ஸ்ரீமந் நாதமுனிகளின் திருநட்சத்திரத்தை
முன்னிட்டு தமிழகத்தில் சில இடங்களில் தமிழ்மறை இன்னிசைத்திருவிழா எனக்கொண்டாடுகிறார்கள்.
ஏனென்றால் தாம் தேடிப்பெற்ற ஆழ்வார்களின் பாடல்களுக்கு இசை அமைத்து அந்த இசை தேவகான அடிப்படையில் அமைத்தவர் நாதமுனிகள்
நாதமுனி என்பவர் யார் என அறியுமுன்பாக சற்று பின்னோக்கிப்போவோம்.
இந்தகாலத்தில் விஷயம் அறிந்தவரை வித்வான், ஆசாரியர்,சுவாமி என்றெல்லாம் அடைமொழியிட்டு சொல்கிறோம்.உதாரணத்திற்கு உ.வே(உபய
வேதாந்த என்பதின் சுருக்கம்) கிருஷ்ணன் சுவாமிகள் என்கிறோம் அவரையே கிருஷ்ண ரிஷிகள்
என்று சொல்லமுடியுமோ?
க்ருதயுகத்தில் ரிஷிகள் பலர்
இருந்தார்கள்.தவம் செய்யும் சக்தி கொண்டவர்கள்.ஆனால்
ரிஷிகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.
த்ரேதாயுகத்தில் நிறையபேர் யாகம்
செய்தார்கள். ஸ்ரீராமனின் முன்னோர்கள் இக்ஷ்வாகு
பகீரதன் போன்றோர் தவமுனிகள்.பகீரத தவம் பற்றி அறியாதார் உண்டா!
ஆனால் தசரதனோ ராமனோ தவம் செய்யவில்லை
யாகம் தான் செய்தனர்.ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தார் ராமபிரான். த்ரேதாயுகத்தில் யாகம் செய்யமுடிந்தது.
பிறகு துவாபரயுகம் செல்லச் செல்ல ரிஷிகளும் யாகசீலர்களும் குறைந்துவிட்டனர்.
தர்மர் அச்வமேத யாகம் செய்தார் ஆனால்ஸ்ரீராமர் செய்த அளவு செய்ய இயலவில்லை. த்வாபரயுகத்தில் ஒருவேதம் மாத்திரம் அறிந்தவர்கள் என்னும் நிலைகுறைவு.
த்விவேதிகள் த்ரிவேதிகள் சதுர் வேதிகள் என்று
நிறையபேர் இருந்தார்கள். த்வாபரயுகத்தில் வியாசபகவான் வேத கலாசாலை அமைத்து நன்கு வேதத்தை போஷித்தார்.
கலியுகம் வந்தது. ரிஷிகள் சதுர்வேதிகள் என எல்லாம் அரிதாகிவிட
வித்வான்கள் சுவாமிகள் ஆசாரியார்கள் என்கிற பட்டம் தான் இப்போது
நிற்கிறது.
வித்வான்கள் சுவாமிகள் ஆசாரியார்கள் என்கிற பட்டம் தான் இப்போது
நிற்கிறது.
இப்படிப்பட்ட கலியுகத்தில் ஒருவர் ரிஷியாக இருந்தார்
தவமுனிவராகத்திகழ்ந்தார்!.விஸ்வாமித்ரர்போன்றமுனிவர்களைப்போல
தேர்ந்த முனிவராக இருந்தார்.அவர்தான் நாதமுனி! அவர்தம் பிதாவும்
முனி..அவர் திருநாமம் ஈஸ்வரமுனிகள்.
தவமுனிவராகத்திகழ்ந்தார்!.விஸ்வாமித்ரர்போன்றமுனிவர்களைப்போல
தேர்ந்த முனிவராக இருந்தார்.அவர்தான் நாதமுனி! அவர்தம் பிதாவும்
முனி..அவர் திருநாமம் ஈஸ்வரமுனிகள்.
நாதமுனிகள் கிபி 824 ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ; ஆனி மாதம், அனுச நட்சத்திரத்தில்
திருவரங்கநாதன் என்னும் இயற்பெயருடன் பிறந்தவர்.
நாதமுனிகள் யோகவித்தை, தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இவரை திருவரங்கநாதமுனிகள் என்று அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று..
நாதமுனிகள் யோகவித்தை, தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இவரை திருவரங்கநாதமுனிகள் என்று அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று..
காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது வைணவ அடியார்கள் சிலர் கோயில்பெருமாளான மன்னனாரைச் சேவிக்க வந்தனர். அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் “ஆராஅமுதே அடியேன் உடலம்” எனும் திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர். அதன் இறுதியில் “குருகூர்ச் சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற அடிகளைக் கேட்ட நாதமுனிகள் அடியார்களிடம் ,”அந்த ஆயிரம் பாடல்கள் பற்றி சொல்ல இயலுமா?”என ஆர்வமாகக் கேட்டார்.
அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்ற விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்.
நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார்.
அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்ற விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்.
நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார்.
அவர் ”தற்சமயம் மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும் பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளன, மற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்து போயின” என்று கூறினார். மேலும் ”கண்ணிநுண் சிறுத்தாம்பு” பத்துப் பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும் வழி கூறினார்.
நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார்.அகம் மகிழ்ந்த நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான்!
நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார்.அகம் மகிழ்ந்த நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான்!
பிரபந்தத்தின் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார்.
கலியுகத்தில் ரிஷியாக இருந்த நாதமுனி,அவருக்கு மூவாயிரத்து ஐநூறு
ஆண்டுகள் முன்பாக பரமபதம் அடைந்த நம்மாழ்வார் என்னும் பரம ரிஷியை வரவழைத்து
உபதேசம் பெற்று நாலாயிரதிவ்யபிரபந்தம் என்னும் தமிழ்பொக்கிஷத்தை
பெற்றுக்கொண்டாரெனில் நமது சித்தாந்தம் தான் எத்தனை உத்தமமானது பாருங்கள்! போட்டி
பித்தலாட்டம் இல்லாத தூய்மையான சித்தாந்தம் கொண்டது அல்லவாநம் மதம்!
ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் அனைவரும் பாடிய பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்து முறைப்படுத்தி மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்ற இரு அக்காள் மகன்களை (மருமக்களை) திருவாய்மொழி திவ்யப் பிரபந்தப் பிரச்சாரத்தில் நாதமுனிகள் ஈடுபடுத்தினார். இவர்களிருவரும் தேவகான இசைப்படி திவ்யப் பிரபந்தங்களை இறைவன் முன் பாடி அபிநயித்து மக்களிடம் அவற்றைப் பொருளுடன் பரப்பி வந்தனர்
திருகுடந்தைதிவ்ய தேசத்திலிருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் உலகிற்கு கிடைக்கும் வழியை நாதமுனிகள் பெற்றார்.
பின்னர் ,மணவாள மாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அருளினார்.
தான் பெற்ற புதையலை அனைவரும் அறியச் செய்தார். பிரபந்த பாடல்களை இனிய இராகம், தாளம் அமைத்தும், அதற்கேற்ற அபிநயம் பிடித்தும் இறைவன் முன் ஆடினார்..
ஸ்வாமி
தேசிகன் ஸ்ரீநாதமுனிகளை “தாளம் வழங்கித் தமிழ்
மறை இன்னிசை தந்த வள்ளல்”
என்று போற்றுகின்றார். ஸ்ரீநாதமுனிகள் இப்பிரபந்தங்களைப் பலவேறு திவ்யதேசங்களிலும் பூஜை
காலங்களில் பாடுவது என்ற வழக்கத்தை
ஏற்படுத்தினார். வைணவத் திருத்தலங்களில் அரையர்
சேவை எனப்படும் வழக்கத்திற்கு அடிகோலியவர் ஸ்ரீநாதமுனிகளே ஆவார்.
அரையர் சேவையை முதன்முதலில் தோற்றுவித்தவரும் இவரே! ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே!
அரையர் சேவையை முதன்முதலில் தோற்றுவித்தவரும் இவரே! ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே!
ஸ்ரீநாதமுனிகளின் பேரனும் குருபரம்பரையின் முக்கிய ஆசார்யனுமான ஆளவந்தார், தமது ஸ்தோத்ர-ரத்னம் என்ற நூலின் தொடக்கத்தில் மூன்று ஸ்லோகங்களாலும் முடிவில் ஒரு ஸ்லோகத்தாலும் நாதமுனிகளைக் கொண்டாடுகின்றார். ஸ்வாமி தேசிகன், ஆளவந்தார் தமது ஸ்தோத்திரமான ரத்னத்தை ஆசார்ய ஸ்துதி என்ற அழகிய பெட்டகத்தினுள் இட்டுள்ளார் என்று வியக்கிறார்.
