பெங்களூர் பூங்காக்களில் காலை நேரம் வாக் போகிறபோது சில்லென்ற காற்றுக்குப்பஞ்சமே இருக்காது. நல்ல கடும் கோடையிலும் சிற்றஞ்சிறுகாலை மட்டும் கார்டன்சிடியில் குளிர் உள்ளம்குளிரவைக்கும்..அதையும்தாங்க இயலாத பலர் ஸ்வெட்டர் மப்ளர் என்று வந்துவிடுவார்கள்
. சிலர் ஐபாடில் விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது குருராகவேந்திரசுப்ரபாதம் கேட்டபடி வருவார்கள். யான் பெற்ற இன்பம் பெறுகவையகம் என்பதுபோல அலறவைப்பார்கள் . நல்லதுதான் ஆனால் பார்க்கில் பலமனிதர்கள் நடப்பார்கள் எல்லாருக்கும் நமக்குப்பிடித்தது பிடிக்குமா என நினைத்துப்பார்க்கமாட்டார்கள்..
நான் நடக்கும் பார்க்கில் ஒரு கன்னடப்பெண்மணி கையில் ஏதோ நோட்டுப்புத்தகமுடன் கண்ணாடியை ஒரு கையால் சரி செய்தபடி காலில் ஹவாய் சப்பலுடன் ‘படவரு ,நானேனு மாடோது நினகே நன்ன ஷிவனே?”(ஏழை நான் உனக்கு நான் என்ன செய்வதோ சிவனே?”)
என்ற கன்னடப்பாடல்களையும் பாடியபடிவருவார். எங்கே சப்பல் தடுக்கி கீழே விழுவாரோ என எனக்கு பயமாக இருக்கும்.
’நீனு சும்னே வாக் மாத்ர மாடு’ (நீ சும்மா வாக் மாத்திரம் செய்)
என என்னிக்காவது சிவன் சொல்லவேண்டும் இவருக்கு என நான் நினைத்துக்கொள்வேன்
. ஒருத்தர் வேகவேகமாய் பந்தயத்துக்கு ஓடுவதுபோல நடப்பார்.
.மூச்சிறைக்கும் இதில் எதிர்ப்படுபவர்களிடம்,”நமஸ்காரா ஏனு சமாச்சாரா? “ என்று பேச்சு கொடுப்பார். பார்க் மையத்து திறந்த வெளி அரங்கில் யோகா பயிற்சியும் தொடர்ந்து சிரிக்கப்பயிற்சியும் நடக்கும்.சிரிக்க பயிற்சியாம்! வீட்ல சிரிக்க முடியாதவங்க இங்க சிரிப்பாங்க போல:)
.ஆண்கள் பெரும்பாலும் அரசியல் அல்லது கார்ப்பரேஷனின் கவனக்குறைவு பற்றிப்பேசிக்கொண்டுபோவார்கள்..பெண்கள் (கன்னடம் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலயாளம்) பெரும்பாலும் ஊட்டா (சாப்பாடு) தான்: அல்லது டீன் ஏஜ் குழந்தைகளின் பிடிவாதம் பற்றி.. உடல் உபாதைகளைப்பற்றி.. கொஞ்சம் முதியபெண்மணிகள் வரன் விவரங்களைப்பகிர்ந்தபடி....
யாராவது புத்தகம் வாசித்த கதை பத்திபேசுவாங்கன்னு நானும் காத்திட்டு இருக்கேன் இதுல காலனி பார்க்குகளில் சிலருக்கு நான் எழுத்தாளர் என ் தெரியும் அதனால் ஆர்வமாய் ,’சமீபத்துல எதுல கதைவந்துது?; என்று கேட்பார்கள்
ஆஅஹா என்முகத்தில் ஒரு ஆயிரம் வாட்ஸ்புன்னகை மிளிரும்.. காத்திருந்தமாதிரி பதில் சொல்வேன்
’அப்படியா நான் அந்தப்பத்திரிகை வாங்கறதே இல்ல...’என்பார்கள்
.சிலர் இன்னும் ஒருபடி மேலபோயி’ இப்பல்லாம் எங்க புக் வாசிக்க டைம் இருக்கு? கதைகள் ஒண்ணும் சகிக்கல அதனால் நான் எல்லாத்தியும் நிறுத்திட்டேன் பத்திரிகை எல்லாம் காசும் வேற கொள்ளை..’என்பார்கள். உண்மை கடைசி வரியில் வெளிவந்துவிட்டது பார்த்தீர்களா?:)
.இண்டர்நெட்ல எழுதறியாமே என்று ஒருமாமி அப்போதுதான் அமெரிக்கா போய் வந்ததால் ஏதோ விஷயம் தெரிந்து கேட்டமாதிரி தெரிந்தது.
