Social Icons

Pages

Thursday, October 22, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)

(மு.கு.

முந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்!)

1989 ஜனவரி, 7.

“கவுண்டரய்யா உங்க மகன் ராசு. ரண்டு வயசுக் கொளந்தப் பையனாட்டமா இருக்கான்? அராமித் தனம் பொறுக்க முடிலீங்கோ. நெம்ப லொள்ளுங்கோ. என்ர ஊட்டுக்குள்ள பூந்து ஆறு மாசப் பச்சக் கொளந்தைனுங்கூடப் பாக்காம அருக்காணிப் புள்ளைகிட்ட இருந்து அதும்பட கையத் திருகி அதுன்ர பொம்மையைப் புடுங்கி ஒடச்சிப் போட்டுட்டானுங்கோ.”

”ஏன்ரா சின்னசாமி! அவனும் கொளந்தப் பையந்தான? போச்சாது போனு சொல்லிப்போட்டுப் போவயா? அத உட்டுப்போட்டு நாயம் வெக்க வந்துட்ட? செரி செரி.. இந்தா ஆயரன் ருவா வெச்சுக்க. உன்ர புள்ளைக்கு புதுப் பொம்மய வாங்கிக் குடுத்துச் சீராட்டு போ போ!”1997 ஜூன்,18

”கவுண்டரய்யா பள்ளிக்கோடத்துல ராசு என்ன பண்ணிப்போட்டாந் தெரியுமா? பக்கத்துப் பையனப் பாத்து காப்பி அடிச்சிப் போட்டானுங்க. பத்து வயசுங்கூடி ஆகல. அதுக்குள்ள இத்தச்சோட்டு அக்குறும்பு ஆகாதுங்கோ.”

”ஆமாய்யா! நீங்கல்லாம் ஒரு வாத்தியாய்யா? பொறளி பேச வந்து போட்டீங்க. ஒளுக்கமாப் படிப்புச் சொல்லிக் குடுத்தா அவன் ஏனுங்க காப்பி அடிக்கப் போறான்? ஒங்க லச்சனம் அப்பிடியிருக்குமாட்ட இருக்குது. போவீங்களா அக்கட்டால!

2006 செப்டம்பர், 7

”கவுண்டரய்யா! காலேசுல ராசு வளுசப் புள்ளைகளப் பண்ற இமிசு நெம்ப சாஸ்தியாயிட்டே போகுதுங்கோ. நெம்ப நிதான பசங்களைச் சேத்துகிட்டுச் சீக்கி அடிக்கறதும், அளும்பாப் பாட்டுப் படிக்கறதும் ஒரு ரூப்பிலாம போய்க்கிட்டே இருக்குதுங்கோ!”

”எல்லாம் வயசுக் கோளாறு! அந்த வயசுல நாம கூடத்தான் புள்ளைகள கிட்டக் குறும்பு செஞ்சோம். காலேசுக்கு வர்ர புள்ளைகள ஒளுக்கமாச் சீல துணிமணி போட்டூட்டு வரச் சொல்லுங்க அங்கியும் இங்கியும் காமிச்சீட்டு அவிங்க வந்துபோட்டு அப்பறமாப் பசங்ககள நொள்ள சொல்றது. இதே தொளிலாப் போச்சு”

2008 ஜுலை9

”கவுண்டரய்யா! நிச்சயம் பண்ணுன என்ர புள்ள கையைப் புடிச்சு ராசு இளுத்துப்போட்டான். இந்த அக்குறும்புக்கு நீங்க நாயம் சொல்லிப் போடுங்க.”

