Social Icons

Pages

Monday, August 03, 2009

காவிரிப்பெண்ணே வாழ்க!நீரின்றி அமையாது உலகு!

பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.நம்பாரத நாட்டில் நதிகளை நாம் புனிதமாகவே கருதுகிறோம்.

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான்!
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.


பதினெட்டு என்கிற எண்ணுக்குத்தான் எத்தனை சிறப்பு!
,
18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
18 பாகங்கள் பகவத்கீதைக்கு
18 சித்தர்கள்
18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு
இன்னும் பல இருக்கலாம் இவ்வகையில் ஆடிக்குப்பதினெட்டாம் நாள் சிறப்பு!

இன்று ஆடிப்பதினெட்டு!
இந்த தேதியில் தான் மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டபின் காவிரி நதி கூடுதலாக பெருகி,
அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை!
பதினெட்டாம் பெருக்கன்று திருச்சி தஞ்சைப்பகுதி மக்கள் கோலாகலமாய் காணப்படுவார்கள்
அம்மாமண்டபம் கல்லணைமுக்கொம்பு என திருச்சியைச்சுற்றிய பகுதிகள் திருவிழா போல மாறிவிடும்.

படித்துறையில் மக்கள் வெள்ளம் காவிரிவெள்ளத்தை ஆர்வமுடன் கண்டு களிக்கும். மிட்டாய் பலூன் கடைகள் முளைக்கும்

கலந்தசாதங்கள் சக்கரைப்பொங்கல் வடாம் வற்றலுடன் படித்துறை வளாகத்தில் உட்கார்ந்தபடி சாப்பிடுவோம்.திருவரங்கத்தில்

ரங்கநாதர் காவிரிக்கு சீர் கொடுப்பது வழக்கம். தென்னீர் பொன்னி திரைக்கையால் அடிவருடுகிறாளே தினமும் அவளுக்கு பதில் மரியாதை தர வேண்டாமா?

இவ்விழாவன்று ஸ்ரீரங்கம் அம்மாண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். அன்று காவிரித்தாய்க்கு அவர் சார்பில் புடவை,வளையல் ,குங்குமம் மற்றும் வெற்றிலை ஆகிய பொருள்கள் சீதனமாக தரப்படுகிறது.இச்சீதனம் யானையின்மீது கொண்டுவரப்பட்டு ஸ்ரீரங்கம் காவேரி ஆற்றில் மிதக்க விடுவார்கள்!கவி உள்ளம் கொண்ட தமிழ்மக்களுக்கு காவிரி ஆடியில் அசைந்துவரும்போது சூல்கொண்ட பெண்ணாக காட்சி அளிக்கிறாள்.மேட்டிலும் படுகையிலும் பாய்ந்து மண்ணைப்பொன்னாகி மகிழ்ச்சி விளைவிக்கும் காவிரியை வாழி என வாழ்த்துகிறார்கள்!மஞ்சள் குங்குமம பூமாலை தந்து கருகமணிபோட்டு அனுப்புவார்கள். அந்திசூரியனின் நிறம்பட்டு மேனிக்கு இளம்சிவப்புவண்ணச்சேலையை சுற்றிவிட்டதுபோல ஆடிச்செல்வாள்.

காவிரியில் நீர் வற்றி மணலில் ஊறும் எறும்புகள் தெ்ரியும் காலம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது அப்போதெல்லாம் நம் கண்களில்தான் காவிரி.

உற்சாகமாய் தன்போக்கில் வரும் நதிகள் எல்லாமே

கடைசியில் கடலில்தான் கலக்கின்றன.

காவிரியும் நுரைமலர் குலுங்க காதலைத்தேடி கடல் நோக்கிச்சென்று கொண்டிருக்கிறாள்!காவிரிப்பெண்ணே நீ வாழி!

28 comments:

 1. காவிரியில் நீர் வற்றி மணலில் ஊறும் எறும்புகள் தெ்ரியும் காலம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது அப்போதெல்லாம் நம் கண்களில்தான் காவிரி.]]

  இதென்னவோ உண்மைதான் ...

  ReplyDelete
 2. அறியாத தகவல்கள்

  ReplyDelete
 3. //நீரின்றி அமையாது உலகு!//

  அசத்தல் ஆரம்பம் ஷைலஜா. நீர்தானே இன்று உலகின் ஆதாரம்..... இது இல்லையேல் நாம் அனைவரும் சேதாரம்.....

