கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.
அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த 12 ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை 4நாட்கள் திருவிழாபோலக்கொண்டாடி வருகிறது சென்னையில் உள்ள வானவில்பண்பாட்டு மையம்.
இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஜதிபல்லக்கில் பாரதியின் சிலையை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விழாவையொட்டி சிறந்த கவிஞர் ஒருவருக்குப் பொற்கிழி வழங்கி சால்வை போர்த்துவார்கள்.
இந்த ஆண்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் இந்தநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பாரதியின் உருவச்சிலையினை பல்லக்கில் அமர்த்தி பாரதீய ஜனதாகக்கட்சித்தலைவர்களில் ஒருவரான திரு இலகணேசன் சட்டமன்ற உறுப்பினர் நடிகர் எஸ்விசேகர் கவிஞர் திருவைபாபு மற்றும்கவிஞர்பூவைவாகீசன் ஆகியோர் சுமந்தார்கள்.
ஜதிப்பல்லக்கு பார்த்தசாரதி கோயில் வரை ஊர்வலம் வந்தது.
கோவில் முகப்பில் விழா தொடங்கியது.
பாரதிகுலத்தோன்றல் திருமதி லலிதாபாரதி கவிஞர் வாலிக்கு பாரதிவிருதை வழங்கினார்
நிறைய கவிஞர்களும் பாரதி அன்பர்களும் இதில்கலந்துகொண்டனர்.
ஆண்டுதோறும் பாரதி திருவிழாநடத்தும் வானவில்பண்பாட்டு மையத்தின் தலைவராக இருப்பவர் வழக்கறிஞர் ரவி.இவர் செய்திவாசிப்பாளராயிருந்த ஷோபனா அவர்களின் கணவர்.
ஜதிப்பல்லக்கு ஊர்வலம் நடத்த உங்களுக்கு எப்படி எண்ணம் தோன்றீயதெனக்கேட்டபோது அவர் சொன்னது.
:கவிபாரதி தனது இறுதிக்காலத்தில் வறுமையில் வாழ்ந்தார். அவரது நண்பர்கள் அவரிடம் எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு உதவிகோரி கடிதம் எழுதும்படி ஆலோசனை சொன்னார்கள்.
இதற்கு பாரதியின் தன்மானம் இடம்தரவில்லை. இருந்தாலும் நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாய் தனது புத்தகங்களை பிரான்சிலும் இங்கிலாந்திலும் அச்சிட்டு வெளியிடப் பொருளுதவி கேட்டு சீட்டுக்கவி எழுதி அனுப்பினார்.
அந்த கவிதையில் ஜதிப்பல்லக்கு பொற்குவை த்ந்து மரியாதை தரவேன்டும் என்றும் கூறி இருந்தார். பாரதி தனது வாழ்க்கையில் தனக்காகக் கேட்டது இது ஒன்றுதான் ஆனால் அவருக்கு எட்டயபுரம் சமஸ்தானத்திலிருந்து பதிலே வரவில்லை.
எனவேதான் நாங்கள் பாரதியின் விருப்பத்தைப்பூர்த்தி செய்ய அவரது பிறந்த நாளில் ஜதிப்பல்லக்கில் அவரது சிலையை வைத்து ஊர்வலம் செய்கிறோம். அவருக்கு சால்வையும் பொற்குவையும் வழங்கியபின் அதனை ஒரு மூத்தகவிஞருக்கு தருகிறோம்:
Tweet | ||||
அப்படியா செய்தி,
ReplyDeleteசெய்திக்கு நன்றி, ஷைலஜாக்கா.
அன்று புரட்சிக்கு கவி சமைத்த கவிஞன் புகழ்பாட ஊடகங்கள் இல்லை. அவன் நினைவாக இன்று சில கவிஞர் வாழ்த்தப்படுவது வரவேற்கத்தக்கது.
ReplyDeleteநெகிழ்வான பதிவு ஷைலாக்கா. வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ஜீவா காரூரான் மற்றும் மின்னல்.
ReplyDeleteஇருந்தபோது நிறைவேறாத மகாகவியின் ஆசையை இறந்தபின்பாவது நிறைவேற்றி அவரது ஆன்மா சாந்தியடைய முயற்சிப்பது பாராட்டவேண்டிய ஒன்று எனத்தோன்றியதால் இந்தப்பதிவினை இட்டேன் நன்றி வருகைக்கும் உங்களின் மேலான கருத்துக்களுக்கும்!
வாழ்ந்தபின் இத்தனை புகழ்கொழிக்கும் பாரதி, வாழும் போது வறுமையில் வாழ்ந்தது கொடுமை.
