Social Icons

Pages

Wednesday, November 05, 2008

அந்தக்கரங்கள்! அந்தக்கால்கள்!!

திருப்புகழ் கந்தரலங்காரம் கந்தரனுபூதி ஆகிய மூன்று நூல்களைஒன்று திரட்டி புதிய நூலாக வெளியிட்டார் செங்கல்வராயப்பிள்ளை. நூலின்பிரதியை உ.வே. சாவிடம் கொடுத்தார்.

நூலை ஆழ்ந்துபடித்த உவெ சா, திடிரென செங்கல்வராயப்பிள்ளையின் கைகளை எடுத்து தம் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

பதறிப்போன செங்கல்வராயப்பிள்ளை" என்ன்னகாரியம் செய்தீர்கள் ஐயா?" என்றார்.

உவேசா நிதானமாக சொன்னார்." முருகனுடைய பெருமைகளை ஆராய்ந்த கரம் ஆயிற்றே அதனால்தான அந்தக் கரங்களை ஒற்றிக்கொண்டேன் "என்றார்.

நெகிழ்ந்துப்பொன செங்கல்வராயர் விடைபெற்றார்.

நாலடிமுன்னே சென்றவர் திடீரெனத்திரும்பவும் உவேசாஅருகில்வந்து சட்டென அவர்காலில் விழுந்தார்.


இம்முறைபதறியது உவேசா அவர்கள்.

"என்னகாரியம் செய்கிறீர்கள்?"

"சங்ககால இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்த கால்களாயிற்றே!"
கண்ணீர் மல்கக்கூறினார் செங்கல்வராயப்பிள்ளை.
*************************************************************************************

19 comments:

  1. நட்சத்திர வாரத்தில்.. நட்சத்திரங்களாக சுடர் விடுபவர்களை பற்றி சொல்றீங்களாக்கா ?

    உங்களின் நட்சத்திரப் பாடல் ஒன்றும் வர வேண்டும் என்று உங்க கைய காலா நினைச்சு கேட்டுக்குறேன்.

    ReplyDelete
  2. Raghav said...

    நட்சத்திர வாரத்தில்.. நட்சத்திரங்களாக சுடர் விடுபவர்களை பற்றி சொல்றீங்களாக்கா ?

    உங்களின் நட்சத்திரப் பாடல் ஒன்றும் வர வேண்டும் என்று உங்க கைய காலா நினைச்சு கேட்டுக்குறேன்.

    1:59 PM >>>>>நன்றி வருகைக்கு

    ஏன்ம்ம்பா ஏதோ நட்சத்திரவாரம்னு கூட்டம் சேர்ரது இப்போ பாத்து என் பாட்டைப்போடச்சொல்லி இங்க காத்து வாங்க சொல்றயா?:):) ஆனாலும் நீ இவ்ளோ ஆசையா கேட்பதால்கோரிக்கை நிறைவேறலாம்(நானோ என் மகளோ பாடிப்படுத்துவோம்:)))

    ReplyDelete
  3. //ஏன்ம்ம்பா ஏதோ நட்சத்திரவாரம்னு கூட்டம் சேர்ரது இப்போ பாத்து என் பாட்டைப்போடச்சொல்லி இங்க காத்து வாங்க சொல்றயா?:):) //

    அக்கா, கூட்டம் அதிகமா வரும்போது பாடினா பாட்டும் ஃபேமஸ் ஆகும் (மைசூர்)பாக்கும் ஃபேமஸ் ஆகும். :)

    “நல்லவே எண்ணல் வேண்டும்”னு சொல்லிருக்கீங்க.. என் எண்ணம் நல்ல எண்ணம் தான்.. “நான் எண்ணியது முடிதல்” வேண்டும்னு கேட்டுக்குறேன்.. :)

    ReplyDelete
  4. 3:00 PM
    Raghav said...


    அக்கா, கூட்டம் அதிகமா வரும்போது பாடினா பாட்டும் ஃபேமஸ் ஆகும் (மைசூர்)பாக்கும் ஃபேமஸ் ஆகும்.//

    >>>>ஹ்ஹஹா! குறும்புதிலகம்!!!

    //“நல்லவே எண்ணல் வேண்டும்”னு சொல்லிருக்கீங்க.. என் எண்ணம் நல்ல எண்ணம் தான்.. “நான் எண்ணியது முடிதல்” வேண்டும்னு கேட்டுக்குறேன்.. //

    கே ஆர் எஸ்கூட சேர்ந்து நல்லா சிலேடையாப்பேசல்லாம் கத்துட்டியா?:) ச்சமத்துராகவ்!!

    3:56 PM

    ReplyDelete
  5. அற்புதம்!அந்த இரு மகோன்னதமானவர்களைப் பற்றிய செய்தியைதந்து மனதை நெகிழ வைத்துவீட்டிர்கள்!

    ReplyDelete
  6. SP.VR. SUBBIAH said...
    அற்புதம்!அந்த இரு மகோன்னதமானவர்களைப் பற்றிய செய்தியைதந்து மனதை நெகிழ வைத்துவீட்டிர்கள்!

