மார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம் என்பது அனைவரும் அறிந்த தகவல் தான்.

திரும்பத் திரும்ப ஆண்டாள் எழுதிய திருப்பாவை நாச்சியார் திருமொழி பற்றி
எழுதுவதிலிருந்து சற்று வித்தியாசமாய் ஏதும் யோசிக்கத் தோன்றிய போது
வழக்கம் போல சந்தேகம் ஒன்று எழுந்தது.

பதிவில் அமர்ந்திருக்கும் பஞ்சவர்ணக் கிளி வேறு பார்வையைக் கவர்ந்தது.
சந்தேகம் என்னவென்றால்...
அதாவது ஆண்டாளின் கரத்தில் கிளி ஏன் அமர்ந்திருக்கிறது என்பது தான் அது.
மீனாட்சி கரத்திலும் உண்டு. அதற்கும் காரணம் சரி வரத் தேவையாக இருக்கிறது.
கிளி நாம் சொல்வதை திரும்பச் சொல்லும் என்பதால் என்று சிலர் சொல்கிறார்கள். கிளி சுகப்ரம்மமுனி அதாவது சிவன் பார்வதிக்கு வேதமறையை கூறியபோது குகையில் மறைந்திருந்து கேட்டது.அதனால் வேதம் அறிந்தபட்சி என்பதாலா அல்லது அரங்கவிமானம் காவேரி மண்புதையலில் மூழ்கி காடுகளால் சூழப்பட்டுக்கிடந்தபோது அங்கிருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்த கிளி ஒன்று அதனைப்பற்றி அங்கு வேட்டைக்கு வந்த அரசனிடம் தெரிவித்து கோயிலை மீட்டதாலா........

கிளியிடம் ஆண்டாள் தூதுவிட்டபாசுரம் இருக்கிறதா என்ன குயில் மேகம் என்று பலவற்றை அவள்கண்ணனிடம் தனக்காக தூது அனுப்பியதாகமட்டுமே படித்த நினைவு.
பறவைகளில் கிளி சைவம் என்கிறார்கள் வேறுபறவை அப்படி உண்டா எனதெரியவில்லையே!
சொல்லவல்லாயோ கிளியே என்று பாரதி பாடுகிறார்! கிளியையே கேட்டுவிட வேண்டியதுதானா:)
என் சந்தேகத்தை தீர்க்கவல்ல அறிஞர் பெருமக்கள் யாரோ, வாருங்கள் , வந்து சற்றே விளக்குங்கள் நன்றி!


திரும்பத் திரும்ப ஆண்டாள் எழுதிய திருப்பாவை நாச்சியார் திருமொழி பற்றி
எழுதுவதிலிருந்து சற்று வித்தியாசமாய் ஏதும் யோசிக்கத் தோன்றிய போது
வழக்கம் போல சந்தேகம் ஒன்று எழுந்தது.

பதிவில் அமர்ந்திருக்கும் பஞ்சவர்ணக் கிளி வேறு பார்வையைக் கவர்ந்தது.
சந்தேகம் என்னவென்றால்...
அதாவது ஆண்டாளின் கரத்தில் கிளி ஏன் அமர்ந்திருக்கிறது என்பது தான் அது.
மீனாட்சி கரத்திலும் உண்டு. அதற்கும் காரணம் சரி வரத் தேவையாக இருக்கிறது.
கிளி நாம் சொல்வதை திரும்பச் சொல்லும் என்பதால் என்று சிலர் சொல்கிறார்கள். கிளி சுகப்ரம்மமுனி அதாவது சிவன் பார்வதிக்கு வேதமறையை கூறியபோது குகையில் மறைந்திருந்து கேட்டது.அதனால் வேதம் அறிந்தபட்சி என்பதாலா அல்லது அரங்கவிமானம் காவேரி மண்புதையலில் மூழ்கி காடுகளால் சூழப்பட்டுக்கிடந்தபோது அங்கிருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்த கிளி ஒன்று அதனைப்பற்றி அங்கு வேட்டைக்கு வந்த அரசனிடம் தெரிவித்து கோயிலை மீட்டதாலா........