”அடப் போய்யா! ஊரு முச்சூடும் இந்தக் கெரகத்தைச் சொல்லீட்டுத் திரியாத. லச்ச ரூவா பணம் இருக்குது. எடுத்திட்டு புள்ளையையுங் கூட்டிகிட்டு எங்காச்சும் ஓடிப் போயிரு.”
2009 ஆகஸ்ட், 16

”கவுண்டரய்யா! ஐயோ என்ன காரியம் பண்ணிப் போட்டீங்க?“

”நான் செஞ்சதுல என்ரா தப்பு? நேத்துத் தண்ணி மப்புல அந்த நாசமத்தவன் என்ன பண்ணிப் போட்டாந் தெரியுமா? சொதந்திர தினத்துக்கு ஏத்தி வெச்ச கொடிய உருகிப் போட்டுப்போட்டு கொடிக் கம்பத்துல மாட்டக் கட்டி வெச்சு வெளுத்துகிட்டிருந்தாந் தெரியுமா? ஏண்டா இப்புடி அக்குறும்பு பண்றேனு கேட்டதுக்கு வாயில வந்தபடி என்னைய வாத்தா வக்கானு பேசிப்போட்டான். அதாச்சும் பரவாயில. கொடியப் பத்தியும் சொதந்திரம் வாங்கிக் குடுத்தவிங்க பத்தியும் அட்டூளியமாப் பேசிப்போட்டான். அதான் பெத்தமவன்னும் பாக்காம நொங்கு சீவறாப்புலா ஒரே சீவா அவனச் சீவிப் போட்டேன்”

கதர்ச் சட்டையில் படிந்த ரத்தக் கறையுடன் கவுண்டர் காவல் நிலையம் நோக்கி நடந்தார்.


47 comments:

 1. யக்கோவ், மீ த பஸ்ட்டு
  கதய படிச்சிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன்
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 2. //sriram said...
  யக்கோவ், மீ த பஸ்ட்டு
  கதய படிச்சிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன்
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  7:29 AM
  //


  வாங்கதம்பி வாங்க சீக்கிரமா!!!

  ReplyDelete
 3. யக்கா
  இப்பத்தான் நெண்டு கதயும் படிச்சேன்,
  ரெண்டும் நல்லா இருக்கு அக்கா...
  இந்த கத கொஞ்சம் நம்ப முடியல அக்கா, ஒரு நல்லவர் எப்படி தன் மகன் செய்த பெண் தொடர்பான தவறை காசு கொடுத்து மறைக்க முயற்சி செய்வார்
  அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 4. Anonymous8:06 AM

  ஸ்ரீராம் சொன்னதே எனக்கும் தோணிச்சு. மத்தபடி நல்லாவே இருக்கு

  ReplyDelete
 5. ஆஹா... போட்டின்னு சொன்ன‌தும், வ‌ர்ற‌ க‌தையெல்லாம் வெளுத்து வாங்க‌ற‌ வ‌கையால்ல‌ இருக்கு...

  ந‌ல்லா இருக்கும் ஷைல‌ஜா மேட‌ம்...

  பிள்ளையின் மேல் க‌ண்மூடி த‌ன‌மாக‌ பாச‌ம் வைத்திருந்த‌ தந்தையே ஆசை மக‌‌னை கொல்வ‌து, ஷாக்கிங் முடிவு...

  பாராட்டுக்க‌ள் மேட‌ம்....

  (நெம்ப‌ நல்லாருக்குதுங்கோ அம்மிணி....)

  ReplyDelete
 6. முடிவு எதிரே பாராதது.

  ஸ்ரீராம் சொலவதில் நியாயம் இருந்தாலும் அப்பா கேரக்டரை என்றைக்கேனும் சரியாகி விடுவான் என மகனுக்கு அதீத செல்லம் கொடுப்பவராகக் காட்டவும், முடிவில் கைவிட்டுப் போன மகனைப் பார்த்து, காலங்கடந்து அவர் பொங்கி விடுவதாகவும் அமைத்திருக்கிறீர்கள். அப்போதுதான் முடிவு நச் ஆகிறது. சரிதானா நான் சொல்வது:)?

