நாவிருவது நிமகா(ga)கி(gi)(நான் இருப்பது உங்களுக்காக) என்று பாட்டுப்பாடியே கன்னட திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டாக்டர் ராஜ்குமாரின் பிறந்ததினம் இன்று.
நடிகர் டாக்டர்ராஜ்குமார் வாங்கின பட்டங்களைக்காணுங்கள்!
(Karnataka Rathna, Kannada Kanteerava, Kala Kausthuba, Rasikara Raja, Padmabhushana, Nata Sarvabhouma, Kentuky colonel, Annavaru, Gana Gandharva, Nithya Noothana Nata Shreshta, Doctorate, etc…)
தவிர சில விருதுகளும் இருப்பதாக கன்னட அபிமானிகள் சொல்கிறார்கள்.
-- *=முன் ஜாக்கிரதை முத்தண்ணா!:)
நடிகர் டாக்டர்ராஜ்குமார் வாங்கின பட்டங்களைக்காணுங்கள்!
(Karnataka Rathna, Kannada Kanteerava, Kala Kausthuba, Rasikara Raja, Padmabhushana, Nata Sarvabhouma, Kentuky colonel, Annavaru, Gana Gandharva, Nithya Noothana Nata Shreshta, Doctorate, etc…)
தவிர சில விருதுகளும் இருப்பதாக கன்னட அபிமானிகள் சொல்கிறார்கள்.
கன்னட நடிகர் ராஜ்குமார், 30.7.2000ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். 108 நாட்கள் காட்டில் பிணைக்கைதியாக இருந்த ராஜ்குமார், பின்னர் மீட்கப்பட்டார்
அவரைக் கடத்திவைக்கப்பட்டிருந்த நாட்களில் கன்னட நடிகர்கள் பலர் அவர் மீண்டு(ம்) வரும்வரைதாடி வளர்த்தார்கள் அவர் மகன்கள் வீட்டுப்பணியாளர்கள் என பலரும்!
ராஜ்குமார் வரும்வரை தாடியை எடுக்கமாட்டோம் இது உறுதி என கூட்டம்போட்டு முழங்கினார்கள்
அந்த 108நாட்களும் பெங்களூரில் அப்பாவித்தமிழர்களின் நிலைமை சற்றே சங்கடமாகவே இருந்தது.
காலனியில் வாக்போகும்போது நானும் என் கணவரும் குடும்பக்கதையை கன்னடத்தில் பேசிக்கொண்டே போகுமளவு தமிழ் வாசனையை மறக்கவேண்டித்தான் இருந்தது.
மகள் பதுங்கிப்பதுங்கி பள்ளியிலிருந்து வந்தாள்.
இப்படிக்கன்னடமே கதியென்றாகிப்போனால் அதை எழுதப்படிகக்கற்றுக்கொண்டேயாகவேண்டும் இல்லாவிட்டால் நம்மை இங்கிருந்து துரத்தி அடித்து விடுவார்கள் என்ற முஜாமு*(என் திரு’பதி’தான்):) முப்பதுநாட்களில் கன்னடம் கற்றுக்கொள்வதெப்படி புக்கைவாங்கிவந்தார்.
ஜிலேபியை நினைவுபடுத்திய எழுத்துக்களைக்கண்டாலே என்னவோ ஆயாசமாய்வந்தது,அப்படியும் 10நாளில் சுமாராக எழுதப்படிக்கக்கற்றுக்கொண்டு மகளிடம் தேர்வு வைக்கச்சொல்லி பாஸ் மார்க் வாங்கினோம்!
தினசரி ராஜ்குமார் நியூஸ் விறுவிறுப்பாய் போனது. அவரை மீட்பதற்காக மீசைக்காரரரை நோக்கி இன்னோரு மீசைக்காரர் மேற்கொண்ட பயணம் சின்னத்திரையின் சில்வர் வரலாறு!
கன்னடத்தோழிகளில் ஒருசிலர் என்னவொ வீரப்பன் எனக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா முறைபோல என்னைக்கடுப்பாய் சில நேரம் பார்ப்பார்கள்.
எப்படியோ நட சார்வ பௌம(என்ன அர்த்தம்) மீட்கப்பட்டார் நகரமே கொண்டாடியது.