கிளியிடம் ஆண்டாள் தூதுவிட்டபாசுரம் இருக்கிறதா என்ன குயில் மேகம் என்று பலவற்றை அவள்கண்ணனிடம் தனக்காக தூது அனுப்பியதாகமட்டுமே படித்த நினைவு.
பறவைகளில் கிளி சைவம் என்கிறார்கள் வேறுபறவை அப்படி உண்டா எனதெரியவில்லையே!
சொல்லவல்லாயோ கிளியே என்று பாரதி பாடுகிறார்! கிளியையே கேட்டுவிட வேண்டியதுதானா:)
என் சந்தேகத்தை தீர்க்கவல்ல அறிஞர் பெருமக்கள் யாரோ, வாருங்கள் , வந்து சற்றே விளக்குங்கள் நன்றி!

Tweet | ||||
பேசுவது கிளியா தெரியலை, ஆனால் படங்களில்(அழகு)கொஞ்சுகிறது கிளி(கள்)!
ReplyDelete//சந்தேகம் என்னவென்றால்...
அதாவது ஆண்டாளின் கரத்தில் கிளி ஏன் அமர்ந்திருக்கிறது என்பது தான் அது.
மீனாட்சி கரத்திலும் உண்டு. அதற்கும் காரணம் சரி வரத் தேவையாக இருக்கிறது.//
ஆண்டாளுக்கு கிளி ஏன்?
கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக, கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு. பக்தர்கள் தங்கள் கோரிக்கையை ஆண்டாளிடம் சொல்லும் போது, அதைக் கேட்கும் கிளி, திரும்பத்திரும்ப அவளிடம் நினைவுபடுத்துமாம். இவ்வகையில், நமது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பார்கள். மதுரையில் மீனாட்சி கிளி வைத்திருக்கிறாள். நாத்தனார் பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டாளுக்கும் கிளியை சீதனமாகக் கொடுத்தாகவும் வேடிக்கையாகச் சொல்வார்கள்.
*** *** ***
ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் இன்னொரு கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.
------------------------------------
//என் சந்தேகத்தை தீர்க்கவல்ல அறிஞர் பெருமக்கள் யாரோ, வாருங்கள் , வந்து சற்றே விளக்குங்கள்//
ஹி ஹி(கீ கீ) நான் அறிஞி அல்ல. தேடியதில் இணையத்தில் கிடைத்தது:))!
நன்றி:
http://www.dinamalar.com/anmegamnews_detail.asp?News_id=273&cls=row4&ncat=HIN&ncat1=WRI
http://bsubra.wordpress.com/2007/07/19/
ஷைலஜா!
ReplyDeleteமார்கழி என்றதும் என் நினைவிற்கு முதலில் நீங்கள் தானே வருகிறீர்கள் (3 வருடங்களாய்!) :P :D
உங்கள் எழுத்தை நான் பாராட்டும் தகுதி இன்னும் பெறவில்லை.
Informative.
அன்புடன்,
ஷக்தி
கோதை கையில் கிளி அழகோ அழகுக்கா.. ஆண்டாள் தன்னிடம் உள்ள கிளியைத்தானே ஒவ்வொரு வருடமும் அரங்கனுக்கும், திருமலையானுக்கும், கள்ளழகனுக்கும் கொடுத்து அனுப்புறா..
ReplyDeleteஆண்டாள் கையில் ஏன் கிளி?? ஒருவேளை கிளியிடம் கண்ணனின் நாமத்தை சொல்லித் தந்தால் எந்நேரமும் அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும்.. காதுக்கும் இனிமையாக இருக்கும் என்று ஆண்டாள் நினைத்திருப்பாளோ :)
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDeleteபேசுவது கிளியா தெரியலை, ஆனால் படங்களில்(அழகு)கொஞ்சுகிறது கிளி(கள்)!
>>>>>வாங்க ராமல்ஷ்மி கிளின்னாலே அழகுதானே அதான் கொஞ்சுகிறதோ என்னவோ!!
>ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக, கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். >>>
ஓ அப்படி இருக்குமோ
>>>>ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக, கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு. பக்தர்கள் தங்கள் கோரிக்கையை ஆண்டாளிடம் சொல்லும் போது, அதைக் கேட்கும் கிளி, திரும்பத்திரும்ப அவளிடம் நினைவுபடுத்துமாம். இவ்வகையில், நமது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பார்கள். மதுரையில் மீனாட்சி கிளி வைத்திருக்கிறாள். நாத்தனார் பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டாளுக்கும் கிளியை சீதனமாகக் கொடுத்தாகவும் வேடிக்கையாகச் சொல்வார்கள்.
