Social Icons

Pages

Thursday, December 01, 2011

புன்னகைக்கும் மத்தாப்பு!!

போதுமுந்தன் பொல்லாப்பு!



புன்னகைக்கும் மத்தாப்பு!



பூவை யார் திறப்பதுவாம்?



பொழுதையார் விரிப்பாராம்?




மோதுகின்ற மேகமெல்லாம்



மொத்தம் கவிழ்ந்தாலும்


சின்னப் பறவையின்


சிறகுச் சீண்டலினால்


மொத்தம் கவிழ்ந்து கதிர்


முத்தாய் இறைத்துவிடும்!


மூடிவிட்ட இமைகளோ


முடங்கிவிட்ட மனமோ


முத்தத்தால் இதயம்



முகையவிழ்ந்து நிற்பதுபோல்



மன்னவனின் வருகையது


மண்மகள் கண்ணிற்கு


சத்தமின்றித் தன்னாலே


சடுதியில் நடக்கவேண்டும்!



கதிரவன் வருவதும்


கவிதை பிறப்பதுவும்



மௌனத்தின் ஜனனத்தில்.!



உன்னதங்கள் அவையென்று


உலகமும்தான் அறிந்திடுமே!















25 comments:

  1. //கதிரவன் வருவதும்


    கவிதை பிறப்பதுவும்



    மௌனத்தின் ஜனனத்தில்.!
    //

    அருமை. வரிகளுக்கு அழகு சேர்க்கின்றன மெளனமாகப் படங்களும்.

    ReplyDelete
  2. புலர் காலை பொழுதை அழகாய் படம் பிடித்திருக்கிறீர்கள். உங்கள் கவிதையில் காலை இன்னும் அழகாய் தெரிகிறது.

    ReplyDelete
  3. கதிரவன் வருவதும்
    கவிதை பிறப்பதுவும்
    மௌனத்தின் ஜனனத்தில்.!
    உன்னதங்கள் அவையென்று
    உலகமும்தான் அறிந்திடுமே!

    மிகவும் ரசித்தவரிகள்.

    ReplyDelete
  4. //கதிரவன் வருவதும்


    கவிதை பிறப்பதுவும்



    மௌனத்தின் ஜனனத்தில்.!//

    அருமையான வரிகள்.
    படங்கள் அழகு.

    பூக்களை திறக்க வேண்டும் போல் உள்ள விரியாத மொட்டு அழகு.


    பொழுதை யார் விரிப்பார் அதற்கும் அழகான படம்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சூப்பர் கவிதை... கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதைன்னு ‘அனைத்து வட்டமா’ (அதான் ஆல்ரவுண்டர்) ஜொலிக்கறீங்களேக்கா... அபாரம்! (கவிதை எழுதத் தெரியாம நான் விடுற அனல்மூச்சு கேக்குதாக்கா...)

    ReplyDelete
  6. மிக்க நன்றி கருத்து சொன்ன ராமலஷ்மி சக்தி ல‌ஷ்மி கோமதி அரசு ரசிகன் மற்றும் கணேஷ்!!
    @கணேஷ்...என்னது ஆல்ரவுண்டரா?:) சும்மா ஜோக்கெல்லாம் அடிக்கக்கூடாது தம்பி சம்ஜே?:)

    ReplyDelete
  7. தமிழ்மணத்துல கவிதையை யாராவது கொண்டுவிட்டால் புத்தாண்டுபரிசு ஏதாவது தர யோசிப்பேன்....ப்ளீஸ்!

    ReplyDelete
  8. தமிழ்மணத்துல சேர்த்து ஓட்டும் போட்டுட்டேன்க்கா...

    ReplyDelete
  9. மௌனத்தின் ஜனனம்
    கவிதை...
    உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறு இல்லை சகோதரி...

    ReplyDelete
  10. கணேஷ் said...
    தமிழ்மணத்துல சேர்த்து ஓட்டும் போட்டுட்டேன்க்கா...

    5:54 PM



    thanks br!

    ReplyDelete
  11. //மகேந்திரன் said...
    மௌனத்தின் ஜனனம்
    கவிதை...
    உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறு இல்லை சகோதரி...

    6:38 PM

    ////

    நன்றி மகேந்த்ரன்

    ReplyDelete
  12. கொடி அசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததால் கொடி அசைந்ததா என்பதுபோல்
    படைப்புக்குப் பின் படங்களைத் தேர்ந்தெடுத்தீர்களா
    படங்கள்தான் படைப்பை பிறப்பித்ததா எனக் கேட்கும் அளவு
    பதிவும் படங்களும் அத்தனை சிறப்பாக
    அமைந்திருக்கின்றன
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  13. அருமை.
    கவிதையும் படங்களும்.

