Social Icons

Pages

Friday, November 14, 2008

கருவின் கதறல்.

அழிக்காதே அம்மா
விழுங்கிப்பின் உமிழ்கின்றாய் என்னை
வாழ்வில்லை உனக்கென்று

என்னைக்களைந்திடவும்
கரைத்துத்தள்ளிடவும்
ஏனிந்த வேகம் அம்மா?

விதை போடாமலேயே
விளைந்த களை அல்ல நான்
மழைநீரில்விளைந்த
மண்முத்து
வருங்கால
மனிதமுத்து

அழையாத விருந்தாளியல்ல
வாயில்லைஎனக்கென்றால்
வலியுமா இருக்காது?

உன் இதயம்போல
கல் அல்ல அம்மா நான்
முழு உயிர் இல்லையெனினும்
அரும் உயிர் உண்டு கருவுக்கு

கவனமாய் நீ இருந்திருந்தால்
காற்றிலேயே நான் மறைந்திருப்பேன்
காதலின் போதையில்
காவலை மீறினாய்
காலம் கடந்த ஞானத்தில்
கருக்கலைப்பு முடிவெடுத்தாய்

வந்தவழி நான் போனால்
வாழ்வில்லை எனக்கும்

அபயமென வந்தவரை
அடித்துவிரட்டும் உன்போன்ற
அம்மாக்கள் பெருகிவிட்டால்
இனி..
குழந்தைகள் தினமென்று
கொண்டாடுவதற்கு
குழந்தைகளே இல்லாமல்
போகவும் கூடும்.

18 comments:

  1. //முழு உயிர் இல்லையெனினும்
    அரும் உயிர் உண்டு கருவுக்கு//

    அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள். குழந்தைகள் தினத்தன்று குழந்தையாக பூமியில் பூக்கும் முன்னரே பிடுங்கப் படும் அரும் உயிர்களுக்காக வேதனைக் குரல் எழுப்பும் பதிவு.

    வாழ்த்துக்கள் ஷைலஜா.

    ReplyDelete
  2. ராமலக்ஷ்மி said...
    //முழு உயிர் இல்லையெனினும்
    அரும் உயிர் உண்டு கருவுக்கு//

    அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள். குழந்தைகள் தினத்தன்று குழந்தையாக பூமியில் பூக்கும் முன்னரே பிடுங்கப் படும் அரும் உயிர்களுக்காக வேதனைக் குரல் எழுப்பும் பதிவு.

    வாழ்த்துக்கள் ஷைலஜா.

    7:10 AM
    >>>>>>>>>>>நன்றி ராமலஷ்மி...இட்டவுடனேயே வந்து வாழ்த்திவிட்டீர்களே நல்லவேளை கணிணி அருகேயே இருப்பதால் உடனே நன்றி தெரிவிக்கவும் முடிந்துவிட்டது.இல்லாவிடில் வேறுபணிகளின் அழுத்ததில் தாமதம் ஆகிவிடுகிறது.

    ReplyDelete
  3. //உன் இதயம்போல
    கல் அல்ல அம்மா நான்
    முழு உயிர் இல்லையெனினும்
    அரும் உயிர் உண்டு கருவுக்கு//

    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்-ன்னு கந்தர் அநுபூதி ஞாபகம் வந்திரிச்சிகா இதைப் படிக்கும் போதே!

    //அபயமென வந்தவரை
    அடித்துவிரட்டும் உன்போன்ற
    அம்மாக்கள் பெருகிவிட்டால்//

    :(

    ReplyDelete
  4. Anonymous7:14 PM

    வேதனைக் குரல் எழுப்பும் பதிவு.

    ReplyDelete
  5. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //உன் இதயம்போல
    கல் அல்ல அம்மா நான்
    முழு உயிர் இல்லையெனினும்
    அரும் உயிர் உண்டு கருவுக்கு//

    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்-ன்னு கந்தர் அநுபூதி ஞாபகம் வந்திரிச்சிகா இதைப் படிக்கும் போதே!

    >>>>>>>>>>>>>>>>>

    ஆமாம் ரவி....ஆரம்ப வரியே கருவாய் ...பாருங்க....அதுவே உயிராய் வேறு கதியின்றி விதியால் அழியப்போகும் நிலையே கவிதையானது நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  6. கடையம் ஆனந்த் said...
    வேதனைக் குரல் எழுப்பும் பதிவு.

