(election அதவாது ಚುನಾವಣೆ அதாவது தேர்தல் கன்னடத்தில் சுனாவனே!(cunāvaṇe) இன்னிக்கு நடக்கிறது பெங்களூரில். )
யோகா மாஸ்டர்(பெண்)மூஞ்சியைக்கெ(கொ)ஞ்சலாய்ப்பார்த்துவிட்டு கண்ணாலேயே ஏதும் அவசர கால் ஆக இருக்குமோ என்னவோ சீக்கிரம் முடிச்சிடறேன் மேடம் என்று சொல்லிவிட்டு போனை அந்த சிக்கலான நிலையிலேயே கையில் எடுத்துக்காதில்வைத்து ஹலோவினேன் .
உடனே எதிர்முனையில்,’நானு குமார சாமி தேவகௌடாவின் மகன் பேசறேன்’ என்றுகன்னடத்தில் குரல் வந்ததும் சிக்கலை வி டுவித்து பவ்யமாய் எழுந்துகொண்டு “நமஸ்காரா” என்றேன்.
மனசுக்குள் ஒரே குறுகுறுப்பு என்னடாது நாம்பிரபலமாகிவிட்டோமா எந்தக்கதையாவது கன்னடத்தில் மொழியாக்கமாகி என்பேர் புகழ் கன்னட உலகில்பரவி , பெரிய அரசியல்தலைவர்களெல்லாம் அதைப்படித்துப்பாராட்டுகிறார்களா ? ஒருக்கணம் (தோட்டம் பக்கம் யோகா வகுப்பு இல்லையெனினும்) புல்லரித்தது.
எனது நமஸ்காராவிற்கு எதிர்முனையில்பதிலே இல்லை குமாரசாமிபாட்டுக்கு பேசிக்கொண்டே போனார் கடைசியில் ஆகவே எங்கள் கட்சியை ஆதரியுங்கள் என்று சொல்லி முடித்தார் ஆஹா அப்பதான் தெரிஞ்சுது அது ஆடமாடிக்காய் வந்த ஓட்டுகேட்கும் யுத்தி என்று!
அலுத்துக்கொண்டார்கள்.அசடு வழிய நான் நிற்க வேறு சிலயோகாபெண்மணிகள்,” யாரு குமாரசாமியா?தேவகௌடா பிள்ளை அவரு! நல்லா எலெக்ஷன் கான்வாசிங் செய்றார் எங்களுக்கும் அடிக்கடி இப்படி கால் வருது” என
அடிக்கடி குமாரசாமி போன் செய்துகொண்டே இருந்தார்!
ஒருதடவை,”நானு குமார்..”என்றதுமே போனை கட் செய்துவி்ட்டேன்.
கடைசில பார்த்த அந்தக்குமார் என்று ஆரம்பித்தவர் என் தோழி சுமதியின் (கன்னடக்)கணவர்!
\
அவர் மனைவியும் என் அருமை சிநேகிதியுமான சுமதி என்னிடம்,” ‘3பேர் 3காதல் படம் உன் நண்பர் வசந்தின(சந்தடிசாக்குல சுயப்ரதாபம் சொல்வதில் ஷைலஜாக்கு இணை யாரு?:))படமாச்சே வரியான்னு கேட்க என் போன்ல சார்ஜ் இல்லைன்னு குமாரைவிட்டு கேட்க சொன்னா அவர்நான் குமார்ன்னு சொன்னபோதே கட் பன்ணியாமே?” என்று அதட்டினாள்..
”ஐயெயொ சாரிடி“ நிலைமையை சொன்னேன்
பரவால்லபோ படம் சுமார்தான் அதனால் தப்பிச்சேஇப்போ எல்க்ஷனுக்கு வருவோம்குமாரசாமியையப்போல இதரகட்சிக்கார வேட்பாளர்கள் போனில் துரத்தல்லை
ஆனால் சாலை மூலையில் ஒரு பெரிய காரில் கதவுகளைத்திறந்து வைத்துக்கொண்டு அவர்களின்தொண்டர்கள் மைக்கில் ஆதரவு கேட்பார்கள் கூடவே கன்னடப்பாட்டு எட்டூருக்கு முழங்கும்.
ஒரு வேட்பாளருக்கு விசில் சின்னம் அவர் ஓட்டுக்காக ஆதரவு கேட்டுவரும்போதெல்லாம் அவர்தம் தொண்டர்கள் விசிலை அடிப்பார்கள் பாருங்கள் காது கிடுகிடுத்துப்போய்டும்.’அண்ணா விசில் அண்ணா நனகே ஒந்து..” என்று சில சிறுவர்கள் ஓடிப்போய் கேட்டு வாங்கிக்கொண்டு நாள் முழுக்க கண்டக்டர் பணி செய்வார்கள்.