நான் பதில் சொல்வதற்குள்,தொடர்ந்து ”என்னவோபோ ..சீரியல் பாக்க ஆரம்பிச்சா பொழுது ரெக்கை கட்டிட்டுப்பறக்குதே! ஆனாலும் கம்ப்யூட்ட்ர்ல வாசிச்சா எதையுமே வாசிச்ச த்ருப்தி இல்ல..நான் கைலபுக்வச்சிட்டுதான் வாசிப்பேன் அதுவும் தூக்கம் வரல்லைன்னாதான்..ஆமா உ ன் நாவல் ஒண்ணு கொடேன் வாசிச்சிட்டுதரேன்.”
“எதுக்கு தூக்கம் வரதுக்கா..சர்தான் போங்கமாமி..”என்று சொல்லாத குறையாய் நகர்ந்துவிட்டேன்.. சீரியல் சிகாமணிகளிடம் என்னபேசுவது?
ஆக வாக்கிங்கில் டாக்கிங் அதிகமிருக்கும் பார்க்குகளை நைசாய் ஒதுக்கிவிடுவது வழக்கம் எங்க ஊர்லதான் தடுக்கிவிழுந்தா பார்க் இருக்கும் அதை அழகாய் கவனித்து மேக் அப் செய்து ஜjiிலுஜிலுவெனக்காட்ட பலபெரிய கம்பெனிகள்போட்டி போடும்..
எல்லாவற்றையும் விட செலவில்லா்த உடற்பயிற்சி என்பதால் வாக்கிங் இப்போது பரவலாய் ் எல்லா ஊர்களிலும் மிகுந்துவிட்டது .அந்த விழிப்புணர்வை பல இயக்கங்கள் மேரத்தான் ஓட்டம் என அடிக்கடி பல ஊர்களில் நடத்துகிறார்கள்.
எதற்கு இப்போ திடீரென நடைப்பயிற்சிபற்றி ஆரம்பிக்கிறேன் என்றால் அதற்குக்காரணம் இருக்கிறது:) மார்ச்10ம்தேதி நேற்று் ஐஐடி வளாகத்தில் சென்னையில் நடைபெற்ற மஙகையர் (மட்டும் கலந்துகொள்ளும்)மாரத்தானுக்கு குடும்ப மங்கையரை வழியனுப்ப என்று சொல்லிக்கொண்டு பல ஆண்கள் குழுமிவிட்டனர்.
கையில் காமிராவுடன்:0 அழகான சில இள நங்கையர்கள் வந்தபோதுமட்டும் இளைஞர்கள் கண்ணில்கருப்புக்கண்ணாடி ஏறிக்கொண்டது!
சரியா ஏழுமணிக்கு தொடங்கியது..
டிசம்பர்ல ஜோரா இருந்த ஐஐடி வளாக மரம் செடிகள் மார்ச்சில் ஆயாசமாய் காணப்பட்டன.. ஏழரைக்கே அதன்ன சுள் கோபமோ சூரியனுக்கு?
அங்கங்கே ஐஐடி மரத்தடியில் வானரங்கள் எங்களை வேடிக்கைபார்த்தன. மான்கள் எங்களுக்குப்போட்டியாக துள்ளி ஓடின:) சிவராத்திரி என்பதால் ஐஐடி வளாகக்கோயிலின் வாசலில் நல்ல கூட்டம்...அங்கும் ஒரு குட்டி மான் ஓடிமறைந்தது.பக்திமானாக இருக்குமோ?:)
Run for Women 2013 ( Exclusively for Women )
மங்கயர் மேரத்தானில் 5கிமீ தொலைவினை 45 நிமிடத்தில் கடந்து மெடலும் பாராட்டுமடலும் வாங்கினதை இங்கேசொல்லிக்கொள்ள என்பது தவிர நேற்றைக்கு ஒரு போலீஸ் பெண்பிரமுகர் அங்கே மேடையில் ‘நாட்டிலெயே சென்னைதான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் ” என்று பெருமையாக சொல்லியதை பகிர்ந்துகொள்ளவும்தான்!