  //நம்பாரத நாட்டில் நதிகளை நாம் புனிதமாகவே கருதுகிறோம்.//

  நம் நாட்டில் நதிகளின் பெயர்கள் பெண்களின் பெயர் கொண்டு அழைப்பது, பெண்களுக்கு செய்யும் மரியாதையாகவே நான் கருதுகிறேன்.....

  //ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.//

  சிறுவயதில் காவிரி நதிக்கரையில் "சப்பரம்" மற்றும் சிறிய அளவிலான "தேர்" கொண்டு சென்று விளையாடியது என் மனக்கண் முன் நிழலாடுகிறது.....

  //பதினெட்டு என்கிற எண்ணுக்குத்தான் எத்தனை சிறப்பு!
  ,
  18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
  18 பாகங்கள் பகவத்கீதைக்கு
  18 சித்தர்கள்
  18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு
  இன்னும் பல இருக்கலாம்//

  நல்ல செய்திகள் ஷைலஜா.....

  //இந்த தேதியில் தான் மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டபின் காவிரி நதி கூடுதலாக பெருகி, அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.//

  மிக சரியே..... அழகாக படம் பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை தங்கள் எழுத்து எனக்கு அளிக்கிறது.....

  //அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை!//

  சென்னையில் நதிக்கு எங்கே போவது (நாற்றமெடுத்த கூவத்தை தவிர...)...ஆயினும், என் வீட்டோர் சிறப்பாக பூஜை செய்ததாக (வீட்டிலேயே...) அறிந்தேன்......

  //பதினெட்டாம் பெருக்கன்று திருச்சி தஞ்சைப்பகுதி மக்கள் கோலாகலமாய் காணப்படுவார்கள்
  அம்மாமண்டபம் கல்லணைமுக்கொம்பு என திருச்சியைச்சுற்றிய பகுதிகள் திருவிழா போல மாறிவிடும்.

  படித்துறையில் மக்கள் வெள்ளம் காவிரிவெள்ளத்தை ஆர்வமுடன் கண்டு களிக்கும். மிட்டாய் பலூன் கடைகள் முளைக்கும்

  கலந்தசாதங்கள் சக்கரைப்பொங்கல் வடாம் வற்றலுடன் படித்துறை வளாகத்தில் உட்கார்ந்தபடி சாப்பிடுவோம்.//

  நான் முன்பே சொன்னதுபோல், சப்பரம் மற்றும் தேர் இழுத்து சென்று, என் சம வயது பிள்ளைகளுடன் விளையாடி, கலந்த சாதங்கள் சாப்பிட்டது ஞாபகம் வந்தது.... என் உள்ளம் பெரும் மகிழ்ச்சி கொண்டது....

  //கவி உள்ளம் கொண்ட தமிழ்மக்களுக்கு காவிரி ஆடியில் அசைந்துவரும்போது சூல்கொண்ட பெண்ணாக காட்சி அளிக்கிறாள். //

  உண்மையே...... "இதயக்கனி" படத்தின் ஆரம்ப பாடலில் "சீர்காழி" கோவிந்தராஜன் குரலில் அந்த காவிரியை பற்றி பாடுவது நினைவுக்கு வருகிறது.....

  //காவிரியில் நீர் வற்றி மணலில் ஊறும் எறும்புகள் தெரியும் காலம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது அப்போதெல்லாம் நம் கண்களில்தான் காவிரி.//

  நிதர்சனமான உண்மை தோழி.... மணல் கொள்ளையர்களை நினைத்தால், என் உள்ளம் குமுறுகிறது.... இப்படி, எத்தனை எத்தனை இயற்கை வளங்களை கொள்ளை
  அடித்து, சொத்து சேர்த்து, அதை அவர்கள் மனம்போல் கருப்பாக்கி, சுவிஸ் வங்கிகளில் பதுக்குகின்றனரே....... என் செய்வோம் தோழி....

  //உற்சாகமாய் தன்போக்கில் வரும் நதிகள் எல்லாமே

  கடைசியில் கடலில்தான் கலக்கின்றன.

  காவிரியும் நுரைமலர் குலுங்க காதலைத்தேடி கடல் நோக்கிச்சென்று கொண்டிருக்கிறாள்!

