-- ஃபிரிட்ஜில் மோதிரத்தையும் வார்ட்ரோபில் தக்காளிப்பழத்தையும் வைக்கும் போதே நினைத்தேன் நமக்கும் ஞாபகமறதி வந்துவிட்டதென்று
எங்க பெரியம்மாக்கு இப்படித்தான் Alzheimer வந்து தான் யார் என்ன என்ற நினைவில்லாமல் எங்காவது போயிடுவாங்க” என்று வீடுவந்த சுடோகு சுமதி பயமுறுத்தினாள்.
‘அடப்பாவி அல்சைமர் இல்லை எனக்கு! லேசா மறதி அப்பப்போதான் , அடிக்கடி இல்லை” என்று சத்தியம் செய்தபிறகே அவள் நம்பினமாதிரி தெரிந்தது.
உன்கிட்டபோ புலம்பினேன் பாரு போடி போ உன் சுடோக்குவைக்கட்டிட்டு அழு’ என்று மனதுக்குள் சொல்லியபடி அவளை அனுப்பிவைத்தேன்
செலக்டிவ் அம்னீஷ்யாவா என்ன என்று அதுபற்றி நெட்டில் பலர் சுட்டுப்போடதைப்படித்து சேசே அது இல்லை என உணர்ந்துகொண்டேன்
ஊரிலிருந்து வந்த என் உடன்பிறப்பிடம்,”என்னன்னு தெரியலடா ஞாபக மரதில வரவர கதை கவிதைன்னு எழுத முடியல இலக்கிய சேவையே செய்யமுடியல” என்றதும் “அட எழுதமுடியலையா? இதைவிட நீ என்ன இலக்கிய சேவை செய்யனும்?” என்று கேட்டு என்னிடம் ஸ்கேலில் அடிவாங்கிக்கொண்டான்!
“அதென்னவோ பழசெல்லாம் பளிச்சுனு டெலிவரி பார்த்த நர்ஸ்முகம் வரை நினைவிருக்கு இப்ப நடந்தது மறந்துபோகுது”
இப்ப நான் கொடுத்த முப்பது லட்சத்தை திருப்பிக்கொடுக்கா என்றது உடன்பிறப்பு.
அது நீ கொடுத்ததும் பழசாகிவிட்டது பழைய நினைவில் அப்படி ஒரு அசம்பாவிதமே நடக்கவில்லையப்பா!
“சேம் ப்ராப்ளம் எனக்கும்!” மால் போனபோது எக்சேஞ்ச் கவுண்டரில் நின்றுகொண்டிருந்த ஸ்யாமளாவை பெருமையாய் பார்த்தேன் இனம் இனமறிகிறதே பலே!
“ எல்லாம் வயசாறதில்லையா?” என்ற வசனம் வீசியவளை மேற்கொண்டு பேசவிடாமல் கடந்துவிட்டேன். இதுக்கெல்லாம் என்ன வயசு?:) எனக்கு அஞ்சு வயசிலேயே ஞாபக மறதி வந்திருக்கு அப்பா ஒருதடவை” எங்கம்மா இந்த மாசத்து ப்ராக்ரஸ் ரிபோர்ட் ?”என்று கேட்டதும்தான் ”மரந்துட்டேன்ப்பா” என்று சரியாய் அவர் ஆபீசுக்குகிளம்பும் நேரமாய்ப்பார்த்துக்கொடுத்து கையெழுத்து வாங்க்கிகொள்வேன் ரயிலைப்பிடிக்கற அவசரத்தில் அவருக்கும் நான்கணக்கில் கம்மி மார்க் வாங்கினதை கவனிக்க மறந்துபோகும்:)
சரி இப்ப ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு நான் பாடணும்னா மூலிகை மேனகாவைப்பார்த்தே ஆகணும்.
