Social Icons

Pages

Wednesday, January 14, 2009

புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும் 2!

என் ஒன்பதாவது வயதில் நான்மட்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்திருக்காவிட்டால் இன்றைக்கு இந்த கவிஞன் வைரமுத்து உங்கள்முன் வந்து நின்றிருக்கமாட்டான்.ஆகவே வாசியுங்கள்! தொலைக்காட்சிப்பெட்டியிலேயே நேரத்தைத்தொலைக்காமல் வாசிப்பை நேசியுங்கள்

என்ற வைரமுத்துவின் கணீர்க்குரலை செவிமடுத்தபடியே மறுபடி கண்காட்சிக்குள் நுழைந்தோம்.

சில்லென்ன மழைச்சாறல் தூவினமாதிரி இருந்தது அந்த மேற்கூரைமூடிய வளாகத்தில்! ஆமாம் மழைக்காதலன் சார்லஸ் அங்கே வந்துகொண்டிருந்தார்.


கல்லூரிமாணவனைப்போல தெரிந்தார்!சிரித்த அந்த முகத்திடம் நிலாரசிகன் ,

இவங்க.....என என்னைபப்ற்றி இழுத்தபடி அறிமுகத்தை ஆரம்பிக்கவும்

மைபா தானே என சார்லஸ் கேட்கவும், சிரிப்பலை அங்கேஇருந்த புத்தகப்பக்கங்களையெல்லாம் தட்டிப்புரட்டியது!

விடைபெற்று அவர் சென்றதும் நாங்கள் ஒவ்வொரு கடையாக செல்ல ஆரம்பித்தோம்.

வார்த்தை மாத இதழ்களை மாலையாகப்போட்டுக்கொண்டு காட்சி அளித்த எனி இந்தியன் .காம் கடையில் உமாமகேஸ்வரியின் அரளிவனம் வாங்கிக்கொண்டேன்.

கவிஞர் மதுமிதாவின் தங்கை அங்கே கடையின் விற்பனைப்பிரிவில் இருந்தார்

500க்குமேல கடைகள் இருப்பதால் அதை சிலமணிநேரங்களில் பார்த்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் வேகமாகவே பார்வையிட ஆரம்பித்தோம்.

பீச்சில் மாங்காய் பத்தைகளை கலைஉணர்வோடு கீறி விசிறிபோல வைத்திருப்பார்களே அப்படி சில கடைகளில் புத்தகங்களை(கீறாமல்) மிகவும் அழகாக அமைத்து வைத்திருந்தார்கள்.

எத்தனைபதிப்பகங்கள் தமிழகத்தில் என்று அங்கே போனால்தான் தெரிகிறது! உயிர்மைவாசலில் எஸ்ராமக்ருஷ்ணன் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.நிறையபேர் அவரிடம் புத்தகம் பிரித்து ஆட்டோக்ராஃப் வாங்கிக்கொண்டார்கள். நான் அவரிடம் பேசியபோது என் வலைமுகவரியைக்கேட்டுக்கொண்டார்!நான் அவருடைய தேசாந்தரி கதாவிலாசத்தை சிலாகித்துப்பேசினேன் சில நிமிஷங்கள்!

திருமகள் மீனாட்சி பாரி செண்பகா எனப்பலபிரசுரங்களின் கடைகளுக்குப்போய் நாஞ்சில்நாடனைத்தேடினேன். அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குமட்டும் அறுபது கடைகள் ஏறி இறங்கினோம்.

அது விஜயா பதிப்பகம் ஸ்டால்ல கிடக்கும்ங்க என்றார் ஒருவர் . அந்தஸ்டால் எண்ணை குறிப்புஏட்டில்பார்த்து தேடினோம் தேடினோம்....கடைசியில் தான் தெரிந்தது விஜயாபதிப்பகம் கோவையிலிருந்து புத்தகங்களை எடுத்துவரும்வாகனக்கோளாறினால் ஸ்டாலை அமைக்கவே இல்லை என்று!!

