Social Icons

Pages

Sunday, November 09, 2008

கடுகு சிறுத்தாலும்.......

கடுகு சாம்பாரில்,கூட்டில்,பொறியலில் என்று தாளிக்கிறோம்
முதல்மரியாதை தாளிதம் செய்வதில் கடுகாருக்கே உண்டு.

சரி இது எதுக்குன்னு தெரியுமா? எனக்கும் போனமாசம்வரைதெரியாது. இதுபோல பலவிஷயங்கள் தெரியாது ஆனா ஏதோ பழக்கம்போல செய்துட்டு வரோம்!

சமீபத்துல எழுத்தாளர்ராஜேஷ்குமார்கிட்ட பேசிட்டு இருந்தப்போ அவர் கடுகுபற்றி சொன்ன விஷயம் ஆச்சரியமா இருந்தது.
கடுகு சிறுத்தாலும் காரம்குறையாது என்பதற்கான உண்மையும் புரிஞ்சது!

உங்களில் பலருக்கு தெரிஞ்சிருக்கலாம்...அவங்க அப்படி நகர்ந்துடுங்க..
இது என்னைமாதிரி தெரியாதங்களுக்கு மட்டும்!
கடுகில ஒருசங்கதி நம் உடலுக்கு தேவைப்படுதாம், அது என்னனு கேட்டேன் .

அவர் சொன்னார்.

கால்ஷியம் புரோட்டின் கார்போஹைட்ரேட் மங்னிஷியம் எல்லாம் நாம் சாப்பிட்ற உணவுலகிடைக்குது ,ஆனா எந்த ஒரு உணவுப்பொருளிலும் கிடைக்காத ஒருதாதுப்பொருள் கடுகுல கிடைக்குதுன்னார்.

அவரே தொடர்ந்து,"கடுகில இருப்பது சல்ஃப்ர். அதாவது கந்தகம்.
இந்த சல்பர் நம் உடலின் ஆரோக்கியத்துக்கு சிறிதளவே தேவைப்படுது...கடுகை கொதிக்கிற எண்ணைல போட்டதும் வெடிப்பதுக்கு அதான காரணம்." என்றுமுடித்தார்.

(பட்டாசு வெடிக்கறதுக்கு துணணசெய்வது கந்தகம்தான்னு நமக்கு தெரியும்.)

கந்தகம் மனிதனின் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறிய அளவில்தேவைப்படுவதால் அதனை சின்னகடுகில் ஒளித்துவைத்த கடவுள் பெரியவர் தான் இல்லையா?

18 comments:

  1. அக்கா.. என்னதிது.. நான் கடுகு பத்தி எக்கச்சக்க விஷ்யம் சொல்வீங்கன்னு நினைச்சா.. கடுகு அளவுக்கு ஒரு சின்ன பதிவா முடிச்சுட்டீங்க.. :)

    ஆனாலும் காரம் குறையல.. :)

    ReplyDelete
  2. கொஞ்சம் கும்மி அடிக்கலாம்னு நினைச்சேன்.. நேரம் ஆயிருச்சு.. பேரருளாளானை சென்று நான் சேவித்து விட்டு வந்து பேசுறேன்.. வரவாக்கா...

    ReplyDelete
  3. Raghav said...
    அக்கா.. என்னதிது.. நான் கடுகு பத்தி எக்கச்சக்க விஷ்யம் சொல்வீங்கன்னு நினைச்சா.. கடுகு அளவுக்கு ஒரு சின்ன பதிவா முடிச்சுட்டீங்க.. :)

    ஆனாலும் காரம் குறையல.. :)

    6:47 AM
    >>>>>>>>>>>>>வெளியூர் சென்றாலும் மறக்காம இங்க விசிட் அடிக்கும் ராகவ் வாழ்க!!! கடுகு விஷயம்னா சின்னதா தான இருக்கும் அதான்:):)

    ReplyDelete
  4. Raghav said...
    கொஞ்சம் கும்மி அடிக்கலாம்னு நினைச்சேன்.. நேரம் ஆயிருச்சு.. பேரருளாளானை சென்று நான் சேவித்து விட்டு வந்து பேசுறேன்.. வரவாக்கா...

    6:48 AM
    >>>>>>>>>>>>>>>>>>>>

    கும்மியாலஜிஸ்ட் ராகவ் அவர்களே இன்று சென்று பேரருளாளனை சேவித்து வென்று நலம் கண்டு நாளை வந்து மீண்டும் எழுதுங்க....
    தீர்க்காயுஷ்மான் பவ;

    ReplyDelete
  5. Raghav said...
    //கடுகு பத்தி எக்கச்சக்க விஷ்யம் சொல்வீங்கன்னு நினைச்சா.. கடுகு அளவுக்கு ஒரு சின்ன பதிவா முடிச்சுட்டீங்க..

