முந்தாநாள் அந்திநேரத்துக்குக்கொஞ்சம் முன்னால அதாவதுமதியம் 3மணிக்கு பெங்களூர் இணையப்பெருமக்கள் சந்திப்பிற்கு ஆயத்தமானோம்.
ராமலஷ்மி நான் ஷக்திப்ரபா ஸ்வர்னா ஜீவ்ஸ் ஹரிகிருஷ்ணன் திருமால், வில்லன் என்னும் ஓம் ஸ்ரீ வலைப்பதிவர் ஜி எம் பாலசுப்ரமண்யம் என்று அனைவரும் தமிழ்ச்சங்க கட்டிட வாசலில் கூடினோம்.
அல்சூர் லேக் பக்கம் போய் அமரலாமா அல்லது ஒடுக்கத்தூர்மட் எனப்படும் சிறு கோயில் வளாக மண்டபத்தில் அமரலாமா எனப்பட்டிமன்றம் போடப்பட்டது.
முடிவில் தமிழ் எங்களுக்கு சிம்மாசனம் அளித்தது. சங்கக்கட்டிடத்தின் மேல் மாடி அறையில் நூலகம் அருகே இடம் கிடைத்துப்போனது.
அல்சூர் லேக் பக்கம் போய் அமரலாமா அல்லது ஒடுக்கத்தூர்மட் எனப்படும் சிறு கோயில் வளாக மண்டபத்தில் அமரலாமா எனப்பட்டிமன்றம் போடப்பட்டது.
முடிவில் தமிழ் எங்களுக்கு சிம்மாசனம் அளித்தது. சங்கக்கட்டிடத்தின் மேல் மாடி அறையில் நூலகம் அருகே இடம் கிடைத்துப்போனது.
ஹரிகீஜி அவர்கள் வீடியோ காமிரா+ட்ரைபாட் கொண்டுவந்து நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்யப்போவதாக சொல்லி இருந்தபடியால் நான் பெண்கள் குழுவுக்கு ரகசியமடலில் ஏதும் கம்பன் பாரதி அல்லது ரசித்த எழுதிய கவிதைகளைப்பற்றி பேசுவோம் ’ என்று முன்கூட்டிதகவல் அனுப்பி இருந்தேன்..அதன்படி நானும் ஷக்தியும் முதல்நாள் இரவே பேப்பரில் எழுதிக்கொண்டு தயாராக வந்தோம்..(ஆனால் அதுவும் ரகசியமாகவே போய்விட்டது:)
ஸ்வர்ணலஷ்மியை ஆட்டோவிலிருந்து இறங்குமுன்பாகவே ஓடிப்போய் ஸ்வர்ணா என நான் கூவ அவர் ஷைலஜா என அழைக்க அல்சூர் ஏரியின் அலைகள் எங்களைக்கண்ட மகிழ்ச்சியில் சின்னதாய் ஆரவாரம் செய்தன!
பதிவர் வயதில் சற்றே பெரியவரான ஜி எம் பி தன் பேரனுடன் வந்துவிட்டார். அடுத்து திருமால் ஜீவ்ஸ் ஹரிக்ருஷ்ணன் ராமலஷ்மி தமிழ்ச்சங்க உறுப்பினர் முகம்மது அலி ஆகியோர் குழுமிவிட சங்கக்கட்டிடம் எங்களின் சிரிப்பில் குலுங்காமல் ஸ்ட்ராங்காக இருந்தது.
மாடிக்குபோனதும் ஒளிப்பதிவு ஆரம்பமானது முதலில் அறிமுகம் செய்துகொள்வோம் என்றபடியால் அவரவர் அறிமுகம் +தங்களைப்பற்றிய சிறுகுறிப்பு என்று சென்று அதுவே ஒருமணிநேரத்தைக்கடந்துவிட்டது அலி அவர்கள் நேரமாகிவிட்டதென விடை பெற்றார்.
நூலகம் 5மணிக்கு திறக்கவும் அங்கு மக்கள் சிலர் வர ஆரம்பித்தனர் எங்களை ஏதோ தமிழ்ப்பாவலர்கள் என நினைத்தோ என்னவோ மரியாதையாக(திருதிரு) நோக்கியபடி நகர்ந்தனர்!
செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயவேண்டும் அல்லவா ஆகவே அவரவர் கொண்டுவந்த அறுசுவை உணவுகளைப்பிரித்தோம் எமது பிரபல மைபா பற்றி நானே சொல்லிக்கொள்வதா?:) யாராவது சொல்லட்டும்.
புளியோதரையும் மோர்க்குழம்பும் மைபாவோடு கொண்டுபோயிருந்தேன் கேசரியை முறுக்கு இவைகளைராமலஷ்மியும் அசோகா ஹல்வாவை திருமாலும் மத்தூர்வடையை ஷக்திப்ரபாவும் குகீஸ் டோக்ளாவை ஸ்வர்னாவும் கடலைமிட்டாயை ஜிஎம்பி சாரும் மஷ்ரூம் +வெஜிடபிள் பஃப்சை ஜீவ்சும் கொண்டுவந்து கலக்கிவிட்டார்கள்.
