Social Icons

Pages

Friday, January 30, 2015

காந்தி ஆஸ்ரமம்.

குஜராத் மாநிலத்தில்  சுற்றுலா செல்லும்போது அவசியம் நாம் பார்க்கவேண்டிய இடம் சபர்மதி ஆஸ்ரமம்.



காந்தி ஆஸ்ரமம் என்றும் சொல்கிறார்கள். 

 36 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஆஸ்ரமம் குஜரத் மாநிலத்திற்கே சிறப்பு தரும் சபர்மதி நதிக்கரையில் அமைந்துள்ளது. அடர்ந்த மரங்களும் விதவிதமான தாவரங்களும்  மரங்களில் வசிக்க வரும் பறவைகளுமாக இடம் காட்சி அளிக்கிறது

.அமைதி தவழும் இந்த இடத்திற்கு தபோவனம் என்றே பெயரிட காந்திவிரும்பினாராம். ஆனால் சத்தியம் அஹிம்சை உயர்ந்த  சிந்தனை எளிமை  சுதந்திர வேட்கை அதை அடையப்போராடுவதற்கான மனவலிமை போன்ற லட்சியங்களை நிலை நிறுத்தும் வகையில் ‘சத்யாக்ரக ஆஸ்ரமம்’ என்கிற பெயரே பொறுத்தமானதாக நினைத்துத்தேர்வு செய்யப்பட்டதாம்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியதும் தாம் வசிக்க  ஏற்ற இடமாக அகமதாபாத் நகரினை தான்  தேர்ந்தெடுத்த  காரணத்தை  காந்தீஜி தனது சத்திய சோதனை புத்தகத்தில்  இப்படிக்குறிப்பிடுகிறார்.

‘மற்ற இடங்களைவிட என் மனதுக்கு அகமதாபாத  பிடித்திருக்கிறது.நான் குஜராத்தி என்பதால்  என் மொழியில் பேசி லட்சியங்களை விளக்கிப்புரியவைத்து மக்களை நெருங்க முடியும் நாட்டிற்கு அதிக அளவு சேவை செய்யமுடியும்.மேலும் அகமதாபாத் கைத்தறி நெசவுக்குப்பெயர்பெற்ற இடம் கையினால் நூல்நூற்கும்குடிசைத்தொழிலுக்கு புத்துயிர் அளிக்க இது வசதியான இடம்/’’


1915ஆம் ஆண்டிலிருந்து காந்தி தன் மனைவி மற்றும் எண்ணற்ற தொண்டர்களுடன் இங்குதான் வாழ்ந்தார்.  தண்டி உப்புசத்தியாக்ரக யாத்திரை 1930ல் இங்கிருந்துதான் தொடங்கியது. நாடு சுதந்திரம் அடைந்தாலேஒழிய தாம் சபர்மதி ஆஸ்ரமத்துக்கு திரும்ப்போவதில்லை என்கிற உறுதியுடன் காந்தீஜி அங்கிருந்து புறப்பட்டார்.


காந்தீஜியின் இல்லத்திலிருந்து நம் சுற்றுலாவைத்தொடங்கலாம்.

 வழியில்கருப்புசலவைக்கல்லில் காந்தீஜியின் உருவச்சிலை நம்மை வரவேற்கிறது. காந்தீஜியின் இல்லத்திற்குப்பெயர் ஹிதய குஞ்ச்  
 இந்த இடம் சரித்திர மகத்துவம் வாய்ந்தது. நேரு படேல் வினோபா சரோஜினி நாயுடு என பலபிரபலங்கள் அரசியல் தலைவர்கள் அண்ணலைப் பார்க்க வந்த இடம். கட்சிக்கூட்டங்களும் விவாதங்களும் முக்கியதீர்மானங்களும் இங்கே நிகழ்வுகளாக இருக்கும்.

 காந்தீஜி பயன்படுத்திய பொருட்கள் இங்கு உள்ளன. அன்னைகஸ்தூரிபாயின் அறைக்கு வெளியே அவரதுபோட்டோ மாட்டப்பட்டுள்ளது உள்ளே அன்றாடம் பயன்படும் பொருட்களைத்தவிர வேறெதுமில்லை. எளிமையின் சிகரங்கள் அல்லவா  மகாதமாவும் அவர்தம் வாழ்க்கைத்துணயும்!