:வீட்டில் அந்தந்தக்கட்சிக்காரர்களின் கைகுவித்தபோட்டோவு்டன் நோட்டீஸ்கள் வந்தவண்னமாகவே இருந்தன அதைசேர்த்து வைத்துப்பார்த்ததில் முக்கால்கிலோ எடை தேறியதுன்னாபார்த்துக்குங்க:)இன்னிக்கு எல்க்ஷனுக்காக நேத்து இரவு பெங்களூரில் அடைமழை பொழிந்துதள்ளிவிட காலைநேரம் ஜில்லென்றிருக்கவே ஓட்டுச்சாவடிக்கு காலனிமக்கள் பலரும்பலமொழிகள் பேசிக்கொண்டே க்யூவில்போய்நிற்க ஆரம்பித்தோம்.
வோட்டர் ஐடி கொண்டுவரதவர்களை திரும்ப வீட்டிற்குப்போகவைத்துவிட்டார்கள்.
“என்ன எலெக்ஷனோ என்னவோ யாருக்கு வோட்டு போட்டு என்ன யார் வந்து என்ன கிழிக்கப்போறாங்க?’என்று அலுத்துக்கொண்டே ஒரு பெரியவர் சின்னதாய் அரசியல்பேச ஆரம்பிக்க ”உஷ் அதெல்லாம் இப்பபேசக்கூடாது ”என்று போலீஸ்கார இளைஞர் அதட்டினார்.
இன்னொருவர் தன்மகள் முதல்தடவி ஓட்டுப்போட வருவதால் அதன் விதிமுறைகளைவிளக்கும்போது,”கையில் விரல்ல மசி வைப்பாங்க..ஞாபகம் வச்சிக்கோம்மா கை கை” என்றார் இரு முறை அவ்வளவுதான் ஓட்டுச்சாவடி பிரமுகர் ஒருவர் கோபமாய்,”கை கைன்னு சொல்லக்கூடாது இங்க” என்றார்.
‘நல்ல வேளை ‘கால்’சின்னம் யாரும் வைச்சிக்கல இல்லேன்னா க்யூல அவங்களாலபோன் ‘கால்’அட்டெண்ட் பண்ண முடியாது/ ஒருக்கால் மரக்கால் என்றெல்லாம் தமிழில் சகஜமாய் தமிழர்கள் பேசமுடியாது கால்நடை என்று ஒரு ஆடு மாடைப்பார்த்தா சொல்லிடமுடியாது. மாதவிப்பந்தல் மேல்.பல்கால்குயிலினங்கள் கூவின என்று நான் திருப்பாவைகூட பாடமுடியாது என்ன சொல்றீங்க?” என்று கண்வரிடம் ஜோக்கடித்தேன் அவர் சீரியஸ் சிகாமணியாய் சிரமப்பட்டு தூரத்துமரத்தின் நுனியைப்பார்த்தார்.இப்படித்தான் வீட்டு முல்லைகளின் மணம் வீட்டில் இருப்பவர்களுக்கு எங்க தெரியுது?:)
அப்புறமா அந்த வைகுண்ட ஏகாதசிக்யூவில் கால் வலிக்க நின்று ஓட்டுப்போட்டு வெளியே வந்தோம்.
பிகு..
மோதிரவிரலில் மசி(மை?) வைத்தார்கள்.சாதாரணமாக ஆள்காட்டிவிரலில்தானே வைப்பார்கள்? அல்லது நான் தான் எல்க்ஷனுக்குப்பிறகு மக்களை மறக்கும் அரசியல்வாதி மாதிரி இந்த மை மசி சமாசார்ங்களை மறந்துவிட்டேனா?:)
--
Tweet | ||||
ReplyDeleteஓட்டுப் போடுவதில் ஒரு குழப்பம். நம் ஒட்டு வேட்பாளருக்கா அல்லது அவர் கட்சிக்கா.?வேட்பாளர் ஓக்கே என்றால் கட்சி சரியாயில்லை. கட்சி ஓக்கே என்றால் வேட்பாளர் சரியில்லை. உங்கள் பக்கம் மழை பெய்ததா. ? இங்கு ஒரு சொட்டுக் கூட விழவில்லை.
நன்றி ஜி எம்பி சார்
Deleteஇன்னிக்கு ரிசல்ட் வந்திட்ருக்கு:) பாக்கல்லாம் என்னன்னு:)
ஓட்டுப் போட்டு வெற்றிகரமாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியமைக்கு வாழ்த்துக்கள் பல. நான் ஓட்டுப் போடலை. ஏன்னா...ஹி..ஹி.. எனக்கு ஓட்டு தமிழ்நாட்டுலதான்.
ReplyDeleteகால் கடுக்க நின்று ஓட்டுப் போட்டு வந்தமைக்கு பாராட்டுக்கள்... ஓட்டுப் போட்டாச்சு...!