மறுபடி அவர் இறந்த நாளன்று நகரம் அல்லலோலகல்லோலப்பட்டது. டாக்டர்ராஜ்குமார் நடிகர்மட்டுமல்ல
ஏராள ரசிகபக்தர்களைக்கொண்டவர் பாடகர் தெய்வபக்தி நிறைந்தவர் எல்லாவற்றிர்க்கும் மேலாய் நல்ல மனிதர் ! .”அண்ணாவரு” என பாசமாய் பலர் அவரை அழைப்பார்கள்.
இவர் நடித்த பங்காருத மனுஷ்யா(தங்கமான மனிதன்) ஒருவருஷத்துக்குமேல ஒரே தியேட்டர்ல ஓடி வசூலில் சாதனை செய்தது.
வரா பந்தம்மா குருவார பந்தம்மா! ராயரை நினையம்ம குருராயர நினையம்மா என்று அவர் ரேடியோவில் பாடுவதைக்கேட்டு எதிர்வீட்டு கன்னட அஜ்ஜி(பாட்டி) கன்னத்தில் போட்டுக்கொள்வாள் அவ்ளோ பக்திப்பரவசம்!
அவருடைய இன்றைய பிறந்த நாள் வைபவம் எங்கள் காலனியில் நீர் மோர் பானகம் சமேதமாகக் கொ்ண்டாடப்பட்டது
சின்ன ஷாமியானா கட்டி அவசர மேடை ஒன்று உருவாக்கி நடிகரின் திரு உருவப் படத்தை(அப்பாடி என்ன மூக்கு!ஃப்ரேம் உடைஞ்சிடுமோ) மாலையெல்லாம் போட்டு காலனிப்பிரபலங்கள் சிலரைஇன்ஸ்டண்டாய் பேச அழைத்தார்கள் .
அதில் அடியேனும் ஒருத்தி.. (எங்க காலனில நான் பிரபலம் தாங்க:) காக்கைக்குத்தன்..........ஞாபகம் இருக்கில்ல?:)
கஸ்தூரி கன்னடத்தில் சொல்ப மாட்தாடி முடிச்சேன்... பாரதியை நினைவு கூர்ந்து சொலல்லாம்னா பாரதி கன்னடத்தை எங்காவது குறிப்பிட்டிருக்காரா என நினைவு்படுத்திப்பார்த்தேன் ஒன்றும் எனக்கு தெரியவரவில்லை..நான் தவற விட்டிருந்தால் தயவு செய்து யாரும் அதை எடுத்துச்சொல்லி உதவவும் முன்கூட்டி நன்றி!
மேடை ஏறிப் பேசியவர்களுக்கு மோர் பானகம் தவிர ஜிலேபி , மிக்சர் ஃப்ரீ்யாகக்கிடைத்தன!
-- *=முன் ஜாக்கிரதை முத்தண்ணா!:)
Tweet | ||||
"அண்ணாவரு" அவர்களின் பிறந்த நாள் இன்று தான் என்று இந்த பதிவு மூலம் தான் தெரியும்... கொ்ண்டாட தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteபால் வண்டி வருது போகுது - ஹாலு பண்டி பருது ஹோகுது
ReplyDeleteபழைய வீடு - ஹளைய பீடு
வீதி - பீதி, பல்லி - ஹல்லி...!
சரியா...? பக்கத்து பீடுவில் கன்னடம்....! ஹிஹி...
அந்த அந்த பிரதேசத்திற்கு ஒரு சூப்பர் ஸ்டார்.
ReplyDeleteஅமிதாப்,ராஜ் கபூர்,என் டி ஆர்,உத்தம் குமார் சிவாஜி,எம் ஜி ஆர்,மம்மூட்டி, ரஜினி போல பிரபலங்கள் அவரவர் ரசிகர்களின் மனதில் ஒரு நடமாடும் கடவுளை போல.அப்படி ஒரு ஈடுபாடு பக்தி.
நீங்கள் கன்னடம் கற்று கொண்டது ஒரு வகையில் நியாயமே.When in Rome ,be a roman.அதனால் தான் உங்களால் பேசமுடிந்தது அந்த கூட்டத்தில்.
ஜிலேபியும் கிடைத்தது!!
