Social Icons

Pages

Wednesday, January 16, 2008

காணும் பொங்கல்!

காணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்

பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டுவார்கள் இல்லையா அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.(இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)

கணுப்பிடி இந்தநாளின் சிறப்பு.அதென்ன கணுப்பிடி?

ஆமாம் அது ஒருவகை நோன்பு.உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.
உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.

கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு என்பது பழமொழி.

அதாவது கார்த்திகைமாதம் எண்ணைதேய்த்துக்குளித்து விளக்குவைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும்பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.

இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.

முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்,ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய்வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.
தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.

உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போடணும்.அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!

என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று
வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!

24 comments:

  1. நேத்துதான் எங்களுக்கு பொங்கல்ஆப்பீஸ் விடுமுறை. சாயந்திரம் எக்ஸிபிஷன் போயிருந்தோம் என்ன கூட்டம் என்ன கூட்டம் அதனால காணும் பொங்கலை நேத்தே அங்க பொங்கீட்டோம்!!!

    உடன் பிறவாதம்பி எனக்காக வேண்டிகிட்டதுக்கு ஸ்பெசல் தாங்க்ஸ்!!

    ReplyDelete
  2. இதுக்கு தம்பிங்க அக்காவுக்கு 'ஒரு ரூவா'காயின் குடுப்பாங்க இல்ல அத 'வெஸ்டர்ண் யூனியன்'ல அனுப்பிடறேன்!!!

    ReplyDelete
  3. இதுவரை அறிந்திராத தகவல் ,
    பகிர்தலுக்கு நன்றி,...

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  4. Anonymous1:32 PM

    தமிழ் பிராமணப் பெண்கள் மட்டுமே செய்யும் ஒரு செயல் என்பதையும் சேர்த்திருக்கலாம். என்ன இப்போதெல்லாம் பிராமணர்களிலேயும் இதை சிலர் செய்வதில்லை.

    ReplyDelete
  5. காணும் பொங்கல்க்கு புதிய படம் பார்ப்பது தான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா!!!

    தகவலுக்கு நன்றி ;)

    ReplyDelete
  6. காணும் பொங்கல்னா இப்படி ஒரு செய்தி இருக்கா - தெரியலேயே - நன்றி தகவலுக்கு

    பொதுவா சென்னைலே பாத்தீங்கன்னா - எல்லோரும் குடும்பம் குடும்பமாக உறவினர் நணபர்னு எல்லோரும் கூட்டம் கூட்டமாக எல்லா இடங்களுக்கும் சென்று கண்டு வருவது தான் காணும் பொங்கல். எல்லோரெயும் சந்திக்கும் நல்ல நாள்.

    ReplyDelete
  7. ஈழத்தில் இந்தப் பொங்கல் கொண்டாடப்படுவதில்லை அதனால் எனக்கு இதனைப் பற்றி அறிய ஆவல் வலையுலக நண்பர்கள் சிலரிடம் கேட்டால் ஏதோ மெரினாவில் பிகர் பார்க்கும் பொங்கல் என்றார்கள். உங்கள் விளக்கம் புதிதாகவும் அருமையாகவும் இருக்கின்றது. நன்றிகள்

    ReplyDelete
  8. //என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று
    வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!
    //
    மிக்க நன்றி!

    ReplyDelete
  9. Anonymous10:33 AM

    இங்கே மலேசியாவில் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் அதற்கடுத்த நாள் கன்னிப்பொங்கல் அதற்கடுத்த நாள் காணும்பொங்கல் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் காணும் பொங்கல் என்றால் என்ன என்பத இப்போதுதான் அறிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  10. மங்களூர் சிவா said...
    !!!

    உடன் பிறவாதம்பி எனக்காக வேண்டிகிட்டதுக்கு ஸ்பெசல் தாங்க்ஸ்//

    இல்லையா பின்ன, நல்லா இருக்கணும் நீங்கல்லாம்னு எந்நாளும் வேண்டிகக்றோம் நன்றி ப்ரதர்.