விகடன்பிரசுரஸ்டாலில் கூட்டம் அலைமோதியது மனசே ரிலாக்ஸை இன்னமும் பலர் வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு கடையில் மேலாண்மைபொன்னுச்சாமியின் காகிதம் சிறுகதை தொகுப்பினை எடுத்துக்கொண்டிருந்தபோது நிலா சொன்னார்

அக்கா அங்க இருக்கு பாருங்க கிழ்த்தட்டுல அந்தக்கதை அதை எழுதினவர்பேரு,கண்மணிகுணசேகரன்! நல்லா எழுதறாருக்கா..அவரோட அஞ்சலை படிச்சி அசந்துட்டேன்

அப்படியா

ஆமா கண்மணிகுணசேகரன் அவர் பேரு பாருங்க அங்க...

நிலாரசிகன் இப்படிச்சொல்ல நான் குனிந்து புத்தகத்தை எடுக்க,

என்பேரைகூப்டீங்களா எனக்கேட்டபடி அங்கே நின்ற ஒருவர் கேட்டார்

அட நீங்களா என வியந்தார் நிலாரசிகன்

ஆமாம் அங்கே நின்றுகொண்டிருந்தவர் கண்மணிகுணசேகரனேதான். நிலாரசிகன அவரை அடையாளம் தெரிந்து பேச ஆரம்பிக்க எதிர்பாராத
மகிழ்ச்சியுடன் முகம் மலர்ந்தார் அந்தஎழுத்தாளர்.

பாடகர் சஞ்சய் சுப்ரமண்யம் பாடாமல் யாருடனொ அங்கே பேசிக்கொண்டிருந்தார் ஏற்கனவே பெங்களூரில் கொஞ்சம் தெரியும் என்பதால் சின்னபுன்னகைபரிமாற்றலுடன் அவரைக்கடந்தேன்.

சாரு நிவேதிததா சுஜாதா ஜெயகாந்தன் ஜெயமோகன் போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஏற்கனவே வாங்கிவிட்டதால் பார்வையிட்டபடியே ஸ்டால்களைக்கடந்தோம்.

பெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன் [சந்தியா பதிப்பகம்]
மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
மிகச்சிறந்த தொகுப்பு அதிலும் குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகதை. அதி அற்புதமான எழுத்து
புனைவின் நிழலில் - மனோஜ் [உயிர்மை] இவைகளை தம்பிவாங்கிவிட்டதாக போனில் சொல்லிவிட்டதால் நான் மறுபடி வாங்கவில்லை.
-


சிங்கை எழுத்தாளர் ஜெயந்திசங்கரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான 'திரைகடலோடி' யில் 10 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் முன்னுரையின் ஒருபகுதியிரிலிருந்து (பின் அட்டை) --- 'இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப்பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள். கதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது. மதிபதிப்பக வெளியீடு இது.

கிழக்கில் ஒபாமா பராக் பராக் என்றது ஒபாமா அட்டைப்படம் எங்கும் காணப்பட்டது!பாராவின் மாயவலை விரிந்திருந்தது.

காலச்சுவட்டினில்


அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில். . என்ற நூல்

(சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

ந. முருகேச பாண்டியன்
எழுதியது விலை ரூ195 என்றதால் தயங்கிவிட்டேன்.

-


கிழக்கு உயிர்மை காலச்சுவடு பாரதி மீனாட்சி செண்பகா பாரி பதிப்பகங்களின் கடைகளைக்கடந்துவரும்போது 98.3 என்று ரேடியோமிர்ச்சி கடை ஒன்றில் 2இளைஞர்கள் புத்தகங்கள் ஏதுமின்றி வெறுமனே டைகட்டி டிப்டாப்பாக அமர்ந்திருக்கவும் நான் போய் எதுக்கு இங்க கடைபோட்டுருக்கீங்க ஏதும் குரல் முலம் புத்தக விளம்பரம் செய்றீங்களா அபப்டீன்னா நான் என்குரலில் ஏதும் தமிழுக்காக இலவசமாய் புத்தக சேவை செய்ய ரெடி என்றேன்!

இல்லைங்க...ச்சும்மா எங்க வானொலி பேருக்கு ஒரு விளம்பரம் . எங்ககடைகுவரவங்ககிட்ட 6க்குள்ள ஒரு எண் சொலல்சொல்வோம் சொல்லும் எண்ணுல ஒருகேள்விகேட்போம் அதுக்கு பரிசுதருவோம்ன்னு சொன்னாங்க.

விடுவோமா என்ன கேள்வி கேளுஙக் என் எண் 5 என்றேன் நான்முதலில்

TOPAZ stone
என்ன கலர் ன்னு கேட்டாங்க

ஜுஜிபி கேள்வியாச்சே அதனால விடையை சரியா சொல்லிட்டேன்.

