chennai IIT யில் நுழையவேண்டும் என்ற கனவு டிசம்பர் இரண்டாம் தேதி
மெய்ப்பட்டது! அறிவுஜீவுகள் படித்த, படிக்கும், படிக்கப்போகிற இடத்தில்
எப்படியாவது நுழைய வேண்டும் என பலநாளாய் சதித்திட்டம் தீட்டி இருந்தேன்.:)
அதற்கான வேளை வந்தது!
ஆமாம் விப்ரோ கம்பெனி ஏற்பாடு செய்திருந்த மாரத்தானில் கலந்துகொண்ட
நாலாயிரம் பேரில் நானும் ஒருத்தி! என் பெரிய மகள் 42கிமீக்கு சவால்விட்டாள்!
வெற்றிகரமாக அதை ஐந்துமணிநேரத்தில் முடித்தும்விட்டாள் பெண்களில்
ஐந்தாவதாய் வந்தாள்.மூன்றாவதாக வந்திருந்தால் பத்தாயிரம் பணம் அள்ளி
இருக்கலாம்!!
நானும் என் கணவரும் பேராசைப்படவே இல்லை! 10கிமீக்குப்பேர்
கொடுத்து ரிஜிஸ்டர் செய்திருந்தோம்.
டிசம்பர் ஒண்ணாம்தேதியே போய் டீஷர்ட், ட்ராக்கிங் சிப்(Chip time is another
way of saying "net time," or the actual amount of time it takes a runner to
go from the starting line of a race to the finish line. Many races feature
a timing technology in which all participants run with a computer chip
attached to their running shoe. When you register for a race, you receive
your borrowed chip, programmed with your information, at the same time you
get your race bib. The chip usually attaches to your shoelaces) எனக்கான்
மாரத்தான் எண் பெயர் அடங்கிய பாட்ஜ் இன்னபிற அடங்கிய ரன்னிங் கிட் ஒண்ணுகொடுத்ததை வாங்கிவந்தாயிற்று.
அந்த டீஷர்ட்டைப்போட்டுக்கொள்ள நான் ஒரு இரவில் இருபதுகிலோ இளைக்க வேண்டிஇருந்ததால் அது சாத்தியப்படாததால் ட்ராக் பாண்ட், சூடிதார் டாப்சில்பேட்ஜைக்குத்திக்கொண்டுவிட்டேன்
!
காலை சீக்கிரமே எழுந்து மொட்டைமாடிக்குபோய் மாரதான் ஒத்திகை பார்த்தபோதுபின்னாடியே ஒருகுரல் கேட்டது” ஜாக்கிரதை ரொம்ப இப்பவே நடந்துகிடந்துஅசந்துபோய்விட்டால் அங்கே போய் உன்னால் நடக்கமுடியாது”
முன் ஜாக்கிரதைமுத்தண்ணாவான என் பதியின் குரல்தான் அது என்பதை சொல்லவும்வேண்டுமோ?:)
“ஏதும் லைட்டா நாலு இட்லி ஒரு கப் பொங்கல் சின்னதா லோட்டால ஹார்லிக்ஸ்குடிச்சிட்டுப்போறீங்களா?” என்று சென்னை உறவினர்வீட்டு தாய்க்குலம் பரிவுடன்கேட்க, வெண்பொங்கலில் நெய்யில் மிளகும் முந்திரியும் வறுபடும் வாசனை நாசியை
வருட சபலமடைந்த நாக்கை ‘அடங்கு’ என அடக்கிவிட்டு வெறும் ஸ்ட்ராங்கஃபில்டர்காபியுடன் புறப்பட்டேன்.
சென்னையில் இப்படி ஒரு க்ளைமேட்டா? சுவிஸ் கெட்டதுபோங்க அப்படி ஒருமிதமான அழகான weather! ஐஐடி காம்பஸ் பற்றிக்கேட்கவே வேண்டாம்.
இயற்கைகாடு இது! ஆலமரம் மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்கும்போலிருக்கிறது.