மூலிகை மேனகா பற்றி முன்னமே எழுதி இருக்கேன் பதிவில்
என்னைக்கண்டதும் ஹாலிலிருந்த மூலிகைக்குப்பைகளை நகர்த்தி
உட்கா ரஇடம் செய்தாள். வீடு ஹால் என்றால் சோபா நாற்காலி டீபாய் இருக்கும் மேனகா வீட்டில் உரல் ஏந்திரம் அம்மி கஷாய ஜாடிகள். காலி சீசாக்கள். அலமாரியில் கண்ணாடி பாட்டில்களில் பெரிசும் சின்னதுமாய் கலர்கலராய் குளிகை உருண்டைகள்
கல் உரலில் அவள் கணவர் இவளை நினைத்து எதையோ கோபமாய் இடித்துக்கொண்டிருந்தார்.
ஆயிற்று மூணு வருஷம் கழித்து இப்பதான் அவளை மீண்டும் பார்க்கிறேன்
”மேனகா இன்னமும் நீ மூலிகை ஆராய்ச்சியிலிருந்து மீளவில்லையா?”
அதெப்படி என் லட்சியம் மெமரியோ ஃபோலியோ வியாதிக்கு மருந்து கண்டுபிடிச்சாதான்”
என்ன அது மெமொரியோ போலியோ அல்லது போகலியோ?”
போலியோ போகலியோ இ்ல்லை..ஸ்டைலா ஃபோலியோ! அதாவது நினைவுகள் பின்னோக்கி ராமாயண மஹாபாரதக்காலம் வரை செல்லும் அதுக்குத்தான் மருந்து கண்டுபிடிச்சேன்...திரும்பி நிகழ்காலம் வரும் மருந்தும் கண்டுபிடிச்சிட்டா சக்சஸ் சக்ஸஸ் எனக்கு!”
ஆஹா அருமை சங்கொலியுடன் உன் மகாபாராதக்கனவு நிறைவேறட்டும் எனக்கு என்னபிரச்சினைன்னா...”
சொன்னேன்
அட இதான? இதுக்கு சிறுமறதிகுளிகை இருக்கு போட்டுக்கோ சரியாகிடும்
ஏண்டி நினைவு ரொம்பபின்னோகிப்போறதுக்கு ஆங்கிலப்பெயர் வைக்கிற ஆனாசின்ன மறதிக்கு தமிழ்ப்பெயரா அநியாயமா இல்ல?”
கின்னஸ்முயற்சிக்கு ஹிஹி
சரி ஒரு மாத்திரையோ குளிகையோ கொடு
மேனகாவின் செல்‘ பார்த்த ஞாபகம் இல்லையோ ’என்றதால் அவள் “மூலிகை மேனகா ஹியர் சொல்லுங்க” என்று பச்சிலைக்கையுடன் செல்லை எடுத்துக்காதில் வைத்துக்கொண்டாள் பொறுப்பை தன் அஸ்ஸிஸ்டென்ட் பொன்னம்மாவிடம் கொடுத்தாள்
அந்தம்மாக்கு மேனகா சரியா சம்பளம் கொடுப்பதில்லை என்பது பார்வையிலேயே தெரிந்துபோனது.’இனிமே வருவியா இந்தப்பக்கம்?’ என்கிற மாதிரி முறைத்துவிட்டு ஒரு பாட்டிலை திறந்து அலட்சியமாய் என்னிடம் ஒரு எலந்தப்பழ சைஸ் சமாசாரத்தை வீசினாள்.
“வாய்லபோட்டு முழுங்கு:”
இல்லாட்டி உன்னை நான் முழுங்கிடுவேன் அக்காங் என்கிறமாதிரி கண்ணை உருட்டினாள்.
முதலில் கசந்து பிறகு துவர்ந்து அப்புறம் இனித்துஎன அறுசுவைகளுடன் எலந்தப்பழம் ஜோராக இருக்கவே பொன்னம்மாக்குத்தெரியாமல் நைசாய்க்கடித்துப்பின் முழுங்கிவிட்டேன்.