உடனேயே கங்கிராட்ஸ் என சொல்லி 2500ரூக்கு ஒரு பிரபல ஜிம்க்கு (FITNESSONE-INDIAs FASTEST GROWING FITNESS CHAIN) தேகபயிற்சிக்கான இலவசகூப்பன்(15நாட்களுக்கு)தந்தனர்!!

ஆளப்பாத்துத்தான் அவசியம்னு கொடுத்ருக்காங்கன்னு நிலாரசிகன் கிண்டல் செய்தார்.

ஷன்முகப்ரியாவிடம் சிக்கலான கேள்விக்கேட்டுட்டாங்க அதாவது இளையராஜாவின் 200வதுபடம் என்னன்னு யோசிக்கும் அவகாசம் அதிகமில்லாததால் பரிசுஅவருக்குக்கிடைக்கலை!
நிலாரசிகன் இதெல்லாம் வேண்டாம்னு தள்ளிப்போயிட்டார்!

சாப்பாட்டுக்காண்டீனில் மைபாபுகழ் க்ருஷ்ணா ஸ்வீட் வாசலில் நான்போய்நின்ற ஒற்றுமையை நானே சொல்லிக்கக்கூடாதுங்க!!! கட்டைவிரல் சைஸ் காகிதடம்ளரில் காபியை பத்துரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். டிபன் பலகார சாட் ஸ்வீட் ஐட்டங்கள் இருந்தன. அங்கே நேரம் அதிகம்கழிக்காமல் உடனே மறுபடி ஸ்டால்களுக்குள் நுழைந்தோம்.
அலைஞ்சி திரிஞ்சதுல திமிழினி ஸ்டால்ல நாஞ்சில்நாடன் கிடைச்சார்! கண்மணி குணசேகரன் மாதிரி இவரும் நேர்ல வந்து நிற்பாரோன்னு ஓர் ஆவலில் இருந்தோம் ஆனா வரல!

சூடியபூ சூடற்க சிறுகதைதொகுப்பு இவருடையதை வாங்கினேன். சமிபத்தில் எழுதிய அவரது சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். படிக்க ஆரம்பிக்கவில்லை இன்னும்.

சில இலக்கியசம்பந்தமான புத்தகங்களை வாங்கிக்கொண்டேன்.

திஜாவின் மோகமுள்ளை ஷண்முகப்ரியா ஆவலோடு எடுத்து குத்தும்னோ என்னவோ திரும்ப வச்சிட்டா! வேறு சில நாவல்கள் கவிதைத்தொகுப்புகள் வாங்கினாள்.

மணிமேகலைப்ரசுரத்தில் எப்படி குண்டாவது எப்படி ஒல்லியாவது என்பதிலிருந்து எப்படி பணம் சேர்ப்பது என்பதுவரை எப்படிகளில் பல புத்தகங்கள் கொட்டிக்கிடந்தன.

காணக்கண்கோடிவேணும் என ஒருபாட்டு உண்டு அதுபோல புத்தகக்கண்காட்சியைக்கான ஒரு கோடிக்கண்ணும் ஒருவாரகாலமும் கிடைத்தால் அத்தனையையும் பார்த்து வரலாம் தேவையானதை தேர்வு செய்யலாம்.

கிடைத்தநேரத்தில் தேர்வு செய்து சிலபுத்தகங்களை வாங்கிக்கொண்டோம் .

கையில் சிலதான் ;ஆனால் கண்பார்த்த புத்தகங்கள் பல!

மறுபடிவெளியே வரும்போது எழுத்தாளர்ப்ரபஞ்சன் எதிர்ப்பட்டார் அவரோடு சில நிமிஷங்கள் பேசினோம்.

எல்லாரும் தன்மையாகப்பேசறாங்க அக்கா என மகிழ்ந்தார் நிலாரசிகன்.

அதுதானே எழுத்துக்கு வெற்றி என நினைத்தபடி வெளியே வந்தபோது டிசம்பர்மாலையின் சில்லிட்ட குளிர்க்காற்றிலும்கூட புத்தகவாசனை மிதந்து வந்தது!

***************************************************************************

18 comments:

  1. its nice to see that lot of bloggers visit bok stall.

    next time when we go lets take a small boy (student) our own kids or neighorung house kids to the bok exhibition and make them addict to books.

    kuppan_yahooo

    ReplyDelete
  2. கையில் சிலதான் ;ஆனால் கண்பார்த்த புத்தகங்கள் பல!