  காவிரிப்பெண்ணே நீ வாழி! //

  வாழி வாழி..... காவிரிப்பென்னே நீ வாழி.....
  இதை அருமையாக பதிவு செய்த பெண்ணே நீயும் வாழி.......

  இயற்கையை வணங்குவோம், போற்றுவோம், கொண்டாடுவோம் அதோடு பாதுகாக்கவும் செய்வோம்.....

  (குடும்ப நாவல் "காத்திருக்கிறேன் வா" கதையின் ஆசிரியை நீங்களா? நன்று.... சென்னை வரும்போதும், அதை வாங்கி படிக்கிறேன்.......)

  வாழ்த்துக்கள் ஷைலஜா.......

  ReplyDelete
 4. காவிரி தாயை வணங்கும் பொது கன்னி பெண்கள் சீக்கிரம் திருமணம் ஆகவேண்டும் என்றும், திருமணம் ஆனவர்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்றும், மஞ்சள் கயிறு கட்டி கொள்வது இந்த நாளின் சிறப்பு. (சிறு பிள்ளைகளும், ஆண்களும் பாவம் என்று அவர்கள் கைகளிலும் கூட கட்டிவிடுவோம்)

  ReplyDelete
 5. காவிரியின் சிறப்பை சிறப்பா சொல்லிட்டீங்கக்கா.. நேத்து என் தங்கையிடம் பேசும் போது காவிரியில் தண்ணீர் வந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தேன்.. திருவரங்கம் போயிருந்தா இன்னும் சிறப்ப இருந்துருக்கும்..

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு ;)

  ReplyDelete
 7. ஊர் நினைவுகளை கிளப்பி விட்டு விட்டீர்கள்...அருமையான பதிவு

  ReplyDelete
 8. அக்கா திருச்சியில படிச்ச காலத்துல வருஷம் தவறாம ஆடிப்பெருக்குக்கு அம்மாமண்டபம் போயிருவோம்.அப்ப சைட் அடிச்ச பல பொண்ணுங்க முகம்கூட இன்னும் ஞாபகம் இருக்கு :)

  நேற்று புதுக்கோட்டையில் இருந்து சென்னை வ‌ரும்போது இர‌வு திருச்சி காவேரி பால‌த்தைக் க‌ட‌ந்து வ‌ந்த‌போது என்னையறியாது ஏதோ ஒரு பார‌ம் ம‌னதில்.

  ஆமாக்கா ஒரு 40 வ‌ருஷ‌ம் முன்னாடி இங்க‌ கூவ‌த்துல‌யும்கூட‌ தாலிபெருக்கி போட்டுருப்பாங்க‌ல்ல‌??

  ReplyDelete
 9. நல்லாச் சொன்னீங்க...ஆற்றங்கரையில் இல்லாவிடினும், கலந்த சாதங்கள், வடாம் போன்றவை கிடைத்தது இன்று :)

  ReplyDelete
 10. //
  நட்புடன் ஜமால் said...
  காவிரியில் நீர் வற்றி மணலில் ஊறும் எறும்புகள் தெ்ரியும் காலம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது அப்போதெல்லாம் நம் கண்களில்தான் காவிரி.]]

  இதென்னவோ உண்மைதான் ...

  8:19 AM
  ///

  வாங்க ஜமால்
  காவிரி அடிக்கடிநம்கண்களில்வராமல் இருக்க வேண்டுவோம் இயற்கையை! நன்றிகருத்துக்கு

  ReplyDelete
 11. //திகழ்மிளிர் said...
  அறியாத தகவல்கள்

  9:09 AM
  //

  ஆமாம் திகழ்மிளிர் நதிகளைப்பற்றி நாம் நிறைய இன்னும் அறியவேண்டும்

  ReplyDelete
 12. ////////
  R.Gopi said...


  அசத்தல் ஆரம்பம் ஷைலஜா. நீர்தானே இன்று உலகின் ஆதாரம்..... இது இல்லையேல் நாம் அனைவரும் சேதாரம்.....>>>


  ஆமாம் கோபி சரியாகசொன்னீர்கள்

  ////நம் நாட்டில் நதிகளின் பெயர்கள் பெண்களின் பெயர் கொண்டு அழைப்பது, பெண்களுக்கு செய்யும் மரியாதையாகவே நான் கருதுகிறேன்.....////


  மிகநல்ல எண்ணம்கோபி.