ஆமா சிலர்கிட்ட’எப்படி இருக்கு லைஃப்?’ எனக் கேட்டால் ’ஏதோ வாழ்க்கை ஓடுது’ என்கிறார்களே ..வாழ்க்கை உண்மையில் ஓடுகிறதா நடக்கிறதா ?:)
சரி உருப்படியா கொஞ்சம் எழுதி முடிக்கறேன்:)
நடப்பதின் பயன்களில் சில...
• மற்ற வகையான உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும்.
• எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் மிகவும் அதிகம். அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
• நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100 க்கு மேல் இருக்க வேண்டும்.
• ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே. ?
Tweet | ||||
ReplyDeleteசுமார் 3000-/ காலடிகள் என்றால் ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம் வருமா. ?குறைந்தது நாற்பது நிமிடங்களாவது நடக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
உண்மை இனிமேலாவது நடக்க வேண்டி யோசிக்கணும்
ReplyDeleteஅதிகாலை குறைந்தது 1 மணி---நேரம் பார்த்து நடப்பது தான் நல்லது...
ReplyDeleteஒரே நடையாக இல்லாமல் அங்கங்கே பத்தி விட்டு நடந்திருந்தால், இன்னும் படிக்க சிரமம் இல்லாமல் இருந்திருக்கும்...
நன்றி...
மங்கயர் மேரத்தானில் 5கிமீ தொலைவினை 45 நிமிடத்தில் கடந்து மெடலும் பாராட்டுமடலும் வாங்கினதை இங்கேசொல்லிக்கொள்ள என்பது தவிர நேற்றைக்கு ஒரு போலீஸ் பெண்பிரமுகர் அங்கே மேடையில் ‘நாட்டிலெயே சென்னைதான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் ” என்று பெருமையாக சொல்லியதை பகிர்ந்துகொள்ளவும்தான்///
ReplyDeleteமெடலும் பாராட்டுமடலும் வென்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..
நடை பற்றிய எழுத்து நடை நன்றாக இருக்கிறது!
ReplyDeleteநல்ல நடை.... :)
ReplyDeleteநடை பற்றிய உங்கள் எழுத்து நடை அருமை....
ReplyDeleteநடைப்பயிற்சி போல இலகுவானதும் இல்லை...
ReplyDeleteஅதுபோல அதிக பயன்தரும் பயிற்சியும் இல்லை...
அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி...
மாரத்தான் போட்டியில் பரிசு
பெற்றதற்கு வாழ்த்துக்கள்..
நடக்கற விஷயமாப் பேசியிருக்கீங்கக்கா. எனக்கும் இது ரொம்ப ரொம்ப உடன்பாடானதுதான் நானும் இப்பல்லம் நிறைய நடக்கறேன் - தொப்பை குறையணுமே! ஹி... ஹி...
ReplyDeleteவாங்க, நடைப்பயிற்சி பற்றி நல்லாவே சொல்லிருக்கீங்க. பொதுவாகவே உங்கள் கட்டுரைகளில் அல்லது பதிவுகளில் எதற்காகப் பத்தி ஒதுக்காமல் கூட்ஸ் வண்டி போல தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டு போகிறீர்கள் என்று நினைப்பதுண்டு. சமீபத்தில் பெங்களூர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் அனுப்பியிருந்த சிறுகதையைப் படித்தபோதுகூட இந்தக் குறையை உணர்ந்தேன். இங்கே கருத்துப்பெட்டியிலும் ஒரு நண்பர் இதனைச் சொல்லியிருக்கிறார். இனிமேல் கொஞ்சம் பாராக்கள் பிரித்து எழுதுங்களேன்.
ReplyDeleteஅப்புறம் நடை எவ்வளவு பயன்மிக்கது என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். நான் என்னுடைய வலைப்பதிவில் டிசம்பர் மாதத்தில் எட்டுநடை பற்றிய பதிவொன்று எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதுபற்றிய சிறு நூல் ஒன்றையும் தற்போது எழுதிவருகிறேன்.
