Social Icons

Pages

Tuesday, January 13, 2009

புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும்!

சென்னைப்புத்தகக்கண்காட்சிக்கு ஒருமுறையாவதுசெல்லவேண்டுமெறு பலநாள் வேண்டுதல் இந்ததடவை பலித்தது!

ஸ்ரீரங்கத்தின் சூறாவளிப்பயணம்முடித்து அதைப்பற்றிய நினைவுகள் மறைவதற்குள் உறவினர்வீட்டு முக்கிய நிகழ்ச்சிக்காக அடுத்தபயணம் நேர்ந்துவிட்டது!

ப்ளாட்பாரத்தில் போர்ட்டர்கள் காபி டீ கடைக்காரர்கள், நந்தினி பால்கோவாகடைப்பையன், சாரிடோன் வாங்கப்போன மருந்துக்கடை. என எல்லா இடத்திலும் எல்லோரும்,

இப்பத்தான் பெட்டியோட போனீங்க வந்திடீங்களா மறுபடி
என்று கேக்கிறமாதிரி இருந்தது!


எக்ஸ்பரசோஃகாபி கடைல நான்போய் நின்றதுமே ஸ்பெஷல்காபி தானே உங்களுக்கு எனக் கேட்டு விட்டுஸ்நேகமாய் சிரித்தார் காபிக்கலப்பவர்!

ஒருகூடை செண்பகப்பூவோடு எதிர்ப்பட்ட பூக்காரம்மா, என்னிடம் ,|பேக்கா| என்றாள். வழக்கமாய் சென்னைஉறவினர்களுக்காக பெங்களூர்புகழ் அதிரடிமயக்கவாசனை(என் போல் சிலருக்கு அதுதலைவலி!! என்ன ஆனாலும் ஜாதிமல்லிக்கே என் ஓட்டு!!!! )செண்பகத்தை பிளாட்பாரத்திலிருந்து கடத்திப்போவது வழக்கம்.

கன்னட பேக்கு(வேணும்) வை தமிழ்பேக்கு(அசடு) என நினைக்கமாட்டேன் என்றாலும் அன்றைய சூழ்நிலை என்னை அப்படி யோசிக்கவைத்து , பதிலே சொல்லாமல் நடையைக்கட்ட வைத்தது!.


மைசூர் எக்ஸ்ப்ரசில் ஏறிப்படுக்கும்போது பெங்குளுரில் வெடவெடத்தவர்கள் அனைவரும் சென்னையில் காலை சுறுசுறுப்பாய் எழுந்துவிட்டோம்.

முன்பே போனில் பேசிக்கொண்டபடி
நிலாரசிகனும் ஷண்முக ப்ரியாவும் அவள்தோழிதேவியும் என்னோடு புத்தகசாலைவர சம்மதித்திருந்தார்கள்.

விழியனுக்கு வரஇயவில்லை சஹாரா தேகியாலும் வரமுடியவில்லை நாமக்கல் சிபி வரேன்னு சொல்லி எஸ்கேப்! அவசரப்பயணமாகிவிடவும் அதிகம்பேருக்கு நான் சொல்லவும்முடியவில்லை

சரி அத விடுங்க புத்தகசாலைக்குப்போன(க)தைகேளுங்க!

நிலாரசிகன் மாலை 4மணிக்கே இரண்டாம்தடவையாய் அங்கே சென்றுவிட அடையாரிலிருந்து நானும் ஷ.ப்ரியாவும் தேவியும் அங்கேபோனோம்.

வாசலிலேயே எழுத்தாளர்களுக்கு வண்ணப் போஸ்டர்கள்!வாவ்! ஒரு திரைப்பட நடிகரைப்போல நம்ம எழுதுகோல்மன்னர்கள், அரசிகள் எடுப்பாக காணப்பட்டனர்!

கன்னத்திலகைவைத்துக்கொண்டு ராஜம்க்ருஷ்ணன்
புத்தகம் உள்ள இடங்களில் நான் இல்லாமலா என்க்கேட்டுசுஜாதா அமானுஷ்யப்புன்னகையுடன் இந்திரா சௌந்தர்ராஜன்

நறுக்கென்றபார்வையில் நாஞ்சில்நாடன்
அகலப்புன்னகையுடன் பெரிய போஸ்டரில் ஆண்டாள்ப்ரியதர்ஷிணி இன்னும் பிரபலங்கள் பலர்!பலர்!

பொருட்காட்சிசாலைக்குள் நுழைவதுபோல இருந்தது,
ஏனெனில் நிறைய ஆண்பெண் குழந்தைகள் என பலர்,பலவயதினர் உள்ளே செல்வதும் வருவதுமாயிருந்தனர்.பெங்களூரில் இப்படியொரு கூட்டத்தை புத்தகக்கண்காட்சியில்பார்க்காததால் ,
ப கா, மி .க பார்க்கறமாதிரி நான் பிரமித்தேன்.

