இனி வருடம்முழுக்க எப்படில்லாம் இருக்கணும்னு முன்கூட்டியே தீர்மானம்போட்டுட்டு அப்படியே இருக்கபோறேன்
பாருங்கன்னு சபதம் எடுப்பதுதான் இந்தபுத்தாண்டுசபதம்!
சபதம் நிறைவேறுகிறவரை பாஞ்சாலிகூந்தலை முடியவேஇல்லையாம்..!!இப்போ சபதம்லாம் எடுக்கமாயே பெண்கள் பலர் அப்படித்தான் இருக்கோம்:!! சரி ...இப்போ நான் என சொல்லவரேன்னா நாலுமாசத்துக்குமேல பூட்டிவச்சிருந்த என் வலைமனையை இனிமே அப்படி விடறதாஇல்ல!!
பெருக்கி நல்லா துடச்சி மார்கழித் திங்கள் அல்லவா, அதனால் மதிகொஞ்சும் வேளைபார்த்து கோலமிட்டு வீட்ல தூசிதட்டி
விளக்த்த்திட்டேன்,,,
இனிமே வாரம் ஒருபதிவுபோடறதாகவும் இருக்கேன்,,, யாருங்க அங்க துகா துகா ன்னு ஓட்றது?:)
புத்தாண்டை வரவேற்கும் கவிதை அடுத்து வர, இப்போது வலைமனைபுகுவிழா ஆரம்பமாகிறது ஜோரா கைதட்டுங்க எல்லாரும்!
அதுக்கு முன்னாடி புத்தாண்டு தின சபதம் உங்களுக்கும் இருக்குமே.. இனிமே விடாம டைரி எழுதறது ,இனிமே தினம் வாக் போவது,
இனிமே சக்கரைஇல்லாமல் காஃபி, இனிமே ஃபிகர்பக்கம் தலைவைப்பதில்லை இனிமேமெகா சீரியல் பாக்றதில்ல இப்படி ஏதாவது இருக்குமே?
கொஞ்சம் விரிவா எழுதுங்க ப்ளீஸ்,,.... அப்படியே நீங்க எழுத விரும்பும் 4பேரையும் அழைச்சிடுங்க.என்ன?
சபதம் எடுத்தவங்களில் நான் அழைக்கு நாலுபேர்..நாலுபேருக்கு(ம்) முன்கூட்டியே நன்றி!!
மஞ்சூர்ராசா
கண்ணபிரான் சங்கர்
சுவாதி
ஆசிஃப்மீரான்
வாங்க வந்து கலக்குங்க!!
பிரியங்களுடன்
ஷைலஜா
Tweet | ||||
நல்ல சபதம்!!
ReplyDeleteகாப்பாத்துங்க சபதத்தை!!
வாழ்த்துக்கள் ப்ரியங்களுடன்
மங்களூர் சிவா
அட..
ReplyDelete'ஒரு தாயின் சபதமா' இது?
:)
புத்தாண்டு வாழ்த்துக்கள்
" ஷைலஜா சபதம் " வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
ReplyDeleteதிண்ணியராகப் பெறின்னு வள்ளுவர் சொல்லீருக்காரு, நீங்க திண்ணியருதான்...எடுத்த சபதம் முடிச்சே தீருவீங்க. புத்தாண்டு மற்றும் சபத வாழ்த்துகள்.
\\மங்களூர் சிவா said...
ReplyDeleteநல்ல சபதம்!!
காப்பாத்துங்க சபதத்தை!!\\
வழிமொழிகிறேன்..
புத்தாண்டு வாழ்த்துக்கள் ;)
அப்படியே நம்ம நேயர் விருப்பத்தையும் கொஞ்சம் கண்டுக்கங்க. சிறந்த பாடகர் அவார்டு தரேங்கறேன், யாரும் மாட்ட மாட்ராங்கா ;)
ReplyDeleteneyarviruppam.blogspot.com
//நல்ல சபதம்!!
ReplyDeleteகாப்பாத்துங்க சபதத்தை!!
வாழ்த்துக்கள் ப்ரியங்களுடன்
மங்களூர் சிவா//
காப்பாத்திடுவேன்னு நினைக்கிறேன்!!
நன்றி அருமைத்தம்பி சிவா!
ஷைலஜா
சிறில் அலெக்ஸ் said...
ReplyDeleteஅட..
'ஒரு தாயின் சபதமா' இது?
:)
புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றி அலெக்ஸ்! உங்களுக்கும் புதுவருட வாழ்த்து! தாயின் சபதமா?!அது என் குழந்தைங்ககிட்ட மட்டும்!!!
ஷைலஜா
சிறில் அலெக்ஸ் said...
ReplyDeleteஅட..
'ஒரு தாயின் சபதமா' இது?
:)
புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றி அலெக்ஸ்! உங்களுக்கும் புதுவருட வாழ்த்து! தாயின் சபதமா?!அது என் குழந்தைங்ககிட்ட மட்டும்!!!
ஷைலஜா
//மலைநாடான் said...