    ReplyDelete
  11. மங்களூர் சிவா said...
    !!!

    உடன் பிறவாதம்பி எனக்காக வேண்டிகிட்டதுக்கு ஸ்பெசல் தாங்க்ஸ்//

    இல்லையா பின்ன, நல்லா இருக்கணும் நீங்கல்லாம்னு எந்நாளும் வேண்டிகக்றோம் நன்றி ப்ரதர்.

    ReplyDelete
  12. சாரி ஷைலஜா!
    ஆபிசில் ஒரே ஆணி, கடப்பாறை! :-)

    எங்க ஊர் காணும் பொங்கல் அன்னிக்கு வந்து பதிவைக் காணுற்றேன்!
    இனிய பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!

    //இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)//

    அட, தங்கம் கூட மஞ்சளாத் தான் இருக்கு! அதைத் தானே சொல்லுறீங்க! :-)

    கணுப்பிடிப் பொங்கல் காணும் பொங்கலாய் மாறியது இது வரை அறியாத தகவல்!

    ReplyDelete
  13. மங்களூர் சிவா said...
    இதுக்கு தம்பிங்க அக்காவுக்கு 'ஒரு ரூவா'காயின் குடுப்பாங்க இல்ல அத 'வெஸ்டர்ண் யூனியன்'ல அனுப்பிடறேன்!!!//

    மங்களூர்- பெங்களூர் நேர்லவந்து நல்ல அன்பளிப்பா தந்தா மறுக்கவா போறேன்...தம்பிமனசு தங்கம்னு தெரியாதா என்ன?:)

    ReplyDelete
  14. emperor said...
    இதுவரை அறிந்திராத தகவல் ,
    பகிர்தலுக்கு நன்றி,...

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,//\
    நன்றிங்க..பிலேடட் பொங்கல் வாழ்த்து உங்களுக்கும்.

    ReplyDelete
  15. Anonymous said...
    தமிழ் பிராமணப் பெண்கள் மட்டுமே செய்யும் ஒரு செயல் என்பதையும் சேர்த்திருக்கலாம். என்ன இப்போதெல்லாம் பிராமணர்களிலேயும் இதை சிலர் செய்வதில்லை.//

    உண்மைதான்....சில நிகழ்ச்சிகள் நினைவு கூறுதலுக்காகவே....மத்த நாட்கள் சகோதரர்களை நினைப்பதில்லை என்றில்லை...தைமாதம் பிறந்ததும்
    வாழ்வில் நல்வழியும் பிறக்க சகோதரனுக்கு ஒரு சகோதரி மனதார வேண்டுவது இது என பெரியவர்கள் கூறுவார்கள்.நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.

    ReplyDelete
  16. //என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று
    வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!//

    ஆகா! நன்றி!
    சரி நாங்க என்னிக்கி உடன் பிறவா ஜிஸ்டர்சுக்கு எல்லாம் வேண்டிக்கனும் சொல்லுங்க! வேண்டிக்குறோம்!

    சரி சரி...இதுக்கென்ன நாளும் கோளும்!
    நீங்க வேண்டிக்கிட்ட இன்னிக்கே நாங்களும் வேண்டிக்கறோம்!
    சகோதரிகள் எல்லார்க்கும் நலம் சூழ்ந்து நீங்காத செல்வம் நிறைய வாழி!

    ReplyDelete
  17. கோபிநாத் said...
    காணும் பொங்கல்க்கு புதிய படம் பார்ப்பது தான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா!!!

    தகவலுக்கு நன்றி ;)//

    நன்றி கோபி.