மறுபடியும் பொதுவாகப்பேசத்தொடங்கினோம்..மு க்கியமாக தலைநகரில் அண்மையில்நடந்த சம்பவம் பெண்களுக்குப்பாதுகாப்பு இல்லாமலிருப்பது ஆண்குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு பள்ளியில் குழந்தைகளுக்குப்பெண்களை மதிக்க கற்பித்தல் என்பது போன்ற தலைப்புகளில் பார்வையும் பேச்சும் விரிந்தது.
தமிழ்ச்சங்க நூலகத்தை என்னைத்தவிர மற்றவர்கள் முதன்முதலாகப்பார்க்கும்போது மிகவும் பரவசம் அடைந்தார்கள் ஏனென்றால் பெரிய அந்த நூலகத்தில் நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அதன் விவரங்கள் கனகச்சிதமாக இருக்கும். தமிழ்ச்சான்றோர்களின் பெரிய அளவிலான படங்கள் கண்ணைக்கவரும்.அயல் மாநிலத்தில் நம் தமிழின் மேன்மையை இதர மொழிக்காரர்களும் கண்டு வியப்புறும் வண்ணம் காட்சி அளிக்கும்.
நூலகத்தின் ஜன்னல் கதவைத்திறந்தால் எதிரே ஏரியினின்றும் சில்லென்ற காற்று இலவசமாய் கிடைக்கும்! நூலகத்தில் பிறமொழி நூல்களும் ஒரு வரிசையில் இருக்கும்.கன்னடத்திற்கு கூடுதல் இடம்தான் .. நூலகமுகப்பில் முன்னாள்முதல்வரின் பெயரில் அந்த நூலகக்கூடம் இருப்பதாக எழுதி இருந்தாலும் நூலகத்திற்குபெயரென்னவோ சர்வக்ஞர் நூலகம் என்றுதான் ஆங்கிலத்தில் எழு்திஇருக்கிறது.
சர்வக்ஞர் ஒரு தத்துவ ஞானி, கரைகாணமுடியாத கடல்போன்றது இவர்தம் தத்துவங்கள்.
சர்வக்ஞரைப்பற்றிக்கன்னட அறிஞர்கள், ஆடு சாப்பிடாத தழை இல்லை சர்வக்ஞர் சொல்லாத விஷயமில்லை என்பார்கள். திருவள்ளுவர் இரண்டடியில் கூறியவற்றை மூன்றடிகளில் முடித்து ஒவ்வொரு ஈற்றடிகளிலும் ‘சர்வக்ஞ’ என்று முடிக்கிறார். சர்வக்ஞன் இவர் இயற்பெயராக இருக்க முடியாது வள்ளுவர் சொற்படி இது வாலறிவன் என்று பொருள்படும். இவருக்கு முன்போ பின்போ இவர் பெயர்கொண்ட கவிஞர்கள் இருந்ததாக கன்னட இலக்கியத்தில் இல்லை. சென்னையில் இவருக்கு சிலை உண்டு.
12ம் நூற்றாண்டில் கர்னாடகமாநிலத்தில் புகழ்பெற்றவர் பஸவண்ணர் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். அவர் வழி வந்தவர் சர்வக்ஞர்.பிறகு புகழ் பெற்றவர் அக்கமகாதேவி.
மனத்தூய்மை இல்லாத பக்தி பலனில்லை என்கிறார் பஸவண்ணர். பஸவண்ணரின் பாடல்களை பஸவண்னர் பாட்டமுதம் என்ற தலைப்பில் அனைத்தையும் எண் சீர் விருத்தங்களாக ஆக்கித் தமிழாக்கம்
செய்துள்ளார் பாவலர் பொன்னரசு அவர்கள் 394பக்கமுள்ள இ்ந்த நூலை பெங்களூரு பசவ சமிதி வெளியிட்டது.
பசவண்ணரின் ஒரு பாடல் இது..
உயர்ந்தார் பொதுவர் கீழோர் என்றே
உள்ள மெய் அன்பரைப் பிரித்துப்பார்த்தே
அயர்ந்தேன் இந்த வேற்றுமை நெருப்பே
அடியனைச் சுட்டிட வெந்தேன்! நொந்தேன்!
நண்ணும் சரணரில் நலிந்தோர் உயர்ந்தோர்
நடுத்தரம் என்ற பாகுபாடெதற்கோ?
உண்மையில் அடியார் அனைவரும் ஒருநிலை
உணர்ந்தேன் கூடல சங்கமத்தேவா!
/////பிகு..படங்கள் விரைவில்...//////
--
--
ஷைலஜா
Tweet | ||||
Ezuthiya kaiyodu photovum poturindal nandra irundirukum. nangalum antha eari [lake] matrum noolnilayam patriyum kandu magizinthrupom.
ReplyDeletevazthukkal. karunakaran
அன்புள்ள ஷைலஜா!
ReplyDeleteவணக்கம். உங்களின் இந்தப் பதிவு நான் எவ்வளவு விஷயங்களை தவற விட்டுவிட்டேன் என்று புரிய வைத்தது.