  கவுண்டர் பாஷையை ரசித்தேன். வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. ஏனுங்க நல்லா இருக்குதுங்க. நாங்கூட சின்னக்கவுண்டராட்டம் பாட்டு போடுவீங்கன்னு நெனச்சேனுங்க.முடிவு மனச நெனச்சு போட்டுடுச்சுங்க :)

  ReplyDelete
 8. ஏனுங்க நல்லா இருக்குதுங்க. நாங்கூட சின்னக்கவுண்டராட்டம் பாட்டு போடுவீங்கன்னு நெனச்சேனுங்க.முடிவு மனச நெனச்சு போட்டுடுச்சுங்க :)

  ReplyDelete
 9. Anonymous2:27 PM

  முடிவு உண்மையிலேயே ’நச்’ என்று இருக்கிறது. நடை யாருடைய ‘டச்’ சையோ நினைவு படுத்துகிறது.

  ReplyDelete
 10. வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இதுதாண்டா நாட்டாமையோட தீர்ப்பு, என்ன கணக்கு?
  அதான் கணக்கு.
  என்றா பசுபதி?
  நீங்க சொன்னா சரியாதாங்க இருக்கும்.

  இங்க வெச்சோம்லட டச்சு.. நச்சுனு!

  நல்லாருக்கு!
  எனக்கென்னவோ காமெடியா இருந்தது வட்டாரப் பேச்சு!

  ReplyDelete
 12. கதை நன்றாக இருக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. ரெண்டு கதையும் படிச்சாச்சு!

  முதல் கதை முடிவு தெய்வீகம்

  ரெண்டாவது கதை முடிவு டெரரா இருக்கு! (சடார்ன்னு திருப்பம் கொடுக்கறதுன்னா இந்த கதைதான்!)

  பர்ஸ்ட் கதை வந்தகையோட அடுத்த கதையும் ரீலிசா? அப்ப இன்னும் எத்தனை கதை பாலன்ஸ் இருக்கு !

  ReplyDelete
 14. ஐயா நானும் ரவுடி, நானும் ரவுடி, என்னோட கருத்த (த்தூ இதெல்லாம் ஒரு கருத்தான்னு சொல்ற்து கேக்குது) ரெண்டு பேர் Quote பண்றாங்க...:))

  //முந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்//

  நீங்க சொன்ன ரெண்டுமே தப்பு, நீங்க எழுதவும் இல்ல (டைப்பினீங்க), அனுப்பவும் இல்ல (பதிஞ்சீங்க)
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 15. //sriram said...
  யக்கா
  இப்பத்தான் நெண்டு கதயும் படிச்சேன்,
  ரெண்டும் நல்லா இருக்கு அக்கா...
  இந்த கத கொஞ்சம் நம்ப முடியல அக்கா, ஒரு நல்லவர் எப்படி தன் மகன் செய்த பெண் தொடர்பான தவறை காசு கொடுத்து மறைக்க முயற்சி செய்வார்
  அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  7:58 AM
  /
  ,,,,,,,

  <<<<
  sriram வாங்க
  அதாவது பையன்மேல அப்பாக்கு பாசம்தான் அதான் கண்ணைமறைக்குது ஆனா நாட்டுப்பற்றில்லாத நிலையில் கொடிக்கம்பத்தையும் கொடியையும்துஷ்ப்ரயோகம் செய்யறப்போ அதுகோபத்தின் உச்சிக்குப்போகுது கொலைவிழுது!

  ReplyDelete
 16. //சின்ன அம்மிணி said...
  ஸ்ரீராம் சொன்னதே எனக்கும் தோணிச்சு. மத்தபடி நல்லாவே இருக்கு

  8:06 AM
  //

  கவுண்டர் கதர்சட்டை அணியும் தேசியவாதி
  இன்னும் அவரது தேசீய உணர்வை நான் சொல்லி இருந்தா இந்தக்குழப்பம் வந்திருக்காதோ என்னவோ ரொம்ப போரடிக்கப்போகுது சுருக்கமாமுடிக்கலாம்னு நினச்சி அப்படி முடிச்சேன் நன்இ சின்னம்மிணி கருத்துக்கு

  ReplyDelete
 17. // R.Gopi said...
  ஆஹா... போட்டின்னு சொன்ன‌தும், வ‌ர்ற‌ க‌தையெல்லாம் வெளுத்து வாங்க‌ற‌ வ‌கையால்ல‌ இருக்கு...