ஸ்டார்ட் மூஜிக்லாம் போட்டு சின்னப்பசங்கபொண்ணுங்க ஆடறதை பெருமூச்சுடன்பார்த்தபடி அப்போதும் மனம் தளராமல் ஒரு சில நிமிஷங்கள் பயிற்சியோடுசின்னதாய் ஆடி(சிலர் சிரிப்பது கேக்குது:))) விட்டேன்:)
10கிமீ மக்களில் யார் 30நிமிஷத்துல இலக்கை அடையப்போறீங்கன்னு மைக்கில்குரல்வந்ததும் ஓசைப்படாமல் பின் வரிசைக்குப்போய்ட்டேன்
celebrities இருக்காங்க கூட்டத்துல அவங்களை எல்லாம் தொல்லை செய்யாம
போகணும் ப்ளீஸ் என்றார்கள் ஆங்கிலத்தில்
"தெரிஞ்சுதா டோண்ட் டிஸ்டர்ப் மீ 'என்றேன் அருகிலிருந்த சென்னைத்தோழி
அகிலா சட்டென சிரித்துவிட்டாள்:)
நெக்ஸ்ட் 45 நிமிஷங்களில் யாரார்?
அதுக்கும் ஒரு 500பேரு போனாங்க...
ஒனவர்ல யாரு?
அதுக்கு பலபேர் முந்திக்கொள்ளவும் நானும் அந்த ஜோதியில்
ஐக்கியமானேன்..
.”முடியல்லேன்னா பரவால்லபின்னாடி வாங்க ஆண்ட்டி” என்றாள் என்
மகளின் சிநேகிதி.
“நான் முன்னாலே போறேன் நீ பின்னால வாரியா\?’ என்று பாடாத
குறையாக பதி என்னவோ உப்புசத்யாக்கிரக காந்திபோல தடதடவென நடக்க ஆரம்பித்தார்.
எங்களைக்கடந்து முன்னே சென்ற காரின் பின்பக்கம் மூட்டைமுடிச்சுவைக்கிறஇடத்தில் முழு உடம்பையும் பொருத்தி அம்ர்ந்திருந்த ஒருவர்,எங்களை சுட்டுக்கொண்டே வந்தார் வீடியோ காமிராலதான்!
திடீரென காரினின்றும் ஒருவர் இறங்கி, செந்தமிழில் மாரத்தான் பற்றி
சிலாகித்துப்பேசிக்கொண்டே போனார்.புதிய தலைமுறை டிவியாம்! லைவ் ஓடிட்டுஇருக்குன்னாரு ..
யாராவது ஷைலஜாவைப்பார்த்தேன்னு உடனே குறுந்தகவலில் மனதை
குதூகலப்படுத்துவாங்கன்னு பார்த்தா எல்லாரும் பொன்னான விடுமுறைநாள் எனதூங்கிட்டாங்கபோலும்! சல்தா ஹை!
ஜாக்கிங் பண்ணின காலம் மீண்டுவருமோ என முயற்சி செய்தேன் ஜோக்கிங் ஆகும்போலஇருக்கவே கைவிட்டுவிட்டு வழக்கம்போல விரைவான நடைபோட்டேன்! கால்நடந்தாலும்
மனம் கற்பனைக்குதிரையில் எங்கங்கோ ஓடினது!
congratulations!
"shylaja(Mythili) runs IIT!
headlines!
பராசக்தி வசனம் நினைவுக்கு வந்தது ஓடினாள் ஓடினாள்.....:)
இது பாரா சக்தி - ஊரின் எல்லைக்கே ஓடினாள் என்று தமிழ்நாளிதழ்களில் செய்திவருமோ?!
”only two things run in IIT - deer and monkeys ” என்று எழுபதுவயது
பெரியவர் சொல்லிக்கொண்டே ஓடினார்.
- மான்கள் அந்தப்பக்கம் ஓட இந்தப்பக்கம் நாங்கள் ஓட, கணவரை செல்லில் அழைத்து,
‘அந்தமானை எனக்காகப் பிடித்துத்தரமுடியுமா?’என்று ஓட்டினேன்
.”ஒழுங்கா
10கிமீ ஓடியோ நடந்தோ வந்து மெடலைவாங்கப்பார் எனக்கு இன்னும் நாலேகிமீதான்ஹஹ்ஹா” என்று வீரப்பா சிரிப்புசிரித்து வெறுப்பேற்றினார்.
