கருப்பு நிறத் தார் உருக கற்சரளை மேல் பரவச்
செருப்பின்றி மேல்நடந்து சாலைப்பணி செய்தபடி
நெருப்புமிழும் கதிரவனின் கனல்வரியைத் தாங்கி நின்று
இருப்பவனைக் காணுங்கால் கண் கலங்கிப் போகிறதே
சட்டியிலே கல் அடுக்கி சாரத்தின் மேலேறி
சுட்டெரிக்கும் வெய்யிலிலே சுமையோடு நடந்திட்டுக்
கட்டிடத்தில் வேலை செய்யும் கன்னியரைக் காண்கையிலே
கொட்டும் இமை கூடத்தான் குத்திட்டு நிற்கிறதே
ஊற்றுகின்ற வேர்வையிலே உடை முழுதும் நனைந்திடவே
காற்றசைவு கணப்போது கனலோடு வந்திடவே
சேற்றினிலே கால்வைத்து சிந்தையதிலே செலுத்தி
நாற்று நடுகின்றவரைக் கண்டு நா அசைய மறுக்கிறதே
ஆலையிலே அனல்வீசும் உலையிலே உழைப்பவரை
காலை முதல் மாலைவரைகழனியிலே உழுபவரை
சாலையிலே வண்டிகளைத் தள்ளிச் செல்பவரை
சோலையிலே நான் நின்று காண நெஞ்சம் குறுகுறுக்கிறதே..
Tweet | ||||
தொழிலாளர் இனத்திற்கு
ReplyDeleteஅழகிய கவிதை புனைந்தீர்கள் சகோதரி...
inRaiya thinaththiRku mika poruththamaana kavithai.
ReplyDeleteஉள்ளத்தை உருக்கும் கவிதை
ReplyDeleteதொழிலாளர் தின சிறப்புக் கவிதை நன்று.
ReplyDeleteமிகச் சிறப்பான, தொழிலாளரின் உழைப்பைப் போற்றும் கவிதை. லேட்டாப் படிச்சாலும் லேட்டஸ்ட்டா ரசிக்க முடிஞ்சது!
ReplyDeleteநெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDelete-=-=-=-=-=-
அன்புடையீர்,
வணக்கம்.
இன்று நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னுடைய வெற்றிகரமான 900th POST ஐ, வெளியிட்டுள்ளார்கள்.
தலைப்பு:
”ஸ்வர்ண குண்டல அனுமன்”
இணைப்பு:
http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_4256.html
தாங்கள் மேற்படி வலைத்தள இணைப்புக்கு அன்புடன் வருகை தந்து, அவர்களை வாழ்த்தி சிறப்பிக்க வேண்டுமாய், அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி,
இப்படிக்குத்தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in
நன்றி பின்னூட்ட்டமிட்ட அனைவருக்கும்!
ReplyDeleteவைகோ சார் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பூ செல்கிறேன்
அருமையான கவிதை.
ReplyDeleteநன்றி திருமதி ஷைலஜா.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.