  ந‌ல்லா இருக்கும் ஷைல‌ஜா மேட‌ம்...

  பிள்ளையின் மேல் க‌ண்மூடி த‌ன‌மாக‌ பாச‌ம் வைத்திருந்த‌ தந்தையே ஆசை மக‌‌னை கொல்வ‌து, ஷாக்கிங் முடிவு...

  பாராட்டுக்க‌ள் மேட‌ம்....

  (நெம்ப‌ நல்லாருக்குதுங்கோ அம்மிணி....)

  8:37 AM
  ////

  aaஆமா அதிரடியா முடிவு கொண்டுவர நினச்சேன் ...நச் இருக்கா இல்லையான்னு சர்வ்ஸ்தான் சொல்லணும்! நெம்ப நன்றிங்கோ கோபி கருத்துக்கு

  ReplyDelete
 18. //ராமலக்ஷ்மி said...
  முடிவு எதிரே பாராதது.

  ஸ்ரீராம் சொலவதில் நியாயம் இருந்தாலும் அப்பா கேரக்டரை என்றைக்கேனும் சரியாகி விடுவான் என மகனுக்கு அதீத செல்லம் கொடுப்பவராகக் காட்டவும், முடிவில் கைவிட்டுப் போன மகனைப் பார்த்து, காலங்கடந்து அவர் பொங்கி விடுவதாகவும் அமைத்திருக்கிறீர்கள். அப்போதுதான் முடிவு நச் ஆகிறது. சரிதானா நான் சொல்வது:)?

  கவுண்டர் பாஷையை ரசித்தேன். வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

  9:16 AM

  ////

  வாங்க ராமல்ஷ்மி
  நச் முடிவுக்காக கதையை அப்படிக்கொண்டுபோனேன் உங்க யூகம் கரெக்ட்! கவுண்டர்பாஷை எழுத ரொம்பகஷ்டப்படேன்:0 நன்றிவாழ்த்துக்கு

  ReplyDelete
 19. // நிலாரசிகன் said...
  ஏனுங்க நல்லா இருக்குதுங்க. நாங்கூட சின்னக்கவுண்டராட்டம் பாட்டு போடுவீங்கன்னு நெனச்சேனுங்க.முடிவு மனச நெனச்சு போட்டுடுச்சுங்க :)

  12:38 PM
  //

  நன்றி நிலா மனசை நனச்சிப்போட்டுதாங்க தம்பி?:) அதானே வேணுமுங்கோ:)

  ReplyDelete
 20. //Anonymous said...
  முடிவு உண்மையிலேயே ’நச்’ என்று இருக்கிறது. நடை யாருடைய ‘டச்’ சையோ நினைவு படுத்துகிறது.

  2:27 PM
  ////

  கோவை மொழிக்காரங்களை நினைவுபடுத்துகிறதோ? நன்றி கருத்துக்கு அனானி அவர்களே

  ReplyDelete
 21. T.V.Radhakrishnan said...
  வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  3:47 PM
  ////

  நன்றி ராதாக்ருஷ்ணன்

  ReplyDelete
 22. //pappu said...
  இதுதாண்டா நாட்டாமையோட தீர்ப்பு, என்ன கணக்கு?
  அதான் கணக்கு.
  என்றா பசுபதி?
  நீங்க சொன்னா சரியாதாங்க இருக்கும்.

  இங்க வெச்சோம்லட டச்சு.. நச்சுனு!

