Social Icons

Pages

Tuesday, January 15, 2013

காணும் பொங்கல்! (மீள்பதிவு)

 

காணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்

பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டுவார்கள் இல்லையா அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.(இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)

கணுப்பிடி இந்தநாளின் சிறப்பு.அதென்ன கணுப்பிடி?

ஆமாம் அது ஒருவகை நோன்பு.உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.
உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.

கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு என்பது பழமொழி.

அதாவது கார்த்திகைமாதம் எண்ணைதேய்த்துக்குளித்து விளக்குவைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும்பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.

இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.

முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்,ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய்வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.
தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.

உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போடணும்.அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!

என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று
வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!

 
மேல நீங்க படிச்சது மீள்பதிவு!!
 
இனி  புதுசா  எழுதினது கீழே!




வாழ்வே ஒரு வழிபாடுதான் ! ஒவ்வொரு நாளும் வாழ்வது நம் கையில் இல்லை பாரதி,’பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்’ என்கிறான்.ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வதே வாழ்க்கை…அதனால் தான் ஆங்கிலத்தில் past present future எனப்பிரிக்கிறார்கள்…நிகழ்காலமானது ப்ரஸண்ட் எனப்படுவது அது நமக்கு பரிசுதான். நமக்குக்கிடைக்கும் பரிசை நாம் போற்றி மகிழ்வது இயல்புதானே! வாழ்வை நேசிக்கவேண்டும் வாழ்வைக்கொண்டாட வேண்டும்…எப்படிக்கொண்டாடுவது என்றால் பண்டிகைகளால்தான் வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாட .......
மீதப்பகுதியை வாசிக்க  ஆர்வம் உள்ளவர்கள் இங்கே செல்லவும்...
 

2 comments:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஷைலஜாக்கா..

    ReplyDelete
  2. கணுப்பிடி வைப்பதைப்பற்றி மிகசிறப்பாக சொல்லியிருக்கிரீர்கள் ஷைலஜா.
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.