  /////

  சிறுவயதில் காவிரி நதிக்கரையில் "சப்பரம்" மற்றும் சிறிய அளவிலான "தேர்" கொண்டு சென்று விளையாடியது என் மனக்கண் முன் நிழலாடுகிறது...../////  அப்படியா? சின்னவயது நினைவுகளே தேர்போல அசையும் அடிக்கடி!  ., பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.//

  /////மிக சரியே..... அழகாக படம் பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை தங்கள் எழுத்து எனக்கு அளிக்கிறது....//////

  நன்றிகோபி!.

  /////சென்னையில் நதிக்கு எங்கே போவது (நாற்றமெடுத்த கூவத்தை தவிர...)...ஆயினும், என் வீட்டோர் சிறப்பாக பூஜை செய்ததாக (வீட்டிலேயே...) அறிந்தேன்......////

  சென்னையில் கடல் இருக்கே நதிகள்தேடி அங்கேதனே வருகின்றன?

  /////
  நான் முன்பே சொன்னதுபோல், சப்பரம் மற்றும் தேர் இழுத்து சென்று, என் சம வயது பிள்ளைகளுடன் விளையாடி, கலந்த சாதங்கள் சாப்பிட்டது ஞாபகம் வந்தது.... என் உள்ளம் பெரும் மகிழ்ச்சி கொண்டது.... //////  நதியலைகளாய் நினைவலைகளா?
  \


  /////. "இதயக்கனி" படத்தின் ஆரம்ப பாடலில் "சீர்காழி" கோவிந்தராஜன் குரலில் அந்த காவிரியை பற்றி பாடுவது நினைவுக்கு வருகிறது.....


  நிதர்சனமான உண்மை தோழி.... மணல் கொள்ளையர்களை நினைத்தால், என் உள்ளம் குமுறுகிறது.... இப்படி, எத்தனை எத்தனை இயற்கை வளங்களை கொள்ளை
  அடித்து, சொத்து சேர்த்து, அதை அவர்கள் மனம்போல் கருப்பாக்கி, சுவிஸ் வங்கிகளில் பதுக்குகின்றனரே....... என் செய்வோம் தோழி..../////

  ஆமாம் கோபி அக்கிரம்ங்கள்பெருகும்போது இயற்கையின் சீற்றத்தைத்தான் வெள்ளமாய் சுனாமியாய் பார்க்கிறோமே.

  //உற்சாகமாய் தன்போக்கில் வரும் நதிகள் எல்லாமே

  கடைசியில் கடலில்தான் கலக்கின்றன.

  காவிரியும் நுரைமலர் குலுங்க காதலைத்தேடி கடல் நோக்கிச்சென்று கொண்டிருக்கிறாள்!

  காவிரிப்பெண்ணே நீ வாழி! //

  வாழி வாழி..... காவிரிப்பென்னே நீ வாழி.....
  இதை அருமையாக பதிவு செய்த பெண்ணே நீயும் வாழி.......

  இயற்கையை வணங்குவோம், போற்றுவோம், கொண்டாடுவோம் அதோடு பாதுகாக்கவும் செய்வோம்.....///

  வாழ்த்துக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

  (////குடும்ப நாவல் "காத்திருக்கிறேன் வா" கதையின் ஆசிரியை நீங்களா? நன்று.... சென்னை வரும்போதும், அதை வாங்கி படிக்கிறேன்.......)///

  ஆமாம் நாந்தான்

  நேரில் தருகிறேன் புத்தகம்....மிக்க நன்றிகோபி நீண்ட அழகான பின்னூட்டத்திற்கு

  வாழ்த்துக்கள் ஷைலஜா.......>>
  உங்களுக்கும் பதினெட்டாம் பெருக்கு வாழ்த்து!

  9:32 AM

  ReplyDelete
 13. //Eswari said...
  காவிரி தாயை வணங்கும் பொது கன்னி பெண்கள் சீக்கிரம் திருமணம் ஆகவேண்டும் என்றும், திருமணம் ஆனவர்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்றும், மஞ்சள் கயிறு கட்டி கொள்வது இந்த நாளின் சிறப்பு. (சிறு பிள்ளைகளும், ஆண்களும் பாவம் என்று அவர்கள் கைகளிலும் கூட கட்டிவிடுவோம்)

  10:24 AM

  //\//வாங்க ஈஸ்வரி தகவல்கள் புதிதா இருக்கே நன்றி பகிர்ந்ததுக்கு

  ReplyDelete
 14. //Raghav said...
  காவிரியின் சிறப்பை சிறப்பா சொல்லிட்டீங்கக்கா.. நேத்து என் தங்கையிடம் பேசும் போது காவிரியில் தண்ணீர் வந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தேன்.. திருவரங்கம் போயிருந்தா இன்னும் சிறப்ப இருந்துருக்கும்..