  நல்லாருக்கு!
  எனக்கென்னவோ காமெடியா இருந்தது வட்டாரப் பேச்சு!

  3:59 PM
  ///  அப்டியா காமெடியா வேற ஒரு வட்டாரப்பேச்சைதான் சொல்வாங்க:0 வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

  ReplyDelete
 23. //மாதேவி said...
  கதை நன்றாக இருக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  4:35 PM
  ///
  நன்றி மாதேவி

  ReplyDelete
 24. //ஆயில்யன் said...
  ரெண்டு கதையும் படிச்சாச்சு!

  முதல் கதை முடிவு தெய்வீகம்

  ரெண்டாவது கதை முடிவு டெரரா இருக்கு! (சடார்ன்னு திருப்பம் கொடுக்கறதுன்னா இந்த கதைதான்!)

  பர்ஸ்ட் கதை வந்தகையோட அடுத்த கதையும் ரீலிசா? அப்ப இன்னும் எத்தனை கதை பாலன்ஸ் இருக்கு !

  5:03 PM
  //

  ஆயில் வாங்கப்பா வாங்க. பொறுமையா 2கதைகளையும் படிச்சிங்களா? இனிமே இப்போதைக்கு கதை இல்ல ஆயில்:0 :0 மூட் வரப்போ எழுதிடணும்னு எழுதியாச்சு அவ்ளோதான் நன்றி ஆயில்யன்

  ReplyDelete
 25. //sriram said...
  ஐயா நானும் ரவுடி, நானும் ரவுடி, என்னோட கருத்த (த்தூ இதெல்லாம் ஒரு கருத்தான்னு சொல்ற்து கேக்குது) ரெண்டு பேர் Quote பண்றாங்க...:))

  //முந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்//

  நீங்க சொன்ன ரெண்டுமே தப்பு, நீங்க எழுதவும் இல்ல (டைப்பினீங்க), அனுப்பவும் இல்ல (பதிஞ்சீங்க)
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  7:20 PM

  ///

  ஆ ஸ்ரீ! ஏன் இப்படி கடிமன்னனா ஆனீங்க:) ஆனா ரசிச்சேன்:)

  ReplyDelete
 26. ஒவ்வொருத்தனுக்கும் நாட்டுப் பற்று எப்டி இருக்கோணும்னு சும்மா 'நச்'னு சொல்லிப் போட்டிங்க அம்முணீ. கத நல்லா இருந்துதுங்கோவ்.

  ReplyDelete
 27. // காலேசுக்கு வர்ர புள்ளைகள ஒளுக்கமாச் சீல துணிமணி போட்டூட்டு வரச் சொல்லுங்க அங்கியும் இங்கியும் காமிச்சீட்டு அவிங்க வந்துபோட்டு அப்பறமாப் பசங்ககள நொள்ள சொல்றது. இதே தொளிலாப் போச்சு” //

  மிக அருமை. பையன் மேல் பாசமா இருக்கிற ஒவ்வொரு தந்தையும் சொல்கிற வசனம்தான் இது.

  fine. Keep it up.

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. // பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  ஒவ்வொருத்தனுக்கும் நாட்டுப் பற்று எப்டி இருக்கோணும்னு சும்மா 'நச்'னு சொல்லிப் போட்டிங்க அம்முணீ. கத நல்லா இருந்துதுங்கோவ்.

