பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே
இனிதான தமிழர்திருநாளாம் இதற்கு
ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!
பச்சைவயல் முழுதும் காண் செந்நெல்மணிகள்- அங்கு
பகலவனை சேவிக்கும் பலதலைகள்
இச்சகத்தில் உழவர்கள் உழைப்பதுவேயின்றி நம்
உணவுக்கு வழியுண்டோ சொல்வாய் பெண்ணே!
வருடத்தில் ஒருநாளாய் வருமிந்தத் திருநாள்
தரும் வாழ்வில் என்றுமே இன்பம் பலநாள்
திருவெனவே திகழும் மாதருடன் பலரும்
பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!
மங்கலத்தமிழர்கள் மனம் மகிழ்ந்திடவே
எங்கும் அன்பும் ஆனந்தமும் நிறைந்திடவே
பொங்கலோபொங்கல் என்றே கூவிடுவோம்
தங்கிடும் பொலிவுடன் நாம் வாழ்ந்திடுவோம்!
Tweet | ||||
ஹாப்பி பொங்கல்
ReplyDeleteஅன்புடன்
மங்களுர் சிவா
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களை எழுதியதில் பிடித்தது தொடர் விளையாட்டில் பதிவு எழுத அழைத்துள்ளேன்.
நன்றிகளுடன்
அரைபிளேடு.