    ReplyDelete
  14. உங்கள் கவிதையின் லயிப்பில்
    நயம்பட எழுதிய நேர்த்தியில்
    அதிலுள்ள கருத்தின் சிறப்பில்
    என் மனம் ஆழ்ந்தது வியப்பில்.
    வாழ்த்துகள்
    ரிஷபன் ப்ளாக் மூலமாக அதிர்ஷ்டவசமாக
    இங்கு வந்தேன்.

    ReplyDelete
  15. அழகாகக் கிளி கொஞ்சுகிறது தங்கள் கவிதையிலும். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  16. //கதிரவன் வருவதும்
    கவிதை பிறப்பதுவும்
    மௌனத்தின் ஜனனத்தில்.!//

    ஆஹா..ஆஹா.. அபாரம் :-)

    படங்களும் அசத்தல்.

    ReplyDelete
  17. சிவகுமாரன் said...
    அருமை.
    கவிதையும் படங்களும்.

    9:53 PM

    ....நன்றி சிவகுமரன்

    ReplyDelete
  18. Ramani said...
    கொடி அசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததால் கொடி அசைந்ததா என்பதுபோல்
    படைப்புக்குப் பின் படங்களைத் தேர்ந்தெடுத்தீர்களா
    படங்கள்தான் படைப்பை பிறப்பித்ததா எனக் கேட்கும் அளவு
    பதிவும் படங்களும் அத்தனை சிறப்பாக
    அமைந்திருக்கின்றன
    மனம் கவர்ந்த பதிவு

    8:58 PM

    >>>>> ஆஹா அழகான பாடலுடன் ஆரம்பித்து மனம் கவர்ந்ததாய் நீங்க முடித்தவிதமே கவிதையாய் இருக்கே ரமணி..நன்றி மிக. படங்கள் கூகுலம்மாதான்:)

    ReplyDelete
  19. KParthasarathi said...
    உங்கள் கவிதையின் லயிப்பில்
    நயம்பட எழுதிய நேர்த்தியில்
    அதிலுள்ள கருத்தின் சிறப்பில்
    என் மனம் ஆழ்ந்தது வியப்பில்.
    வாழ்த்துகள்
    ரிஷபன் ப்ளாக் மூலமாக அதிர்ஷ்டவசமாக
    இங்கு வந்தேன்
    <<<<<<

    புதுமையாய் நீங்க வாழ்த்திய விதத்தில் நான் மகிழ்ந்தேன் பார்த்த சாரதி.நன்றி.

    ReplyDelete
  20. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    அழகாகக் கிளி கொஞ்சுகிறது தங்கள் கவிதையிலும். வாழ்த்துக்கள். vgk

    3:32 PM

    ///

    <<<<>>.கிளி பிடிச்ச பறவை ஆண்டாளையும் மீனாட்சியையும் பக்கத்துல வச்சிருக்கே அதான் என் வலைப்பூலயும் கொண்டுவந்துருக்கேன் வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  21. //அமைதிச்சாரல் said...
    //கதிரவன் வருவதும்
    கவிதை பிறப்பதுவும்
    மௌனத்தின் ஜனனத்தில்.!//

    ஆஹா..ஆஹா.. அபாரம் :-)

    படங்களும் அசத்தல்.

    3:53 PM

    ///
    நன்றி அமைதிச்சாரல்!

    ReplyDelete
  22. கதிரவனை, கடமையைச் சொல்லி அழைத்ததும்...
    இடியும் மின்னலுமாய் இரட்டயரை பிரசவிக்கும்
    மேகக் கூட்டமே எத்தனை சக்தி உனக்கு இருந்தாலும்
    சின்னப் பறவையின் சிறகுச் சீண்டலின் சக்தியதை அறியாயோ!.. அருமை!!..

    முத்தத்தின் மகிமையை அழகாய் சொல்லியதும்..
    மண்மகள் தனது காதலனான மழையை வரேவேற்க விரும்புவதும்...
    இத்தனையும் அழகாகச் சொல்லி வந்தே கடைசியில் அனைவரையும்
    மௌனமான ஜனனம் எது என்று சொல்லி அனைவரின் மெளனத்தையும் கலைத்து விட்டீர்கள்

    கவிதை அருமை... பகிர்விற்கு நன்றிகள் சகோதிரி..

    ReplyDelete
  23. மெளனத்தில் பிறந்த கவிதை அருமை.

    ReplyDelete
  24. கதிரவன் வருவதும்


    கவிதை பிறப்பதுவும்



    மௌனத்தின் ஜனனத்தில்.!

    அழகான படங்கள்..
    அருமையான வரிகள்..
    அற்புத பகிர்வுக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள்..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.