  5:45 AM//

  நாட்டுப்பற்று இருக்கற கவுண்டரை அடையாளம் கண்டுகிட்ட உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete
 30. பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  // காலேசுக்கு வர்ர புள்ளைகள ஒளுக்கமாச் சீல துணிமணி போட்டூட்டு வரச் சொல்லுங்க அங்கியும் இங்கியும் காமிச்சீட்டு அவிங்க வந்துபோட்டு அப்பறமாப் பசங்ககள நொள்ள சொல்றது. இதே தொளிலாப் போச்சு” //

  மிக அருமை. பையன் மேல் பாசமா இருக்கிற ஒவ்வொரு தந்தையும் சொல்கிற வசனம்தான் இது.

  fine. Keep it up.
  >>>>>>>ஆமாங்க பாசம் கண்னைமறைக்குது நன்றிங்க கருத்துக்கு

  ReplyDelete
 31. ஷக்திப்ரபா

  உன் பின்னூட்டம் vaந்ததை கவனித்தேன் இங்கே இடுவத்ற்குள் அது மறைந்துவிட்டதே?what happend ya?!

  ReplyDelete
 32. நல்ல நடை ஷை. அருமையா எழுதறீங்க.

  பல பேர் சொல்லிட்டாங்க. very dramatic. சுதந்திரம் அவருக்கு எவ்ளோ பெருசுன்னு stress பண்றதுக்காக மிச்ச எதுவுமே அவருக்கு பெருசா படலைன்னு காமிச்சு, ஏதோ ஒரு ததக்கா-பிதக்கா தத்துவம். Sorry difficult to buy.

  இத்தனையும் தாண்டி climax was spine chilling and emotions went surging. அதுக்கு உங்களை பாராட்டியே ஆகணம்.

  ReplyDelete
 33. thirumba pottutEn :D

  கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமோன்னு நினைச்சேன். அப்புறம் நம்ம ஷை தானேன்னு பொட்டுடேன் :D

  ReplyDelete
 34. //
  Shakthiprabha said...
  நல்ல நடை ஷை. அருமையா எழுதறீங்க.

  பல பேர் சொல்லிட்டாங்க. very dramatic. சுதந்திரம் அவருக்கு எவ்ளோ பெருசுன்னு stress பண்றதுக்காக மிச்ச எதுவுமே அவருக்கு பெருசா படலைன்னு காமிச்சு, ஏதோ ஒரு ததக்கா-பிதக்கா தத்துவம். Sorry difficult to buy.

  இத்தனையும் தாண்டி climax was spine chilling and emotions went surging. அதுக்கு உங்களை பாராட்டியே ஆகணம்.

  9:13 AM
  ////

  yeah now i got it!

  கருத்துக்கு நன்றி ஷக்தி
  அவரவர்க்கு அதது! கதை என எழுதும்போது சிலநேரம் எதார்த்தமாய் கொண்டுபோய் முடிக்கலாம் ஆர்ட்ஃபிலிம் மாதிரி. இங்கே நச் தேவை என்பதால் க்ளைமாக்ஸினை அப்படி சொல்ல நேர்ந்ததுகமர்ஷியல் ஃபிலிம் மாதிரி!

  ReplyDelete
 35. //Shakthiprabha said...
  thirumba pottutEn :D

  கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமோன்னு நினைச்சேன். அப்புறம் நம்ம ஷை தானேன்னு பொட்டுடேன் :D

  9:14 AM
  /////


  அடக்கிவாசிக்கிறதா எதுக்கு? வெறும் புகழ்ச்சியை எதிர்பார்த்தா படைப்பினை அளிக்கிறோம் ஷக்தி? நம்மைத்திருத்திக் கொள்ள எதிர்மறைகருத்துக்களும் பலநேரங்களில் உதவுமே! என்னைப்புரிந்துகொண்டிருக்கும் உனக்கு மிக்க நன்றிதோழி!

  ReplyDelete
 36. Shy,

  :shocked: இது போட்டிக்குன்னு நான் படிக்கவே இல்லை. நான் ஒரு லூசு. என்னை மன்னிசுட்டுங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள் :(

  என்ன போட்டி? என்னிக்கு கடைசி தேதி?

  ReplyDelete
 37. //Shakthiprabha said...
  Shy,

  :shocked: இது போட்டிக்குன்னு நான் படிக்கவே இல்லை. நான் ஒரு லூசு. என்னை மன்னிசுட்டுங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள் :(

  என்ன போட்டி? என்னிக்கு கடைசி தேதி?