ReplyDelete" ஷைலஜா சபதம் " வெற்றிபெற வாழ்த்துக்கள்.//
வாங்க மலைநாடான்! சபதம் பிரமாதமா போட்டுட்டேன் பயமா இருக்கு..ஒழுங்கா காப்பாத்தணுமேன்னு!
//G.Ragavan said...
ReplyDeleteஎண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின்னு வள்ளுவர் சொல்லீருக்காரு, நீங்க திண்ணியருதான்...எடுத்த சபதம் முடிச்சே தீருவீங்க. புத்தாண்டு மற்றும் சபத வாழ்த்துகள்//
ராக்ஸ்! நன்றி நன்றீ! வள்ளுவர் வாக்கெல்லாம் எடுத்துக் கொடுத்துருக்கீங்க...நிச்சயம் முடிச்சே தீரணும்...வலையில் முத்தெடுக்கும் உங்களையெல்லாம் பார்த்து நானும் வாலைமீனாவது எடுக்க வேணாமா?:) புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி...!
***கோபிநாத் said...
ReplyDelete\\மங்களூர் சிவா said...
நல்ல சபதம்!!
காப்பாத்துங்க சபதத்தை!!\\
வழிமொழிகிறேன்..
புத்தாண்டு வாழ்த்துக்கள் ;)*****
வழிமொழிந்த கோபி! உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
/SurveySan said...
ReplyDeleteஅப்படியே நம்ம நேயர் விருப்பத்தையும் கொஞ்சம் கண்டுக்கங்க. சிறந்த பாடகர் அவார்டு தரேங்கறேன், யாரும் மாட்ட மாட்ராங்கா ;)
neyarviruppam.blogspot.com//
பாட்டை மாத்துங்க சர்வ்ஸ்! இல்லேன்னா இன்னொரு பாட்டு கொடுங்க வந்து கலக்கிடமாட்டோமா?:)
புத்தாண்டும் அதுவுமாய் தன் வலமனை புகுவிழாவில் ஆரம்பத்திலேயே சபதம் எடுக்காதவனை சபதம் எடுக்கவைக்கும் சதித்திட்டம் நடத்தும் சைலஜாவுக்கு தண்டனை கொடுக்க யாரும் இல்லையே இந்த உலகில்?
ReplyDeleteஎன்ன சபதம் எடுக்கலாம் என யோசித்து தூசி படிந்து கிட்டத்தட்ட பதிவே காணோம் என்ற நிலையில் இருக்கும் என் பதிவின் தூசியை தட்டி (சரி செய்யவே ஒரு வாரம் ஆகும் என்பதால்) விரைவில் எழுதுகிறேன்.
//பாஞ்சாலிசபதம் சிவகாமியின் சபதம் மாதிரி (வேற இன்னும் சபதங்கள் இருக்கும்..கண்ணபிரான் ரவி ஹெல்ப் ப்ளீஸ்!!) இது புத்தாண்டுசபதம்!//
ReplyDeleteவந்ததும் வராததுமா, போட்டுத் தாக்குறீங்களே ஷைல்ஸ்!
பாஞ்சாலி சபதம்
சிவகாமியின் சபதம்
சரஸ்வதி சபதம்
ஒரு தாயின் சபதம்
சாணக்கிய சபதம்
சீதாப்பாட்டி சபதம்
மங்கம்மா சபதம்
ஷைலஜா சபதம்
யப்பா...மூச்சு வாங்குதே! ஜோடா ப்ளீஸ்!!
நாட்டுல எத்தனை சபலங்கள் ச்ச்சே...சபதங்களடா? :-))
இதுல புத்தாண்டு சபதத்துல இப்படி இழுத்துவுட்டா பதிவுலகம் தாங்குமா ஷைலஜா? வந்ததுமே கொலை வெறியோட வந்தா நாங்க என்ன பண்ணுவோம்? :-)
//வலமனை புகுவிழாவில் ஆரம்பத்திலேயே சபதம் எடுக்காதவனை சபதம் எடுக்கவைக்கும் சதித்திட்டம் நடத்தும் சைலஜாவுக்கு தண்டனை கொடுக்க யாரும் இல்லையே இந்த உலகில்?//
ReplyDeleteஅடடா!! தண்டனை தான் நான் இப்படி ஒரூ பதிவு எழுதி படுத்திட்டேனே எல்லாரையும்?:) எப்டியோ ஒருமீசையின் கதை உங்களை எழுதவச்சேனா இல்லையா?:) நன்றி மஞ்சூர்ராசா!
பாஞ்சாலி சபதம்
ReplyDeleteசிவகாமியின் சபதம்
சரஸ்வதி சபதம்
ஒரு தாயின் சபதம்
சாணக்கிய சபதம்
சீதாப்பாட்டி சபதம்
மங்கம்மா சபதம்
ஷைலஜா சபதம்//''''
ம்ம் இதுக்குத்தான் ஒரு கண்ணபிரான் ரவி வேணும்கிறது!! எத்தனைஎத்தனை சபதங்களை எடுத்து விட்டிருக்கீங்க!(சந்தடில என்னையும்?:)) நன்றி ரவி வருகைக்கும் கருத்துக்கும்!