ஆளவந்தார்,
“நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயமுநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே”
என்று ஸ்ரீ நாதமுனிகளைக் கொண்டாடுகின்றார்
நாலாயிரம் பாசுரங்களை ராகத்துடனும் தாளத்துடனும் அபிநயத்துடனும் பாடிய இவர்களின் வழித்தோன்றல்களே “அரையர்கள்” என அழைக்கப்பட்டனர்.
“”என் பேரன் யமுனைத்துறைவன் (ஆளவந்தார்) வருவான். அவனுக்கு யோக வித்தையை நீ உபதேசிக்க வேண்டும்” என்றும் ‘உய்யக்கொண்டாரிடம் கூறீய நாதமுனிகள், அவரிடம் “ரகசியம் வெளியிடாதீர்” என்று கூறி, என் அந்திம தசைக்குப் பிறகு, பிறக்கப் போகும் என் பேரன் யமுனைத்துறைவனிடம் வேதாந்த சாரத்தையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
.
ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர்அவருடைய பேரனான யமுனைத்துறைவர்(யாமுனமுனிகள்
என்ற ஆளவந்தார்) தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.
என்ற ஆளவந்தார்) தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.
உய்யக்கொண்டாரும் (ஆளவந்தார் தக்க நேரத்தில் பிறக்காததால்) தனது சீடரான மணக்காலநம்பியிடம்அப்பொறுப்பைஒப்படைத்தார்.
மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார்.
இசையில் சிறந்தும் சோழமன்னனின் அன்புக்கும் பாத்திரமானவரான ஸ்ரீமந் நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ஸ்ரீராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதி எதிரிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றினார்!
நாதமுனிகள் பணிவுடன் இப்படி அருள்கிறார்!
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்-ஏறு, எங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார், எம்மை
ஆள்வார் அவரே யரண்.
மாறன் சடகோபன் வண்குருகூர்-ஏறு, எங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார், எம்மை
ஆள்வார் அவரே யரண்.
-
Tweet | ||||
அங்கங்கே கொடுத்த இணைப்புகளாலும் பலவற்றை அறிய முடிந்தது... நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி டிடி..
DeleteVery good and well done !
ReplyDeleteநாதமுனி அவர்களை பற்றி அறியாத பல விஷயங்களை அறிய முடிந்தது! நன்றி!
ReplyDeleteமிகச்சிறப்பான பல தகவல்களுடன் பொக்கிஷம் போன்ற பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஸ்ரீமன் நாதமுனிகளின் திருநக்ஷரத்தன்று அவரைப்பற்றி எழுதி மிகச் சிறப்பாக அவரை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். பாராட்டுக்கள். நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்து அளித்தது தமிழ் உலகிற்கு அவர் கொடுத்தருளிய கொடை.
ReplyDeleteஸ்ரீமன் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனி. திருத்தகப்பனார் ஈஸ்வர பட்டர்.
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (01/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
மிக்க நன்றி பின்னூட்டமிட்ட திருமதி ரஞ்சனி திரு வை கோ,தளிர் சுரேஷ் திருபாலசுந்தரவினாயகம் மற்றும் திருயாதவன் நம்பி அவர்களுக்கும் நன்றி திருயாதவன் நம்பி வைகோ சாரின் வலைப்பூ விவரம் இங்கு தெரிவித்தமைக்கு இதோ அங்கே நான் சென்றுகொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஆனி தன்னில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ReplyDeleteஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே
பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே
பராங்குசன் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானம் உறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
"நலம் திகழும் நாதமுனி " நற்பதங்கள் வாழியே!
---
வணக்கம் அக்கா
தக்க சமயத்தில்,தக்கதும் மிக்கதும் நிறைந்த சிறப்பான பதிவு!
இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - அருளிச் செயல் இசை வகுத்த நாதமுனி வாழியே!
ஆஹா வாராது வந்த மாமணியே ! என்னாச்சு திசைமாறி வந்துட்டீங்களா தம்பி?:) நாதமுனிக்கு நன்றி உங்களை இங்க வரவழைச்சதுக்கு:) ஆனிதன்னில்.....பாட்டு உங்களுதா ரவி?