ஆமாம், அதென்ன கலந்துகொண்ட எந்தப் போட்டியிலும் பரிசு பெறாமல் வருவதில்லைப் போலிருக்கிறதே. வாழ்த்துக்கள்.
நடை பற்றிய எழுத்து நடை நன்றாக இருக்கிறது!
ReplyDeleteசுவாரசியமான நடை சிரிப்பு பயிற்சியில் என்ன செய்யுறாங்கன்னு தெரிஞ்சா நல்லாயிருக்குமே ? (கிச்சு கிச்சு மூட்டராங்கனு சொன்னா கடுப்பாயிடும்)
ReplyDelete//அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே. ?//
ReplyDeleteஆம் நல்லது தான்.
அருமையான நடை.
G.M Balasubramaniam5:35 PM
ReplyDeleteசுமார் 3000-/ காலடிகள் என்றால் ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம் வருமா. ?குறைந்தது நாற்பது நிமிடங்களாவது நடக்க வேண்டும். வாழ்த்துக்கள்
>>.நன்றி ஜி எம் பி சார்.... அல்சூர் லேக் சந்திப்பு சனிக்கிழமை வர இயலுமா?
கவியாழி கண்ணதாசன்5:58 PMஉண்மை இனிமேலாவது நடக்க வேண்டி யோசிக்கணும்
ReplyDelete>>>>>ஆமாம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதாமே... யோசிக்கவே வேண்டாம் கவியாழி கண்ணதாசன்! நன்றி வருகைக்கு
திண்டுக்கல் தனபாலன்6:21 PMஅதிகாலை குறைந்தது 1 மணி---நேரம் பார்த்து நடப்பது தான் நல்லது...>>
ReplyDeleteஆமாம்
ஒரே நடையாக இல்லாமல் அங்கங்கே பத்தி விட்டு நடந்திருந்தால், இன்னும் படிக்க சிரமம் இல்லாமல் இருந்திருக்கும்...
நன்றி...>>
என்னவோ அப்போது பிரச்சினையாகி சரி செய்ய இயலவே இல்லை இப்படியே பல இடுகைகளை இட முடியாமல் விட்டிருந்தேன் பரவாயில்லை இது சின்னதுதானே என இட்டுவிட்டேன் இப்போது சரி செய்தாயிற்று தனபாலன் கருத்துக்கு நன்றி
Reply
இராஜராஜேஸ்வரி6:22 PMமங்கயர் மேரத்தானில் 5கிமீ ///
ReplyDeleteமெடலும் பாராட்டுமடலும் வென்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்
//
நன்றி இராஜேஸ்வரி...பங்குபெற்ற அனைவர்க்கும் மெடல் உண்டு ஆனா கடந்த நேரக்கணக்கில் ஒரு பெருமை அவ்வளவுதான்:)
கே. பி. ஜனா...7:06 PMநடை பற்றிய எழுத்து நடை நன்றாக இருக்கிறது!
ReplyDelete//
பிரபல எழுத்தாள நண்பரின் இந்தப்பாராட்டு எனக்கு நன்றாக இருக்கிறது நன்றி திரு ஜனா
வெங்கட் நாகராஜ்8:11 PMநல்ல நடை.... :)
ReplyDeleteசே. குமார்10:31 PMநடை பற்றிய உங்கள் எழுத்து நடை அருமை....
>>.மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் மற்றும் சே குமார்
மகேந்திரன்5:54 AMநடைப்பயிற்சி போல இலகுவானதும் இல்லை...
ReplyDeleteஅதுபோல அதிக பயன்தரும் பயிற்சியும் இல்லை...
அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி...
மாரத்தான் போட்டியில் பரிசு
பெற்றதற்கு வாழ்த்துக்கள்..
>>>> நன்றி மகேந்திரன்
பால கணேஷ்6:19 AMநடக்கற விஷயமாப் பேசியிருக்கீங்கக்கா. எனக்கும் இது ரொம்ப ரொம்ப உடன்பாடானதுதான் நானும் இப்பல்லம் நிறைய நடக்கறேன் - தொப்பை குறையணுமே! ஹி... ஹி...
