கொட்டும் மழையில்
ஒருநாள் கிடப்பேன்
கொளுத்தும் வெய்யிலில்
மறுநாள் கிடப்பேன்.
கூண்டுக் கிளிக்காவது
சீட்டு எடுக்கும்போது
சில நிமிட விடுதலை.
தொட்டிச் செடிக்கு
அப்படி எதுவுமில்லை.
வேர்க் கால்களை
வீசி நடக்க
வேறு பாதை ஏதுமில்லை.
வேடிக்கை காண வரும்
விந்தை மனிதர்களைப்
பார்த்தபடியும்
மேய்ந்துவரும் மாடுகளிடம்
என்னில் பாதியை
இழப்பதுவுமே
வாடிக்கையாகிவிட்டது.
அலையும் மனதிற்கு
ஆதரவாய் அருகில்
கிளைக்கரம் தொட்டு
ஆறுதல் சாமரம் வீச
மரம் செடி எதுவுமில்லை.
தொட்டிக்குள் அடங்கிவிட்டது,
என் உடல் மட்டுமல்ல
விடுதலை கிடைக்குமென்ற
வாழ்க்கைக் கனவுகளும்தான்
Tweet | ||||
சிலருக்கு இது போல் வாழ்க்கையும் அமைந்து விடுவதும் உண்மை...
ReplyDeleteஆமாம் தனபாலன் வாழ்க்கை அனுபவங்கள்தான் கற்பனை வடிவமாகிறது நன்றி கருத்துக்கு
Deleteஅலையும் மனதிற்கு
ReplyDeleteஆதரவாய் அருகில்
கிளைக்கரம் தொட்டு
ஆறுதல் சாமரம் வீச
மரம் செடி எதுவுமில்லை.
வலிக்கும் வரிகள்.
நன்றி ரிஷபன் மனிதர்கள் சிலரின் நிலையை உணர்ந்துஎழுத நேரந்ததால் வலியைப்புகுத்த வேண்டி வந்தது!
Delete//தொட்டிக்குள் அடங்கிவிட்டது,
ReplyDeleteஎன் உடல் மட்டுமல்ல
விடுதலை கிடைக்குமென்ற
வாழ்க்கைக் கனவுகளும்தான்//
அருமையான புலம்பல். பாராட்டுக்கள்.
//அலையும் மனதிற்கு
ஆதரவாய் அருகில்
கிளைக்கரம் தொட்டு
ஆறுதல் சாமரம் வீச
மரம் செடி எதுவுமில்லை.//
ஐயோ பாவம் ! அந்தச்செடி.
நன்றி திரு வை கோ ஸார்!
Deleteஅழகாக எழுதி உள்ளீர்கள் .
ReplyDeleteதொட்டி செடியின் தன்மையே அப்படிதானே.அது பருந்தாகிவிடுமா?
பருந்தும் செடியாகிவிடுமா?ஆனால் மனிதர்கள் செடிபோல் ஓர் இடத்தில் கட்டிபோட்டால் போல் ஆனால் வேதனைக்கு உரிய விஷயம். மனத்திலும்,உடலிலும் சுதந்திரம் அவசியம் .
நல்ல கவிதை
ஆமாம் தொட்டிச்செடிகளைப்பார்க்கும் போதெல்லாம் இப்படி கிடக்கும் மனிதர்கள் சிலரை நினைப்பேன்..அதன் விளைவில் கவிதை நன்றி திரு பார்த்தசாரதி தங்கள் கருத்துக்கு
Delete
ReplyDeleteநல்ல கற்பனை. வித்தியாசக் கண்ணோட்டம். வாழ்த்துக்கள்.
நன்றி ஜி எம் பி சார்
Deleteதொட்டிச்செடியாய் அமைந்துவிட்ட ஒருசில வாழ்க்கைகள் பற்றிய எண்ணவோட்டங்களே இங்கு கவியானதாய் உணர்கிறேன். பாராட்டுகள் மேடம்.
ReplyDeleteஆம் கீத மஞ்சரி
Deleteநிஜம் தான் நிழலாகி*(கற்பனை) உள்ளது நன்றி பாராட்டுக்கு
ReplyDeleteநல்ல கவிதை.
நன்றி காஞ்சனா நலமா?
Deleteஇது போன்ற உருவகக் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. மிக அருமை
ReplyDeleteநன்ரி முரளீதரன் உருவகக்கவிதைகளுக்கு வித்தாய் உண்மை இருப்பதால் அனைவருக்கும் பிடிக்கலாம் அல்லவா?
Deleteஏங்கி தவிக்கும் உள்ளங்களின்
ReplyDeleteஎண்ணங்கள், இங்கே
எழுத்துகளாய்....
ஆம் அந்த உள்ளங்களை நேரில் பார்த்த அனுபவம்! நன்றி திகழ்
Deleteதொட்டிச் செடிக்கு பகுத்தறிவு பற்றாது. ஆறறிவு படைத்தோர் செடிபோல் சுருக்கலாகாது தம் வாழ்வை. வட்டத்தின் விட்டத்தைப் பெரிதாக்குவது அவரவர் கையில்.
ReplyDeleteஎனினும் 'சீட்டு எடுக்கும் கிளிக்கேனும் சில நிமிட விடுதலை' வரி சிந்திக்க வைத்தது.சிறகிருந்தும் அடைபட்ட கிளியும் பாவம் தானே.
ஆறறிவு படைத்தோரை செடிபோல சிலர் சுருக்கவைக்கிறார்களே நிலாமகள்? வயதான தள்ளாமை ஒரு காரணம், பொருளாதார நிலமை இன்னொரு காரணம்.. சிறகிருந்தும் அடைபட்ட கிளீ பாவம் தான் அழகான உங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி
Deleteகவிதையைப் படிக்கும்பொழுது
ReplyDeleteகருணாகரசு அவர்களின் வரிகள்
நினைவிற்கு வருகின்றன.
செடிக்குத் தண்ணீர்,
வேருக்கு எல்லை!
சிரிக்கிறது " பூந்தொட்டி"
வாழ்த்துகள்
நல்ல கவிதை திகழ்.பகிர்ந்தமைக்கு நன்றி மிக
Deleteதொட்டிச் செடி.... போலவே பலருடைய வாழ்க்கையும்.....
ReplyDeleteநல்ல கவிதை.....
் ஆமாம் வெங்கட் நாகராஜ் ..வாழ்க்கைப்பாடம் நாம் இயற்கையினின்றே காண்கிறோம் அல்லவா? நன்றி கருத்துக்கு
Deleteநன்றி ராமலஷ்மி
ReplyDeleteகவிதையின் ஒவ்வொரு வரியிலும் ஏனோ சில மனிதர்களும் நினைவிற்கு வருகிறார்கள்....
ReplyDeleteநன்றி எழில்... மனிதர்கள் நிலமைதான் கவிதையாய் எழுத வைத்தது.
Deleteவேர்க் கால்களை
ReplyDeleteவீசி நடக்க
வேறு பாதை ஏதுமில்லை. //என்னே சிந்தனை
உருக்கமான கவிதை!
ReplyDelete