எண்களில் ஏழுக்கென்று தனிச்சிறப்பு உண்டு.
உலகில் உள்ள ஜீவராசிகள் அவ்வளவும் பஞ்சபூதங்களால் ஆனவை அவைகளில் மனிதன் ஒருவன் தான் அந்த ஐந்தைக் கடந்து ஆறாகிய அறிந்திடும் அறிவு நிலையை பெற்றவன் ஆகிறான்.
அறிவுதான் மனமாக செயல்படுகிறது.மனத்தை உடைவன் என்பதே மருவி மனிதன் என்றானது.
இந்த மனிதன் தன் அறிவு நிலையை வெளிப்படுத்துவது ஏழாகிய 'சப்தத்தால்' தான்.
அதாவது சிந்திப்பது பேசுவது என்கிற அவ்வளவுமே சப்தமாகிய ஏழால் தான்.
இந்த ஏழாகிய பேச்சால் மற்றும் சிந்தனையால் அவன் எட்டுவதே ஒன்பதாகிய இறைநிலை.
எப்போதும் இறைநிலையை எட்டுவதற்கு அல்லது இறையருளை எட்டுவதற்கு ஏழுதான் துணை புரிவதாக உள்ளது. ஏழு எனும் சப்தம் ஏழுஸ்வரங்களுக்குஆதாரமாகிறது.
ஜோதிடசாஸ்திரத்தில் ஏழாம் கட்டத்தைத்தான் உன்னிப்பாக கவனிப்பார்கள். அதில்தான் நமது இல்லறம் எப்படிப்பட்டது போன்ற ரகசியங்கள் ஒளிந்துள்ளன.
இன்னும் பலசிறப்புகள் கொண்ட ஏழாம் எண்ணைப்பற்றி பிறகுபேசுவோம். இப்போது இந்த ஏழுஎண்ணைக்கொண்ட பிராகாரங்கள் கொண்ட திருவரங்கநகரைப்பற்றி இன்றைய வைகுண்ட ஏகாதசிநன்னாளில் கொஞ்சம் பார்க்கலாமா?
அரங்கனின் சிறப்புபற்றி சொல்லி மாளாது.
அவனைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாமலும் போய்விடுவது அனுபவித்தவர்களின் ஆனந்த நிலையுமாகும்!!!
திருவரங்கம்!
'கம்' என்றால் அடங்கி இருத்தல்(கம்முனு கிட நினைவுக்கு வருகிறதா?:)) லிங்கம் என்றால் அனைத்தும் அடங்கிய பொருள் வரும் சைவர்களுக்கு! வைனவர்களுக்கு அதுவே அரங்கம்!
அரங்கன் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருப்பது ம் ஒரு
காரணம் கருதியே! ஆதிசேஷனைப்பாருங்கள்! ஐந்து சிரசுகள்! இது பஞ்சபூதங்களைக் குறிக்கும்! அந்த பூதங்கள் நம் உடம்பிலும் உள்ளது! அது சீறினால் விஷம்! அது அடங்கி இருக்கிறது என்றால் நம் நெஞ்சில் இறைவன் பள்ளி கொண்டிருக்கிறான் எனப்பொருள்!
மாயை நிரம்பிய உலகில் மானுட இனம் தவறான பாதைகளில் சென்று பாவங்கள் பெருகி உலகம் நரகமாகிவிடக்கூடாதே என பாற்கடலில் இருந்து பிரும்மதேவன் பொருட்டும் அவன்செய்த தவத்தின் பொருட்டும் முதலில் வெளிக்கிலம்பிய ரங்கவிமானம் பின் பிரம்மனின் சத்ய லோகத்தில் சிலகாலம் இருந்தது பின் மன்னன் இஷுவாகுவால் அது பூலோகத்திற்குவந்தது.
பூலோகம் வந்த ரங்கவிமானத்தை தசரத சக்கரவர்த்தியின் தவப்புதல்வரான ஸ்ரீ ராமர் பூஜித்தார் , பிறகு பல சூட்சம காரணங்களிம் பொருட்டு அந்த விமானத்தை அவர் விபீஷணரிடம் ஒப்படைத்தார்,
ஆனால் பிரணவசொரூபியான வினாயகப்பெருமானின் திருவிளையாடலாலும் தர்மவர்மன் என்னும் சோழாரசனின் தவத்தின் காரணமாகவும் கிளிமொழிமூலமாக அந்த ரங்கவிமானம் காவிரிக்கரையில் நிலைபெற்றது
ஏழு சுற்றுக்கள் ஏழு பிராகாரங்கள் நடுவிலேதான் கோயில் அமைந்துள்ளது.