ReplyDeleteஎனக்குத் தெரியாதது பற்றி நிறைய சொல்கிறீர்கள் ஷை. :bow:
அன்புடன்,
ஷக்தி
இதுவரை தெரியாத ஒன்று...தகவலுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி அக்கா ;)
ReplyDeletehakthiprabha said...
ReplyDeleteவாழ்ந்தபின் இத்தனை புகழ்கொழிக்கும் பாரதி, வாழும் போது வறுமையில் வாழ்ந்தது கொடுமை.
எனக்குத் தெரியாதது பற்றி நிறைய சொல்கிறீர்கள் ஷை. :bow:
அன்புடன்,
ஷக்தி
<<<<<<
ஆமா ஷக்தி பாரதி வாழ்ந்த காலத்தில் அவருடைய அருமை பலருக்குத்தெரிந்திருக்கவில்லை.
ஆனால் வறுமையிலும் செழுமையான செந்தமிழ்க்கவிதைகளைப்படைத்தவன் பாரதி! வீரமிகு எழுச்சிப்பாடலக்ள் பக்திப்பாடல்கள் காதல்பாடல்கள் என எழுதின பாரதி ஒரு தாலாட்டுப்பாட்டுக்கூட பாடவில்லை! ஆமாம் அவனுக்கு தன் தாய் நாடு தூங்கிவிடக்கூடாது என்பதில் மிக்க அக்கறை.பாரதி பற்றீ நிறைய இருக்கிறது சொல்ல..பார்க்கலாம் நேரமும் எனக்கான அந்த பாக்கியமும் கிடைத்துவிட்டால் எழுதிக்கொண்டே போகலாம் நன்றி ஷக்தி வருகைக்கு
ஷைலஜா,
ReplyDeleteபாரதிக்கு பல்லக்கு இப்பொவாவது தள்ளிப் போடாம கிடைச்சுதேன்னு பரவசப் பட்டு பாரதியையும் பல்லக்கையும் பிரிக்காம தலைப்பில் வெச்சிருக்கீங்களா?
ரெண்டு செக்கண்ட் என்னன்னு புரியாம கொழம்பி (அது என்ன புதுசா!!) அப்புறமா தெளிஞ்சேனக்கும்!
கோபிநாத் said...
ReplyDeleteஇதுவரை தெரியாத ஒன்று...தகவலுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி அக்கா ;)
8:54 PM
>>>>>அப்படியா கோபி? சென்னையில் பலருக்கு தெரிஞ்சிருக்கலாம்... அனைவரும் அறியும் ஆவலில் இதனைபதிவிட்டேன் நன்றி கோபி
Shakthiprabha said...
ReplyDeleteஷைலஜா,
பாரதிக்கு பல்லக்கு இப்பொவாவது தள்ளிப் போடாம கிடைச்சுதேன்னு பரவசப் பட்டு பாரதியையும் பல்லக்கையும் பிரிக்காம தலைப்பில் வெச்சிருக்கீங்களா?
ரெண்டு செக்கண்ட் என்னன்னு புரியாம கொழம்பி (அது என்ன புதுசா!!) அப்புறமா தெளிஞ்சேனக்கும்!
<<<>>>>>>>>குறும்புதான் ஷக்திக்கு!!!! (இப்போ அக்கடச்சூடும்மா..பாரதியை, பல்லக்கில் தூக்கிவச்சிட்டேன்!
/பாரதிக்கு பல்லக்கு இப்பொவாவது தள்ளிப் போடாம கிடைச்சுதேன்னு பரவசப் பட்டு பாரதியையும் பல்லக்கையும் பிரிக்காம தலைப்பில் வெச்சிருக்கீங்களா?//
ReplyDeleteஇரசித்தேன்!
//வீரமிகு எழுச்சிப்பாடலக்ள் பக்திப்பாடல்கள் காதல்பாடல்கள் என எழுதின பாரதி ஒரு தாலாட்டுப்பாட்டுக்கூட பாடவில்லை! ஆமாம் அவனுக்கு தன் தாய் நாடு தூங்கிவிடக்கூடாது என்பதில் மிக்க அக்கறை.//
ReplyDelete:) ரொம்ப அருமையா சிந்திக்கறீங்க.
நிறைய எழுதுங்க, பாரதியைப் பற்றி.
(ஷக்தியின் குறும்பு மட்டுப்பட்டு ரொம்ப சாதுவாக வெளிவந்தது. அதுக்கே இவ்ளோவா!!! :P )
Shakthiprabha said...