    ஆனாலும் காரம் குறையல..//

    அழகாச் சொல்லிட்டார் ராகவ். வழி மொழிஞ்சிடுறேன்:))!

    ReplyDelete
  6. எட்டிப்பாக்கறதுக்குள்ளே 'படபட'ன்னு பின்னூட்டங்கள் வந்துருக்கு!

    ReplyDelete
  7. ஏதோ சமையல் குறிப்புன்னு சொன்னதை நினைவுல வச்சுட்டு வந்தேன்.....வித்தியாசமான தெரியாத செய்தி...ஜுப்பரு....:)

    ReplyDelete
  8. கடுகுக்கு இத்தனை அர்த்தமா.

    அது வெடிச்சு வாசனை வந்தால்தான் சமையலே. தயிர்சாதமும் கடுகும் போல உங்க பதிவுகள் அனைத்தும் சூப்பர் ஷைலஜா.

    ReplyDelete
  9. ராமலக்ஷ்மி said...
    Raghav said...
    //கடுகு பத்தி எக்கச்சக்க விஷ்யம் சொல்வீங்கன்னு நினைச்சா.. கடுகு அளவுக்கு ஒரு சின்ன பதிவா முடிச்சுட்டீங்க..

    ஆனாலும் காரம் குறையல..//

    அழகாச் சொல்லிட்டார் ராகவ். வழி மொழிஞ்சிடுறேன்:))!

    7:27 AM
    >>>>>>>>>>>>>>>மிக்க நன்றி ராமலஷ்மி ....அழகா நீங்களும் சொல்லிட்டீங்க வழிமொழிகிறேன்னு

    ReplyDelete
  10. Anonymous11:44 AM

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்ன்னு சொல்ல இதுதான் காராணமா :)

    ReplyDelete
  11. துளசி கோபால் said...
    எட்டிப்பாக்கறதுக்குள்ளே 'படபட'ன்னு பின்னூட்டங்கள் வந்துருக்கு!

    7:35 AM
    >>>>கடுகு பதிவு என்பதால் படபடங்கறீங்க..ம்ம் புரிஞ்சுதுபுரிஞ்சுது!!

    ReplyDelete
  12. மதுரையம்பதி said...
    ஏதோ சமையல் குறிப்புன்னு சொன்னதை நினைவுல வச்சுட்டு வந்தேன்.....வித்தியாசமான தெரியாத செய்தி...ஜுப்பரு....:)

    8:31 AM
    >>>>>>>>சமையல்ல்ல இது அங்கம்வகிப்பதால் இதைப்பத்தி சொல்லவந்தேன் மௌலி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  13. சின்ன அம்மிணி said...
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்ன்னு சொல்ல இதுதான் காராணமா :)

    11:44 AM

    >>>>>ஆமா சின்னம்மிண்ணி அந்த சல்பர் அதாவது கந்தகம் நமம உடம்புக்குக்கோஞ்ச்மா வேணவே வேணுமாம் அதை கடுகில இப்படிக்கடவுள் போட்டுவசிட்டாரு!

    ReplyDelete
  14. வல்லிசிம்ஹன் said...
    கடுகுக்கு இத்தனை அர்த்தமா.

    அது வெடிச்சு வாசனை வந்தால்தான் சமையலே. தயிர்சாதமும் கடுகும் போல உங்க பதிவுகள் அனைத்தும் சூப்பர் ஷைலஜா.

    8:33 AM
    >>>>>>...உங்க எல்லார்பின்னூட்டத்தைவிடவா மணக்கறது வல்லிமா? நன்றி ரொம்ப.

    ReplyDelete
  15. அட....ம்ம்....நன்றி ;)

    ReplyDelete
  16. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
    கடுகாரைப் பற்றி எனக்கு தெரிந்த விசயம் இவ்வளவே.
    காரத்தைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  17. அமிர்தவர்ஷினி அம்மா said...
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
    கடுகாரைப் பற்றி எனக்கு தெரிந்த விசயம் இவ்வளவே.
    காரத்தைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி.

    4:05 PM
    <>>>>நானும் கேட்டுத்தெரிஞ்சிட்டதுதான் அமிர்தவர்ஷிணி அம்மா. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. whoa! தகவலுக்கு நன்றி!

    சின்ன தகவலா இருந்தாலும், பயன் பெருசு.


    ஒரு சந்தேகம்!

    பெங்காலி நண்பர்கள் கடுகெண்ணையில் சமைக்கிறார்களே...அவர்களுக்கு அதிக கந்தகம் (sulphur) சேர்த்துக்கொண்டு அவதிக்குள்ளாக மாட்டார்களோ?!?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.