நந்தினி என்ர விருந்தினர் விடுதி உள்ளது வெளியூரிலிருந்து காந்தீஜியை சந்திக்கவருபவர்கள் அங்குதங்குவார்களாம். வினோபா குட்டீர்() ல் ஆச்சர்ய வினோபாஜி வந்தபோது தங்கினாராம்.

சபர்மதி நதிக்கரையை ஒட்டி அமைந்த உபாசனா மஞ்ச் என்கிறபிரார்த்தனை மன்றம் எத்தனை அலுவல்கள்இருப்பினும் காந்தீஜி பிரார்த்தனைக்காக நேரம் ஒதுக்கத்தவறியதில்லை. திறந்த வெளியில் இயற்கை அமைத்துக்கொடுத்த ரம்யமான சூழ்நிலையில்  மனதை ஒருமைப்படுத்தி பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக  உட்கார வசதியாக விரிக்கப்பட்ட தரைவிரிப்பு அப்படியே உள்ளது.

இங்கிருந்து அடுத்து அருங்காட்சியகம் செல்கிறோம்.
 1963,ம் ஆண்டு இதை நேரூஜி திறந்துவைத்தார் என தகவல் சொல்கிறது.
இந்த மியூசியம் முழுவதும் காந்திதரிசனம் தான்.  Mohan to Mahathma
என்கிற பகுதியில் காந்தீஜியின் வாழ்க்கை சம்பவங்கள் ஒளிப்படமாக பார்க்கமுடிகிறது.
சுதந்திரப்போராட்டத்தின் கதையை கொலு வைக்கிறபாணியில்
 சொல்லி குழந்தைப்பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறார்கள்.

காந்தீஜியின் மூன்று குரங்குகளுக்கும் இங்கு இடமுண்டு.
மகாத்மா எழுதிய கடிதங்கள் கட்டுரைகளின்
 கையெழுத்துப்பிரதிகள் அவரைப்பற்றிய ஆவணப்படங்கள் அனைத்தும் இங்கு பத்திரமாகப்பேணப்படுகின்றன. நிறையபுத்தகங்களும் உள்ளன

இன்னும் ஒருபகுதியில் அவருக்கு மக்களிடமிருந்து வந்த கடிதங்களின் உறைகள் மட்டும் காட்சிப்பொருளாக  வைத்திருக்கிறார்கள்.
அந்த நாளில் இது நன்கொடையால் நடத்தப்பட்டதால் தனிப்பட்ட.முறையில் இடத்துக்கு
வருகைதந்த காந்தீஜியின் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான சாப்பாட்டு செலவைகாந்திஜீ தன்னுடைய பணத்திலிருந்து கொடுத்துவிடுவாராம்..

காந்திதரிசனம் முடித்து  ஊர் வரும்போது  செய்தித்தாள்களில் வன்முறை அஹிம்சை  பெண்களுக்குப்பாதுகாப்பின்மை  பற்றிய  செய்திகளையே பார்க்க நேர்ந்தபோது இன்னொரு காந்தி பிறந்துவந்தாலும் இந்த நாட்டை சீர்படுத்த முடியுமா என்கிற  கேள்வி  விடைதெரியாமல்  சுழன்றுகொண்டே இருக்கிறது,இன்னமும்.



6 comments:

  1. நல்லதொரு பகிர்வு அம்மா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இன்னொரு காந்தி பிறந்துவந்தாலும் இந்த நாட்டை சீர்படுத்த முடியுமா என்கிற கேள்வி விடைதெரியாமல் சுழன்றுகொண்டே இருக்கிறது,இன்னமும்.//

    quite true.
    subbu thatha
    www.subbuthatha72.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  3. நான் இந்த ஆஸ்ரமத்திற்கு பல தடவை சென்று இருக்கிறேன்.பழைய ஞாபகங்கள் திரும்பின.தற்போது உள்ள சீரழிந்த கலாசார அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையில் மகாத்மாவின் பேச்சு எடுபடுமா என்பது சந்தேகம்

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  5. முடிவில் எப்படியோ காந்திஜியின் "உண்மை...!"

    சிறப்பான பகிர்வு...

    ReplyDelete
  6. கருத்து தெரிவித்த டிடி ராமலஷ்மி கேபி சார் சுப்புதாத்தா குமார் அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.