ReplyDeleteபுது வீடு கட்டிக்கொண்டு புது ஏரியாவுக்கு வந்ததில் எங்கு சென்று ஓட்டுப் போடுவது என்பதில் சிக்கல். முதலிலேயே வந்து ஓட்டர் ஐடியெல்லாம் பரிசோதித்து 'நாங்கள் மறுபடி வந்து பூத் ஸ்லிப் கொடுக்கிறோம்' என்று சொல்லிச்சென்றவர்கள் இந்த நேரம்வரை வரவில்லை. பழைய இடத்தில் தேடிப்பார்த்தோம். அங்கேயும் பெயர் இல்லை. ஆக,'ஜனநாயகக் கடமை' ஆற்றமுடியவில்லை. நீங்கள் விசிலெல்லாம் கேட்டு ஓட்டுப்போட்டு வந்தது பற்றி மகிழ்ச்சி.
ReplyDeleteசின்னப்பசங்களுக்கு விசிலும், பெரியவர்களுக்கு 'நான் குமாரசாமி பேசறேன்' என்பதும்தாம் உங்களுக்கெல்லாம் அனுபவம். எங்கள் பகுதியில் வேறு அனுபவங்கள். எங்கள் வீட்டில் பணியாற்றும் பெண்மணி சந்தோஷத்துடன் காலையில் வந்து தெரிவித்தார். "நேத்து ராத்திரி அப்பத்தாம்மா படுத்தோம். கதவு தட்டி ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்னு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்துட்டுப்போனாங்கம்மா"
"பரவாயில்லையே உனக்கு அதிர்ஷ்டம்தான்" என்றார் திருமதி.
"என்னம்மா அதிர்ஷ்டம்? பக்கத்து ஏரியாவில் இருக்கும் எங்க மாமியார் எங்க பேரையெல்லாம் கணக்குல காட்டி பத்தாயிரம் ரூபாய் வாங்கியிருக்காங்கம்மா" என்றார் அவர்.
ஒரு குடும்பத்துக்கு பத்தாயிரம் ரூபாய்................! இந்தியா எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.
வாங்க அமுதவன் நல்ல ஓட்டு கள்ள ஓட்டு இப்படித்தான் பலகாலமாய் இந்தியாவில் தேர்தல் உங்களின் ஆத்ங்கம் புரிகிறது என்று விடியும் இந்த சீர்கெட்ட நிலைமைகளின் தாக்கம்?
Deleteபோட்டாச்சு நானும்:)! நாங்கள் போன நேரம் தேர்தல் அலுவலகர்களைத் தவிர எவருமே இல்லை.
ReplyDeleteஆமாம், அடிக்கடி வந்தன ஆட்டோமேடிக் பிரசாரத் அழைப்புத் தொல்லைகள். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் வாக்களித்த கதையை:)!
நன்றி ராமல்ஷ்மி...ஓட்டு போட்டீங்களா இன்னிக்கு ரிசல்ட் பாதிகிணறு தாண்டிவிட்டது!
Deleteசட்டசபை தேர்தலா?
ReplyDeleteரெகார்டட் கேன்வசிங் செய்தி நல்ல தமாசு. இலவசமா ஏதாவது கொடுத்தாங்களா?
இலவசமா காதுக்கு இரைச்சல்தான் அப்பாதுரை சார்:0
Deleteஅடடா... ஆட்டமேடிக் எஸ்.எம்.எஸ்கள்... அதுவும் அடிக்கடி வர்றதால எம்பூட்டு தொல்லை? சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்கக்கா!
ReplyDeleteவீட்டு முல்லைகளின் மணம் வீட்டில் இருப்பவர்களுக்கு எங்க தெரியுது?:)
ReplyDeleteஓட்டுப்போட்டு மோதிர விரலில் மையுடன் கடமையாற்றியதற்கு வாழ்த்துகள்..
Comedy Rasithen...
ReplyDeleteஓட்டுப் போடலை! நான் ஆதரிக்கும் கட்சி ஒரு ஓட்டில் தோற்குமோ, ஜெயிக்குமோ தெரியலை.
ReplyDeleteஎங்க ஏரியாவில் இருப்பவர் எங்களுக்கு போன் செய்யாமல் உங்களுக்கு செய்தாரா? நல்ல தமாஷ்!
என்ககு மட்டும அ ஒரு குமபலுக்கே பண்ணி இருக்கார் இப்படி போன்கால்ஸ்! நீங்க தப்பிச்சீங்க ரஞ்சனிநாராயணன்!
Deleteரிஷபன் கணேஷ் தி.த..இராஜேஸ்வரி பார்வதி..உங்கள் அனைவரின் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி
ReplyDelete