  12:02 PM
  //////


  அப்படியா காவிரியில் தண்ணீர்வந்தாச்சா? நல்ல விஷயம் ராகவ் நன்றிமிக சொன்னதுக்கு அமெரிக்கால இருக்கேனா இப்போ ஒண்ணுமே தெரில்ல!

  ReplyDelete
 15. //கோபிநாத் said...
  நல்ல பகிர்வு ;)

  12:26 PM
  ///நன்றிகோபிநாத்

  ReplyDelete
 16. //V.Radhakrishnan said...
  ஊர் நினைவுகளை கிளப்பி விட்டு விட்டீர்கள்...அருமையான பதிவு

  3:46 PM

  /////


  தங்களும் அயல்நாட்டில் இருப்பதால் நினைவுகள் ஊருக்குபோயிட்டதா?:) நன்றி ராதாக்ருஷ்ணன்

  ReplyDelete
 17. //எம்.எம்.அப்துல்லா said...
  அக்கா திருச்சியில படிச்ச காலத்துல வருஷம் தவறாம ஆடிப்பெருக்குக்கு அம்மாமண்டபம் போயிருவோம்.அப்ப சைட் அடிச்ச பல பொண்ணுங்க முகம்கூட இன்னும் ஞாபகம் இருக்கு :)>>>>>>


  அடடா சைட்டா?:)நாங்கல்லாம் படிக்கறப்போ டவுனுக்கு ரயிலில் போவோம்காலேஜுக்கு அப்போ பாய்ஸ் காவேரிப்பாலம்வரப்போ வீரதீரமா ரயில்லிலிருந்து குதிப்பாங்க அப்போ அதை சட் அடிப்போம் ஓரக்கண்ணால!!

  ///நேற்று புதுக்கோட்டையில் இருந்து சென்னை வ‌ரும்போது இர‌வு திருச்சி காவேரி பால‌த்தைக் க‌ட‌ந்து வ‌ந்த‌போது என்னையறியாது ஏதோ ஒரு பார‌ம் ம‌னதில்.

  ஆமாக்கா ஒரு 40 வ‌ருஷ‌ம் முன்னாடி இங்க‌ கூவ‌த்துல‌யும்கூட‌ தாலிபெருக்கி போட்டுருப்பாங்க‌ல்ல‌///

  40க்குமுன்னாடியா இருக்கலாம்.....
  நதிகளுக்கு பெரும்கதை இருக்கு அப்துல்லா

  அப்றோம் நான் இப்போ விசிட்டுக்கு அமெரிக்கா வந்திருக்கேன் அப்துல்லா.
  உங்க பாடல் லிங்க் அனுப்புங்க இன்னும் கேட்கவேஇல்ல நான் நன்றி இங்க வந்து கருத்து சொன்னதுக்கு

  ReplyDelete
 18. //மதுரையம்பதி said...
  நல்லாச் சொன்னீங்க...ஆற்றங்கரையில் இல்லாவிடினும், கலந்த சாதங்கள், வடாம் போன்றவை கிடைத்தது இன்று :)

  5:51 PM
  //////

  மௌலி.....நம்ம ஊர்ல (பெங்களூர்) நாப்பதுமைல் போனா காவிரி வந்துடுமே அடுத்ததடவை நாமெல்லாம் கலந்தசாதமுடன் போய் காவிரியைக்கலக்கலாம் என்ன?:)

  ReplyDelete
 19. என்னக்கா
  போட்டோமாக் நதிக் கரையில் உட்கார்ந்துக்கிட்டு காவிரியில் ஆடிப்பெருக்கு கொண்டாடறீங்களா? :))

  //18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
  18 பாகங்கள் பகவத்கீதைக்கு
  18 சித்தர்கள்
  18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு//

  பதினெட்டு கண்கள் என் முருகனுக்கு! அதைச் சொல்ல மாட்டீங்களா? :)

  //அம்மாமண்டபம் கல்லணைமுக்கொம்பு என திருச்சியைச்சுற்றிய பகுதிகள் திருவிழா போல மாறிவிடும்//

