Social Icons

Pages

Friday, December 30, 2011

நானும் 2011ம்.

நானும் 2011ம்  என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத  அனந்து  அழைத்துள்ளார்.  கேள்விகள் சிக்கலாக இல்லை ஆகவே தைரியமாய் களத்தில் குதித்துவிட்டேன்.

ம்


நானும்..படித்ததில் பிடித்தது :  சமீபத்தில் படித்ததில் பிடித்தது என்று நெம்பர்40 ரெட்டைத்தெரு ..இராமுருகன் எழுதிய நாவலை சொல்வேன். பொதுவா கேட்டா   பெரியலிஸ்ட்டே இருக்கு!வாங்கிய பொருள் .....குளீர் நடுக்குதே பெங்களூர்ல  விருந்தாளிங்க வந்தால்  கம்பளி புதுசு தேவைன்னு  க்வில்ட் ஒண்ணு வாங்கினோம்,.
 

சென்ற இடம் :   மேலைநாடுகள் சில.  ஆனாலும் சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?!

ரசித்த படம் : காஞ்சனா  பயமா இருந்தாலும் பிடிச்சது.உருகிய படம் :  படம் பார்த்து உருக மெழுகுவர்த்தியா என்ன?::) கொஞ்சம் ஒன்றிப்போனது எங்கேயும் எப்ப்போதும் படத்தில்.

சிரித்த படம் ... முழுநீள சிரிப்புப்படம்  இப்போ ஒண்ணும் பார்க்கலயே!  விவேக் வடிவேலு காமெடி பிடிக்கும்.

பிடித்த பாடல் : எம்மா எம்மா ( ஏழாம் அறிவு ) எப்பவும் பிடிச்சது  ரன் படத்து பொய் சொல்லக்கூடாது காதலி. அப்புறம் மாலையில் யாரோ  என்கிற ஷத்ரியன் படப்பாடல்,  காற்றினிலே வரும் கீதம் இப்படி பல..
மிகப்பெரிய சந்தோசம் : எழுத்தாளர்களுக்கு வேற என்னங்க பெரிய சந்தோஷம்?  படைப்புகள் வெளிவந்தால் அதுதான்.  தென்றல் இதழ்ல  பரிசுக்கதை  தேர்வானது  சந்தோஷம்.(கதை  ஜனவரி ல வலைப்பூவில்  ரிலீஸ்!)

புதிய நண்பர்கள் :  சிலர் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள்.சாதனை : ஆஹா அதெல்லாம்  பெரிய வார்த்தை! miles to go before i  sleep..வருத்தம் : குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளைப்பற்றிக்கேள்விப்பட்டால்  மனம் மிக வருத்தம் அடையும்.ஆச்சர்யம் .. ஷக்திப்ரபா (எனது பெங்களூர் தோழி) வரவர வலைப்பூவில்  ஆழ்ந்து நிறைய எழுதுவது ..ஆனால்  மகிழ்ச்சிகலந்த ஆச்சர்யம் அது!!!
 
அவ்வ்வளோதான் முடிச்சிட்டேன்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


39 comments:

 1. ஆகா! ஆண்டின் அனுபவம் அருமை...

  நன்றி, உங்களுக்கும் இனிய நல் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதிரி...

  ReplyDelete
 2. வணக்கம் மேடம் 2011 இல நீங்கள் ரசித்த பல விடயங்களை தொகுத்து தந்து இருக்கீங்க அருமை

  ReplyDelete
 3. எங்கேயும் எப்போதும் ஒரு நல்ல படம் தான்

  ReplyDelete
 4. நான் எழுதியது அவ்வளவு பாதிப்பை உண்டு பண்ணித்தா! ஆஹா! இது போதுமே எனக்குப் புத்தாண்டு பரிசுக்கு :)

  ரொம்ப நன்றி ஷைலஜா......

  ஜனவரி ரிலீஸ் கதைக்கு வேய்டிங்!

  ReplyDelete
 5. இந்த வருடமும் தங்கள் படைப்புகள் அநேகம் வெளியாகி அமோகமாக புகழ் பெற வாழ்த்துகிறேன்...
  எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com

  ReplyDelete
 6. ரசனையான தொகுப்பு.. படமும் 2011-ல் உள்ளதாகவே போட்டுருக்கலாம் ;-)

  ReplyDelete
 7. 2012 உங்களுக்கு நல்லனவற்றையே தர மனமார்ந்த வாழ்த்துக்கள்க்கா... ஷக்திப்ரபா சமீபத்து எனக்கும் ப்ரெண்டாயிட்டாங்களே...