    5:53 PM
    >>>>>>>>>நன்றி சுப்பையா

    இருவரும் தமிழ்வானின் நட்சத்திரங்கள் ஆயிற்றே அதனால்தான்

    ReplyDelete
  7. சுவையான தகவல் ஷைல்ஸக்கா...நன்றி. அந்த கைகளையும், கால்களையும் நானும் வணங்கிக்கறேன்...

    ReplyDelete
  8. 6:58 PM
    மதுரையம்பதி said...

    சுவையான தகவல் ஷைல்ஸக்கா...நன்றி. அந்த கைகளையும், கால்களையும் நானும் வணங்கிக்கறேன்...

    7:43 PM <<>>>>>மௌலி...பெரியமனிதர்கள் அவர்கள் இருவரும் நாம் தினம் நினைத்து வணங்கவேண்டியவர்கள்தான் நன்றி வருகைக்கு

    ReplyDelete
  9. அருமை shyலஜ்ஜா அக்கா. நல்ல நிகழ்வு இது.

    ReplyDelete
  10. அருமையான நிகழ்ச்சி...படித்துவிட்டு மனதில் நெகிழ்ச்சி!

    \\ஏன்ம்ம்பா ஏதோ நட்சத்திரவாரம்னு கூட்டம் சேர்ரது இப்போ பாத்து என் பாட்டைப்போடச்சொல்லி இங்க காத்து வாங்க சொல்றயா?:):) ஆனாலும் நீ இவ்ளோ ஆசையா கேட்பதால்கோரிக்கை நிறைவேறலாம்(நானோ என் மகளோ பாடிப்படுத்துவோம்:)))\\

    ஆகா...பாட்டா...சூப்பரு ;))

    ReplyDelete
  11. Anonymous6:49 AM

    சுவையான தகவல்

    ReplyDelete
  12. இப்ப கையைப் பிடிக்கணுமா. இல்லை, காலுல விழணுமா, ஒரு பாட்டு கேக்க!

    ReplyDelete
  13. குமரன் (Kumaran) said...
    அருமை shyலஜ்ஜா அக்கா. நல்ல நிகழ்வு இது.

    12:41
    >>>>>>>>>>>>>>>நன்றி குமரன்!!! வார்த்தை ஜாலமா ஓஹோ?:)

    ReplyDelete
  14. கோபிநாத் said...
    அருமையான நிகழ்ச்சி...படித்துவிட்டு மனதில் நெகிழ்ச்சி!

    \\ஏன்ம்ம்பா ஏதோ நட்சத்திரவாரம்னு கூட்டம் சேர்ரது இப்போ பாத்து என் பாட்டைப்போடச்சொல்லி இங்க காத்து வாங்க சொல்றயா?:):) ஆனாலும் நீ இவ்ளோ ஆசையா கேட்பதால்கோரிக்கை நிறைவேறலாம்(நானோ என் மகளோ பாடிப்படுத்துவோம்:)))\\

    ஆகா...பாட்டா...சூப்பரு ;))

    3:45 AM
    <<<<<<<<<<>>>கேட்டப்றம் சொலல்ணும் கோபி.....எதிர்பார்ப்பு அதிகமா இருக்கே ஒழுங்கா செய்வேனா?:)

    ReplyDelete
  15. சின்ன அம்மிணி said...
    சுவையான தகவல்

    6:49 AM
    >>>>>>>>>>>நன்றி சின்னம்மிணி எல்லா படிச்சிகேள்விப்பட்டதுதான்

    ReplyDelete
  16. VSK said...
    இப்ப கையைப் பிடிக்கணுமா. இல்லை, காலுல விழணுமா, ஒரு பாட்டு கேக்க!

    7:58 AM
    >>>>>>>>>>>>>>>:):) பாடறோம்

    ReplyDelete
  17. தாமதமாக(தெரிந்து)வந்தாலும் எல்லாமும் படித்துவிட்டேன் ஷைலு!

    வழக்கம்போல ஷைலுவின் எழுத்துக்கள் ஷைன் பண்ணுகின்றன!

    அருமை(சொல்லவும் வேண்டுமா?:))

    ReplyDelete
  18. meena said...

    தாமதமாக(தெரிந்து)வந்தாலும் எல்லாமும் படித்துவிட்டேன் ஷைலு!

    வழக்கம்போல ஷைலுவின் எழுத்துக்கள் ஷைன் பண்ணுகின்றன!

    அருமை(சொல்லவும் வேண்டுமா?

    9:14 >>>>>>>>>>>வாங்க மீனா தெரியும் நீங்க பிசின்னு பரவால்ல
    உங்க அன்பான கருத்துக்கு ரொம்ப நன்றிமீனா.

    ReplyDelete
  19. கால்களும் கைகளும் அருமை-க்கா!
    அந்தக் கால்களுக்கும், கைகளுக்கும், அடியேன் சிரத்தைத் தாழ்த்திக் கொள்கிறேன்!

    ச்சரி, ஒருத்தரு கைய காலா நினைச்சு கேக்குறாரு! பாடுங்கக்கா, பாடுங்க! :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.