இரவுக்கு இன்னும் சிலமணிநேரம் இருக்கும்போதே அப்போது நிலா உதித்தது!கைகொடுத்தது! கண்மலர்ந்தது!

வாங்க என்றது .

ஓர் உலா உள்ளே சென்றுமுடித்துவிட்டதாய் சொன்னது. வாசலில் இருந்த பெரியபந்தல்போட்ட திடலில்,

வைரமும் முத்தும் சற்றுநேரத்தில்வரும், என்று சேதி சொன்னது நிலா.

நுழைவுச்சீட்டுவாங்கிவிட்டு சட்டென சின்ன வட்டமடித்து எனி இண்டியன் .காம் கடைக்குமட்டும் எட்டிப்பார்த்துவிட்டு அங்கே போட்டோவும் எடுத்துக்கொண்டு மறுபடி வெளியே போடப்பட்டிருந்த பெரிய பந்தலின் கீழ் போய் நின்றோம் ,


பத்துநிமிஷம்முன்பு பார்த்தபோது எண்ணி இருபதுபேர் நின்ற பந்தல், இப்போது ஹவுஸ்ஃபுல்! வைரமுத்து மேடைக்குவந்திருந்தார். நிலா சட்டென அப்படியே ஓரிடத்தில் நின்றுவிட்டது!

அக்கா என் குரு பேசறதகேட்டுட்டு அப்றோமாம் புக்வாங்க உள்ளபோகலாம்

சரி நிலா

மேடையில் நீராரும்கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்தினை இருபெண்கள்(ஒருவர் சிறுமி) சோகமாய்பாடினர் .ஓடிப்போய்,மைக்கைபிடுங்கி உரக்க உற்சாகமாய்பாட ஆவலானதை அடக்கிக்கொண்டேன் புரிந்த நிலாரசிகனும் சங்கடமாய் சிரித்துவைத்தார்.சிலநிமிடங்கள் மேடையில்யாரோ பேசிமுடிக்க பிறகு பொங்கியது வைகை!

தமிழ் சிலருக்கு சிம்மாசனம்போட்டு உட்காரவைப்பதை வைரமுத்துவின் பேச்சினில் கேட்கமுடிந்தது. வாசிப்பின்மீது உள்ள மக்களின்நேசிப்பினை தாம் அங்கு கண்ணாரக்கண்டுவியந்ததை தனக்கே உரிய தமிழ் நடையில் புகழ்ந்தார். அவரால் தமிழே மேலும் அழகுபெற்று கண்ணையும்காதையும் மனத்தையும் நிறைத்தது.

முழுதும்கேட்க நேரமில்லாததால் பாதியிலேயே மனமின்றிப்பிரிந்து உள்ளே
புதையல்களைக்காணச் சென்றோம்

(தொடரும்)

5 comments:

 1. /ஒருகூடை செண்பகப்பூவோடு எதிர்ப்பட்ட பூக்காரம்மா, என்னிடம் ,|பேக்கா| என்றாள். வழக்கமாய் சென்னைஉறவினர்களுக்காக பெங்களூர்புகழ் அதிரடிமயக்கவாசனை(என் போல் சிலருக்கு அதுதலைவலி!! என்ன ஆனாலும் ஜாதிமல்லிக்கே என் ஓட்டு!!!! )செண்பகத்தை பிளாட்பாரத்திலிருந்து கடத்திப்போவது வழக்கம்.

  கன்னட பேக்கு(வேணும்) வை தமிழ்பேக்கு(அசடு) என நினைக்கமாட்டேன் என்றாலும் அன்றைய சூழ்நிலை என்னை அப்படி யோசிக்கவைத்து , பதிலே சொல்லாமல் நடையைக்கட்ட வைத்தது!./

  சுவைத்தேன்

  ReplyDelete
 2. வைரம் மிளிர்ந்ததை பார்த்து விட்டீர்கள். ம்ம், அப்புறம் என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்? நிலாரசிகன் தான் வாங்கிப் படித்து ரசித்தவற்றை ஏற்கனவே பரிந்துரைத்து விட்டார் தன் பதிவில்.

  ReplyDelete
 3. அக்கா, என்னென்ன புத்தகம் வாங்கினீங்க?

  ReplyDelete
 4. ஆகா...கொடுத்துவச்சவுங்க அக்கா நீங்க..நான் இதெல்லாம் போயி 4 வருஷம் ஆச்சு.

  ம்ம்..அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;)

  ReplyDelete
 5. நன்றி திகழ்மிளிர் ராகவ் கோபிநாத் ராமலஷ்மி


  என்ன புக்வாங்கினேன் யாரையெல்லாம் பார்த்தேன்னு விரைவில் எழுதறேன் பொங்கல் பணிகளில்மும்முரம் அதனால் தாமதம்!

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.