  ReplyDelete
 8. >>>மிகப்பெரிய சந்தோசம் : எழுத்தாளர்களுக்கு வேற என்னங்க பெரிய சந்தோஷம்? படைப்புகள் வெளிவந்தால் அதுதான்

  ஆஹா அழகு

  ReplyDelete
 9. >>
  ஆச்சர்யம் .. ஷக்திப்ரபா (எனது பெங்களூர் தோழி) வரவர வலைப்பூவில் ஆழ்ந்து நிறைய எழுதுவது

  அப்படியா? அதை எல்லாம் அவ்ளவ் சுளுவா விட்றக்கூடது ஹி ஹி ,ஹாக் பண்ணிடலாமா> பை வம்பு சண்டைக்கு ரிசர்வேஷன் செய்வோர் சங்கம்

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. பதிவு மிகச் சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும்
  சுவாரஸ்யமாகவும் இருந்தது.வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் த.ம 3

  ReplyDelete
 12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  சுருக்கமான சுத்தமான பதிவு.vgk

  ReplyDelete
 13. அமைதிச்சாரல் சொன்னபடி 2011ம் வருஷ போட்டோவையே போட்டுட்டேன் இப்ப:) ஏங்க அமைதிச்சாரல் ஒரு ரெண்டுவருஷம் ஆன பழைய போட்டோவை போடக்கூடாதா?:) ஏழெட்டுவருஷ முந்தைய போட்டோ போடலேன்னு சந்தோஷப்படாம..:):)(ச்சும்மா ஜோக்கு:)ரசனையா இருக்கறதா சொன்னதுக்கு தாங்க்ஸ்!

  ReplyDelete
 14. தமிழ் விரும்பி said...
  ஆகா! ஆண்டின் அனுபவம் அருமை...

  நன்றி, உங்களுக்கும் இனிய நல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  <<<
  நன்றிங்க இனிய புத்தாண்டுவாழ்த்துகள் தங்களுக்கும்.

  ReplyDelete
 15. K.s.s.Rajh said...
  வணக்கம் மேடம் 2011 இல நீங்கள் ரசித்த பல விடயங்களை தொகுத்து தந்து இருக்கீங்க அருமை

  12:34 PM

  K.s.s.Rajh said...
  எங்கேயும் எப்போதும் ஒரு நல்ல படம் தான்
  ,,

  வாங்க தம்பி......நிங்கள்லாம் இளம் புயல் அருமையா தொகுத்து தருவீங்க நான் ஏதோ
  எழுதினதையு ம்அருமைன்னு சொல்லிட்டீங்க..ராஜாக்கு நல்ல மனசு நன்றி லிட்டில் ப்ரதர்!

  ReplyDelete
 16. மற்றவர்களின் அருமையான பின்னூட்டங்களூக்கும் விரைவில் நன்றி தெரிவிக்கிறேன் இப்போ காலனில புத்தாண்டுக்கு ஒரு நிகழ்ச்சிஒத்திகைக்குப் போகணும்!!! :):

  ReplyDelete
 17. நீங்க மட்டும் அப்படியே இருக்கீங்க.. எத்தனை வருஷம் ஆனாலும்.. :)

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. முடியப்போகும் வருடத்தின் தங்கள் வலையுலக அனுபவங்களை
  பகிர்ந்துகொண்டமை நன்று
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. ஆஹா.. வாசகி விருப்பத்தை பூர்த்தி செஞ்சதுக்கு நன்றி மேடம் :-))

  ReplyDelete
 21. ஆஹா.. வாசகி விருப்பத்தை பூர்த்தி செஞ்சதுக்கு நன்றி மேடம் :-))

  ReplyDelete
 22. ..Shakthiprabha said...
  நான் எழுதியது அவ்வளவு பாதிப்பை உண்டு பண்ணித்தா! ஆஹா! இது போதுமே எனக்குப் புத்தாண்டு பரிசுக்கு :)

  ரொம்ப நன்றி ஷைலஜா......

  ஜனவரி ரிலீஸ் கதைக்கு வேய்டிங்!

  1:04 PM


  <<<<<,..ஆமா ஷக்தி நீ மறுபடி எழுதுவது மகிழ்ச்சியாய் இருக்கு ஆனா விவசாயவலைக்கு மட்டும் மறுபடி போனாய் என்றால் இருக்கு உனக்கு ஆமாம்:0 ஜனவரி கதை முதல்வாரம் இங்க வரும் நன்றி ஷக்தி.

  ReplyDelete
 23. கே. பி. ஜனா... said...
  இந்த வருடமும் தங்கள் படைப்புகள் அநேகம் வெளியாகி அமோகமாக புகழ் பெற வாழ்த்துகிறேன்...
  எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com

  1:29 PM

  <<<>>>
  நன்றி ஜனா உங்க பதிவுக்கும் வரேன்

  ReplyDelete
 24. கே. பி. ஜனா... said...
  இந்த வருடமும் தங்கள் படைப்புகள் அநேகம் வெளியாகி அமோகமாக புகழ் பெற வாழ்த்துகிறேன்...
  எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com

  1:29 PM

  <<<>>>
  நன்றி ஜனா உங்க பதிவுக்கும் வரேன்

  ReplyDelete
 25. கணேஷ் said...
  2012 உங்களுக்கு நல்லனவற்றையே தர மனமார்ந்த வாழ்த்துக்கள்க்கா... ஷக்திப்ரபா சமீபத்து எனக்கும் ப்ரெண்டாயிட்டாங்களே...

