முன்பு எப்போதோ நான் எழுதிய ஆன்மீகக்கட்டுரை(!)
--(ஸ்ரீராம நவமி பூஜைகள் முடித்து பதிவு அளிக்க தாமதமாகிவிட்டது. அனைவர்க்கும் சக்கரவர்த்தித்திருமகனின் சீதாபிராட்டியின் அருள் கிடைத்து நலமுடன் வாழ வாழ்த்துகள்!)
சக்தி விகடனில் அப்போது பிரசுரமானதை வாசிக்காமல் தப்பித்தவர்களுக்காக இங்கே அளித்துள்ளேன்! இந்தத்தகவலைஆண்டவன் சுவாமிகள் உபந்நியாசத்தில் கேட்டேன்).
சிவபெருமான், பிரம்மா மற்றும் தேவர்களும் முனிவர்களும் புடைசூழ, வெகு பிரமாண்டமாக நிகழ்ந்தது சீதா கல்யாணம்! மணமேடையில் ஸ்ரீராமரும் சீதாதேவியும் வீற்றிருக்க... 'மணமக்களுக்கு அன்பளிப்பு தர விருப்பம் உள்ளவர்கள் தரலாம்' என்று அறிவித்தார் வசிஷ்டர்.
உடனே பிரம்மா, அட்சமாலையைப் பரிசாக வழங்கினார். தேவர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள உயர்ந்த செல்வங்களை பரிசளித்தனர்.
அப்போது சிவனாரிடம், ''தாங்கள் என்ன தரப்போகிறீர்கள்?'' என்று ஆர்வத்துடன் கேட்டார் வசிஷ்டர்.
''புலித் தோலைப் போர்த்திக் கொண்டிருக்கிற என்னிடம் தங்கம், வெள்ளி என்று எதுவும் கிடையாது. உடல் முழுவதும் விபூதி பூசிக் கொண்டிருக்கிறேன். என்னிடம் பரிசை எதிர்பார்க்கலாமா?'' என்றார் சிவனார்!
இதற்கு வசிஷ்டர், ''அதெப்படி? கல்யாணத்துக்கு வந்தால், மணமக்களுக்கு ஏதேனும் பரிசு தரத்தானே வேண்டும்?!'' என்றார்.
சற்றே யோசித்த சிவபெருமான், ''அப்படியெனில், முப்புரம் எரித்த எனது சிரிப்பை பத்திரமாக வைத்திருக்கிறேன். இது எல்லாவற்றையும் எரிக்க வல்லது. மணமகளுக்கு என் பரிசாக, ஆசீர்வாதமாக இதையே தருகிறேன்'' என்று அருளினார்.
உடனே, ''சீதா-ராம கல்யாணத்தில், கைலாசபதியின் ஆசீர்வாதம் - மந்தகாசம்'' என்று அறிவித்தார் வசிஷ்டர்.
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள் சீதா!
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள் சீதா!
இப்படி, சிவனார் தந்த சிரிப்புதான், ஒருமுறை அவளுக்கு பெரிதும் உதவியது.
அசோகவனத்தில் சீதையை சிறைப் படுத்தி வைத்திருந்த போது, சீதை முன் வந்த ராவணன், அவளிடம் 'என் மனைவியாக இரு' என்றான்! உடனே சீதை இந்தச் சிரிப்பை உபயோகப் படுத்தினாள்.
விளைவு... அனுமனின் மூலம் லங்கா தகனம் ஆயிற்று. அனுமனும் ருத்ர அம்சத்தினன்தானே?!
--(ஸ்ரீராம நவமி பூஜைகள் முடித்து பதிவு அளிக்க தாமதமாகிவிட்டது. அனைவர்க்கும் சக்கரவர்த்தித்திருமகனின் சீதாபிராட்டியின் அருள் கிடைத்து நலமுடன் வாழ வாழ்த்துகள்!)
்
Tweet | ||||
ஆகா... சிறப்பு பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஸ்ரீராமநவமி நல்வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்
Deleteமந்தகாச சிரிப்பை வரவழைத்த நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி வைகோ சார்
Delete
ReplyDeleteகேட்டிராத கதை. நன்றி.
நான் கேட்டுவிட்டேன் அதனால் பகிர்ந்தேன் ஜி எம் பி சார் நன்றி கருத்துக்கு
Deleteநம்மில் எத்தனை பேர் நமக்கு பரிசாக வந்த பொருட்களை பாதுகாத்து வைத்துக் கொள்ளுகிறோம்? ராமன் மட்டுமல்ல, சீதையும் கூட நாம் எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்தே காட்டிவிட்டார்கள்.
ReplyDeleteகிடைத்தற்கரிய பரிசினைப் பெற்று அதனை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு பயன்படுத்திய நேர்த்தியை என்ன சொல்ல?
சீதையின் சிரிப்பு அருமை!
ஆம் சீதையைப்போல பரிசினை நாம் உபயோகம் செய்ய அறியவேண்டும் நன்றி ரஞ்சனிநாராயணன்
Deleteஅருமை.
ReplyDeleteசுவையான பதிவு.
புதிய செய்தி.
நன்றி கடசி பெஞ்ச்
Deleteதிரிபுரம் எரித்தது சிவனின் சிரிப்பா?
ReplyDeleteஆமாம் அப்பாதுரை
Deleteமுன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்டதீ தென்னிலங்கையில்..”
முன் ஐ- முதல் இறையாம் சிவன் முப்புரத்திலே இட்ட தீயையே
பின்னைப் பிராட்டியாம் சீதை தென்னிலங்கையில் இட்டாள்
என்கிறது பட்டினத்தார் பாடல்….
முப்புரம் எரிக்க சிவன் கிளம்பும்போது தேவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆயுதங்களாக மாறி நம்மால்தான் சிவபெருமான் முப்புரம் எரிக்கப்போகிறார் என்று ஆணவம் கொண்டு பார்த்திருக்க சிவன் ஆயுதங்களை விலக்கிவிட்டு தன் சிரிப்பாலேயே - யாருடைய உதவியும் தேவைப்படாமல் -திரிபுரங்களையும் எரித்து தேவர்களின் கர்வத்தை அடக்கினாராம் ..
ReplyDeleteமந்தகாசமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...
எனது உளங்கனிந்த ஸ்ரீராமநவமி நல் வாழ்த்துக்கள்!.
ReplyDeleteராம நவமிக்கு அருமையான பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா....
முன்னை இட்ட தீ.... அதுவும் மந்தகாச சிரிப்பினால் உண்ட தீ!
ReplyDeleteரசித்தேன்...
கேள்வி பட்டதில்லை.நன்றாக இருந்தது.நன்றி
ReplyDelete