Social Icons

Pages

Monday, June 29, 2015

நாலாயிரத்தை மீட்ட நாதமுனிகள் !




ஸ்ரீமந் நாதமுனிகளின் திருநட்சத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தில் சில இடங்களில் தமிழ்மறை இன்னிசைத்திருவிழா எனக்கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் தாம் தேடிப்பெற்ற ஆழ்வார்களின் பாடல்களுக்கு இசை அமைத்து  அந்த இசை தேவகான அடிப்படையில் அமைத்தவர் நாதமுனிகள்

நாதமுனி  என்பவர் யார் என அறியுமுன்பாக  சற்று பின்னோக்கிப்போவோம்.


இந்தகாலத்தில்  விஷயம் அறிந்தவரை வித்வான், ஆசாரியர்,சுவாமி என்றெல்லாம்   அடைமொழியிட்டு சொல்கிறோம்.உதாரணத்திற்கு உ.வே(உபய வேதாந்த என்பதின் சுருக்கம்) கிருஷ்ணன் சுவாமிகள் என்கிறோம் அவரையே கிருஷ்ண ரிஷிகள் என்று சொல்லமுடியுமோ?

க்ருதயுகத்தில் ரிஷிகள் பலர் இருந்தார்கள்.தவம் செய்யும் சக்தி கொண்டவர்கள்.ஆனால்

ரிஷிகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.

த்ரேதாயுகத்தில் நிறையபேர் யாகம் செய்தார்கள். ஸ்ரீராமனின் முன்னோர்கள்  இக்ஷ்வாகு பகீரதன் போன்றோர் தவமுனிகள்.பகீரத தவம் பற்றி அறியாதார் உண்டா!




ஆனால் தசரதனோ ராமனோ தவம் செய்யவில்லை யாகம் தான் செய்தனர்.ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தார்  ராமபிரான். த்ரேதாயுகத்தில் யாகம் செய்யமுடிந்தது. பிறகு  துவாபரயுகம் செல்லச்  செல்ல ரிஷிகளும் யாகசீலர்களும் குறைந்துவிட்டனர். தர்மர் அச்வமேத யாகம் செய்தார் ஆனால்ஸ்ரீராமர் செய்த அளவு செய்ய இயலவில்லை. த்வாபரயுகத்தில்  ஒருவேதம் மாத்திரம் அறிந்தவர்கள் என்னும் நிலைகுறைவு. த்விவேதிகள் த்ரிவேதிகள் சதுர் வேதிகள்  என்று நிறையபேர் இருந்தார்கள். த்வாபரயுகத்தில்  வியாசபகவான்  வேத கலாசாலை அமைத்து நன்கு வேதத்தை போஷித்தார்.

கலியுகம்  வந்தது. ரிஷிகள் சதுர்வேதிகள் என எல்லாம்  அரிதாகிவிட 

வித்வான்கள்  சுவாமிகள் ஆசாரியார்கள்  என்கிற பட்டம் தான்  இப்போது 

நிற்கிறது.

இப்படிப்பட்ட கலியுகத்தில்  ஒருவர் ரிஷியாக  இருந்தார் 

தவமுனிவராகத்திகழ்ந்தார்!.விஸ்வாமித்ரர்போன்றமுனிவர்களைப்போல 

தேர்ந்த  முனிவராக  இருந்தார்.அவர்தான் நாதமுனி! அவர்தம் பிதாவும் 


முனி..அவர் திருநாமம்  ஈஸ்வரமுனிகள்.

நாதமுனிகள் கிபி 824 ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ; ஆனி மாதம், அனுச நட்சத்திரத்தில் திருவரங்கநாதன் என்னும் இயற்பெயருடன் பிறந்தவர்.
நாதமுனிகள் யோகவித்தை, தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இவரை திருவரங்கநாதமுனிகள் என்று அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று..

காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது வைணவ அடியார்கள் சிலர் கோயில்பெருமாளான மன்னனாரைச் சேவிக்க வந்தனர். அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் ஆராஅமுதே அடியேன் உடலம் எனும் திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர். அதன் இறுதியில் குருகூர்ச் சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் என்ற அடிகளைக் கேட்ட நாதமுனிகள் அடியார்களிடம் ,”அந்த ஆயிரம் பாடல்கள் பற்றி சொல்ல இயலுமா?”என ஆர்வமாகக் கேட்டார்.

அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்ற விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்
.

நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார்.

 அவர்தற்சமயம் மதுரகவிகள் அருளியகண்ணிநுண் சிறுத்தாம்புஎனும் பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளன, மற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்து போயினஎன்று கூறினார். மேலும் கண்ணிநுண் சிறுத்தாம்பு பத்துப் பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும் வழி கூறினார்.

நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறைகண்ணிநுண் சிறுத்தாம்புபாசுரங்களை ஓதினார்.அகம் மகிழ்ந்த நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான்!

பிரபந்தத்தின் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார்.

