Social Icons

Pages

Monday, November 06, 2006

ஒன்றா இரண்டா இலவசம்?

'செல்லமே' என்பாய்
சிணுங்கிச் சிரிப்பதை
ரசித்தே நிற்பாய்!

கள்ளப்பார்வையில் பல
காவியங்கள் வரைவாய்!
உள்ளம் குளிரக் குளிர
உற்சாகமாய்ப் பேசுவாய்!

மெல்லமெல்லவே என்
வெட்கத்தைக் களைந்தெடுப்பாய்
அள்ளியெடுத்தே
ஆலிங்கனமும்செய்வாய்!!

தங்கச் சரம் நகர்த்தி
சங்குக்கழுத்தினிலே
சட்டென விரல் பதிப்பாய்!!

அங்கமே துடித்து நிற்க
பொங்கும் வெட்கத்தில்
பூரித்தமுகந்தன்னை உன்
கைக்குள் சிறைவைப்பாய்!!

உறங்கும் அழகைப் பார்க்க
அருகிலேயே நீ
உறங்காது உட்கார்ந்திருப்பாய்!!

மேனிக்குள் எங்கெங்கெல்லாம்
வெட்கம் புதைந்துள்ளதென்பதை
நீ தொட்ட பிறகுதானே
நான் உணர்ந்து கொண்டேன்?

கசங்கிய போர்வையைக்
கண்ணுறும் போதிலெல்லாம்-நவ
ரசங்களின் காட்சிப்பின்னல்
ரயில் போல ஒடக்கண்டேன்!

'ஒரு முத்தம் கொடுத்தால் உனக்கு
இருமுத்தம் இலவசம்' என்றாய்
கணக்கென்ன கண்ணா-இந்தக்
கருவூலம் உனக்குத்தானே?

34 comments:

  1. தேன்கூடு போட்டிக்கு !!

    ReplyDelete
  2. பிரைசு உங்களுக்கு தாங்கோவ் !!

    ReplyDelete
  3. Anonymous8:39 PM

    ""மேனிக்குள் எங்கெங்கெல்லாம்
    வெட்கம் புதைந்துள்ளதென்பதை
    நீ தொட்ட பிறகுதானே
    நான் உணர்ந்து கொண்டேன்?""- nalla varigal , kavithaiyum koodataan ;)

    ReplyDelete
  4. எங்கே எனது பின்னூட்டம் ரொம்ப நேரமா காணலை ?

    ReplyDelete
  5. கவிதை அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அடடே! இது போட்டிக் கவிதையா! ம்ம்ம்....என்னென்னவோ சொல்றீங்க. இலவசத்துல இத்தன வகையிருக்குதா என்ன!

    என்னுடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ரவி, ஹனீஃப், தமிழ்ப்பிரியன் ஜிராகவன்!
    உங்களுக்கு என் நன்றி
    ஷைலஜா

    ReplyDelete
  8. அற்புதமான கவிதை..... வெற்றி பெற வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  9. உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிஅமுதன்..
    ஷைலஜா

    ReplyDelete
  10. //""மேனிக்குள் எங்கெங்கெல்லாம்
    வெட்கம் புதைந்துள்ளதென்பதை
    நீ தொட்ட பிறகுதானே
    நான் உணர்ந்து கொண்டேன்?""-
    //
    அருமை.. அட்டகாச வரிகள்.

    ReplyDelete
  11. வாங்க வசந்த்! உங்க விமர்சனத்துக்கு நன்றி.
    ஷைலஜா

    ReplyDelete
  12. ஷலஜா, ரொம்ப அழகான கவிதை.

    கடைசில ஒரு ட்விஸ்ட் கொடுத்து, கணவன் அல்லாது, ஒரு குழந்தையை முன் நிறுத்தி இருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்குமோ?

    இம்முறை இதர்க்கு பரிசு உண்டுன்னே தோணுது.

    கலக்கல்.

    நம்ப சைடும் வந்துட்டு போங்க.

    ReplyDelete
  13. ஆமா badnews of india ஜெயன். நீங்க சொன்னமாதிரி கவிதையின் முடிவில் குழந்தையக்கூட கொண்டுவந்து நிறுத்தி இருக்கலாம் என் கற்பனை அப்படிப்போகவில்லை என்ன செய்வது?! எப்போதுமேஒன்றை வாசிக்கும்போது அதை இன்னொருவிதமாக மாற்றி அமைத்தால் என்ன என்று தோன்றும் அது பல நேரங்களில் சிறப்பாகவும் மாறும்.நன்றி
    வரேன் உங்க வலைப்பூவின் பக்கம்
    ஷைலஜா

    ReplyDelete
  14. ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை...அதிலும்.....
    //கணக்கென்ன கண்ணா-இந்தக்
    கருவூலம் உனக்குத்தானே?//

    நல்ல வரிகள்......வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாங்க பெங்களூர் மௌல்ஸ்! வலை ஆரம்பிச்சதும்தான் தெரியுது நிறைய பேரு பெங்களூர்ல இருப்பது! மகிழ்ச்சி, உங்களை இங்கு கவிதைக்கான விமர்சனத்துடன் காண்பதில்!
    ஷைலஜா

    ReplyDelete
  16. எனக்கு காதலி இல்லை என்னும் ஏக்கத்தை மேலும் தூண்டி விட்டது உங்கள் கவிதை.
    மிகவும் நன்று !

