அவசர அவசரமாய்
அலுவலகம் செல்வார்
எங்கள் ஐவருக்கும்
அப்பாவே தாயுமானவர்.
அழுத்தும் குடும்பச்சுமைகளிலும்
அகலாத புன்னகை.
எளியவர்; நல்லவர்; நாணயமானவர்.
அதனாலேயே கிடைத்த பட்டம்
பிழைக்கத்தெரியாதவர்.
வார இறுதி நாட்களில்
சைக்கிள்பெடல் அழுத்தி
மைல்கணக்கில் பாதைகடந்து
சில்லரைவியாபரம் செய்து
பைக்குள் சிறுபணம்
கொண்டுவருவார்.
அக்காவின் கல்யாணக்கடனை
அல்லல்பட்டு அடைத்து முடித்தவருக்கு
அறுபதுக்குள் வந்தது மாரடைப்பு.
அப்பா போனதும்
அதற்காகவே காத்திருந்ததுபோல்
அண்ணன்
அரசியல்வாதி ஆனான்.
சைக்கிள் போய்
கார் வந்தது.
ஓடு வீடுபோய்
உயர்ந்த வெளிப்புறச்சுவர்கள் கொண்ட
பங்களா வந்தது
சில்லறையின் சத்தங்கள் மறைந்து
கல்லறை மௌனமாய்
காகித நோட்டுகள் பேசின.
ஒவ்வொரு நாளும்
புதுப்புது மனிதர்களின் வரவு.
ஆனால்
அப்பாவைபோல
எவருமே வரவில்லை.
Tweet | ||||
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...பாட்டு போல்
ReplyDeleteஅப்பா என்று அழைக்காத மனம் இல்லையே-ன்னு ஒரு பாட்டு வரணும்! - நானே எழுதட்டுமா!
அப்பா கவிதை - அருமை ;)
ReplyDeleteமிக அருமையான கவிதை!
ReplyDeleteமனதை மிகவும் கஷ்டப் படுத்தியது இந்தப் பதிவு...
ReplyDeleteஅப்பாவின் இழப்பு இப்பிடி ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு கவிதையாய் ,கதையாய் இடம் பிடித்திருக்கத்தான் செய்யும்
அன்புடன் அருணா
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஅம்மா என்று அழைக்காத உயிரில்லையே...பாட்டு போல்
அப்பா என்று அழைக்காத மனம் இல்லையே-ன்னு ஒரு பாட்டு வரணும்! - நானே எழுதட்டுமா!//
எழுதுங்க ரவி....அப்பாவின் நினைவுகள் மனதில் எப்போதும் நிறைவானவை அல்லவா?
கோபிநாத் said...
ReplyDeleteஅப்பா கவிதை - அருமை ;)
மங்களூர் சிவா said...
மிக அருமையான கவிதை!
******************
மிக்க நன்றி கோபி மற்றும் சிவா!
aruna said...
ReplyDeleteமனதை மிகவும் கஷ்டப் படுத்தியது இந்தப் பதிவு...
அப்பாவின் இழப்பு இப்பிடி ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு கவிதையாய் ,கதையாய் இடம் பிடித்திருக்கத்தான் செய்யும்
அன்புடன் அருணா//
மிக்க நன்றி அருணா உங்க வருகைக்கும் கருத்துக்கும்!
Always Appa is the best. Thank you for posting this.This brings out lots of memories for me.
ReplyDeleteRumya
Always Appa is the best. Thank you for posting this.This brings out lots of memories for me.
ReplyDeleteRumya//
Thankyou Rumya.
என் அப்பாவை நினைத்து கொண்டேன். கண்கள் பனித்தன. அப்பா அப்பா தான். தந்தையோடு கல்வி போம் என்பது என் வாழ்வில் உண்மை ஆயிற்று. நன்றி ஷைலஜா.
ReplyDeletewww.vedantavaibhavam.blogspot.com