>>>>>>>>>>>>>>>
சரியான தகவல் ராமலஷ்மி! நன்றி மிக .
<<<
ஹி ஹி(கீ கீ) நான் அறிஞி அல்ல. தேடியதில் இணையத்தில் கிடைத்தது:))!
நன்றி:>>>
அரிதான தகவலக்ளைத் தந்து இருக்கிறீர்கள் அதை அறிந்து தந்தமைக்கு நன்றி!
Shakthiprabha said...
ReplyDeleteஷைலஜா!
மார்கழி என்றதும் என் நினைவிற்கு முதலில் நீங்கள் தானே வருகிறீர்கள் (3 வருடங்களாய்!) :P :D
உங்கள் எழுத்தை நான் பாராட்டும் தகுதி இன்னும் பெறவில்லை.
Informative.
அன்புடன்,
ஷக்தி
3:26
>>.ஷக்தீஈஈஈஈஈ உன் வளைக்கரம் இப்போதாவது இந்த வலைச்சரத்திற்குள் நுழைந்ததா தோழி! என்னது என் எழுத்தைப்பாராட்டும் தகுதியா,,,,,காமெடிகீமடி பண்லயே என்னை!! வருகைக்குநன்றி ஷக்தி,,
நீயும் பதிவுகள் எழுத ஆரம்பிசிச்ட்டியா தகவல் சொல்லு என்ன நானும் படிச்சி கருத்து சொல்றேன்!
Raghav said...
ReplyDeleteகோதை கையில் கிளி அழகோ அழகுக்கா.. ஆண்டாள் தன்னிடம் உள்ள கிளியைத்தானே ஒவ்வொரு வருடமும் அரங்கனுக்கும், திருமலையானுக்கும், கள்ளழகனுக்கும் கொடுத்து அனுப்புறா..
4:02 PM
Raghav said...
ஆண்டாள் கையில் ஏன் கிளி?? ஒருவேளை கிளியிடம் கண்ணனின் நாமத்தை சொல்லித் தந்தால் எந்நேரமும் அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும்.. காதுக்கும் இனிமையாக இருக்கும் என்று ஆண்டாள் நினைத்திருப்பாளோ :)
4:04 PM
>>>>>>>>>>>>>>>>>>>>
வரதராஜபக்தனுக்கு நல்வரவு!!!
ஆண்டாள் கிளி விவரம் இன்னமும் உனக்குதெரிஞ்சிருக்குமே தம்பி ..வில்லிபுத்தூர்வீரன் அல்லவா ராகவ்!! இன்னும் தகவல்கள் அறியத்தரவேண்டும்
வருகைக்கும்கருத்துக்கும் நன்றி
லஜா லஜா ஷைலஜாஆ...,
ReplyDeleteநான் ஒரு வழியா ப்ராஜெக்ட் முடிச்சு, மூச்சு விட்டாச்சு. இனி எழுதலாமான்னு சின்ன எண்ணம். எதானும் எழுதுவேன். பழைய எழுதினது எல்லாம் என் ப்ளாகில் சேர்க்க எண்ணம்.
எழுதணம்ன்னு மனசுக்குள்ள ஆசை நிறைய கீது... ஆனா கை இன்னும் வர்ல. பழக்கம் விட்டுப்போச்சு :))) hehe
ஆன்மீகம் சம்பந்தமா கூட எழுத ட்ரை பண்றேன். நீங்க கட்டாயம் வாங்க.
I am gonna add ur blog for following.
and...
u better add mine :grrrr:
இல்லாட்டி....
I still aint familiar with blogging and behaviour codes here.
உங்க ப்ளாக் என்பதால் தைரியமாய் ஓவராய் உளறிவிட்டேன் :)))))))
அன்புடன்,
ஷக்தி
ராமலக்ஷ்மி அக்கா சொன்னது சுவையான தகவல்!
ReplyDeleteஇந்தக் கிளி என்பது ஒரு Myth தான்-ஷைலுக்கா! அதற்கு இலக்கிய/புராண விளக்கம் கிடையாது!
