இரு பெரும் இதிகாசங்கள் காலத்தால் அழியாதவைகள். அவை மகாபாரதம், ராமாயணம் என்பது அனைவரும் அறிந்ததே.
பாரதம் பாகவதம் ராமாயணம் என மூன்றில் ராமாயணம் எப்படி என்பதை கம்பன் சொல்கிறான் பாருங்கள்.
வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வால்மீகி என்பான்
தீங்கவி செவிகளாரத் தேவரும் பருகச்செய்தான்..’
நான்கு பாதங்கள் ஒரு ஸ்லோகத்திற்கு. வரிகள் .பாதத்தை அடி என தமிழில் சொல்வோம். இப்படி 24000 ஸ்லோகம் செய்துள்ளார் வால்மீகி.
அவர் வகுத்துள்ள நான்குபாதத்தில் ஒரு பாதத்தைக்கூட வாங்கமுடியாதாம் அதாவது வேற சேர்க்கமுடியாதாம். வால்மீகி ஸ்டைல் நான்கு பாதங்களிலும் தெரியும். அப்படியான வால்மீகி’ தீங்கனி செவிகளாரத் தேவரும் பருகச்செய்தான்’ அதாவது தேவர்கள் கூட அம்ருதபானம் பண்ணும்படியாக கேட்டு ஆனந்திக்கும்படியாக பண்ணி உள்ளாராம் அவ்வளவு மதுரமான கவிதைகள் அவை.
அண்ணலும் அன்னையும் ராமனாய் சீதையாய் அவதரித்து மனிதர்களுக்கு நல்லது கெட்டதை எல்லோர் மனத்திலும் படும்படி தாங்களே அதை அனுபவித்துக்காட்ட நினைத்தனர்.
மாதாவை தெய்வமாக நினை தந்தைக்கு தொண்டு செய் இதர நற்பணிகள் எல்லாம் செய் என்கிறது வேதம். வேத நாயகரே பெருமாள்!அவருக்கு மாதா பிதா உண்டா என்ன?:) இருக்கிறவர் சொன்னால் தான் கேட்கிறவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.
அதனால் ராமனாக அவதரித்து சொன்ன சொற்படி நடந்துகாட்ட நினைத்தார் அண்ணல்.
‘துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்றவண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண்காணவந்து...
துயரங்கள் செய்து தம் தெய்வ நிலையுலகில் புகவுய்க்கும் அம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஒரு துன்பமிலனே...’
என்கிறது திருவாய்மொழிப்பாசுரம்.
துயரில் மலியும் மனிதப்பிறவியில் விலைகொடுக்காமல் தானே வருவது துக்கம்தான்.
ஆழ்வாரின் இந்தப்பாசுரத்தில் ஒவ்வொரு வரியும் சிறப்பு.
‘துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி..’ என்கிறார் பாருங்கள். பிறப்பதற்கும் தோன்றுவதர்க்கும் வித்தியாசம் உண்டல்லவா?
ஆம் இந்த துக்கம் மிகுந்த மனிதப்பிறவியில் தோன்றி இந்த துக்கம் மலிந்ததான மனிதர்பிறவியில் தனது ரூபத்தைக்காண்பித்தான்.
‘தோன்றிக்கண் காணவந்து,,’ அன்பு இல்லாதவர்களுக்குக்காண முடியாது அன்பு உள்ளவர்களுக்கே காணும்படியாக வந்தான்.
தன் தெய்வநிலை உலகில் புகவுய்கும் அம்மான்.... தன் தெய்வ நிலை உலகத்தார்க்கு வரும்படியாகச்செய்யும் அவதார சிறப்பு ராமாவதார சிறப்பு.
ராமாயணம் கேட்டவர்களுள் குலசேகர ஆழ்வார் போலக்கேட்டோர் யாருமில்லை.
அப்படி ஆழ்ந்துகேட்பாராம்.. இந்திரன் தேவலோகமிருந்து வந்து அம்ருதம் தருகிறேன் ஆழ்வார்பெருமகனாரே என்றானாம். ‘வேண்டாம் இன்னமுதம் மதியோம்’ என்றாராம்.
..,...
எம் பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம்
இன்னமுதம் மதியோம் இன்றே..”
நாமும் ராமசரிதையை கண்ணால் பருகுவோமா?
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்!