    ReplyDelete
  17. கவிதையை படிக்கும்போது குழந்தையைத்தான் உருவகப்படுத்தி இருந்தேன். ஆனால் இந்த வரிகள் என் எண்ணத்தை அற்றி விட்டது.வாழ்த்துக்கள் பரிசுக்கு

    கசங்கிய போர்வையைக்
    கண்ணுறும் போதிலெல்லாம்-நவ
    ரசங்களின் காட்சிப்பின்னல்
    ரயில் போல ஒடக்கண்டேன்

    ReplyDelete
  18. ரசித்தேன்!!! வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

    /'ஒரு முத்தம் கொடுத்தால் உனக்கு
    இருமுத்தம் இலவசம்' என்றாய்/

    கிட்டத்தட்ட இதே மாதிரி முடித்து நானும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்... போட்டிக்கு அனுப்பிட வேண்டியதுதான் :))

    ReplyDelete
  19. Anonymous3:34 PM

    மேனிக்குள் எங்கெங்கெல்லாம்
    வெட்கம் புதைந்துள்ளதென்பதை
    நீ தொட்ட பிறகுதானே
    நான் உணர்ந்து கொண்டேன்

    கவிதை அருமை

    ReplyDelete
  20. மகேஷ், திராச, காண்டீபன் , நிர்மல், அருட்பெருங்கோ..அனைவர்க்கும் நன்றி.


    அன்புடன்
    ஷைலஜா

    ReplyDelete
  21. காதல் வாழ்வை கண்முன் நிறுத்தும் கவிதை.
    நன்று

    ReplyDelete
  22. காதல் கனிரசமோ? கவிதை நன்று.

    ReplyDelete
  23. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஷைலஜா

    ReplyDelete
  25. சிறில் அலெக்ஸ் மடல் கண்டேன் ! அவரது வெற்றிக்கு நான் வாழ்த்துமுன் என்னை வாழ்த்தவும் முதலில் வந்துவிட்டார்! நன்றி அலெக்ஸ்!
    ஷைலஜா

    ReplyDelete
  26. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!!

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் ஷைலஜா!

    பித்தானந்தாவின் ஆசி கிடைத்தவுடன் வெற்றியும் கிடைத்துள்ளது போலும்!

    :)

    ReplyDelete
  28. நன்றி அருட்பெருங்கோ. நன்றி சிபி!
    ஷைலஜா

    ReplyDelete
  29. நல்ல ர்ர்ர்ர்ர்ர்ரொமாண்டிக்கான கவிதை

    வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  30. வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஷைலஜா!!!

    //ரசங்களின் காட்சிப்பின்னல்
    ரயில் போல ஒடக்கண்டேன்!//

    இது கண்முன் அப்படியே ரயிலை ஓட விட்டது! சி்னிமாவில் வருமே அதே போல:-))

    //உறங்கும் அழகைப் பார்க்க
    அருகிலேயே நீ
    உறங்காது உட்கார்ந்திருப்பாய்//

    இதை இங்கு கண்டீர்களா?
    http://pillaitamil.blogspot.com/2006/11/blog-post_29.html

    ReplyDelete
  31. அழகான கவிதை. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  32. சேதுக்கரசி, கண்ணபிரான் ரவி, ராசுக்குட்டி அனைவருக்கும் நன்றி.
    ரவிசங்கர்...உங்களுக்கு படைப்பு பற்றிய விமர்சனத்தை உங்கள் தளத்தில் மடல் இடுகிறேன்...வெளியூரில் இருப்பதால் உடனே பதில் அளிக்க இயலவில்லை
    ஷைலஜா

    ReplyDelete
  33. வாழ்த்துகள் ஷைலஜா

    அடுத்த குறும்பை ஆரம்பியுங்க

    ReplyDelete
  34. மதுமிதா said...
    //வாழ்த்துகள் ஷைலஜா

    அடுத்த குறும்பை ஆரம்பியுங்க //

    நன்றி மது!
    குறும்பு நம்ம கூடப் பொறந்ததாச்சே. விடுவேனா சீக்கிரமா ஆரம்பிக்கறேன்!!:0
    ஷைலஜா

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.