  பவானி, கல்லணை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், குடந்தை, மயிலாடுதுறை, பூம்புகார்-ன்னு இந்த இடங்களிலும் பெரும் கொண்டாட்டம் தான்! :))

  //அன்று காவிரித்தாய்க்கு அவர் சார்பில் புடவை,வளையல் ,குங்குமம் மற்றும் வெற்றிலை ஆகிய பொருள்கள் சீதனமாக தரப்படுகிறது.இச்சீதனம் யானையின்மீது கொண்டுவரப்பட்டு ஸ்ரீரங்கம் காவேரி ஆற்றில் மிதக்க விடுவார்கள்//

  ஆமாம்...நாங்க ஆற்றில் குதிச்சி, நீச்சல் அடிச்சி, அந்தக் காதோலை கருகமணிகளை எல்லாம் கலெக்ட் பண்ணுவோம் சின்ன அப்பாவிப் புள்ளையா இருக்கச் சொல்ல! :))

  கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
  பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,

  எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
  எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே

  நடந்தாய் வாழி காவேரி!
  நடந்தாய் வாழி காவேரி!

  ReplyDelete
 20. ஆடிப் பெருக்கில்
  காவிரி கரைபுரண்டு ஓடினாள்
  மணல் அள்ள
  ஆற்றின் நடுவே போடப்பட்ட
  ரோட்டின் அக்கரைக்கும் இக்கரைக்கும்

  நாங்களும் இன்று காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்தோம்... எத்தனை சுகங்கள் இருந்தாலும் காவிரியில் நீராடுவது போல் வருமா?? ஒவ்வொரு முறை காவிரியைப் பார்க்கும்போதும் பொன்னியின் செல்வன் காவியம் தான் மனதில் ஓடும்... இப்போதெல்லாம் காவிரியைப் பார்த்தால் ஏதோ நம் தாய் பொலிவிழந்து காணப்படுவது போல் ஒரு வருத்தம் தோன்றுகிறது... மணல் அள்ளுகிறேன் பேர்வழி என்று ஆற்றின் நடுவே ரோடு போட்டு அதன் அழகையே கெடுத்துவிட்டார்கள்.. போதாக்குறைக்கு இக்கரையிலிருந்து அக்கரைக்கு ஆங்காங்கே பாலம் கட்டும் பணி வேறு நடக்கிறது.. இதற்க்கெல்லாம் மேலாக கரூர் திருச்சி நெடுஞ்சாலை செப்பனிடும் பணிக்காக இருபுறமும் சோலை போல் அழகாக சாலையை காத்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு மொட்டையாய் நிற்கின்றன... இதற்குமுன் அந்த சாலையில் பயணம் செய்த அனுபவம் யாருக்கும் இருப்பின் அவர்களைக் கேளுங்கள்.. ஆனால் இப்போது அந்த சாலையில் செல்வதற்கே மனம் விரும்புவதில்லை... கண்ணீர்தான் வருகிறது... நான் அனுபவித்த இயற்கையின் அழகை என் பிள்ளைகளுக்காய் நான் சேமித்துவைக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வு வருகிறது.. என் மனதில் குமுறிக்கொண்டிருக்கும் உணர்வுகளை என்னால் கூறமுடியவில்லை...
  கொஞ்சம் கொஞ்சமாய் நம் வளங்கள் எல்லாம் அழிந்துகொண்டே வருகின்றன.... நம் சுயநலத்திற்காக அழித்துக்கொண்டிருக்கிறோம்... இதே நிலைமை நீடிக்குமானால் தமிழகம் வாழத்தகுதியில்லாத இடமாகிவிடும்...

  ReplyDelete
 21. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  என்னக்கா
  போட்டோமாக் நதிக் கரையில் உட்கார்ந்துக்கிட்டு காவிரியில் ஆடிப்பெருக்கு கொண்டாடறீங்களா? :))///

  போட்டோமாக் நதியில் உட்கார்ந்தாலும் மனமெல்லாம் பொன்னி நதிக்கரையில்தான் தம்பியே!!