    ReplyDelete
  18. வந்தியத்தேவன் said...
    ஈழத்தில் இந்தப் பொங்கல் கொண்டாடப்படுவதில்லை அதனால் எனக்கு இதனைப் பற்றி அறிய ஆவல் வலையுலக நண்பர்கள் சிலரிடம் கேட்டால் ஏதோ மெரினாவில் பிகர் பார்க்கும் பொங்கல் என்றார்கள். உங்கள் விளக்கம் புதிதாகவும் அருமையாகவும் இருக்கின்றது. நன்றிகள்//

    நன்றி வந்தியத்தேவன்.

    ReplyDelete
  19. ஜீவா (Jeeva Venkataraman) said...
    //என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று
    வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!
    //
    மிக்க நன்றி!//>>>

    உங்களுக்கும் தான் ஜீவாவேண்டிக்கிட்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  20. நவன் said...
    இங்கே மலேசியாவில் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் அதற்கடுத்த நாள் கன்னிப்பொங்கல் அதற்கடுத்த நாள் காணும்பொங்கல் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் காணும் பொங்கல் என்றால் என்ன என்பத இப்போதுதான் அறிந்து கொள்கிறேன்.//

    தமிழகத்தில் ஒரு சாரார் இப்படிக் கொண்டாடுகிறார்கள்.நவன்
    நன்றி தாங்களின் வருகைக்கு.

    9:03 PM

    ReplyDelete
  21. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    சாரி ஷைலஜா!
    ஆபிசில் ஒரே ஆணி, கடப்பாறை! :-)//
    மம்முட்டி கிடையாதா?:)

    எங்க ஊர் காணும் பொங்கல் அன்னிக்கு வந்து பதிவைக் காணுற்றேன்!
    இனிய பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!

    //இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)//

    அட, தங்கம் கூட மஞ்சளாத் தான் இருக்கு! அதைத் தானே சொல்லுறீங்க! :-)

    கணுப்பிடிப் பொங்கல் காணும் பொங்கலாய் மாறியது இது வரை அறியாத தகவல்!//

    நன்றி ரவி.

    ReplyDelete
  22. kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    ஆகா! நன்றி!
    சரி நாங்க என்னிக்கி உடன் பிறவா ஜிஸ்டர்சுக்கு எல்லாம் வேண்டிக்கனும் சொல்லுங்க! வேண்டிக்குறோம்!

    சரி சரி...இதுக்கென்ன நாளும் கோளும்!
    நீங்க வேண்டிக்கிட்ட இன்னிக்கே நாங்களும் வேண்டிக்கறோம்!
    சகோதரிகள் எல்லார்க்கும் நலம் சூழ்ந்து நீங்காத செல்வம் நிறைய வாழி!//

    நீங்காத செல்வம் எல்லார்க்கும் கிடைத்துக் கூடி இருந்து மகிழ நானும்
    வாழ்த்தறேன் மறுபடி நன்றி கேஆர் எஸ்!

    ReplyDelete
  23. வணக்கம்
    நான் கேள்விபட்ட வரையில் மார்காழி மாதத்தில் பெண்கள் பிள்ளையார் பிடித்து (பசு சானத்தினை சிவ லிங்கத்தினை போன்று இரண்டு அறுகருக வைத்து இரண்டிலும் புசணிப் புவை சொருகி வைப்பார்கள்) காய்ந்த பிள்ளையரினை காணும் பொங்கல் அன்று ஊர் கோயிலின் முன் வைத்து பொங்களிடுவார்கள். விராட்டியாக பயன் படுத்துவர். மார்கழி மாதம் கோலம் போடும் போது ஊர் உறவினர்கள் அவர்களை பெண் பார்ப்பதாகவும் வீட்டில் பிள்ளையார் வைக்கப்பட்டிருந்தாள் அந்த வீட்டில் திருமணத்திற்கு தகுதியான பெண் இருப்பதாக புரிந்கொள்ளபட்டது. அப்படி காணும் பொங்கல் அன்று பெண்பார்க்கு படலாம்தான் என்று சொல்லப்படுகிறது.
    ஆனால் இப்போது அப்படி யாரும் செய்வதாக தேரியவில்லை.

    ReplyDelete
  24. I have learned more information for my write up

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.