“சரி இப்போ நான் ரொம்ப பிசி ஏகப்பட்ட கஸ்டமருங்க...நோயாளிங்க வாழ்வா சாவான்னு போராட்டத்துடன் என் வாசலில் தவம் கிடக்கிறவங்கன்னு ஏராள ஜனங்கள் அப்புறம் பேசறேன் என்ன?” என்று செல்போனைக்காதிலிருந்த எடுத்த மேனகா ஈ காக்கா நான் மட்டுமிருந்த வாசலுக்கு விரைந்தாள்..
என்னடி கிளம்பறியா குளிகை உள் சென்ற குதூகலமோ உன் முகத்தில்?”
என்றவள் சட்டென பொன்னமாவிடம்”பொன்னு என்ன குளிகை கொடுத்தே இவளுக்கு? மூஞ்சி ரியாக்ஷன் சரி இல்லையே அந்த மிளகு சைஸ் குளிகைதானே அலமாரி முதல்தட்டிலிருந்து கொடுத்தே?” என்று கலவரமாய் கேட்டாள்.
“இல்லீங்கம்மா ரெண்டாம் தட்டுல இருந்திச்சே எலந்தப்பழ சைசு குளிகை ..
அதைத்தான்...”
:”கொடுத்திட்டியா? ஐயோ மோசம் போச்சி அதை குரங்குக்குக்கொடுத்து ராமாயணகாலத்துக்கு அனுப்ப நினச்சேனே இவளுக்குக்கொடுத்திட்டியே இவள் எங்கே போகப்போகிறாளோ?’ என்று மேனகா தவிக்கையில் நான்
பீமனின் இருப்பிடத்திற்கு வந்துவிட்டேன்.
.ரங்காராவ் போல ஆஜானுபாவாய் நின்றுகொண்டு,”ஆஹ்ஹஹ்ஹஹா!கல்யாண சமையல்சாதம் ’பாடிக்கொண்டிருந்தார் மிஸ்டர் பீம்!
அந்தப்பக்கம் அர்ஜுனன் வில்லோடு (கொஞ்சம் ஹாண்ட்சம்) ..
:தாயே வணக்கம்” என்ற குரல் கேட்கவும்திரும்பினால்; தர்மர் தன் அன்னையை வணங்கிக் கொண்டிருந்தார்.
வெண்ணிற ஆடையில் அமைதியும் அழகுமாய் யாரது?
ஆ இவங்கதான் குந்தியா அவங்கிட்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேட்கணும்னு.
அம்மா இது உங்களுக்கு இயற்பெயரா காரணப்பெய்ரா?
அதற்குள் பீமன் அதட்டினார்.
”யாரது புதுப்பெண் நடைஉடையெல்லாம் மாறி இருக்கிறதே கௌரவர்களின் ஒற்றனோ(ளோ) சீவுங்கள் இவள் தலையை?”
ஐயோ இல்லை இல்லை நானும் சமையலுக்கு உதவலாம்னு
ஓ அப்படியா உனக்கு என்ன சமைக்கத்தெரியும்?
மைசூர்பாக் மங்கை நான்! வேண்டுமானால் கால இயந்திரத்தில் ஏறி
2007லிருந்து இன்றுவரை அதன்புகழை இணைய வெளியில் காணச்சொல்லுங்கள் பீமதேவரே“
ம்ம் யாரங்கே கால் இயந்திரமேறி இவள் கூறுவது சரிதானாஎன்று கண்டுபிடித்துவாருங்கள்
பீமரே ஒரு வி்ண்ணப்பம் !அன்னாரை தமிழ்நாடுபக்கம் மட்டும் போக சொல்லவேண்டாம் அங்கு எப்போதும்மின்தடை
என்னது மிளகுவடையா?
ஏந்தான் இப்படி சாப்பாட்டுராமனாக இருக்கிறாரோ என வியந்தபடி
நிலைமையைப்புரியவைத்தேன்.