    :-
    Same blood

    ReplyDelete
  3. \\மைபா தானே என சார்லஸ் கேட்கவும், சிரிப்பலை அங்கேஇருந்த புத்தகப்பக்கங்களையெல்லாம் தட்டிப்புரட்டியது!\\

    ;))))

    நல்ல அனுபவம்...அஞ்சலை இருக்கு ஆனா இன்னும் படிக்கல..;)

    இளையாராஜாவின் 200வது படம் ஜானின்னு நினைக்கிறேன் சரியான்னு தெரியல..!!

    ReplyDelete
  4. மைபா ராணி மைசூர் எக்ஸ்ப்ரெஸில்தான் ஏறுவாங்களாமே!!!!!

    நல்லா இருக்குப்பா அனுபவம்.

    ReplyDelete
  5. //சூடியபூ சூடற்க சிறுகதைதொகுப்பு இவருடையதை வாங்கினேன். சமிபத்தில் எழுதிய அவரது சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். படிக்க ஆரம்பிக்கவில்லை இன்னும்.//

    இந்த புத்தகம் நானும் வாங்க நினைத்தேன்.கடைசியில் ...


    //அமிர்தவர்ஷினி அம்மா said...
    கையில் சிலதான் ;ஆனால் கண்பார்த்த புத்தகங்கள் பல!//

    இப்படித்தான் ஆயிற்று...அடுத்த வருடம் புத்தகக் கண்காட்சியில் பார்த்துக் கொள்ளலாம் .போன வருடம் விடுபட்டது இந்த வருடம் வாங்கியதைப் போல தான்?!

    ReplyDelete
  6. Greetings!Well done! Please continue!

    ReplyDelete
  7. குப்பன்_யாஹூ said...
    its nice to see that lot of bloggers visit bok stall.

    next time when we go lets take a small boy (student) our own kids or neighorung house kids to the bok exhibition and make them addict to books.

    kuppan_yahooo
    >>>>>>>>>>>>>>>>>>>>>..



    கண்டிப்பா அழைச்சிப்போகிறேன் இப்போதும் குழந்தைகளுக்கு நான் சாக்லேட் பிஸ்கட் என்று தராமல் புத்தகங்களே பார்க்கும்போது தருகிறேன் நன்றி குப்பன் அவர்களே வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  8. அமிர்தவர்ஷினி அம்மா said...
    கையில் சிலதான் ;ஆனால் கண்பார்த்த புத்தகங்கள் பல!

    :-
    Same blood

    3:34 PM
    >>>>>>>>>>>>>>...........

    :) நன்றி எல்லார்க்கும் இப்படித்தான் போல!

    ReplyDelete
  9. கோபிநாத் said...
    \\மைபா தானே என சார்லஸ் கேட்கவும், சிரிப்பலை அங்கேஇருந்த புத்தகப்பக்கங்களையெல்லாம் தட்டிப்புரட்டியது!\\

    ;))))

    நல்ல அனுபவம்...அஞ்சலை இருக்கு ஆனா இன்னும் படிக்கல..;)

    இளையாராஜாவின் 200வது படம் ஜானின்னு நினைக்கிறேன் சரியான்னு தெரியல..!!

    7:26 PM
    >>.............

    வாங்க கோபி
    அஞ்சலை படிங்க எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க!

    ReplyDelete
  10. துளசி கோபால் said...
    மைபா ராணி மைசூர் எக்ஸ்ப்ரெஸில்தான் ஏறுவாங்களாமே!!!!!

    நல்லா இருக்குப்பா அனுபவம்.

    8:00 AM

    >>>>>>>>>>>>>>>.......வாங்க துள்சிமேடம்
    மைசூரெக்ஸ்ப்ரசுக்குதான் சட்டுனு டிக்கட் கிடைக்கிறது !!!!! அடிக்கடி அதுலதான் பயணம்!!! அனுபவம் நல்லா இருக்கா நன்றி.

    ReplyDelete
  11. மிஸஸ்.டவுட் said...
    //சூடியபூ சூடற்க சிறுகதைதொகுப்பு இவருடையதை வாங்கினேன். சமிபத்தில் எழுதிய அவரது சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். படிக்க ஆரம்பிக்கவில்லை இன்னும்.//

    இந்த புத்தகம் நானும் வாங்க நினைத்தேன்.கடைசியில் ...