ReplyDelete//வீரமிகு எழுச்சிப்பாடலக்ள் பக்திப்பாடல்கள் காதல்பாடல்கள் என எழுதின பாரதி ஒரு தாலாட்டுப்பாட்டுக்கூட பாடவில்லை! ஆமாம் அவனுக்கு தன் தாய் நாடு தூங்கிவிடக்கூடாது என்பதில் மிக்க அக்கறை.//
ரொம்ப அருமையா சிந்திக்கறீங்க.
நிறைய எழுதுங்க, பாரதியைப் பற்றி.>>>>>>>
ஷக்தி சொல்றா ஷைலஜா அதைக்கேக்கறா(செய்றா:))))
(ஷக்தியின் குறும்பு மட்டுப்பட்டு ரொம்ப சாதுவாக வெளிவந்தது. அதுக்கே இவ்ளோவா!!! )>>>>>
ஷக்தீ (எனர்ஜி) அந்த சாதுத்தனத்திலேயே ஸ்ட்ராங்கா வெளிவந்துருக்கே!!!
10:03 PM
ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDelete/பாரதிக்கு பல்லக்கு இப்பொவாவது தள்ளிப் போடாம கிடைச்சுதேன்னு பரவசப் பட்டு பாரதியையும் பல்லக்கையும் பிரிக்காம தலைப்பில் வெச்சிருக்கீங்களா?//
இரசித்தேன்!
9:59 PM
<<>>>.
வாங்க ஜீவா
ஷக்திப்ரபா இந்தமாதிரி ரசிக்கிறமாதிரி நிறைய எழுதுவாங்க
ஆனா தன்னடக்கம் அதிகம்!
hehe jeeva :)
ReplyDeleteஷை இந்த மாதிரி ஓவர புகழ்ந்து ஜலதோஷம் பிடிக்க செய்வாங்க.
நல்ல கருத்துள்ள சீரியஸ் பதிவில், பதிவுக்கு தொடர்பின்றி ஷைலஜா பற்றி கிண்டல் அடிக்க சுருக் ன்னு மனசு குத்தி தொலைக்குது. ஏதாவது நகைச்சுவை பதிவு போட்டங்கன்னா, அன்னிக்கு மாட்டினாங்க என் கிட்ட. அதுல நிறைய சொல்றேன்.
:)))
இப்போதைக்கு மிச்சவங்களை சென்சிபிளாக பேச வழிவிட்டு, நான் வேடிக்கைப் பார்க்கிறேன். :P
Shakthiprabha said...
ReplyDeletehehe jeeva
ஷை இந்த மாதிரி ஓவர புகழ்ந்து ஜலதோஷம் பிடிக்க செய்வாங்க.
நல்ல கருத்துள்ள சீரியஸ் பதிவில், பதிவுக்கு தொடர்பின்றி ஷைலஜா பற்றி கிண்டல் அடிக்க சுருக் ன்னு மனசு குத்தி தொலைக்குது. ஏதாவது நகைச்சுவை பதிவு போட்டங்கன்னா, அன்னிக்கு மாட்டினாங்க என் கிட்ட. அதுல நிறைய சொல்றேன்.
)>>>>>aahaa! இப்படி ஒரு ப்ளான் இருக்கா? இதுக்காகவே நகைச்சுவைபதிவு சீக்கிரமா இட்டுடப்போறேன்!!!
//இப்போதைக்கு மிச்சவங்களை சென்சிபிளாக பேச வழிவிட்டு, நான் வேடிக்கைப் பார்க்கிறேன்/
பாரும்மா பாரு!.
10:29 PM
பாரதிக்கு மரியாதை. நல்ல விஷயம் செய்கிறார்கள். அறியத் தந்தமைக்கு நன்றி ஷைலஜா.
ReplyDeleteராமலக்ஷ்மி said...
ReplyDeleteபாரதிக்கு மரியாதை. நல்ல விஷயம் செய்கிறார்கள். அறியத் தந்தமைக்கு நன்றி ஷைலஜா.
7:46 AM
>>>>Thankyou somuch for yr kind comments Ramalakshmi
பாட்டுக்கொரு புலவனுக்குத் தகுந்த ஒரு பாராட்டு. அறியத் தந்தமைக்கு நன்றி ஷைலஜாக்கா.
ReplyDeleteகுமரன் (Kumaran) said...
ReplyDeleteபாட்டுக்கொரு புலவனுக்குத் தகுந்த ஒரு பாராட்டு. அறியத் தந்தமைக்கு நன்றி ஷைலஜாக்கா.
3:53 AM
>>>>>>>>>>>>>>>>Thanks Kumaran!
நல்ல செய்திக்கு நன்றி!!!
ReplyDelete