ReplyDelete>>>ஆம் கணேஷ் நடந்து பாருஙக் நாலுநாள் அப்புறம் நடக்கலேன்னா போரடிக்கும் நல்லது உடலின் எல்லா பாகங்களுக்கும்..ஜூலை 7 நாங்க சிலர் மேரத்தான் நடத்தறோம் கலந்துக்குங்க
Amudhavan8:22 AMவாங்க, நடைப்பயிற்சி பற்றி நல்லாவே சொல்லிருக்கீங்க.>>
ReplyDeleteநன்றி திரு அமுதவன்
பொதுவாகவே உங்கள் கட்டுரைகளில் அல்லது பதிவுகளில் எதற்காகப் பத்தி ஒதுக்காமல் கூட்ஸ் வண்டி போல தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டு போகிறீர்கள் என்று நினைப்பதுண்டு.>>
அடிக்கடி அப்படி ஆகாது எப்போதாவது சதி செய்கிறது இப்படி ..இனி தவிர்க்கிறேன்
சமீபத்தில் பெங்களூர்த்தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் அனுப்பியிருந்த சிறுகதையைப் படித்தபோதுகூட இந்தக் குறையை உணர்ந்தேன்>>
அந்தக்கதையை மெயிலில் அடித்து அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்தேன் அதில் அப்படி பிரச்சினை ஆகிவிட்டதுபோலும் கடைசிநாள் கையில் எழுதவும் அவகாசமில்லை மற்றபடி பாரா அழகா பிரிச்சி எழுத தெரியும்:)
. இங்கே கருத்துப்பெட்டியிலும் ஒரு நண்பர் இதனைச் சொல்லியிருக்கிறார். இனிமேல் கொஞ்சம் பாராக்கள் பிரித்து எழுதுங்களேன்.>>
இப்போ சரி பண்ணிட்டேன் கம்போஸ்ல பிரச்சினை இருந்தது
அப்புறம் நடை எவ்வளவு பயன்மிக்கது என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். நான் என்னுடைய வலைப்பதிவில் டிசம்பர் மாதத்தில் எட்டுநடை பற்றிய பதிவொன்று எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதுபற்றிய சிறு நூல் ஒன்றையும் தற்போது எழுதிவருகிறேன்.>>>
அப்படியா? வாசிக்கிறேனே..
ஆமாம், அதென்ன கலந்துகொண்ட எந்தப் போட்டியிலும் பரிசு பெறாமல் வருவதில்லைப் போலிருக்கிறதே. வாழ்த்துக்கள்.>>>
அடடா எத்தனை தோல்விகள் அதெல்லாம் சொல்லிப்போமா இப்படி உடாலக்கடி பண்ணி பரிசுவாங்கினத மட்டும் சொல்லிப்போம்!!! நன்றி அமுதவன்!
ReplyDelete
சமுத்ரா9:08 AMநடை பற்றிய எழுத்து நடை நன்றாக இருக்கிறது!
ReplyDelete>>>>சமுத்ராவின் நடையை விடவா?:) நன்றி சகோதரரே
அப்பாதுரை9:17 AMசுவாரசியமான நடை சிரிப்பு பயிற்சியில் என்ன செய்யுறாங்கன்னு தெரிஞ்சா நல்லாயிருக்குமே ? (கிச்சு கிச்சு மூட்டராங்கனு சொன்னா கடுப்பாயிடும்)
ReplyDelete>>>>>ஹ்ஹஹா:) அதுக்கு ஈக்வலா என்ன சொல்றதுன்னு யோசிக்கறேன்:0 நன்றி வருகைக்கும் கருத்துக்கும் திரு அப்பாதுரை!(ஆமா பெங்களூர் வரவே இல்லையா?:)
RAMVI10:17 AM//அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே. ?//
ReplyDeleteஆம் நல்லது தான்.
அருமையான
நடை>>
நன்றி ராம்வி..16சனிக்கிழமை பெங்களூர் மக்கள் சந்திப்புக்கு வரீங்களா?
மிக்க நன்றி மேடம் பெங்களூர் மக்கள் சந்திப்பு பற்றி தெரிவித்தமைக்கு.
Deleteஎன் மகள் 12 ம் வகுப்பு படிக்கிறாள் அவளுக்கு பரிட்ஷை நடை பெற்று வருவதால் என்னால் எங்கும் செல்ல முடியாத நிலை. சனிக்கிழமை 16ம் தேதி மதியம் 2 மணிக்கு அவளுக்கு பரிட்சை இருப்பதால் என்னால் சனிக்கிழமை வர இயலாது.இன்னொரு சந்தர்ப்பத்தில் வருகிறேன். மிக்க நன்றி மேடம்.