தனது வீரன் உண்மையைக்கண்டுவந்து உணர்த்தியதும் மகிழ்ந்த பீமன் ஹஸ்தினாபுரம் அருகே ஞாபஹாஸ்தினபுரம் தேசத்திற்கு என்னை மகாராணியாக்க பட்டாபிஷேக நாள் எல்லாம் குறித்துவிட்டபோது அதோ அதோ மேனகா தலை தெறிக்க என்னை நோக்கி ஓடிவந்துகொண்டிருக்கிறாள்.
“ மாற்றுக்குளிகை கண்டுபிடிச்சிட்டேன்! இந்தா ஷைலஜா இந்தக்குளிகையைப்போட்டுக்கொள்..அப்பதான் நீ ஊர் திரும்பலாம் சீக்கிரம் சீக்கிரம்”“
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள்?:).
Tweet | ||||
மின்தடை எல்லாம் இங்கும் இனி இல்லை...
ReplyDeleteஇனி வரும் மாதத்தில் மின்சாரமே இல்லை...
உங்கள் தளத்திற்கு Google chrome மூலம் வர முடியவில்லை... காரணம் : udanz
கருத்திட்ட வரும் நண்பர்களுக்கு :
நண்பர்களின் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லையா...? udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (??????) இவைகளை இணைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? உங்கள் விருப்பம்...
தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... எப்படி...? :-
மேலும் விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan
அன்புடன் DD
http://dindiguldhanabalan.blogspot.com
INga vara sollunga. Nan solren maipa magimaiyai
ReplyDeleteநகைச்சுவை அபாரம்!
ReplyDeleteஹா... ஹா... ஹா... வாய் விட்டு ரசிச்சு்ச் சிரிக்க வெச்சுட்டீங்கக்கா! இன்னொரு நகைச்சுவைக் கதை எழுதறதுக்கு ஒரு சின்னப் பொறியும் எனக்கு இதுலருந்து கிடைச்சது. ரொம்ப நன்றிக்கா! (தி.இ.)
ReplyDeleteஅருமையான நடை
ReplyDeleteஅசத்தலான நகைச்சுவைப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஹாஹா ஹாஹா..........
ReplyDeleteஷைலூ, மகாராணி போஸ்ட்டை விட்டுடாதீங்கோ. அந்த மேனகாவை பீமனின் வெந்நீர் அண்டாவில் தூக்கிப் போட்டுடலாம்:-))))
அருமையான இடத்தில வந்து இந்த மேனகா குட்டைய குழப்பறாங்க ... நல்ல நகைச்சுவைப் பதிவு.
ReplyDeleteகருத்து தெரிவித்த எழில் துள்சி கேபி ஜனா தனபாலன் ரமணி எல் கே கணேஷ்...அனைவருக்கும் மிக்க நன்றி:0 ஏப்ரல் முதல்தேதி பதிவெனப்புரிஞ்சுதோ உங்களுக்கு?:)(உங்க எல்லாபதிவுமே அப்படித்தானே என்கிறீர்களா?:):)
ReplyDeleteஅட! ஏப்ரல் முதல் தேதிப் பதிவா? ஏப்ரல் முதல் தேதிக்கு என்ன விசேஷம்?
ReplyDeleteஐயையோ! உங்க ஞாபக மறதி எனக்கும் வந்துடுத்துபோல இருக்கே! குளிகை மேனகா விலாசம் ப்ளீஸ்!
மகாபாராதகாலம், மகாபோராதகாலம் எல்லாம் போட்டுக் கலக்கியிருக்கீங்க.. ஹிஹி.. நல்ல தமாசு. மறதிக்குளிகை.. யம்மா!
ReplyDeleteபின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. பாத்தீங்களா மறக்காமல் நன்றி சொல்லிட்டேன்:)
ReplyDeleteஅப்பாதுரை சார் உங்க மகாபோராத கால வரியை ரசிச்சேன்!!
ரஞ்சனி மேடம் குளிகை மேனகா விலாசமா ஒகே நேர்ல சந்திக்கறப்போ தரேன்!!!