Deleteபதிவில், ஆங்காங்கே சில தகவற் பிழைகள்; இயன்ற வரை சுட்டிக் காட்ட, தங்கள் இசைவு உண்டல்லவா?:)
ReplyDelete//அவர் தம் பிதாவும் முனி..அவர் திருநாமம் ஈஸ்வரமுனிகள்//
நாதமுனிகளின் தந்தை= ஈஸ்வர பட்டர்
மகன் பெயர் தான்= ஈஸ்வர முனி
//ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே!//
முதல் ஆசார்யன்= திருமகள்-கேள்வன்
பின்பு சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனர்
பின்பு ஆழ்வாரும்+ஆசார்யரும் ஒருவரேயான நம்மாழ்வார்
அப்பறம் தான் நாதமுனிகள்!
"மண்ணுலக ஆசார்யர்கள்" மத்தியில் தான் முதல் ஆசார்யன் என்று குறிப்பிடலாம்
மற்றபடி, மொத்த குரு பரம்பரைக்கே முதல் ஆசார்யன் அல்லர்:)
அதான், "நானிலத்தில் குருவரையை" நாட்டினான் வாழியே என்று வாழித் திருநாமம்!
நாதமுனிகள், காட்டுமன்னார் கோயில், ஆழ்வார் பாசுரம் பண்ணோடு இசைத்தல், ஆயிரத்தில் ஒரு பத்து மட்டும் முதலில் கேட்டல்
= எல்லாம் பொன்னியின் செல்வனில், முதல் பாகத்திலேயே வரும்! ஒங்க பதிவு பொன்னியின் செல்வனுக்குக் கூட்டிச் சென்று விட்டது:)
ரஞ்சனிமேடமும்//நாதமுனிகளின் தந்தை= ஈஸ்வர பட்டர்
Deleteமகன் பெயர் தான்= ஈஸ்வர முனி//என்று தெரிவித்திருக்கிறார் நாந்தான்பிழை செய்துவிட்டேன் திருத்தம் செய்கிறேன்//பதிவில், ஆங்காங்கே சில தகவற் பிழைகள்; இயன்ற வரை சுட்டிக் காட்ட, தங்கள் இசைவு உண்டல்லவா?:/// இப்படிக்கேட்டதில் இசைவு இல்லை தம்பி:)
மண்ணுலக ஆச்சார்யர்கள் என நான் தெளிவாக எழுதி இருக்கணும்... பொன்னியின் செல்வனில் படித்த்தை நான் மறந்துவிட்டேன்:) நினைவில்வைத்து அழகாய் எடுத்துசொல்ல ரவி வரணும் ஆனா அவரு இப்பல்லாம் ஓட்டு கேட்டு எஸ்கேப் ஆன அரசியல்வாதி ஆகிட்டாரே:)
//தேவகான அடிப்படையில் அமைத்தவர் நாதமுனிகள்//
ReplyDeleteதேவ கானம் = கர்நாடக இசை வடிவில் அல்லாத, அந்த இசைக்கும் முந்தைய "தொல்தமிழ்ப் பண்ணிசை முறை"..
தூக்கு, வண்ணம் போன்ற பரிபாடல் இசை முறைகள்!
பல பித்தளைத் தாளங்களைத் தொங்க விட்டு, வெவ்வேறு எடைகளில் அமைந்த தாளங்களைத், "தேவ கான" இசை முறையில் வாசிக்க..
அந்தச் சுரங்களின் அலைவரிசை மற்றும் புரியிடைத் தூரம் கொண்டு (frequency & pitch of notes),
அந்தத் தாளங்களின் சரியான எடையைக் கணித்துச் சொன்னவர் நாதமுனிகள்.. அப்படியொரு தமிழிசை நுணுக்கம்!
பின்னாளில், கோயில்களில், சம்ஸ்கிருத வேதங்களுக்கு ஈடாக, ஆழ்வார் அருளிச் செயலை "நுழைக்க" வேண்டி,
அதற்கு திவ்ய பிரபந்தம் என்ற பெயர் கொடுத்து, வேதம் போல் உரக்க ஓதும் முறை (சந்தை) என்று கொண்டு வந்தாலும்..
பண்-இசையுடன் கூடிய அருளிச் செயல்கள் தான் மிகவும் அரிது+பெரிது!