வாக்கிங் போன இடத்துல ஒரே 'டாக்கிங் டாக்கிங்' ஜோலிதான் நடக்கர்து போலருக்கே!! :)
ReplyDeleteதக்குடு11:55 AMவாக்கிங் போன இடத்துல ஒரே 'டாக்கிங் டாக்கிங்' ஜோலிதான் நடக்கர்து போலருக்கே!!
ReplyDelete>>>>>
வாராது வந்த மாமணியே அருமைத்தம்பியே தக்குடுவே ...என்னப்பா நினைவிருக்கா என்னையும்?:) ஏதோ திருவடி இங்கே பதிச்சீங்களே சுவாமி சந்தோஷம் தான்:)
//நடையா இது நடையா?!//
ReplyDeleteஎழுதப்பட்டுள்ள நடை அழகு. பாராட்டுக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன்2:35 PM//நடையா இது நடையா?!//
ReplyDeleteஎழுதப்பட்டுள்ள நடை அழகு. பாராட்டுக்கள்.
..நன்றி வைகோ சார் இப்பதான் உங்க ப்ளாக்போய் மிளகாப்பொடி சாப்பிட்டுவந்தேன் கண்கலங்காமல் பின்னூட்டமும் இட்டேன் கவனிச்சீங்களா?:)
வாக்கிங் போறத பத்தின பதிவு நன்றாக இருக்கிறது. பெண்கள் கூடினால் பேசத்தான் பேசுவார்கள். அதனால் தான் நான் என் கணவருடன் வாக் போகிறேன்.
ReplyDeleteசிரிப்பு க்ளப்ல இருந்து வருபவர்கள் தினமும் என்னைப் பார்த்தாலும் சிரிக்க மாட்டார்கள். மரம் செடிகளைப் பார்த்து மட்டுமே சிரிக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கையோ, என்னவோ!
பதக்கம் வென்றமைக்கு வாழ்த்துகள் ஷைலஜாக்கா..
ReplyDeleteRanjani Narayanan4:22 PMவாக்கிங் போறத பத்தின பதிவு நன்றாக இருக்கிறது. பெண்கள் கூடினால் பேசத்தான் பேசுவார்கள். அதனால் தான் நான் என் கணவருடன் வாக் போகிறேன்.
ReplyDeleteசிரிப்பு க்ளப்ல இருந்து வருபவர்கள் தினமும் என்னைப் பார்த்தாலும் சிரிக்க மாட்டார்கள். மரம் செடிகளைப் பார்த்து மட்டுமே சிரிக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கையோ, என்னவோ!
>>>
வாங்க ரஞ்சனி நலமா?
ஆமாம் சிலருக்கு சிரிக்கவே காசுகொடுக்கணும்...வாக்கிங் பதிவைப்பற்றின உங்க கருத்துக்கு நன்றி.வர சனிக்கிழமை அல்சூர் ஏரில சந்திப்பு இருக்கு வர இயலுமா?
RAMVI1:37 PMமிக்க நன்றி மேடம் பெங்களூர் மக்கள் சந்திப்பு பற்றி தெரிவித்தமைக்கு.
ReplyDeleteஎன் மகள் 12 ம் வகுப்பு படிக்கிறாள் அவளுக்கு பரிட்ஷை நடை பெற்று வருவதால் என்னால் எங்கும் செல்ல முடியாத நிலை. சனிக்கிழமை 16ம் தேதி மதியம் 2 மணிக்கு அவளுக்கு பரிட்சை இருப்பதால் என்னால் சனிக்கிழமை வர இயலாது.இன்னொரு சந்தர்ப்பத்தில் வருகிறேன். மிக்க நன்றி மேடம்.
>>>ok Ramvi
சிரிக்கப்பயிற்சியும் நடக்கும்.சிரிக்க பயிற்சியாம்! வீட்ல சிரிக்க முடியாதவங்க இங்க சிரிப்பாங்க போல
ReplyDeleteநடைப்பயிற்சி பற்றி அருமையான பதிவு.
நன்றி.