அந்தக் காலத்தில் பொதுவா பெண்களுக்குரிய விளையாட்டுப் பொருள்களில் கிளியும் கிளிக்கூண்டும் உண்டு! வீட்டில் கிளி பாத்து பாத்து வளப்பாங்க! பூனை வராமல் இருக்கணும்!
கிளி உற்ற தோழன்/தோழியும் கூட! ஒன்றைச் சொல்லிக் கொடுத்தா அதையே பேசிக்கிட்டு இருக்கும்!
ஆண்டாளோ காப்பு மறந்தறியேன், கண்ணனே என்றிருப்பேன்-ன்னு பாடியவள்! தான் உண்ணும் நேரத்தில் எப்படிக் கண்ணா-ன்னு கூப்பிட முடியும்? அதான் கிளியைக் குழுப் பதிவில் சேர்த்துட்டா! கண்ணன் பாட்டு குழுப்பதிவில் நான் பதிவு போடாவிட்டாலும், நீங்க யாராச்சும் ஒருத்தர் போட்டுக்கிட்டே இருக்கீங்க-ல்ல! அது போல! :)
கிளி ஜோசியம் போலத் தான் இதுவும்! ஒரு சுவையான Myth! கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டில் எப்படி மனம் மயங்குதோ, அது போலவே கிளி சொல்லும் கண்ணன் நாமத்திலும் மனம் மயங்குது!
ReplyDeleteஆண்டாள் கிளி விடு தூது எழுதலை! ஒன்லி மேக விடு தூது, குயில் விடு தூது! கிளி சொன்னதை மட்டுமே தான் சொல்லும்! சமயத்தை அனுசரித்துப் பேசத் தெரியாது! அதைத் தூதா அனுப்பி, அது கண்ணன் வீட்டில், வருங்கால மாமியார் கிட்ட மாட்டிக்கிட்டு ஏதாச்சும் உளறிடுச்சின்னா? அதான் நோ கிளி விடு தூது! :)
சுகப் பிரம்ம ரிஷி தான் கையில் கிளியாய் இருக்கிறார் என்பதற்குப் புராணக் குறிப்பு ஏதுமில்லை!
ReplyDeleteகிளி விடு தூதும் இல்லை!
இடிந்த அரங்கன் கோயிலைத் தர்மவர்மனுக்கு கிளி தான் காட்டிக் கொடுத்தது! கிளி மண்டபம் அதான் அரங்கத்தில் இருக்கு! ஆனா அதுக்காக எல்லாம் கிளியை ஆண்டாள் வச்சுக்கலை! அப்படிப் பார்த்தால் மீனாட்சி கையிலும் இருக்கே! அவளும் அண்ணன் கோயிலைக் காட்டிய கிளி என்றா வச்சிருக்கா? :)
பெண்ணின் உற்ற தோழி கிளி! காதல் நோய் தலைக்கேறிடிச்சி-ன்னா, பெண்ணும் திரும்பத் திரும்ப அவனையே சொல்லிக்கிட்டு இருப்பா! கிளியும் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கும்! So they make good friends! :)
வேற யார்கிட்டவாச்சும் காதலன் பேரை உளறிக்கிட்டு இருந்தா, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போயிருவாங்க! அடப் போம்மா வேற வேலையில்ல-ன்னு! ஆனா கிளி அப்படிப் பண்ணாது! அதான்! :)
அடியார்கள் கோவிந்தா கோவிந்தா என்று கத்துவதை கோயில் நடை சாத்தின பின்பும் கிளி கத்திக்கிட்டு இருக்கும்! அது தானே அவளுக்கும் வேணும்? அதான் கிளி!
(பிகு: இது நல்ல ஐடியாவா இருக்கே...
கிளி வளர்த்து, பின்னூட்டம் போடச் சொல்லிக் கொடுத்தா ஜூப்பரு! எல்லா நண்பர்களுக்கும் பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருக்கும்! என்னாக்கா சொல்றீங்க? :)
கிளியைத் தூது விடலையே தவிர...ஆண்டாள் எல்லே இளங் கிளியே-ன்னு கிளியை நன்றி மறக்காமப் பாடுறா..
ReplyDeleteகூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்
-நாச்சியார் திருமொழி
ஷை,
ReplyDeletereligious explanations தாண்டி, இன்னொரு விளக்கம் (dumb thought?) எனக்குத் தோன்றுகிறது.
நம் உடலும், இப்பிரபஞ்சமும் கூட பஞ்சபூதங்களாலானது. பஞ்ச உலோகம் என்பதை உபயோகித்து பூஜிப்பதன் நோக்கமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.
ஆக, பஞ்ச வர்ணத்தில் இருக்கும் ஒரே பட்சி/ப்ராணி கிளி தான். அதை symbolic ஆக காண்பிக்கத்தான் இருக்குமோ?
கற்பனைக் குதிரையை ரொம்ம்ம்ம்ம்ப தட்டிவிட்டுட்டேன். ஒரேடியா பறந்துடுச்சு hehe :D
Shakthiprabha said...
ReplyDeleteலஜா லஜா ஷைலஜாஆ...,>>>>>
தி தி ஷக்தி!!!!!(என்னவோ திக்குவாய்ப்பெண்மாதிரி இருக்கா உனக்குப்போட்டியா சொலல்ணும்னு ஆரம்பிச்ச விபரீதம் இது!!!)))))
>>>நான் ஒரு வழியா ப்ராஜெக்ட் முடிச்சு, மூச்சு விட்டாச்சு. இனி எழுதலாமான்னு சின்ன எண்ணம். எதானும் எழுதுவேன். பழைய எழுதினது எல்லாம் என் ப்ளாகில் சேர்க்க எண்ணம்.>>>>
முதல்ல அதப்பண்ணு......கடல் அளவுதிறமை வச்சிட்டு கல்மாதிரி உக்காட்ந்திட்டே இருக்கே நீ! ப்ராஜக்ட் ஆச்சு இல்ல வலைல வந்து கலைப்பணி அல்லது கலகலக்கும் பணி செய்யவேண்டியதுதானே சீக்கிரமா கமான் க்விக் க்விக்!
>>>>எழுதணம்ன்னு மனசுக்குள்ள ஆசை நிறைய கீது... ஆனா கை இன்னும் வர்ல. பழக்கம் விட்டுப்போச்சு :))) hehe
ஆன்மீகம் சம்பந்தமா கூட எழுத ட்ரை பண்றேன். நீங்க கட்டாயம் வாங்க.>>>>
ஷக்தி நீ ஒரு சகலகலாவல்லி என எனக்குத்தெரியும் உலகத்துக்கும் தெரியணும் முதல்ல திருவண்ணாமலை பதிவை அளித்து சிறப்போடு ஆரம்பி! வாழ்த்துக்கள்!
I am gonna add ur blog for following.
and...
u better add mine :grrrr:>>>>
will do, lol:)
இல்லாட்டி....
I still aint familiar with blogging and behaviour codes here.>>>>
ஹஹா நம்ம ஸ்மைல் கண்டா தாங்கள் கூல் ஆகிடுவீங்கன்னு தெரியும்மா ......2009ல ஷக்தி ப்ரபாதான் அதிகம் பதிவுகள் இடவேண்டும்
///தி தி ஷக்தி!!!!!(என்னவோ திக்குவாய்ப்பெண்மாதிரி இருக்கா //
ReplyDeletelol I remember our good old days of vethu chat plus useful posts :D :D :D
Forgive me for english input, my speed is doubled when I type in english.
//முதல்ல திருவண்ணாமலை பதிவை அளித்து சிறப்போடு ஆரம்பி! வாழ்த்துக்கள்!//
நீங்க சொல்லிட்ட அப்பீல் ஏது??!? yes maaam!!! :salute:
//2009ல ஷக்தி ப்ரபாதான் அதிகம் பதிவுகள் இடவேண்டும்//
முயற்சிக்கிறேன் ஷை. இங்கு வலைப்பதிவுகளில் நிறைய பேர் கணக்கின்றி இடுகைகள் (நல்ல இடுகைகள்) இடுகிறார்கள். நான் இன்னும் என் எழுத்தை செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும்.
என்னுடைய பதிவுகள் விளையாட்டுத்தனமாய் இல்லாமல், சிரத்தையாய் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முயற்சிக்கிறேன்.