கலியுகத்தில் ரிஷியாக இருந்த நாதமுனி,அவருக்கு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகள் முன்பாக பரமபதம் அடைந்த நம்மாழ்வார் என்னும் பரம ரிஷியை வரவழைத்து உபதேசம் பெற்று நாலாயிரதிவ்யபிரபந்தம் என்னும் தமிழ்பொக்கிஷத்தை பெற்றுக்கொண்டாரெனில் நமது சித்தாந்தம் தான் எத்தனை உத்தமமானது பாருங்கள்! போட்டி பித்தலாட்டம் இல்லாத தூய்மையான சித்தாந்தம் கொண்டது அல்லவாநம் மதம்!

  

    ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் ‌அனைவரும் பாடிய பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்து முறைப்படுத்தி மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்ற இரு அக்காள் மகன்களை (மருமக்களை) திருவாய்மொழி திவ்யப் பிரபந்தப் பிரச்சாரத்தில் நாதமுனிகள் ஈடுபடுத்தினார். இவர்களிருவரும் தேவகான இசைப்படி திவ்யப் பிரபந்தங்களை இறைவன் முன் பாடி அபிநயித்து மக்களிடம் அவற்றைப் பொருளுடன் பரப்பி வந்தனர் திருகுடந்தைதிவ்ய தேசத்திலிருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிற்கு கிடைக்கும் வழியை நாதமுனிகள் பெற்றார்.


   பின்னர் ,மணவாள மாமுனிகள்நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடுஇராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அருளினார்.


தான் பெற்ற புதையலை அனைவரும் அறியச் செய்தார். பிரபந்த பாடல்களை இனிய இராகம், தாளம் அமைத்தும், அதற்கேற்ற அபிநயம் பிடித்தும் இறைவன் முன் ஆடினார்..


ஸ்வாமி தேசிகன் ஸ்ரீநாதமுனிகளைதாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்என்று போற்றுகின்றார். ஸ்ரீநாதமுனிகள் இப்பிரபந்தங்களைப் பலவேறு திவ்யதேசங்களிலும் பூஜை காலங்களில் பாடுவது என்ற வழக்கத்தை ஏற்படுத்தினார்வைணவத் திருத்தலங்களில் அரையர் சேவை எனப்படும் வழக்கத்திற்கு அடிகோலியவர் ஸ்ரீநாதமுனிகளே ஆவார்.

அரையர் சேவையை முதன்முதலில் தோற்றுவித்தவரும் இவரே! ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே!



ஸ்ரீநாதமுனிகளின் பேரனும் குருபரம்பரையின் முக்கிய ஆசார்யனுமான ஆளவந்தார், தமது ஸ்தோத்ர-ரத்னம் என்ற நூலின் தொடக்கத்தில் மூன்று ஸ்லோகங்களாலும் முடிவில் ஒரு ஸ்லோகத்தாலும் நாதமுனிகளைக் கொண்டாடுகின்றார். ஸ்வாமி தேசிகன், ஆளவந்தார் தமது ஸ்தோத்திரமான ரத்னத்தை ஆசார்ய ஸ்துதி என்ற அழகிய பெட்டகத்தினுள் இட்டுள்ளார் என்று வியக்கிறார்.  

ஆளவந்தார்,

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயமுநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே



என்று ஸ்ரீ நாதமுனிகளைக் கொண்டாடுகின்றார்


நாலாயிரம் பாசுரங்களை ராகத்துடனும் தாளத்துடனும் அபிநயத்துடனும் பாடிய இவர்களின் வழித்தோன்றல்களே “அரையர்கள்என அழைக்கப்பட்டனர்.



“”என் பேரன் யமுனைத்துறைவன் (ஆளவந்தார்) வருவான். அவனுக்கு யோக வித்தையை நீ உபதேசிக்க வேண்டும்என்றும் உய்யக்கொண்டாரிடம் கூறீய நாதமுனிகள், அவரிடம்ரகசியம் வெளியிடாதீர்என்று கூறி, என் அந்திம தசைக்குப் பிறகு, பிறக்கப் போகும் என் பேரன் யமுனைத்துறைவனிடம் வேதாந்த சாரத்தையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ஒப்படைக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.

   

.

ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர்அவருடைய பேரனான யமுனைத்துறைவர்(யாமுனமுனிகள்
 என்ற ஆளவந்தார்) தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.


உய்யக்கொண்டாரும் (ஆளவந்தார் தக்க நேரத்தில் பிறக்காததால்) தனது சீடரான மணக்காலநம்பியிடம்அப்பொறுப்பைஒப்படைத்தார்

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார்.



இசையில் சிறந்தும் சோழமன்னனின் அன்புக்கும் பாத்திரமானவரான ஸ்ரீமந் நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ஸ்ரீராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதி எதிரிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றினார்!

நாதமுனிகள் பணிவுடன் இப்படி அருள்கிறார்!


வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்-ஏறு, எங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார், எம்மை
ஆள்வார் அவரே யரண்.



-


மேலும் படிக்க... "நாலாயிரத்தை மீட்ட நாதமுனிகள் !"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.