Social Icons

Pages

Thursday, January 22, 2009

நீலநிறம்! வானுக்கும்கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன்...!



வானம் என்ன நிறம்னு கேட்டா நீல நிறம்னு உடனே சொல்றோம்
ஆனா உண்மைல வானத்துக்கு எந்த நிறமும் இல்லையாம்!

வானம் ஒரு வெற்றுவெளிதான். பின்ன எப்படி அங்க நீல நிறம்வந்ததுன்னு

கேட்டதுக்கு, ஒரு
எழுத்தாள நண்பர் சொன்னதை அப்படியே உங்களுக்கு இங்க தெரிவிக்கறேன்!

சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களில் எல்லா நிறங்களும் இருக்கும் அதுல இந்த நீலமும் ஐக்கியம்.

இதுல ஆச்சர்யம் என்னன்னா சூரியனின் ஒளிக்கதிர்களில் உள்ள எல்லா நிறங்களுக்குமே அதன் ஒளியலைகளின் நீளம் அதிகம். நீலநிறத்தின் ஒளி அலைகள் மட்டும் நீளம் குறைவானவை.

பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம்பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.

நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.

வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.

காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம்போதுமட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம் சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!

9 comments:

  1. நல்ல தகவல் ஷைலஜா. தலைப்பாய் தந்த பாடல் வரிகள் வெகு பொருத்தம்:)!

    ReplyDelete
  2. ராமலக்ஷ்மி said...
    நல்ல தகவல் ஷைலஜா. தலைப்பாய் தந்த பாடல் வரிகள் வெகு பொருத்தம்:)!

    1:07 PM

    >>>>>>>>>>>>>>>>

    நன்றி ராமலஷ்மி
    அடுத்து வரப்போகிறது பளிங்கினால் ஒரு மாளிகை!!

    ReplyDelete
  3. நல்ல தகவல் ;)

    ReplyDelete
  4. திகழ்மிளிர் said...
    அருமை

    1:18 PM


    கோபிநாத் said...
    நல்ல தகவல் ;)

    4:19 PM

    >>>நன்றி திகழ்மிளிர்! கோபிநாத் !வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  5. //நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.//

    ரொம்ப எளிமைப் படுத்தி விட்டீர்கள் :))

    பகல் பொழுதில் காற்றின் மூலக்கூறுகளான நைட்ரஜன், ஆக்ஸிஜன் வழியாக ஒளி பாயும் போது ஏற்படும் ஒளிச் சிதறல் காரணமாக நீல நிறம் அதிகமாக தெரிகிறது. அதிகாலை மற்றும் அந்தி நேரங்களில் காற்றில் அதிக தொலைவு ஊடுருவதலால் இந்த சிதறல் அதிகமாகி வெறும் ஆரஞ்சு, சிவப்பு மட்டும் தெரிகிறது.

    வானவில்லின் வர்ணஜாலமும் இந்த ஒளிச்சிதறல் (அல்லது ஒளிப்பிரிகை) காற்றிலுள்ள நீரின் மூலக்கூறுகளில் ஊடுருவிச் செல்லுவதால் ஏற்படுவதே.

    //சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்! //

    குறிப்பிட்ட வர்ணங்களுக்கான ஒளியலைகளின் நீளம் எப்போதும் மாறுதல் அடையாது. சிவப்பு வர்ணத்திற்கான காரணம் மேலே சொன்ன ஒளிச் சிதறலின் விளைவே.

    ReplyDelete
  6. KABEER ANBAN said...
    //நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.//

    ரொம்ப எளிமைப் படுத்தி விட்டீர்கள் :))

    >>>>>>.வாங்க கபீரன்பன் எளிமையாக சொல்லும் அளவே திறமை இந்த விஷயத்தில்!!

    \\\பகல் பொழுதில் காற்றின் மூலக்கூறுகளான நைட்ரஜன், ஆக்ஸிஜன் வழியாக ஒளி பாயும் போது ஏற்படும் ஒளிச் சிதறல் காரணமாக நீல நிறம் அதிகமாக தெரிகிறது. அதிகாலை மற்றும் அந்தி நேரங்களில் காற்றில் அதிக தொலைவு ஊடுருவதலால் இந்த சிதறல் அதிகமாகி வெறும் ஆரஞ்சு, சிவப்பு மட்டும் தெரிகிறது.

    வானவில்லின் வர்ணஜாலமும் இந்த ஒளிச்சிதறல் (அல்லது ஒளிப்பிரிகை) காற்றிலுள்ள நீரின் மூலக்கூறுகளில் ஊடுருவிச் செல்லுவதால் ஏற்படுவதே.

    //சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்! //

    குறிப்பிட்ட வர்ணங்களுக்கான ஒளியலைகளின் நீளம் எப்போதும் மாறுதல் அடையாது. சிவப்பு வர்ணத்திற்கான காரணம் மேலே சொன்ன ஒளிச் சிதறலின் விளைவே.

    8:21 AM
    \\\\\

    ஓ இத்தனை விவரம் இதுல இருக்கா! நன்றீ ,தெரியப்படுத்தினதுக்கு
    நான் ஏதோ தெரிஞ்சதை சொன்னேன் அவ்வளவுதான் உங்களின் விளக்கம் அருமை! கபீரன்பன்! மிக்க நன்றி
    .

    ReplyDelete
  7. super vishayam shylaja...daily parkiradhu aana idhu niraiya perukku theriyaama irukkum...indha nira sidharalai kandu pidichadhukkaga thiru.C.V.Raman Sirkku nobel prize kidaichadhu...enna peyar poruththam parunga...

    ReplyDelete
  8. ரதி நந்தா said...
    super vishayam shylaja...daily parkiradhu aana idhu niraiya perukku theriyaama irukkum...indha nira sidharalai kandu pidichadhukkaga thiru.C.V.Raman Sirkku nobel prize kidaichadhu...enna peyar poruththam parunga...



    1:21 PM
    >>>>>

    ின்ன விஷயங்கள் சிலடைம்ல நம் கவனத்துக்கு வராமபோய்டும்.

    சிவிராமனுக்கு கிடைச்ச விருது மகத்தானதுதான் தகுதியான மனிதர் அதற்கு
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நந்தா

    ReplyDelete
  9. ரதி நந்தா said...
    super vishayam shylaja...daily parkiradhu aana idhu niraiya perukku theriyaama irukkum...indha nira sidharalai kandu pidichadhukkaga thiru.C.V.Raman Sirkku nobel prize kidaichadhu...enna peyar poruththam parunga...



    1:21 PM
    >>>>>

    ின்ன விஷயங்கள் சிலடைம்ல நம் கவனத்துக்கு வராமபோய்டும்.

    சிவிராமனுக்கு கிடைச்ச விருது மகத்தானதுதான் தகுதியான மனிதர் அதற்கு
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நந்தா

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.