    7:14 PM


    கோபிநாத் said...
    ;-((

    7:29 PM
    >>>>>>ஆன்ந்த கோபி..இருவரின் வருகைக்கும் நன்றி//என்ன செய்றது கொஞ்சம் வேதனையான விஷயம்தானே இது ?

    ReplyDelete
  7. Ammavai urimayoda kurai koorum en ini karuve... appa enum sollum kaaranamallavaa un uravukku

    ReplyDelete
  8. விழுங்கிப்பின் உமிழ்கின்றாய்

    அருமை.

    என்னைக்களைந்திடவும்
    கரைத்துத்தள்ளிடவும்
    ஏனிந்த வேகம் அம்மா?

    மிக மிக நல்ல கவிதை.

    ReplyDelete
  9. விழுங்கிப்பின் உமிழ்கின்றாய்

    அருமை.

    என்னைக்களைந்திடவும்
    கரைத்துத்தள்ளிடவும்
    ஏனிந்த வேகம் அம்மா?

    மிக மிக நல்ல கவிதை.

    ReplyDelete
  10. Vriksha said...
    Ammavai urimayoda kurai koorum en ini karuve... appa enum sollum kaaranamallavaa un uravukku

    9:08 AM
    >>>kaaranam appathan aana kanmun therivathu ammaathane athan ketkirathu! thanks VRIKSHA

    ReplyDelete
  11. Vriksha said...
    Ammavai urimayoda kurai koorum en ini karuve... appa enum sollum kaaranamallavaa un uravukku

    9:08 AM
    >>>kaaranam appathan aana kanmun therivathu ammaathane athan ketkirathu! thanks VRIKSHA

    ReplyDelete
  12. அமிர்தவர்ஷினி அம்மா said...
    விழுங்கிப்பின் உமிழ்கின்றாய்

    அருமை.

    என்னைக்களைந்திடவும்
    கரைத்துத்தள்ளிடவும்
    ஏனிந்த வேகம் அம்மா?

    மிக மிக நல்ல கவிதை.

    3:58 PM
    <>>>>>நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா.
    வருகைகும் கருத்துக்கும்

    ReplyDelete
  13. Anonymous11:51 PM

    நல்ல எண்ணம் ஷைலஜா! நல்ல நோக்கம்! அதனாலே கவிதை பற்றிய என் இதர எண்ணங்களை சொல்லப்போறதில்லை. :)
    இதுலே இருக்க‌ற‌ ந‌ல்ல‌ எண்ண‌ம் குறைக‌ளை சொல்ல‌ விடாம‌ த‌டுத்து விடுகிற‌து.

    ReplyDelete
  14. //வாயில்லைஎனக்கென்றால்
    வலியுமா இருக்காது?//

    //உன்போன்ற
    அம்மாக்கள் பெருகிவிட்டால்
    இனி..
    குழந்தைகள் தினமென்று
    கொண்டாடுவதற்கு
    குழந்தைகளே இல்லாமல்
    போகவும் கூடும்.//

    வலிக்க வைக்கும் வரிகள். உணரவும் வைக்கின்றன. நல்லாருக்கு அக்கா.

    ReplyDelete
  15. Vidhya (vidhyakumaran@gmail.com) said...
    நல்ல எண்ணம் ஷைலஜா! நல்ல நோக்கம்! அதனாலே கவிதை பற்றிய என் இதர எண்ணங்களை சொல்லப்போறதில்லை. :)
    இதுலே இருக்க‌ற‌ ந‌ல்ல‌ எண்ண‌ம் குறைக‌ளை சொல்ல‌ விடாம‌ த‌டுத்து விடுகிற‌து.

    11:51 PM
    <<>>>>>>>>>>>நன்றி வித்யா வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  16. கவிநயா said...
    //வாயில்லைஎனக்கென்றால்
    வலியுமா இருக்காது?//

    //உன்போன்ற
    அம்மாக்கள் பெருகிவிட்டால்
    இனி..
    குழந்தைகள் தினமென்று
    கொண்டாடுவதற்கு
    குழந்தைகளே இல்லாமல்
    போகவும் கூடும்.//

    வலிக்க வைக்கும் வரிகள். உணரவும் வைக்கின்றன. நல்லாருக்கு அக்கா.

    10:24 AM
    >>>>>>>நன்றி கவிநயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்புத் தங்கையே!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.