ஆமாம் கன்னடம் தெரிஞ்சதால் ஜிலேபி கிடச்சுது:) நன்றி திரு பார்த்தசாரதி
Deleteஅண்ணாவரு பத்தி எனக்கு அதிகம் தெரியாது. ஆனா அந்த மூக்கை மட்டும் நான் வியந்ததுண்டு! பிறந்த தினத்தை முன்னிட்டு நினைவுகள் சுமந்த பதிவு வெகு அருமைக்கா!
ReplyDeleteநன்றி கணேஷ்...இந்த ஊர்ல இருப்பதால் எனக்கு தெரியுதுஇல்லேன்னா நானும் உங்களமாதிரி அதிகம் விவரம் தெரியாமதான் இருப்பேன் பின்னூட்டமிட்டதற்கு நன்றி
DeleteShailajamma, appadiye kanndathula pesi konjam thamiznattuku thanneer vangi tharakudatha.
ReplyDeletenandri. karunakaran
தம்ழிநாட்டுக்குத்தண்ணீர் தானே கேட்டுட்றேன் ஆனா அவங்க கொடுக்கணுமே ஸார்?:)
Delete“ அண்ணாவரு “ ராஜ்குமார் நடித்த, தமிழ் டப்பிங் ஜேம்ஸ்பாண்ட் டைப் படங்களை கல்லூரி நாட்களில் பார்த்து இருக்கிறேன். ஆனாலும் அண்ணாவரு தமிழர்களுக்கு எதிராக அரசியல் செய்தார் என்பதில் எனக்கு வருத்தமுண்டு.
ReplyDeleteஅரசியல்னு பார்த்தா எனக்கும் அந்த வருத்தம் உண்டு தான் கலைஞராய்ப்பார்த்து ஒரு இடுகை எழுதினேன் கருத்துக்கு நன்றி திரு இளங்கோ
Deleteஅண்ணாவ்ரு பற்றிய பதிவு அருமை. 'நட சார்வ பௌம' (nata) என்றால் நடிப்புச் சக்கரவர்த்தி என்று பொருள். The Emperor of Acting)
ReplyDeleteஅவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் என் கணவரை நெற்றிக்கு இட்டுக் கொண்டு (ஸ்ரீசூர்ணம்) போக வேண்டாம் வாயே திறக்காதீர்கள் - அவருக்கு கன்னடம் வராது - என்று சொல்லுவோம்.
ஒரு மிகச்சிறந்த நடிகர். அருமையாகப் பாடுவார். அவர் நடித்த பல நல்ல திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அவர் பேசும் கன்னடம் அச்சு கன்னடமாக (செந்தமிழ் போல) இருக்கும்.
@ தனபாலன்
பால் - ஹாலு சரி
ஆனால் பருது என்று சொல்வதில்லை. பண்டி என்பது இப்போது காடி (gaadi) ஆகிவிட்டது.
பீடு (beedu) என்றால் பெருமை. ஹளே பீடு என்றால் பழைய பெருமை.
வீடு என்பதற்கு மனே என்பார்கள்.
திருத்தியதற்கு தவறாக நினைக்க வேண்டாம், ப்ளீஸ்!
சும்மா... பக்கத்து வீட்டில் பேசியதை (எனக்கு அப்படி கேட்டிருக்கு... ஹிஹி) குறிப்பிட்டேன்... அவ்வளவே... நன்றி அம்மா...
Deleteரஞ்சனி நாராயணன் உங்க கன்னடம் சன்னாகிதே! கருத்துக்கு வருகைக்கு தனபாலனுக்கு கன்னடம் கத்துக்கொடுத்ததுக்கு நன்றி மிக.... தனபாலன் தப்பால்ல்லாம் நினைக்கமாட்டார் அதை சொல்லிட்டார் பாருங்க நல்லவரு அவரு(வெய்யிலுக்கு ஐஸ் அல்ல:)
Deleteஅண்ணாவாரு பற்றிய அறிந்திராத தகவல்கள்.பகிர்வுக்கு நன்றிக்கா.
ReplyDeleteநன்றி சாதிகா.. நலம்தானே?
Deleteவாங்கதனபாலன் உங்க தவற்றை ரஞ்சனி அவர்கள் சரி பண்ணிட்டாங்க:) வருகைக்கு நன்றி
ReplyDelete