///நம்ம ஸ்மைல் கண்டா தாங்கள் கூல் ஆகிடுவீங்கன்னு தெரியும்மா//
HEHEHE :D :D :D
அப்புறம் சகலகலாவல்லி அது இதுன்னு சொல்லிருக்கீங்க.... நீங்கள் புகழ்வதில் வள்ளல், அதுக்கெல்லாம் நான் தகுதியான்னு தெரியாது...but...எனக்கு வெக்கமா இருக்கு, so dont embarass me, விட்ருங்க :embarassed: :P :D
ஒரே ஒரு மறுமொழியானும் related ஆக இருக்கணம்ன்னு யோசிச்சு பஞவர்ணம் பத்தி எழுதிருக்கேன். கேனத்தனமா இருந்தாலும், என் முயற்சியை பாராட்டுங்க :))))))))))
அக்கா, கிளி பேசும் தான்.. ஆனா இங்க ஆண்டாளிடம் மட்டுமே பேசுகிறது.
ReplyDeleteதிருவில்லிபுத்தூரில், ஆண்டாளுக்கு தினமும் கிளி செய்து தருவார்கள்..
கிளியின் மூக்கு - மாதுளம் பூ
உடல் - மரவல்லி இலை
இறக்கைகள் - நந்தியாவட்டை இலை, பனை ஓலை
கிளியின் வால் - வெள்ளை அரளி & செவ்வரளி மொட்டு
இதையெல்லாத்தையும் வாழை நார் வைச்சு கட்ட குறைந்தது ஐந்து மணி நேரமாவது ஆகும்.
நல்ல கேள்வி; நல்ல பதில்கள் :)
ReplyDeleteகவிநயா said...
ReplyDeleteநல்ல கேள்வி; நல்ல பதில்கள் :)
9:20 PM
<<<>>>>>வாங்க கவிநயா. நன்றிவரவுக்கும் கருத்துக்கும்
Shakthiprabha said...
ReplyDeleteஷை,
religious explanations தாண்டி, இன்னொரு விளக்கம் (dumb thought?) எனக்குத் தோன்றுகிறது.
நம் உடலும், இப்பிரபஞ்சமும் கூட பஞ்சபூதங்களாலானது. பஞ்ச உலோகம் என்பதை உபயோகித்து பூஜிப்பதன் நோக்கமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.
ஆக, பஞ்ச வர்ணத்தில் இருக்கும் ஒரே பட்சி/ப்ராணி கிளி தான். அதை symbolic ஆக காண்பிக்கத்தான் இருக்குமோ?
கற்பனைக் குதிரையை ரொம்ம்ம்ம்ம்ப தட்டிவிட்டுட்டேன். ஒரேடியா பறந்துடுச்சு hehe :D
3:37 PM
>>>>>>>>>>>>>>>>
பஞ்சகல்யாணியோ உன் குதிரை!!:)கருத்துக்களை எண்ணங்களைபகிர்ந்துகொண்டால்தானே ஏதாவது விடைகிடைக்கும் ஷக்தி! நன்றி உன் கருத்துக்கும்
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteராமலக்ஷ்மி அக்கா சொன்னது சுவையான தகவல்!
இந்தக் கிளி என்பது ஒரு Myth தான்-ஷைலுக்கா! அதற்கு இலக்கிய/புராண விளக்கம் கிடையாது!
அந்தக் காலத்தில் பொதுவா பெண்களுக்குரிய விளையாட்டுப் பொருள்களில் கிளியும் கிளிக்கூண்டும் உண்டு! வீட்டில் கிளி பாத்து பாத்து வளப்பாங்க! பூனை வராமல் இருக்கணும்!
கிளி உற்ற தோழன்/தோழியும் கூட! ஒன்றைச் சொல்லிக் கொடுத்தா அதையே பேசிக்கிட்டு இருக்கும்!