அக்காவுக்கு ஒரு வினா:
தேவ கானம்: இன்னின்ன பாசுரம் இந்த ராகம், இந்தப் பண் வகையைச் சேர்ந்தது என்ற குறிப்புகள் இருக்கா அக்கா?
தேவாரப் பதிகங்களுக்கு காந்தாரம், இந்தளம், நட்டராகம் என்றெல்லாம் பண்கள் உள்ளன. அதே போல் பாசுரங்களுக்கும் உண்டா?
//பல பித்தளைத் தாளங்களைத் தொங்க விட்டு, வெவ்வேறு எடைகளில் அமைந்த தாளங்களைத், "தேவ கான" இசை முறையில் வாசிக்க..
Deleteஅந்தச் சுரங்களின் அலைவரிசை மற்றும் புரியிடைத் தூரம் கொண்டு (frequency & pitch of notes),
அந்தத் தாளங்களின் சரியான எடையைக் கணித்துச் சொன்னவர் நாதமுனிகள்.. அப்படியொரு தமிழிசை நுணுக்கம்!
/// ஆமாம் அதையேதான் அரையர்களும் இப்போது பின்பற்றுகிறார்கள்.
தேவகானத்திற்கு பாசுரங்களுக்கு ராகம் பண் உண்டு ரவி..ஸ்ரீரங்கத்தில் இதைப்பற்றிக்கேள்விப்பட்டேனேதவிர முழுவிவரம் பெறவில்லை இம்முறை கேட்டுவந்து சரியாக சொல்கிறேன்
பல செய்திகள் அறிந்து கொண்டேன்.நன்றி
ReplyDeleteத ம 3
நன்றி திரு சென்னைப்பித்தன்
Deleteஇன்று பெருமாள் கோயில்களில்..
ReplyDeleteதமிழ்ப் பாசுரங்களை = வேத மந்திரம் போல் அதிர்வலைகளோடு ஓதுகிறார்கள்! (சந்தை)
அரையர் சேவையிலும் = ஓதலும் அபிநயமும் தான் உள்ளது!
"ஓதல்" மட்டுமன்றி, "இசை" வடிவிலும்.. பாசுரங்கள் பரவ வேணும்!
= பா+சுரம்
பேரிலேயே, இயல் தமிழ் + இசைத் தமிழ் கொண்டவை ஆழ்வார் அருளிச் செயல்!
இதை, நாதமுனிகள் வகுத்தளித்த "தேவ கான" பண்ணிசை முறையிலேயே பரவச் செய்ய வேண்டும், முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும்!
ஒரு கால கட்டத்தில் வேண்டுமானால், தமிழை, வடமொழி வேதத்துக்கு இணையாக நிறுத்திக் காட்ட, மந்திரம் போல் தமிழை ஓத வேண்டி வந்திருக்கலாம்!
ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டதால், தமிழ் வேதமே புறப்பாடுகளில் இறைவனுக்கும் முன்னே செல்கின்றபடியால்..
ஓதலையும் தாண்டி, இசை முறைக்கு அடுத்த அடி எடுத்து வைக்க வேணும் என்பதே ஆவல்!
திவ்ய பிரபந்தம் என்கிற பேரையும், "அருளிச் செயல்" என்றே அழகுத் தமிழில் புழங்குதல் நலம்!
ஆழ்வார்கள் வாழி, "அருளிச் செயல்" வாழி
தாழ்வாதும் இல் குரவர் தாம் வாழி - ஏழ் பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து..
- இந்த மணவாள மாமுனிகள் வெண்பாவும், திவ்ய பிரபந்தத்தின், Original பெயரான "அருளிச் செயல்" என்பதைக் காட்டிச் செல்லும்!
அருளிச் செயல் வாழி
அருளிச் செயல் இசை வாழி
வேதம் தமிழ்ச் செய்த மாறன்மனம் வாழி வாழி!
நிறைய விஷயங்களை அறியத் தந்த கட்டுரை... அருமை...
ReplyDeleteஉங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!
ReplyDeleteநன்றி தளிர் சுரேஷ் ஊரில் இல்லாததால் தாமதமாக பார்க்கிறேன்
Deleteஇன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன் ...அருமையான பகிர்வுகள் ....சிறப்பான தொகுப்பு ..........தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சி ....
ReplyDelete