Social Icons

Pages

Thursday, January 22, 2009

பளிங்கினால் ஒரு மாளிகை!


உலகின் அதிசியம்! காதலர்களின் கனவு மாளிகை ! பாரதத்தின் பெருமைச்சின்னம்!

இப்படி தாஜ்மஹால் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இத்தனை வருடங்களாகியும் தாஜ்மகால் வெண்ணிறப்பதுமையாகவே இருப்பது எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!

நம்வீட்டிலும் சலவைக்கற்கள் உபயோகித்துக்கட்டுகிறோமே சிலவருடங்களில் அவை வெண்மைப்பொலிவு இழந்து விடுகிறதே, ஆனால் தாஜ்மஹால் மட்டும் அப்படியே இருக்கிறதே எனறுதோன்றுகிறதா...!

காரணம் இருக்கிறது அதற்கு!

தாஜ்மஹாலு்க்கு ஷாஜகான் பயன்படுத்திய சலவைக்கற்களே வேறு. அது மேக்ரான் என்ற உயர்ந்தபிரிவைச்சேர்ந்தவை எந்த ஒரு அமிலமும் இதனைக் கறுப்பாக்கமுடியாது,சேதப்படுத்தமுடியாது. இந்தவகைக்கற்களின்மேல்படியும் அழுக்குகள்பிசுபசுப்பாகி ஒட்டிக்கொள்ளாது.

இன்னொரு முக்கியமான விஷயம், நாம்பயன்படுத்தும் கற்கள் சந்திரனின் வெளிச்சத்தில்மிளிர்கிறது.
ஆனால் தாஜ்மகாலில்பயன்படுத்திய மேக்ரான் கற்களுக்கு நிலா வெளிச்சத்தின்மீது அபாரக்காதல! அதனால் பௌர்ணமிநாட்களில் தாஜ்மஹாலைப் பார்த்தால்,
பாலில் அபிஷேகம் செய்ததுபோலக் காட்சி அளிக்கிறது! அத்ற்கு இந்தக்ககற்களின் காதலே காரணம்!

ஆக்ராவில் இன்னும் எத்தனை ரசாயன தொழிற்சாலைவந்தாலும் சரி, தாஜ்மகால் கறுக்காது.

என்றும் மாறாத வெண்மையின் சின்னம் அது!


( இதுவரை நீங்க வாசித்தது, கேட்ட ஒரு தகவல்தான்)

சரி ஒரு சந்தேகம் இப்போ அந்த மேக்ரான் கற்கள் புழக்கத்தில்இல்லையா அதன் விலை அதிகமா அந்தகற்களைவைத்துக்கட்டப்பட்ட வேற கட்டிடங்களே கிடையாதா உலகில்!

விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்!

8 comments:

  1. //என்றும் மாறாத வெண்மையின் சின்னம் அது!//

    நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் பாராம்பரிய சின்னமும் அது!

    போன பதிவில் தங்கள் பதிலில் இருந்து தாஜ்மகாலைப் பற்றிதான் கூறப் போகிறீர்கள் என ஓரளவு ஊகித்திருந்தேன்:)? அடுத்த [பாடல்] தலைப்பு என்ன:)?

    ReplyDelete
  2. Show Original Post


    ராமலக்ஷ்மி said...
    //என்றும் மாறாத வெண்மையின் சின்னம் அது!//

    \\\நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் பாராம்பரிய சின்னமும் அது!>..\\\\

    ஆமாம் ராமலஷ்மி சரியா சொன்னீங்க

    ]\\\போன பதிவில் தங்கள் பதிலில் இருந்து தாஜ்மகாலைப் பற்றிதான் கூறப் போகிறீர்கள் என ஓரளவு ஊகித்திருந்தேன்:)? அடுத்த [பாடல்] தலைப்பு என்ன\\\

    யு ஆர் ஸ்மார்ட் ஆல்வேஸ்!!

    அடுத்தது குடியரசுதினத்துக்காக!! தலைப்பு யோசிச்சிட்டு இருக்கேன்!!

    ReplyDelete
  3. அருமையான தகவல்

    கல்லில் மிளிரும் கட்டிடங்கள்

    1.கோல்கத்தாவிலுள்ள விக்டொரியா நினைவகக் கட்டிடம் ( Victoria Memorial, Kolkata)

    கீழே உள்ள நிழல்படத்தைப் பார்க்கவும்

    விக்டொரியா நினைவகக் கட்டிடம் நிழல்படம்

    2.அபு மலையிலுள்ள தில்வாரா செய்யின் கோவில் ( Dilwara Jain temple , Mount Abu)

    கீழே உள்ள நிழல்படத்தைப் பார்க்கவும்

    தில்வாரா செய்யின் கோவில் நிழல்படம்

    இன்னும் எத்தனைக் கட்டிடங்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை.

    ReplyDelete
  4. திகழ்மிளிர் said...
    அருமையான தகவல்

    கல்லில் மிளிரும் கட்டிடங்கள்

    1.கோல்கத்தாவிலுள்ள விக்டொரியா நினைவகக் கட்டிடம் ( Victoria Memorial, Kolkata)

    கீழே உள்ள நிழல்படத்தைப் பார்க்கவும்

    விக்டொரியா நினைவகக் கட்டிடம் நிழல்படம்

    2.அபு மலையிலுள்ள தில்வாரா செய்யின் கோவில் ( Dilwara Jain temple , Mount Abu)

    கீழே உள்ள நிழல்படத்தைப் பார்க்கவும்

    தில்வாரா செய்யின் கோவில் நிழல்படம்

    இன்னும் எத்தனைக் கட்டிடங்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை.

    8:32 AM
    >>அட அட அற்புதமாக இருக்கின்றன திகழ்மிளிர்! இதுபோல இன்னமும் இருக்குமோ ரொம்ப நன்றி வருகைக்கும் படங்களைப்பகிர்ந்து கொண்டதுக்கும்

    ReplyDelete
  5. //குடியரசுதினத்துக்காக!! தலைப்பு யோசிச்சிட்டு இருக்கேன்!!//

    ‘இந்திய நாடு என் வீடு..இந்தியன் என்பது என் பேரு..’ன்னு வரப் போகும் பதிவா? நல்லது:), காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  6. ராமலக்ஷ்மி said...

    //குடியரசுதினத்துக்காக!! தலைப்பு யோசிச்சிட்டு இருக்கேன்!!//

    ‘இந்திய நாடு என் வீடு..இந்தியன் என்பது என் பேரு..’ன்னு வரப் போகும் பதிவா? நல்லது, காத்திருக்கிறோம்.>>>>>


    ராமலஷ்மி தலைப்பு எதுன்னு தெரில்ல குடியரசுதின செய்திகளை சேகரிச்சிட்டு இருக்கேன் நேரம் கிடைச்சா இட்டுவிடுவேன்....உங்க தலைப்புக்கே ஏதாவது எழுதலாம் போல இருக்கே நன்றி ரொம்ப.





    \\\ஜோதிபாரதி said...
    நல்லபகிர்வு\\\\

    நன்றி ஜோதிபாரதி

    ReplyDelete
  7. சூப்பர் தகவல்.






    எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் "கேக்ரான் மேக்ரான்"தான் வடிவேலு புண்ணியத்துல


    :))))))))))))))))))

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.