  <<<<< உங்களுக்கும் நல்லது நடக்க வாழ்த்துகள் கணேஷ். ஷக்திப்ரபா ஃப்ரண்ட் ஆகிட்டாங்களா வெரிகுட்..ரெண்டு பெங்கலூர் பெண்களின் அறுவை தாங்கிக்கணும் நீங்க:)

  ReplyDelete
 26. சி.பி.செந்தில்குமார் said...
  >>>மிகப்பெரிய சந்தோசம் : எழுத்தாளர்களுக்கு வேற என்னங்க பெரிய சந்தோஷம்? படைப்புகள் வெளிவந்தால் அதுதான்

  ஆஹா அழகு

  3:36 PM

  சி.பி.செந்தில்குமார் said...
  >>
  ஆச்சர்யம் .. ஷக்திப்ரபா (எனது பெங்களூர் தோழி) வரவர வலைப்பூவில் ஆழ்ந்து நிறைய எழுதுவது

  அப்படியா? அதை எல்லாம் அவ்ளவ் சுளுவா விட்றக்கூடது ஹி ஹி ,ஹாக் பண்ணிடலாமா> பை வம்பு சண்டைக்கு ரிசர்வேஷன் செய்வோர் சங்கம்

  3:37 PM

  <<<<<<. வாங்க செந்தில்..... என்னது என் ஃப்ரண்டை ஹாக் பண்றதா மர(ற)த்தமிழ்ப்பெண்கள் நாங்க உங்களக்காப்பாத்திக்குங்க முதல்ல செந்தில்(கிட்டிங்) வரவுக்கு நன்றி.

  ReplyDelete
 27. .. கோமதி அரசு said...
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  3:49 PM

  .//

  நன்றி கோமதி அரசு தங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. //Ramani said...
  பதிவு மிகச் சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும்
  சுவாரஸ்யமாகவும் இருந்தது.வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் த.ம 3

  3:49 PM

  /// நன்றி ரமணி...

  ReplyDelete
 29. .கோபாலகிருஷ்ணன் said...
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  சுருக்கமான சுத்தமான
  பதிவு

  <<<..ஆமாம் வைகோ சார் ரொம்ப போரடிக்க விரும்பல...அதான்..நன்றி வாழ்த்திற்கு

  ReplyDelete
 30. ... ரிஷபன் said...
  நீங்க மட்டும் அப்படியே இருக்கீங்க.. எத்தனை வருஷம் ஆனாலும்.. :)

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  6:31 PM

  ////
  :):) ஆஹா எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கறப்போ ரிஷபன் புகழ்வது பெங்களூர் குளீரில் மேலும் குளிர்ச்சியாய் இருக்கே! நன்றி ரிஷபன்

  ReplyDelete
 31. Rathnavel said...
  எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..<<<


  நன்றி திரு ரத்னவேல்

  10:33 PM

  மகேந்திரன் said...
  முடியப்போகும் வருடத்தின் தங்கள் வலையுலக அனுபவங்களை
  பகிர்ந்துகொண்டமை நன்று
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  10:53 PM

  <<<<<<>>> வலை உலக அனுபவங்களை அதிகம் பகிர்ந்துகொள்ளவில்லையே! எனினும் வாழ்த்துக்கு நன்றி மகேந்திரன்!

  ReplyDelete
 32. நல்ல தொகுப்பு ஷைலஜா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 33. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  kpartha12@gmail.com

  ReplyDelete
 34. பிடித்த பாடல் 'ரன்' உண்மையிலேயே சூப்பர் செலக்சன்.

  ReplyDelete
 35. புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. அப்பு பார்த்தசாரதி விச்சு ராமலஷ்மி ...உங்களுக்கு நன்றியும் புதுவருட வாழ்த்துகளும்

  ReplyDelete
 37. அழகான தொகுப்பு. வரும் ஆண்டும் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. தாமதத்திற்கு மன்னிக்கவும் ..! ##உருகிய படம் : படம் பார்த்து உருக மெழுகுவர்த்தியா என்ன?::)## நல்ல டச் ..உங்கள் படைப்புகள் மேலும் பரிசுகள் வெல்ல வாழ்த்துக்கள் ...! என் அழைப்பினை ஏற்று தொடர் பதிவு இட்டமைக்கு நன்றி .. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 39. இனிமையான பகிர்வுகள்..
  புத்தாண்டு வாழ்த்துகள்..

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.