    //அமிர்தவர்ஷினி அம்மா said...
    கையில் சிலதான் ;ஆனால் கண்பார்த்த புத்தகங்கள் பல!//

    இப்படித்தான் ஆயிற்று...அடுத்த வருடம் புத்தகக் கண்காட்சியில் பார்த்துக் கொள்ளலாம் .போன வருடம் விடுபட்டது இந்த வருடம் வாங்கியதைப் போல தான்?!

    8:20 AM
    >>>>>>>>>>>>>>>>>>>

    வாங்க மிஸஸ் டவுட்! சூடியபூ சூடற்க படிங்க நல்லாருக்கு

    ஆமாம் எத்தனை புத்தகம் வாங்கினாலும் இன்னும் வாங்க ஆவலாகத்தான் இருக்கு ..வீட்ல வைக்கத்தான் இடம் போதவில்லை!

    ReplyDelete
  12. Shan Nalliah / GANDHIYIST said...
    Greetings!Well done! Please continue!

    1:20 PM

    >>>>>>>>>>>>நன்றி தொடர்கிறேன் .

    ReplyDelete
  13. வாங்கிய புத்தகங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஷைலஜா. இந்த முறை பெங்களூர் புத்தகக் கண்காட்சியிலும் தமிழ் ஸ்டால்கள் நிறைய இருந்தன. வாங்கினேன் சில சிறுகதை தொகுப்புகள்.

    ReplyDelete
  14. நல்ல இடுகை அக்கா..

    படிக்க ஆசையிருந்தாலும், தினசரி அலுவல்களினுடே படிக்க அதிக நேரம் கிடைப்பதில்லை....அதனாலும் பல புத்தகங்கள் வாங்குவதை தள்ளிப்போடுகிறேன்.....

    ReplyDelete
  15. வெரி குட் வெரி குட். எல்லாத்தையும் முதல்ல நீங்க படிங்க. நேரம் கிடைக்கும் போது நான் நேர்ல வந்து ஓசி வாங்கிக்கறேன். :))

    ReplyDelete
  16. ராமலக்ஷ்மி said...
    வாங்கிய புத்தகங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஷைலஜா. இந்த முறை பெங்களூர் புத்தகக் கண்காட்சியிலும் தமிழ் ஸ்டால்கள் நிறைய இருந்தன. வாங்கினேன் சில சிறுகதை தொகுப்புகள்.

    9:19 AM
    >>>>>அப்படியா ராமலஷ்மி
    அடுத்தமுறை பெங்களூர்புத்தகக்கண்காட்சிக்கு நாம் சேர்ந்துபோகலாம்
    உங்க அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

    ReplyDelete
  17. மதுரையம்பதி said...
    நல்ல இடுகை அக்கா..

    படிக்க ஆசையிருந்தாலும், தினசரி அலுவல்களினுடே படிக்க அதிக நேரம் கிடைப்பதில்லை....அதனாலும் பல புத்தகங்கள் வாங்குவதை தள்ளிப்போடுகிறேன்.....

    9:29 AM

    >>வாங்க மௌலி
    ஆமாம் புத்தகம் வாங்கிடறோமே தவிர தீவிரமா வாசிகக் நேரமும் வேணுமே! நான் அதிகம் வீட்டில் இருப்பதால் ஓரளவு நேரம்கிடைப்பது நிஜம்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மௌலி

    ReplyDelete
  18. ambi said...
    வெரி குட் வெரி குட். எல்லாத்தையும் முதல்ல நீங்க படிங்க. நேரம் கிடைக்கும் போது நான் நேர்ல வந்து ஓசி வாங்கிக்கறேன். :))

    4:28 PM
    >>>>>>....ஆனாலும் அம்பி உங்க வலைல நீங்க சமீபத்துல எழுதின மால்ப்ரவேசக்கட்டுரை அசத்தல் !
    நேர்ல சாது(சந்நியாசி அல்ல)மாதிரி இருந்திட்டு கலக்றீங்கபதிவுல!!எல்லாத்தையும் சேர்த்து அழகா ஒரு புக் போடுங்க நான் வந்து படிக்கறேன்
    உங்களுக்கும் நான் வாசிச்சபுத்தகங்களை தரேன்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.