(நாளைமறுநாள் வரும் ராமநவமியை முன்னிட்டு இன்றிலிருந்து சில நாட்கள் ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையை அவன் அடியார்கள் வாயிலாக அறிந்துகொள்வோம்)
Tweet | ||||
ReplyDeleteகம்பன் கவிதையில் சில நேரங்களில் திளைப்பவன் நான்.ஏதோ ஒரு உந்துதலில் ” சாதாரணன் ராமாயணம் “ என்று ராமகாதையின் ஆறு காண்டங்களையும் ஒரே வாக்கியத்தில் எழுதிப் பதிவிட்டேன். சுட்டி தருகிறேன். படித்துக் கருத்து சொல்லுங்கள். மகிழ்வேன். இலக்கிய இன்பம் என்றும் சில கம்ப ராமாயணப் பாடல்களைஒப்பீடு செய்தும் எழுதி இருக்கிறேன். உங்கள் இந்தப் பதிவு என் எளிய முயற்சியை நினைவுக்குக் கொண்டு வந்தது.
gmbat1649.blogspot.in/2011/06/blog-post_11.html
் கரும்பு தின்னக்கூலியா? கம்பனைப்படிப்பது பிடித்த விஷயம் தனி மடலில் நீங்கள் அனுப்பியது வந்துள்ளது வீட்டுப்பணி முடித்து வாசிக்கறேன் ஜி எம் பி சார் நன்றி
Deleteராம நவமியை நினைவூட்ட சிறப்பான பதிவு!
ReplyDeleteநன்றி ஜனா...உங்க வலைப்பூ வரேன் சீக்கிரம்
Deleteவரும் நாளுக்கேற்ற சிறப்பான பகிர்வு...
ReplyDeleteமிக்க நன்றி... வாழ்த்துக்கள்...
நன்றி தி தனபாலன்
Delete
ReplyDeleteராமனின் அவதாரம் மனுஷ்யனாகப்பிறந்தவன் எப்படி வாழவேண்டும் என்று
உலகத்தாருக்கு எடுத்துக்காட்டி, தானும் மனுஷ்யஸ்வருபியாய் இருந்தது மட்டுமல்ல
மனிதருக்கே வாய்த்த குணங்கள், மன நிலைகளையும் ஒத்து இருந்து, நடந்து, அதில்
வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்பதை யும் சிறப்பெனச் சொல்லிய ராமன்
தான் ஒரு அவதார புருஷன் என்பதை எப்பொழுதுமே எந்த ஒரு கட்டத்திலும் சொல்லாத
ஒரு நாயகன்.
ஸ்ரீ ராம ஜன்மியை முன்னிட்ட இட்ட இன்ற பதிவு பானகம்.
பிபரே ராம ரசம்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
நன்றி திரு சுப்புத்தாத்தா. பிபரே ராமரசம் என முடித்த உங்கள் வரி அருமை... ராம நவமியை முன்னிட்டு மூன்றுநாளைக்குப்பதிவிட திட்டம் அண்ணல் நடத்தி வைக்கவேண்டும் அதனை
Deleteஎல்லாவற்றையும் படிக்க ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன் ஸ்ரீ ராமனின் அருள் உங்களுக்கு உரித்தாகட்டும்
ReplyDeleteமிக்க நன்றி இன்று வியாழன் புது இடுகை இட்டு விட்டேன்
Deleteராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்!
ReplyDeleteராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம்! நன்றி வருகைக்கு இராஜராஜேஸ்வரி
Deleteநல்ல பதிவு. நவீன யுக பாணியில் இராம நவமியின் டீஸர் என்று இதைக்கொள்ளலாம். அருமையான மேற்கோள்கள்.
ReplyDeleteநன்றி கடசிபெஞ்ச்
Deleteராமநவமி முன்னிட்டு பகிர்ந்த பகிர்வு நன்று. தொடரட்டும்.....
ReplyDeleteநன்றி வெங்கட்நாகரா ஜ் இன்று தொடர்ந்திருக்கிறேன் நேரமிருப்பின் பார்க்க
Deleteஸ்ரீராமனின் கதை எத்தனை முறை யார்சொன்னாலும் அலுக்காதது. தொடர்ந்து படிக்கிறேன்.
ReplyDeleteSriramajayam. Em pondroruk ithu oru nalla vaipu. padithu inbutru ramanai potruvum. nandri
ReplyDeletekarunakaran
நல்ல பதிவு.
ReplyDeleteகாலங்கள் பல கடந்தும் நின்று நிலைக்கும் கம்பரசம் மனிதர்க்கமுது.
ReplyDelete