கிண்ணத்தின் வண்ணத்தில் மக்கள்
எண்ணத்தைத்தொட்டாய்!
சித்தத்தின் சத்தத்தில் கவிதை
முத்துக்களை இறைத்தாய்!
பூவுக்குள் தேன் போல படைத்த
பாட்டுக்குள் நின்றாய் ஒருநாள்
காட்டுக்குக்கண்ணம்மா
பேட்டைக்குப்போய்விட்டாய்!
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி
பட்டாற்போல் நீ திரை
மெட்டுக்கு பண் சுமந்து
புகழடிகள் பல பட்டாய்!
தமிழ்த்தாய் உன் நாவில்
தளிர்நடனம் ஆடி நின்றாள்.
அமிழ்தான உன் கவிதை
அத்தனையும் ரசித்துவிட்டு
அமரலோகத்தார் ருசித்திடவே
அங்கே அனுப்பிவிட்டாள்.
உனக்குத்தான் போதை வரும்
போதையிலும் தமிழ்ப்பாதைமட்டும்
தடுமாறாக்கவிஞன் நீ!
தமிழ்ப்போதை கொண்டவனை
தனிப்போதையில் ஆழ்த்தி
தன் வசமாக்கிக்கொண்ட காலனுக்கு
தண்டனையை யார் தருவர்?
உன் கவிதைக்குழலில்
ஊதுவித்த ராகங்கள்தான் எத்தனை!
அர்த்தமுள்ள இந்துமதம் உரைத்து
அர்ததமற்ற மௌனத்தில் ஆழ்ந்து
அமர நிலை கண்டுவிட்டாய்!
கண்ணன் என்றாலே உன் நினைவும்கூடவரும்,
காற்றுக்கும் ஓசைவரும்!
உன் ஆத்மா சாந்திக்கு
ஒவ்வொரு மனமும்
வேண்டியே நிற்கும்!.
>>.ஷைலஜா பெங்களூர்
|
இன்று பிறந்த நாள் காணும் கவியரசருக்குஒரு பாமாலை இயற்றி வாசித்திருக்கிறேன்..கேட்டுவிட்டு சொல்லுங்கள். குரல்பதிவை நன்கு அமைத்துக்கொடுத்த சகோதரர் ரிஷானுக்கு நன்றி.
Tweet | ||||
கண்ணதாசனின் பிறந்த நாளை ஒட்டி, அவர் நினைவு கூறும்
ReplyDeleteஅன்பு சகோதரி ஷைலஜா அவர்களின் வசன கவிதை.
அழகோ அழகு.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
அருமை...
ReplyDeleteஅற்புதமான கவிதாஞ்சலி
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteகுரலில் கேட்கும் கவிதையின் வரிகளையும் எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சுப்புத்தாதா திரு ரமணி..ஜிஎம் பி சார் கவிதை வரிகளை எழுதினேன் சேர்ந்துவந்தது மறுபடி முயன்று அளிக்கிறேன் நன்றி மிக
ReplyDeletePlease go to NEW POST.
ReplyDeleteThe fourth button from left looks like T. When u move your cursor , it will show REMOVE FORMATTING.
PRESS IT ONCE.
NOW U TYPE.YOUR TEXT.
WHATEVER BREAKS YOU WANT WHEREVER U WANT U MAY ENTER.
THEN SAVE.
SEE WHETHER U GET WHAT U GET.
SUBBU THATHA
Thanks subbbuthatha i will do that
Deleteரொம்ப அருமையாக இருக்கிறது!!...
ReplyDeleteThanks Paru!
Delete