மாடங்கள் சூழ்ந்த முதல் சுற்று பூலோகம்
திரிவிக்கிரமன் உலாவந்த சுற்று புவர்லோகம்
கிளீச்சோழன் பேரால் அமைந்த சுற்று ஸீவர்லோகம்
திருமங்கைமன்னன் பேரால் அமைந்த சுற்று மஹர்லோகம்
குலசேகரன் சுற்று ஜநோ லோகம்
ராஜமகேந்திரன் சுற்று தபோலோகம்
தர்மவர்மன் சோழன் சுற்று கர்ப்க்ரஹம் உடைய சத்யலோகம் என உணரப்படுகிறது
இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து அதாவது 49முறைவலம் வந்து அரங்கனை வணங்குபவர்களுக்கு அவர்களது ஏழாம்கட்ட கர்மங்கள் கெட்டதாக இருந்தால் நீங்கிவிடும் நல்லதாக இருந்தால் நன்மை பெருகிவிடும் .அதுமட்டுமல்ல ஏழாகிய இசைவசப்படும்.. ஏழாகியமந்திரம் வசப்படும். ஏழாகிய சப்தம் இனிமையானதாகும்/ ஏழாகியவண்ணங்கள் வாழ்வில் சேர்ந்து வாழ்க்கை வண்ணமயமாகும்!
இந்த ஏழாகிய சப்தம் அடங்குமிடம் அமைதி, தானாக வந்துவிடும். ஏழைக்கடந்து எட்டும் அமைதியாக அந்த அரங்கன் இருக்கிறான்.
அவை எட்டிட வழிகாட்டும் ஒருவைபவமாக இம்முறையும் ஏழுவருடங்களுக்கு ஒருமுறை ஏழுதிருவீதிகளை ஏழுநாட்கள் சுற்றிவரும் வைபவம் நடத்தினர், சித்திரைவீதியில் பந்தலிட்டு இசைக்கச்சேரிகள், பாசுரங்கள் சொற்பொழிவு, நடன நிகழ்ச்சிகள். கோலப்போட்டிகள்,என பல கலைகளை ஆதரித்து விழா ஏழுநாட்கள் நடந்தது. அதில் கலந்துகொள்ளும் பேறு எனக்கும் கிடைத்தது.
மாதவனுக்கு உகந்த மார்கழிநாளில் மாயன் அரங்கனைப்பற்றி இந்த வைகுண்டஏகாதசித்திருநாளீல் அதுவும் ஏழாம்தேதியான இன்று பதிவு எழுத எனக்குக் கிடைத்த பாக்கியத்தை பெருமையுடன் நினைக்கிறேன்!
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா
துணையேன் இனி நின் அருளல்ல தெனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதநா
பணயா யெனக்குய்யும் வகை பரஞ்சோதி
பெரியதிருமொழி
Tweet | ||||
இனிமையான பதிவு! தொடருங்கள்!
ReplyDelete"தர்மவர்மன்" என்ற பெயரிலே எந்தச் சோழ மன்னனும் இல்லையே?
ஆதித்தன் said...
ReplyDeleteஇனிமையான பதிவு! தொடருங்கள்!
"தர்மவர்மன்" என்ற பெயரிலே எந்தச் சோழ மன்னனும் இல்லையே?
11:33 AM
வாங்க ஆதித்தன் கருத்துக்கு நன்றி
தர்மவர்மன் எனும் கிளிசோழன் கதைவரலாற்றில் இருக்கிறது.
கோயிலொழுகு எனும் புத்தகம் கிடைத்தால் படிக்கவும்
ஏழைப் பற்றிய அருமையான விளக்கங்களுக்கு நன்றி ஷைலஜா!
ReplyDeleteஇந்த நாளுக்குப் பொருத்தமான இனிய பதிவு.
அழகாக விளக்கம் கொடுத்திருக்கிங்க அக்கா..அருமை ;)
ReplyDeleteஏழுக்குள்ள இம்புட்டு விஷயம் இருக்கா...மறக்கமால் ஏழை பற்றி மீதி இருக்குற விஷயத்தையும் பதிவாக போடுங்கள் ;)
ராமலஷ்மிக்கும் கோபிநாத்துக்கும் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன் நன்றி
ReplyDeleteஅக்கா...
ReplyDeleteஒரு மின்னஞ்சல் அனுப்ப மாட்டீங்களா இப்படி அரங்கன் பதிவைப் போட்டா?
இப்ப தான் தினம் ஒரு பதிவு பளுவை இறக்கி வச்சிட்டு இங்கே வந்தேன்! :)
//இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து அதாவது 49முறைவலம் வந்து அரங்கனை வணங்குபவர்களுக்கு//
ReplyDeleteஅப்படி வணங்கிய உங்களை இங்கே வணங்கிக் கொள்கிறேன்!
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!
செங்கனி மேலாடும் மாமரம் யாவும், ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்!
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடீ!
வேறெங்கு சென்றபோதிலும் இந்த ஸ்ரீரங்கம் ஏதடி?