ஆண்டாளோ காப்பு மறந்தறியேன், கண்ணனே என்றிருப்பேன்-ன்னு பாடியவள்! தான் உண்ணும் நேரத்தில் எப்படிக் கண்ணா-ன்னு கூப்பிட முடியும்? அதான் கிளியைக் குழுப் பதிவில் சேர்த்துட்டா! கண்ணன் பாட்டு குழுப்பதிவில் நான் பதிவு போடாவிட்டாலும், நீங்க யாராச்சும் ஒருத்தர் போட்டுக்கிட்டே இருக்கீங்க-ல்ல! அது போல! :)
12:27 PM
>>>>>>>>>
நன்றி ரவி! கண்ணன்பாட்டுகுழுல நீங்க பதிவு போடாட்டாலும் நான் போடறது கானமயிலாடக்கண்டிருந்த வான்கோழிதான்!
விளக்கத்துக்கு ரொம்ப நன்றி
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteகிளி ஜோசியம் போலத் தான் இதுவும்! ஒரு சுவையான Myth! கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டில் எப்படி மனம் மயங்குதோ, அது போலவே கிளி சொல்லும் கண்ணன் நாமத்திலும் மனம் மயங்குது!
ஆண்டாள் கிளி விடு தூது எழுதலை! ஒன்லி மேக விடு தூது, குயில் விடு தூது! கிளி சொன்னதை மட்டுமே தான் சொல்லும்! சமயத்தை அனுசரித்துப் பேசத் தெரியாது! அதைத் தூதா அனுப்பி, அது கண்ணன் வீட்டில், வருங்கால மாமியார் கிட்ட மாட்டிக்கிட்டு ஏதாச்சும் உளறிடுச்சின்னா? அதான் நோ கிளி விடு தூது! :)
12:38 PM
>>>>>>>>>>>>>>>>>ஆனா ஒரு பொண்ணைமட்டும் கிளிபோலவளர்த்தேன் என்பார்கள்
இது எதுக்குரவி:):):)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete**** காதல் நோய் தலைக்கேறிடிச்சி-ன்னா, பெண்ணும் திரும்பத் திரும்ப அவனையே சொல்லிக்கிட்டு இருப்பா! கிளியும் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கும்! So they make good friends! :)
வேற யார்கிட்டவாச்சும் காதலன் பேரை உளறிக்கிட்டு இருந்தா, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போயிருவாங்க! அடப் போம்மா வேற வேலையில்ல-ன்னு! ஆனா கிளி அப்படிப் பண்ணாது! அதான்! :)
அடியார்கள் கோவிந்தா கோவிந்தா என்று கத்துவதை கோயில் நடை சாத்தின பின்பும் கிளி கத்திக்கிட்டு இருக்கும்! அது தானே அவளுக்கும் வேணும்? அதான் கிளி!**********
ரூம்போட்டு சிந்திக்கிறீங்களோ பிரமாதம் ப்ரதர்!
(****பிகு: இது நல்ல ஐடியாவா இருக்கே...
கிளி வளர்த்து, பின்னூட்டம் போடச் சொல்லிக் கொடுத்தா ஜூப்பரு! எல்லா நண்பர்களுக்கும் பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருக்கும்! என்னாக்கா சொல்றீங்க? :)
***************
:):):):)
12:51 PM
சூடி கொடுத்தவள் ஆண்டாளின் ஆலயத்தை பார்க்க படிக்கின்ற நாட்களில் சென்ற அனுபுவம் உண்டு. கிளி தூது போன கதை தெரியாது. பச்சைக் கிளியா, பஞ்ச வர்ண கிளியா தூது சென்றது? பார்க்க அழகாக இருக்கின்றது. அழகை தூதுவிட அருமையான பறவை.
ReplyDeleteகாரூரன் said...
ReplyDeleteசூடி கொடுத்தவள் ஆண்டாளின் ஆலயத்தை பார்க்க படிக்கின்ற நாட்களில் சென்ற அனுபுவம் உண்டு. கிளி தூது போன கதை தெரியாது. பச்சைக் கிளியா, பஞ்ச வர்ண கிளியா தூது சென்றது? பார்க்க அழகாக இருக்கின்றது. அழகை தூதுவிட அருமையான பறவை.
7:31 PM
>>>>>>>>>>>>>>>>>>>>
வாங்க காரூரன்
பச்சைக்கிளிபஞ்சவர்ணக்கிளி இரண்டில் எது எனத்தெரியவில்லை!
அழகைதூதுவிட அருமையான பறவைதான் இரட்டிப்பாய் சொல்லிவிடுமேகிளிகள்! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.