‘ஆமைமுதல்ல மெதுவாதான் நடக்கும்டா..ஆனா எப்பவும் முயல் ஜெயிக்கறதில்லைதெரியுமா?’ என்று ஒரு இளைஞன் நண்பனிடம் சொல்லிக்கொண்டுவந்தான்.
யாரை ஆமைஎன்றான் என்று எனக்குப்புரியவில்லை ஆனால் அதனால் ஒருவேகம் காலுக்கு அதிகம்வர டக்டக் என நடையை துரிதப்படுத்தினேன். ஒருவாரமாய் வாட்டும்இருமலைத்தணிக்க கையோடு பங்கஜ் கஸ்தூரி சாஷே பாகெட் கொண்டுபோனதை எடுத்து
பல்லால் கஷ்டப்பட்டுபிரிச்சி அந்ததூளை வாயில்போட்டுக்கொண்டு நடப்பதை அருகில்ஒருபெண் திடுக்கிட்டுப்பார்த்தாள். ஏதோ போதைப்பொருள்பொட்டலம் எனநினைத்துவிட்டாளோ என்னவோ?:)
இருமல் மருந்து பாக்கெட் என சத்தியமா செய்யமுடியும் சொல்லுங்க?:)
21கிமீட்டர் வாக்காளப்பெருமக்கள் சிலர்எங்களைக்கடந்து
முன்னேறிக்கொண்டிருந்ததை அவர்கள் அணிந்திருந்த நம்பர் பாட்ஜ்
உறுதிப்படித்தியது.ஆஹா நமக்கு முன்னாடி ஓட ஆரம்பித்து இலக்கை அடையநமக்குமுன்னால் வருகிறார்களே என வியப்பாக பெருமையாக இருந்தது.
“ நோடப்பா ஈவத்தே நானும் ஊருக்கு ஹோக்பேக்கு..மாரதான்கோசர சென்னை பந்த்தினி
அஷ்டே’
என்ற கஸ்தூரிக்கன்னடம் இடையில் கேட்க முகம் மலர்ந்தது.
என்னஇருந்தாலும் பெண்களுக்கு புகுந்த இடத்துப்பெருமை இருக்கத்தானே வேண்டும்?:)
நிறைய வெளிநாட்டவரக்ளும் பங்கேற்றிருந்தனர். ஆனாலும் உகாண்டாபிரஜைகளுக்கு,கங்காரு கால்கள்தான் சும்மா தாவிதாவிப்போகிறார்கள்! பெங்களூர் மாரத்தானில்
வேடிக்கைபார்க்கப்போனப்போவே இதை கவனித்தேன் .amazing really!
குரங்குகள் சில குறுக்கே போனது. ஒண்ணுகூட பெஸ்ட் ஆஃப் லக் சொல்லக்காணோம்!
அங்கங்கே எங்களுக்காக குடிக்க நீர் பிஸ்கட் வாழைப்பழங்கள் என இருந்தன..
நைசாய் நடுவே நாலுவாழைப்ப்ழம் இரண்டுகிலோம்மீட்டருக்கு ஒண்ணு என்றகணக்கில்எடுத்துக்கொண்டேன்.
பத்தாவது கிலோமீட்டரை ஒண்ணேமுக்கால் மணி நேரத்தில் கடந்து மெடலையும்வாங்கிட்டேன்!
கனவா நனவா தெரியவில்லை என எனக்கே பின்னாடி டவுட் வரும்னுதான் கையோட போட்டோஎடுத்துட்டேன்! மைதிலி என்னும் ஷைலஜா இங்கே நானே!
இனி அடுத்து 21 கிமீதான் என்ன சொல்றீங்க?:)
மேலதிக விவரங்களுக்கு>>>>
http://www.thehindu.com/sport/athletics/ismail-wins-chennai-marathon/article4157107.ece