  ///

  //18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
  18 பாகங்கள் பகவத்கீதைக்கு
  18 சித்தர்கள்
  18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு//

  பதினெட்டு கண்கள் என் முருகனுக்கு! அதைச் சொல்ல மாட்டீங்களா? :)/////  யார் சொன்னா என்ன? நீஙக் சொல்லுவீங்கன்னு தெரியும் ரவி:)

  ///பவானி, கல்லணை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், குடந்தை, மயிலாடுதுறை, பூம்புகார்-ன்னு இந்த இடங்களிலும் பெரும் கொண்டாட்டம் தான்! :))///


  ஆமாம் சொல்வாங்க கேட்ருக்கேன்.

  //ஆமாம்...நாங்க ஆற்றில் குதிச்சி, நீச்சல் அடிச்சி, அந்தக் காதோலை கருகமணிகளை எல்லாம் கலெக்ட் பண்ணுவோம் சின்ன அப்பாவிப் புள்ளையா இருக்கச் சொல்ல! :))///


  :):) அப்பாவிப்புள்லைதான் ரவி சின்னவயசுல:)

  ///கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
  பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,

  எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
  எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே///

  ஆஹா பாடலை நினைவாய் இங்கு அளித்த ரவிக்கு பணக்காரமனசு!
  அரங்கன் அருளட்டும்!

  ReplyDelete
 22. 11:23 PM


  nila said...


  வாங்க நிலா நல்வரவு!


  ////
  ஆடிப் பெருக்கில்
  காவிரி கரைபுரண்டு ஓடினாள்
  மணல் அள்ள
  ஆற்றின் நடுவே போடப்பட்ட
  ரோட்டின் அக்கரைக்கும் இக்கரைக்கும்

  நாங்களும் இன்று காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்தோம்... எத்தனை சுகங்கள் இருந்தாலும் காவிரியில் நீராடுவது போல் வருமா??//


  கண்டிப்பாய்வராதுதான் நானும் காவிரியில்மூழ்கி வளர்ந்தவள்தான் நிலா.


  ///// ஒவ்வொரு முறை காவிரியைப் பார்க்கும்போதும் பொன்னியின் செல்வன் காவியம் தான் மனதில் ஓடும்... ///

  ஆமாம் மறக்கமுடியாத காவியம் அது!


  ///இப்போதெல்லாம் காவிரியைப் பார்த்தால் ஏதோ நம் தாய் பொலிவிழந்து காணப்படுவது போல் ஒரு வருத்தம் தோன்றுகிறது... மணல் அள்ளுகிறேன் பேர்வழி என்று ஆற்றின் நடுவே ரோடு போட்டு அதன் அழகையே கெடுத்துவிட்டார்கள்.. போதாக்குறைக்கு இக்கரையிலிருந்து அக்கரைக்கு ஆங்காங்கே பாலம் கட்டும் பணி வேறு நடக்கிறது.. இதற்க்கெல்லாம் மேலாக கரூர் திருச்சி நெடுஞ்சாலை செப்பனிடும் பணிக்காக இருபுறமும் சோலை போல் அழகாக சாலையை காத்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு மொட்டையாய் நிற்கின்றன... //
  அண்மையில் இந்த சோகக்காட்சியை நானும் பார்த்து மனம் நொந்தேன்.


  ///இதற்குமுன் அந்த சாலையில் பயணம் செய்த அனுபவம் யாருக்கும் இருப்பின் அவர்களைக் கேளுங்கள்.. ஆனால் இப்போது அந்த சாலையில் செல்வதற்கே மனம் விரும்புவதில்லை... கண்ணீர்தான் வருகிறது... நான் அனுபவித்த இயற்கையின் அழகை என் பிள்ளைகளுக்காய் நான் சேமித்துவைக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வு வருகிறது.. என் மனதில் குமுறிக்கொண்டிருக்கும் உணர்வுகளை என்னால் கூறமுடியவில்லை...
  கொஞ்சம் கொஞ்சமாய் நம் வளங்கள் எல்லாம் அழிந்துகொண்டே வருகின்றன.... நம் சுயநலத்திற்காக அழித்துக்கொண்டிருக்கிறோம்... இதே நிலைமை நீடிக்குமானால் தமிழகம் வாழத்தகுதியில்லாத இடமாகிவிடும்..///

  அருமையாக சொன்னீங்க நிலா
  இதேகவலைதான் நம்மைப்போல்பலருக்கும்

  அதுதன் நதி இதுதான் மரம் என்று நம்பிள்ளைகளுக்கு சுட்டிக்காட்டக்கூட அவைகள் இனி இருக்காதுபோல இருக்கிறது நிலமை.

