தொலைதூரமிருந்தாலும்
தொலைபேசியில் செவியருகே
வாழ்த்தும் குரல் இன்றில்லை
தந்தையா நண்பனா நல்லாசிரியரனா
யார் அப்பா நீ?
பள்ளிப்பருவத்தில் நீ
புகட்டியது கவி பாரதி
அதனால்நான் அடைந்ததோ
கூர் மழுங்காத புத்திமதி
எழுத்தென்னும் சிறுபொறி
என்னுள் கனன்றிருப்பதை
கண்டுகொண்டு ஊக்குவித்த
என் இலக்கிய சாரதி!
சித்திரத்தேர் வீதியில் வரும்போது
சிறுமியாய் இருந்த என்னை
சிந்தனைத் தேர் உருட்டவைத்து
கவியரங்கமேடை ஏற்றினாய்!
அன்பென்ற ஆயுதத்தை எப்போதும்
வைத்திருக்கச்சொன்னாய்
களிமண்ணாய்கிடந்த என்னை
கவிதை மகளாக்கினாய்
ஆண்வர்க்கம்
அனைத்திலும்
இல்லை தர்க்கம்
என்பதைப்புரிந்து கொள்ள
அப்பா நீ சாட்சி!
ஆண் பெண் என்பதை
பால்கொண்டு அளப்பதைவிட
கற்ற நூல் கொண்டு
அளக்கச் சொல்வாய்!
செல்லமாள்புருஷனைப்பற்றி
செவி இனிக்க நீ உரைத்து
கண்பனிக்க நான் கேட்டு
களிப்படைந்த காலம்
கனவுதான் இன்று.
வாழ்வோடு கரைந்து கலந்துவிடுபவன்
வாழ்க்கை யாகிவிடுகிறான் என்பாய்
வாழ்பவர்களின் விஸ்வரூபத்தில்
வாழ்க்கையும் விஸ்வரூபம் எடுக்கும்
பிரும்மாண்டம் காண
பீதி எதற்கு என்பாய்!
அணுவுக்குள் உறங்கியதே
அண்டமாய் விரிவதை
அறிவார்ந்த உன் வார்த்தை
அறிவித்துவிடும் அப்பா.
எதை இடைவிடாது நினைக்கிறோமோ
அதனை அடைவோம்
என்பது உண்மை இல்லைபோலும்!
மரணத்தை தந்தை ஒருநாளும்
மனதிலும் நினைத்ததில்லை
மரணம் என்பது ஒரு நிலை அன்று
அது ஒரு எண்ணம் என்பாய்
இந்த எண்ணத்தை ஜெயித்தலே
அமரவித்தை என்பாய்!
மரணம் ஒரு வித்தைதான்
’வாழ்க்கையை உள்ளமாக்கி
அதனையே பிறகு உணர்வாக்கி
கலையாக்கி கலையை உணர்வாக்கி
வருகின்ற தலைமுறைக்கு
சொத்தாக வைக்கவேண்டும் 'என்றாய்!
மரணம் என்பது கல்வியில் ஒரு கூறு
Death is Learning.
கற்றுக்கொள்ளத்தான்
அமரலோகம் போய்விட்டாயா அப்பா?
(19.3 . அப்பா இல்லாத என் பிறந்த நாள் இன்று)
Tweet | ||||
ஆஹா! அன்பையும் பாசத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!
ReplyDeleteவரிகள் சிறப்பு...
ReplyDeleteபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
தந்தையைப் பற்றிய நினைவுகளை அற்புதக் கவிதையாக்கி விட்டீர்கள்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக் கூற உங்கள் தந்தை அருகிலில்லாத சோகம் தெரிகிறது. அமரலோகத்திலிருந்து உங்கள் தந்தை உங்களின் வளர்ச்சி கண்டு ஆனந்தமடைவார். கவலை வேண்டாம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். (வருடம் போடாமல் தேதி, திங்கள் மட்டும் போட்டுள்ளதை ரொம்பவும் ரசித்தேன்!)
அருமையான அப்பா....
ReplyDeleteஅப்பா ..... அப்பப்பா .... !
ReplyDeleteஅப்பாவின் நினைவலைகளுடன் கூடிய அருமையான படைப்பு.
பாராட்டுக்கள்.
அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷைலஜா.
ReplyDeleteநெகிழ்வான கவிதை. உங்கள் அப்பாவின் ஆசி என்றைக்கும் இருக்கும்.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ! அப்பா இல்லாத பிறந்த நாள் அவரது நினைவுகளை எழுப்பிவிட்டதுபோலும். . நீங்கள் நீங்களாக இருப்பதில் அவரது பெருமையைச் சொல்லிப் போகிறீர்கள். பிறந்தநாள் என்பதெல்லாம் நம்மை நாமே விமர்சனம் செய்ய உதவ வேண்டும். வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !! மிகவும் அருமையான வரிகள். உங்கள் மனதை அழகாக சித்தரிகிறது
ReplyDeleteஇனிய பிறந்தநாள் ஷைலஜாக்கா..
ReplyDeleteஇன்று அப்பாவின் ஆசி கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் உங்களுக்கு.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteநிச்சயம் மேலிருந்து உங்களை வாழ்த்தி இருப்பார்!
கண்பனிக்கச் செய்யும் கவிதாஞ்சலி
ReplyDeleteபிறந்த நாள் செய்தியை இப்படியா சொல்வது? :)
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நல்ல கவிதை...
ReplyDeleteஅப்பா இல்லை என்றாலும் அவரின் ஆசிகள் உங்களுக்கு இருக்கும் அக்கா...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Belated wishes Akka. Sorry for English....Tamil font is yet to be downloaded. :)
ReplyDelete«ôÀ¡ !
ReplyDeleteþô§À¡Ð¾¡ý ¯í¸û À¢Ç¡ðŠÀ¡ð¨¼ò ¾¢ÈìÌõ Å¢ò¨¾¨Âì ¸ü§Èý.
«¾ý ¸¡Ã½Á¡ö ºó§¾¡„Óü§Èý!
Á¸¢ú¨Âì ¦¸¡û¨Ç ¦¸¡û¨Ç¡ö ¦Àü§Èý.
¯í¸Ç¢ý '«ôÀ¡' ¸Å¢¨¾¨Â ÀÊò¾×¼ý ±ÉìÌ §¾¡ýȢ ¯½÷× «ôÀôÀ¡!
±ýÉ ¦º¡ø§Åý. «Õ¨Á.
¦À¡ÐÅ¡¸ ±øÄ¡ ¿øÄ «ôÀ¡ì¸Ù§Á ´§Ã Á¡¾¢¡¢¾¡ý!
±ý «ôÀ¡×õ ܼ!
±ý «ôÀ¡¨Åô ÀüÈ¢Ôõ ±Ø¾¢ «ÛôôÒ¸¢§Èý.
ìÇ¢ì ÃÅ¢
பின்னூட்டமிட்ட அனைத்து உள்ளங்கலுக்கும் எனது தாமதமான நன்றியை தெரிவிக்கிறேன்
ReplyDeleteக்ளிக்ரவி!
உங்க தமிழ் ஃபாண்ட் சரியா இல்லை ஆனாலும் விடுவேனா சுரதா.காம் சென்று ஒத்தி எடுத்து வாசித்தேன் மிக்க நன்றி ரவி.பிரபல புகைப்படக்காரர் எழுத்தாளர் கட்டுரைரையாளரான க்ளிக் ரவியின் வருகை மனதிற்கு மகிழ்ச்சி...கருத்துக்கு நன்றி மிக