  9:37 AM

  //>>>>>>
  ஷக்தி லூசுப்பெண்ணா நீ? ஹஹா உனது ஆங்கிலக்கவிதைபற்றி இப்பதான் ஒருத்தர்கிட்ட புகழ்ந்து சொல்லிட்டு இருந்தேன்! ஆனாலும் தன்னடக்கம் ஜாஸ்தி உனக்கு! ஆமா ஷக்தி இது போட்டிக்கு கடைசிநாள் முதல்ல் அக்டோபர்31 என இருந்தது இப்போ நவம்பர்15க்கு போயிருக்கு ஏன் நீயும் ஒருகதை எழுதக்கூடாது ஷக்தி?

  ReplyDelete
 38. ezutha poren!!!

  btw,

  unga mudhal kathai enga? I wanna read it.

  ReplyDelete
 39. //hakthiprabha said...
  ezutha poren!!!

  btw,

  unga mudhal kathai enga? I wanna read it.

  9:45 AM
  ///


  இதுலயே இருக்கே உத்வி கதைப்பேரு ஷக்தி

  ReplyDelete
 40. முடிவு அருமையாக இருந்தது........

  நன்று தொடருங்கள்...........

  வாழ்த்துக்கள்..........

  ReplyDelete
 41. கலக்கறீங்க 'ஷை' இப்பதான் தெரிஞ்சிது உங்க பிளாக் பத்தி கதை அருமை அப்பாவே புள்ளைய வெட்டறது முடிவு ஏற்கெனவே ஒருத்தர் சொன்ன மாதிரி ஷாக் தான் அந்த அளவுக்கு ஒருத்தர் போக அவர் மனசுல ஒரு போராட்டம் மறைமுகமா நடந்துகிட்டு இருந்திருக்கு

  ReplyDelete
 42. //
  ஊடகன் said...
  முடிவு அருமையாக இருந்தது........

  நன்று தொடருங்கள்...........

  வாழ்த்துக்கள்..........

  4:45 PM
  //

  நன்றி ஊடகன்

  ReplyDelete
 43. //ரிஷபன் said...
  கலக்கறீங்க 'ஷை' இப்பதான் தெரிஞ்சிது உங்க பிளாக் பத்தி கதை அருமை அப்பாவே புள்ளைய வெட்டறது முடிவு ஏற்கெனவே ஒருத்தர் சொன்ன மாதிரி ஷாக் தான் அந்த அளவுக்கு ஒருத்தர் போக அவர் மனசுல ஒரு போராட்டம் மறைமுகமா நடந்துகிட்டு இருந்திருக்கு

  7:30 PM
  //<<<<

  அட ரிஷபனா எப்படி இந்தப்பக்கம்? ! ஆச்சர்யமா இருக்கு !உங்க வலையும் பார்த்தேன் இப்பதான்.
  ஒரு பெரிய எழுத்தாளர் என்கதையை பாராட்டறீங்க சந்தோஷமா இருக்கே! நன்றி ரி!

  ReplyDelete
 44. :-)

  இதுதான் நச்சுன்னு வெட்டுறதா!?

  ReplyDelete
 45. //
  சென்ஷி said...
  :-)

  இதுதான் நச்சுன்னு வெட்டுறதா!?

  2:00 PM
  ///

  வாங்க சென்ஷி
  வெட்டு நச்சுனு இருக்கா இல்லையா?:) வருகைக்கு நன்றி

  ReplyDelete
 46. கொஞ்சம் predictable end தான். இருந்தாலும் பரவால்ல...

  நல்லா இருக்கு

  keep it up !!

  Cheers

  ReplyDelete
 47. சூப்பர். பரிசு பெற வாழ்த்துகள்.

  ரேகா ராகவன்
  http://anbesivam2009.blogspot.com/2009/11/blog-post_02.html

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.