  ReplyDelete
 9. ராமலக்ஷ்மி said...
  பொன்மொழிகளுக்கு நன்றி.

  11:25 AM
  >>>>ஆமா ராமலஷ்மி புதனுக்குஎன்ன செய்யலாம்னு பார்த்தேன் நேத்து செவ்வாய் திருமாலுது கிடச்சிது...இன்னிக்கு இதான்!! நன்றி

  ReplyDelete
 10. Anonymous12:16 PM

  வாழ்த்துக்கள் ஷைலஜா அக்கா, அடியேன் சொன்னதை மறக்காமல் செய்யவும்....:)

  தம்பி

  ReplyDelete
 11. Anonymous12:45 PM

  உங்கள் பதிவுகள் நட்சத்திர இடுகைகள் மூலமாக எனக்கு அறிமுகம். அனைத்தும் அருமை. அதிலும் நட்சத்திர பதிவுகள் கிழமைக்கு ஏற்றார் போல .... அருமையுளும் அருமை. வாழ்த்துக்கள். நிஜமாலுமே ரூம் போட்டு யோசிக்கிறீங்களா?

  ReplyDelete
 12. காலைல முந்தின பதிவை படிச்சபோவே நினைத்தேன் இன்னுமொரு பதிவு இருக்குமுன்னு.

  அறிய பழமொழிகளை மீண்டும் ஒரு முறை வாசிக்க, நினைவிலிருத்தச் செய்தமைக்கு நன்றிக்கோவ்...

  ReplyDelete
 13. நல்ல கருத்துக்கள்!!!

  ReplyDelete
 14. ஹேமா said...

  உங்கள் பதிவுகள் நட்சத்திர இடுகைகள் மூலமாக எனக்கு அறிமுகம். அனைத்தும் அருமை. அதிலும் நட்சத்திர பதிவுகள் கிழமைக்கு ஏற்றார் போல .... அருமையுளும் அருமை. வாழ்த்துக்கள். நிஜமாலுமே ரூம் போட்டு யோசிக்கிறீங்களா?

  12:45 PM <<<<

  நன்றி ஹேமா
  படிச்சி பாராட்டவும் மனம் வேணும் அது உங்கள மாதிரி இங்க பலருக்கு இருக்கு மகிழ்ச்சியா இருக்கு
  நிஜமாவே சமையல்ரூம்ல சமைச்சிட்டே யோசிச்சிதான் கணிணிமுன்னாடிவந்து தட்டச்சறது வழக்கம்!!!

  ReplyDelete
 15. மதுரையம்பதி said...
  காலைல முந்தின பதிவை படிச்சபோவே நினைத்தேன் இன்னுமொரு பதிவு இருக்குமுன்னு.

  அறிய பழமொழிகளை மீண்டும் ஒரு முறை வாசிக்க, நினைவிலிருத்தச் செய்தமைக்கு நன்றிக்கோவ்...

  2:21 PM
  >>>>>>நன்றி மௌலி
  ஆபீஸ் வேலை நடுல மறக்காம வந்து பின்னூட்டம் அளிக்கும் அன்புமனத்துக்கு நன்றிபல

  ReplyDelete
 16. இசக்கிமுத்து said...
  நல்ல கருத்துக்கள்!!!

  2:21 PM
  <<<<<<<<<<,,,நன்றி இசக்கிமுத்து

  ReplyDelete
 17. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சகோதரி:

  அழகான பெண் ஒரு ஆபரணம் (Ornament)
  குணமான பெண் ஒரு புதையல் (Treasure)
  -காண்டேகர்

  ReplyDelete
 18. அட! ஷைலஜாக்கா!தமிழ்மணத்தாரகையா!! மகிழ்ச்சி மகிழ்ச்சி.! (இப்பத்தான் கவனிச்சேன்)


  அமிழ்தென "மை.பா" அதுபோல்எழுத்து
  தமிழ்மணக்கச் செய்வீர் தரமே-எமக்கும்
  சுவையாய் எழுதிடும் சூத்திரம் தன்னை
  அவையினில் சொல்வீர் அழகு!

  ReplyDelete
 19. இப்னு ஹம்துன் said...
  அட! ஷைலஜாக்கா!தமிழ்மணத்தாரகையா!! மகிழ்ச்சி மகிழ்ச்சி.! (இப்பத்தான் கவனிச்சேன்)


  அமிழ்தென "மை.பா" அதுபோல்எழுத்து
  தமிழ்மணக்கச் செய்வீர் தரமே-எமக்கும்
  சுவையாய் எழுதிடும் சூத்திரம் தன்னை
  அவையினில் சொல்வீர் அழகு!

  >>>>>>>வாங்க இப்னு அருமைக்கவிதை அளித்து அதிலும் மைபாவை நுழைத்து இப்னு எனும் மாகவியின் திறமையை இங்கயும் காமிச்சிட்டீங்க மகிழ்ச்சி தம்பி

  ReplyDelete
 20. \\
  கரைந்துப்போன வாழ்க்கையை நினைப்பதால் மனிதன் விசித்திரமான ஓர் இனிமையை உணர்கிறான்
  -காண்டேகர்
  \\

  உண்மை...

  ReplyDelete
 21. ஷைலூ.

  காண்டேகர் இன்னொன்னு சொல்லாமப் போயிட்டாரேப்பா.....

  //கரைந்துப்போன வாழ்க்கையை நினைப்பதால் மனிதன் விசித்திரமான ஓர் இனிமையை உணர்கிறான்
  -காண்டேகர்//

  உணர்ந்தபின்பு அதை ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சுப் பதிவுகளாப் போட்டுக்கிட்டுக் கொசுவத்தி ஏத்திக்கிட்டு இருப்பான்/இருக்கான்:-)

  ReplyDelete
 22. ஓக்கே!

  ReplyDelete
 23. SP.VR. SUBBIAH said...
  இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சகோதரி:

  அழகான பெண் ஒரு ஆபரணம் (Ornament)
  குணமான பெண் ஒரு புதையல் (Treasure)
  -காண்டேகர்

  5:56 PM
  <<<<>>>>>>>அழகா இருக்கே இது?
  இபடிக்கு

  ஆபரணம் அணிந்த புதையல்(ஷைலஜா நீ அடங்கவே மாட்டியா?:)))

  ReplyDelete
 24. துளசி கோபால் said...
  ஷைலூ.>>>>ம்?

  காண்டேகர் இன்னொன்னு சொல்லாமப் போயிட்டாரேப்பா....>>>
  இன்னாது?.

  //கரைந்துப்போன வாழ்க்கையை நினைப்பதால் மனிதன் விசித்திரமான ஓர் இனிமையை உணர்கிறான்
  -காண்டேகர்//

  உணர்ந்தபின்பு அதை ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சுப் பதிவுகளாப் போட்டுக்கிட்டுக் கொசுவத்தி ஏத்திக்கிட்டு இருப்பான்/இருக்கான்:-)

  4:38 AM>>>>>அட் அட இதுக்கு நீங்க வரணும்கீறது:)

  ReplyDelete
 25. VSK said...
  ஓக்கே!

  8:00 AM
  >>>>வசிஷ்டர் வாயால்பிரும்ம ரிஷி?:)

  ReplyDelete
 26. ஆபரணம் அணிந்த புதையலுக்கு ஒரு வணக்கம் வச்சிக்கறேன்! :)

  //(ஷைலஜா நீ அடங்கவே மாட்டியா?:)))//

  இது உங்க ம.பா (மை.பா அல்ல, மறுபாதி) சொன்னது தானே? :))

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.