இரண்டு கால்களிலும் இருந்த 'ஆணி' களை எடுக்க சின்னதாக ஒரு அறுவை சிகிச்சை.(ஆணியை பிடுங்கிட்டேன்!) அதனால்தான் வர முடியவில்லை. மன்னிக்கவும்.
உங்கள் பதிவில் நீங்கள் எனக்கு விடுத்திருந்த அழைப்பிற்கு பதிலாக அங்கு இதை எழுத வேண்டாம்; உங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் என்று முகவரி கிடைக்குமா என்று பார்த்தேன். கிடைக்கவில்லை.
இப்போது இங்கேயே எழுதும் சூழ்நிலை!
நிச்சயம் விரைவில் சந்திப்போம்.
படங்களுக்காக waiting!
இனிய சந்திப்பு... படங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...
ReplyDeleteஇனிமையான சந்திப்புதான். படங்களுக்காக வெயிட்டிங் :-)
ReplyDeleteஇனிமையான பதிவர் சந்திப்பினை அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். சந்தோஷமாக உள்ளது. பாராட்ட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete// புளியோதரையும் மோர்க்குழம்பும் கொண்டுபோயிருந்தேன்//
அடடா, நான் மிஸ் பண்ணிவிட்டேனே. என்னுடைய பேவரைட் ஐட்டங்கள் ஆச்சே! ;(
இனிமையான சந்திப்பு பற்றிய தகவல் அறிந்து மகிழ்ச்சி.
ReplyDeleteRanjani Narayanan11:39 AMஅன்புள்ள ஷைலஜா!
ReplyDeleteவணக்கம். உங்களின் இந்தப் பதிவு நான் எவ்வளவு விஷயங்களை தவற விட்டுவிட்டேன் என்று புரிய வைத்தது.
இரண்டு கால்களிலும் இருந்த 'ஆணி' களை எடுக்க சின்னதாக ஒரு அறுவை சிகிச்சை.(ஆணியை பிடுங்கிட்டேன்!) அதனால்தான் வர முடியவில்லை. மன்னிக்கவும்.
உங்கள் பதிவில் நீங்கள் எனக்கு விடுத்திருந்த அழைப்பிற்கு பதிலாக அங்கு இதை எழுத வேண்டாம்; உங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் என்று முகவரி கிடைக்குமா என்று பார்த்தேன். கிடைக்கவில்லை.
இப்போது இங்கேயே எழுதும் சூழ்நிலை!
நிச்சயம் விரைவில் சந்திப்போம்.
>>>>>iஇப்போ முழுகுணமா ரஞ்சனி நாராயணன்? அன்று சந்திப்பு நன்கு நடந்தது எனக்கும் உங்கள் மெயில் ஐடி போன் நம்பர் ஏதும் தெரியாததால் சற்று முன்கூட்டி தெரிவிக்க இயலாமல்போனது மறுபடி என்றாவது சந்திப்போம் நன்றிமிக
Anonymous11:32 AMEzuthiya kaiyodu photovum poturindal nandra irundirukum. nangalum antha eari [lake] matrum noolnilayam patriyum kandu magizinthrupom.
ReplyDeletevazthukkal. karunakaran
..
ஆமாம் தாமதாமாகிவிட்டது விரைவில் அளிக்கிறேன் நன்றி தங்களுக்கு
//வை.கோபாலகிருஷ்ணன்2:57 PMஇனிமையான பதிவர் சந்திப்பினை அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். சந்தோஷமாக உள்ளது. பாராட்ட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete// புளியோதரையும் மோர்க்குழம்பும் கொண்டுபோயிருந்தேன்//
அடடா, நான் மிஸ் பண்ணிவிட்டேனே. என்னுடைய பேவரைட் ஐட்டங்கள் ஆச்சே! ;(
>.வாங்க வைகோ சார்
உங்க ஃபேவரைட் ஐட்டம் ஒருமுறை நேர்ல பாக்றப்போ செய்தால் ஆயிற்று:) நன்றி மிக
வெங்கட் நாகராஜ் அமைதிச்சாரல் ரத்னவேல் தனபாலன் ..ஆகியோர்க்கும் நன்றி
ReplyDeleteதிரு.பொன்னரசு தமிழாக்கம் செய்த பசவன்னரின் பாடல் மனதை ஈர்த்தது. சிறிய கூட்டமாயினும் அறிவு சார்ந்ததாக அமைந்தது நல்ல விஷயம்
ReplyDeleteஎன்னால் வர முடியாது போய் விட்டது. நல்லதொரு சந்திப்பை தவரவிட வேண்டியதாகிவிட்டது. வருத்தமாக இருக்கு.
ReplyDeleteநன்றி ஷை...இனிய சந்திப்பு.
ReplyDeleteமறக்க முடியாத சுவையான சந்திப்பு.
அன்று வந்திருந்து, நல்லதொரு நினைவுக்கு வழிவகுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.
நன்றி ஷை...இனிய சந்திப்பு.
ReplyDeleteமறக்க முடியாத சுவையான சந்திப்பு.
அன்று வந்திருந்து, நல்லதொரு நினைவுக்கு வழிவகுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.