Social Icons

Pages

Saturday, April 06, 2013

உவெசாவின் ஆசான்!





கோபால கிருஷ்ண பாரதி, தான் எழுதிய  நந்தன் சரித்திரம் என்னும் நூலிற்கு பிரபலமான ஒருவரிடம் வாழ்த்துபெற நினைத்தார். அதற்காக  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைத்தேடிச்சென்றார்.

 
நந்தன் சரிதத்திலிருந்து   ஒரு கீர்த்தனையை  பாடிக்காண்பித்தார்.. மஹா பண்டிதரான பிள்ளையவர்களுக்கு அக்கீர்த்தனை பாமரத்தனமாகப்பட்டது. இலக்கண சுத்தமாக     இல்லாததால்      வாழ்த்து தர தயங்கினார்.
 
தொடர்ந்து சிலதினங்கள்  இப்படியே பிள்ளையவர்களைப்பார்க்கவருவதும் வெறும்கையுடன் திரும்புவதுமாக  இருந்தார் பாரதி. ஒருநாள்-அன்றுபிரதோஷதினமென்பதால்- விரதம் மேற்கொண்டிருந்த பிள்ளையவர்கள்  வழக்கம்போல’பிறகு பார்க்கலாம்’ என்று சொல்லித்திருப்பி அனுப்பிவிட்டார்.
 
 
கோபால கிருஷ்ணபாரதி  அந்தவீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டார். களைப்பு தீரும் வரையில் நந்தனார் சரிதத்திலிருந்து சிலகீர்த்தனைகளைப்பாடியபடியே இருந்தார்.
தன்யாசி ராகத்தில்’ கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலி தீருமே’என்று மனமுருகப்பாடினார் பாரதி.
 
உள்ளே இருந்து அதைக்கேட்டுக்கொண்டிருந்த  பிள்ளையவர்கள்,”யாரது வெளியே பாடுவது?’ எனக்கேட்டார்.
அவரது சீடர்கள் அதற்கு,” தாங்கள் திருப்பி அனுப்பிய கோபால கிருஷ்ணபாரதிதான் பாடிக்கொண்டிருக்கிறார்” என்றதும் திகைத்தவர்,”அவரை உள்ளே அழைத்து வாருங்கள்” என்றார்.
 
வந்தவரிடம் பிள்ளையவர்கள் நெகிழ்ந்தகுரலில்,” என் தமிழில்  இலக்கணம் இருக்கிறது, ஆனால் உன் தமிழில் இறைவனே இருக்கிறான்” எனச்சொல்லி உடனே  ஒரு வாழ்த்துக்கவிதையும் வழங்கினார்.
 
தமிழ்த்தாத்தா  உவேசா அவர்கள்
 
 
 தனது  இளம்வயதிலேயே

 
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவரிடமும் பயின்று தமிழ் அறிஞர் ஆனார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவருக்கு சாமிநாதன் என்று பெயரிட்டார்.எனவே   அவருக்கு  உ.வே.சா என்றப் பெயர்  ஏற்பட்டது.

      இன்று மகாவித்வான் அவர்களின் பிறந்த நாள்!(  ஆசான் படம் கிடைக்கவில்லை சீடர் படம்  மட்டும் கிடைத்ததை அளித்துள்ளேன்)

இன்று திரு பார்த்தசாரதி அவர்களால் மகாவித்வானின் படம் கிடைக்கப்பெற்றது இணைத்துள்ளேன் நன்றி  பார்த்தசாரதி அவர்களே!

14 comments:

  1. தமிழ்தாத்தா உ.வே.சா. அவர்களின் வாழ்க்கைச் சரித்திரம் முழுவதும் படித்துள்ளேன்.

    அதில் மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களைப்பற்றியும் நிறைய தகவல்கள் இருந்தன.

    தங்களின் இந்தப்பதிவு மிகவும் பாராட்டுக்குரியது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

  2. உவெசா-வுக்கு சாமிநாதன் என்று பெயரிட்டது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் என்றால் தமிழ்த் தாத்தாவின் இயற்பெயர் என்ன.?அறியாத தகவல்கள் .நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வேங்கடராமன் என்பது அவர் தந்தை இட்ட பெயர் '

      Delete
  3. பிறந்த நாள் அன்று சிறப்பித்தமைக்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பெயர் வைத்த மீனாட்சி சுந்தரம் அய்யா அவர்களுக்கும் அய்யாவின் பிறந்த நாளில் எல்லோருக்கும் தெரிவித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. அறியாத அறிந்து கொள்ளவேண்டிய தகவல்
    சிறப்புப் பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிறந்த தினத்தன்று அவரை நினைவு கூர்ந்தது சிறப்பு. உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அருமையான பகிர்விற்கு நன்றிக்கா!

    ReplyDelete
  7. பிள்ளையவர்கள் நெகிழ்ந்தகுரலில்,” என் தமிழில் இலக்கணம் இருக்கிறது, ஆனால் உன் தமிழில் இறைவனே இருக்கிறான்” எனச்சொல்லி உடனே ஒரு வாழ்த்துக்கவிதையும் வழங்கினார்.

    தமிழ்த்தாத்தா உவேசா அவர்கள்

    நெகிழவைத்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. படிக்க சுவையாக இருந்தது.நான் வலை தளத்திலிருந்து பிள்ளை அவர்களின் படத்தை கண்டு பிடித்தேன்.உங்களின் ஈமெயில் தெரிந்தால் அனுப்ப இயலும். kpartha12@gmail.com

    ReplyDelete
  9. உவேசாவின் ஆசான் பதிவுக்கு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
    ஜி எம் பி சார் உங்க கேள்விக்கு விடை விரைவில்.
    பார்த்தசாரதி அவர்களுக்கு சிறப்பு நன்றி

    ReplyDelete
  10. ஆகா!
    வித்வான்கள் நடத்தை எப்பொழுதுமே சுவாரசியம். பாரதியின் பாடல் மெருகேறவே அப்படி முதலில் நடந்து கொண்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. கோபாலகிருஷ்ணருக்கு இதனால் இன்னும் புகழ்தான் ..அதற்கே அவர் அப்படி நட்ந்து கொண்டிருக்கணும் சரியாக சொன்னீங்க அப்பாதுரை வருகைக்கு நன்றி

      Delete
  11. Anonymous8:50 PM

    சுவையான செய்தி.
    நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.