Social Icons

Pages

Wednesday, January 09, 2008

பெருசு (கவிதை)

தவித்த வாய்க்கு நெஞ்சு நனைக்க
தண்ணீர் கொடுத்ததில்லை
தற்போது தாராளக் குளியலில்
உடம்பே நனைகிறது.

பொங்கலுக்கே கிட்டாத புதுத்துணிப்
போர்த்திக்கிடக்கிறது உடல்முழுதும்
கனவில்மட்டுமே அனுபவித்த சந்தனமும் சவ்வாதும்
கையிலும் காலிலும் மணக்கிறது.

புத்தகம்படிக்க சிறுவிளக்கு தந்ததில்லை
புதுக்குத்துவிளக்கு இன்று பூரித்து எரிகிறது.

அதட்டி விரட்டி ஒடுக்கிய குரல்கள் எல்லாம்
அழுகை பொங்க அல்றிட
அமைதியாய் கண்மூடி
அப்படியே கிடக்கிறது,

வீட்டுப்பெருசு என்று நேற்றுவரை
அழைக்கப்பட்ட
இன்றைய சவம்.

10 comments:

  1. கண்ணீர் வந்திருச்சு ஷைலஜா!!!!

    ReplyDelete
  2. ஊர்கூடி உரக்க அழுதிட்டு
    பேரினைநீக்கி பிணமென்று கூப்பிட்டு
    சூரியன்காட்டிடையே கொண்டுபோய் சுட்டிவிட்டு
    நீரில்மூழ்கி நினைப்பொ ழிவார்கள்
    என்று திருமூலர் அன்றே மனித வாழ்வின்
    அவலத்தைக் கூறியிருக்கிறார் சகோதரி
    அசத்தலான கடைசி வரியைக் கவனியுங்கள்!

    ReplyDelete
  3. //பெருசு said...
    கண்ணீர் வந்திருச்சு ஷைலஜா!!!!//

    பெருசு கவிதைக்கு பெருசுவே கருத்து சொல்லவந்ததுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  4. வாழ்வின்
    அவலத்தைக் கூறியிருக்கிறார் சகோதரி
    அசத்தலான கடைசி வரியைக் கவனியுங்கள்/..
    .
    நன்றி சகோதரரே!

    ReplyDelete
  5. அட அந்த சைலஜாவா இந்த சைலஜா!


    மீண்டும் எழுத வந்தாலும் வந்தீங்க.... அட என்ன ஒரு பாய்ச்சல்

    அற்புதமான உருக்கமான கவிதை


    ஆனால் நம் மைபா கூட்டம் மட்டும் அக்காவை காணோம் எங்கே என தேடிக்கொண்டிருக்கிறதாம்.

    ReplyDelete
  6. உண்மையான இயல்புக் கவிதை வெகு அற்புதம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. மஞ்சூர் ராசா said...
    அட அந்த சைலஜாவா இந்த சைலஜா!//

    ஆமா: உங்களுக்கு எத்தனை ஷைலஜா தெரியும்?:)


    மீண்டும் எழுத வந்தாலும் வந்தீங்க.... அட என்ன ஒரு பாய்ச்சல்

    அற்புதமான உருக்கமான கவிதை>>
    நன்றிங்க.


    ஆனால் நம் மைபா கூட்டம் மட்டும் அக்காவை காணோம் எங்கே என தேடிக்கொண்டிருக்கிறதாம்.>>

    வலைமனைலயும் மைசூர்பாக்கா?:)
    இது ஓவர் மஞ்சூர்ராசா!:)

    ReplyDelete
  8. John Peter Benedict said...
    உண்மையான இயல்புக் கவிதை வெகு அற்புதம். பாராட்டுக்கள்....//

    நன்றி ஜான் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  9. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.