//தர்மவர்மன்" என்ற பெயரிலே எந்தச் சோழ மன்னனும் இல்லையே?//
ReplyDeleteஆதித்தன்
நீங்கள் பிற்காலச் சோழர்களில் மட்டுமே தேடினால் கிடைக்காது! இங்கே சொல்லப்படும் தர்மவர்மன் விபீஷண காலகட்டம்! அப்போது சோழர்கள் ஆண்டார்களா என்பது வரலாற்று ஆய்வுக்குத் தான் விட வேண்டும்!
ஆனால் சோழன் என்ற விகுதி பல மன்னர்களுக்கும், விஜயாலய சோழனின் முன்னரே இருந்திருக்கு! நந்த சோழன், ராஜ மகேந்திர சோழன் எல்லாம் உண்டு! இன்றும் ராஜ மகேந்திர பிரகாரம் (திருச்சுற்று) திருவரங்கத்தில் உள்ளது!
மகாபாரதப் போரில் சேரன் பெருஞ்சோற்று உதியன், உணவளித்தான் என்று சங்கப் பாடல்கள் பேசுகின்றன!
எனவே இது போன்ற சேர, சோழன் எல்லாம், பின்னாளைய சோழ சாம்ராஜ்ஜியத்துக்கும், முன்னாலேயே வந்த சிறு மன்னர்கள் என்று கொள்வதே நலம்!
நல்ல தகவல் ....தொடர்ந்து எழுதுங்கள் ...திருவரங்க தலபுராணம் படித்த அனுபவம் கிடைத்தது ....
ReplyDeletekannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஅக்கா...
ஒரு மின்னஞ்சல் அனுப்ப மாட்டீங்களா இப்படி அரங்கன் பதிவைப் போட்டா?
இப்ப தான் தினம் ஒரு பதிவு பளுவை இறக்கி வச்சிட்டு இங்கே வந்தேன்! :)
11:38 PM
>>>>>>>>>>>>
தெரியும் ரவி நீங்க மார்கழிப்பதிவுல பிசின்னு..மேலும் உங்கள விட நான் என்ன பெருசா சொல்லிடப்போறேன்னுதான்......!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து அதாவது 49முறைவலம் வந்து அரங்கனை வணங்குபவர்களுக்கு//
அப்படி வணங்கிய உங்களை இங்கே வணங்கிக் கொள்கிறேன்!
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!
செங்கனி மேலாடும் மாமரம் யாவும், ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்!
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடீ!
வேறெங்கு சென்றபோதிலும் இந்த ஸ்ரீரங்கம் ஏதடி?
11:41 PM
>>>.....>>>>>>>>>>>>
அரங்கன் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்!!! எனக்கு ஏதோ வாய்ப்புகிடைக்கவும் அந்த பாக்கியத்தை அடைய முடிந்தது! அதுக்காக அழகா விவரமா ஆன்மீகப்பதிவு எழுதும் அன்புத்தம்பி என்னை வணங்கணுமா வரவர அரசியல்வாதி ஆகிவரீங்கப்பா:):)
valaikkulmazhai said...
ReplyDeleteநல்ல தகவல் ....தொடர்ந்து எழுதுங்கள் ...திருவரங்க தலபுராணம் படித்த அனுபவம் கிடைத்தது ....
9:13 AM
>>>>........நன்றி வலைக்குள்மழை(!) இன்னும் எழுத அரங்கன் அருளினால் எழுத ஆவல்தான்!
தமிழ் வைணவப் பிராமணர்களுக்கு (அஃகதாவது) இன்றைய தலைமுறை) நீங்கள் போட்ட பதிவு நன்மை பயக்கும்.
ReplyDeleteஇன்று அவர்களுல் பெரும்பானோர்கள் சமய சம்பிராதயத்தில் நாட்டம் கொள்வதில்லை.
அவர்களை உங்கள் பதிவுகள் நல்வழிப்படுத்தும்.
நன்றி. என்றும் உங்கள் சேவை தொடருட்டும்.
Anonymous said...
ReplyDeleteதமிழ் வைணவப் பிராமணர்களுக்கு (அஃகதாவது) இன்றைய தலைமுறை) நீங்கள் போட்ட பதிவு நன்மை பயக்கும்.>>>>
நன்மை பயக்குமானால் அது நல்லதே,
இன்று அவர்களுல் பெரும்பானோர்கள் சமய சம்பிராதயத்தில் நாட்டம் கொள்வதில்லை.
அவர்களை உங்கள் பதிவுகள் நல்வழிப்படுத்தும்.
நன்றி. என்றும் உங்கள் சேவை தொடருட்டும்.
3:36 PM
<>>>>>>>>>நன்றி....சிலருக்கு சம்பிரதாய சேவையில் நாட்டம் இருக்கிறது நேரமின்மை காரணமாய் அவர்கள் அவைகளை புறக்கணிகக்கூடும் காலம் மாறும். என் சேவை இப்படி சிறு அளவிலாவது நல்லவிஷயங்களை அவ்வப்போது எழுதுவதே.
அதை வாழ்த்தும் உங்களுக்கு(பெயர் தெரியலையே) நன்றி