  கருத்துக்களுக்கு மிக்க நன்றி நிலா.

  11:41 PM

  ReplyDelete
 23. நளினமான பதிவு.
  நல்ல சொல்லாடல்.
  பெண்ணே நீ வாழ்க!

  ReplyDelete
 24. //லதானந்த் said...
  நளினமான பதிவு.
  நல்ல சொல்லாடல்.
  பெண்ணே நீ வாழ்க!

  8:38 PM
  /// நன்றி திருலதானந்த்!

  ReplyDelete
 25. http://pudugaithendral.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

  அக்கா மேல உள்ள லிங்கில் என் பாட்டை தென்றல் அக்கா பதிவேத்தி இருக்காங்க. மறக்காம கேட்டுட்டு சொல்லுங்கக்கா :)

  pudukkottaiabdulla@gmail.com

  ReplyDelete
 26. அப்துல்லா!

  என்னது இது கார்த்திக்தான் பாட்றார்னு நினைக்கிற அளவுக்கு தூள் கெளப்பி இருக்கீங்க! அருமை.
  எப்படி பின்னணி இசை வருது கூடவே? நிறைய பாடிட்டே இருங்க அடுத்த பாட்டு எப்போ? நேயம் விருப்பம்கேட்கலாமா?:)

  ReplyDelete
 27. //என்னது இது கார்த்திக்தான் பாட்றார்னு நினைக்கிற அளவுக்கு தூள் கெளப்பி இருக்கீங்க! அருமை.
  //

  மிக்க நன்றி அக்கா . முதலில் இந்த பாடலைப் பாட கார்த்திக்கைதான் கேட்டாராம் இசைஅமைப்பாளர் பரத்வாஜ். அவர் எதோ வெளிநாடு நிகழ்ச்சிக்குப் போனதால் எனக்கு அடித்தது அதிர்ஷ்ட்டம் :)  //எப்படி பின்னணி இசை வருது கூடவே? //

  இந்த படத்தின் ஆடியோ சி.டி. ரிலீஸ் ஆயிருச்சுக்கா. அந்த சி.டி.ஐ கலா அக்காவுக்கு (புதுகை தென்றல்) அனுப்பி இருந்தேன். அதைத்தான் அவங்க சைட்டில் போட்டு இருக்காங்க.


  // அடுத்த பாட்டு எப்போ? //


  இந்த படம் இந்த மாதக் கடைசியில் வருது. பாட்டு ஹிட்டானால் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரலாம். பார்ப்போம் இறைவன் நாட்டம் என்னவென்று.


  //நேயம் விருப்பம்கேட்கலாமா?:) //

  பெங்களூர் வரும்போது அக்கா வீட்டுக்கு வந்து முழு கச்சேரியே பண்ணுறேன் :))

  ReplyDelete
 28. எம்.எம்.அப்துல்லா said...
  //என்னது இது கார்த்திக்தான் பாட்றார்னு நினைக்கிற அளவுக்கு தூள் கெளப்பி இருக்கீங்க! அருமை.
  //

  மிக்க நன்றி அக்கா . முதலில் இந்த பாடலைப் பாட கார்த்திக்கைதான் கேட்டாராம் இசைஅமைப்பாளர் பரத்வாஜ். அவர் எதோ வெளிநாடு நிகழ்ச்சிக்குப் போனதால் எனக்கு அடித்தது அதிர்ஷ்ட்டம் :)


  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  அதிர்ஷ்டமா ஜாக்பாட்டுனு சொல்லுங்க! வாழ்த்துகள்!


  //
  இந்த படம் இந்த மாதக் கடைசியில் வருது. பாட்டு ஹிட்டானால் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரலாம். பார்ப்போம் இறைவன் நாட்டம் என்னவென்று.


  //நேயம் விருப்பம்கேட்கலாமா?:) //

  பெங்களூர் வரும்போது அக்கா வீட்டுக்கு வந்து முழு கச்சேரியே பண்ணுறேன் :))

  4:38 PM

  >>>>>>>>>>>>>>>>>>>>>>.ஹிட் ஆகும் அப்துல்லா! அப்றோம் எங்களையெல்லாமும் கண்டுக்கோங்கப்பா:)

  பெரிய பட்டியலே இருக்கு உங்களை நேர்லபாத்தா பாடச்சொல்லிக்கேட்க! மகிழ்ச்சி தம்பி, வாழ்க வளர்க!

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.