அபரிமிதமாய் வளர்ந்திருக்கிறது
நம் தோழமை.
காதலாக மாறியதைக்
கண்களால் சொல்ல
பெண்களால் இயலும்
பின் விளைவுகளை
எண்ணிப்பார்க்காத
அவசரமும் ஆர்வமும்
உன் பார்வைகளில்
ததும்பிவழிகின்றன.
சுமைகளை தோள் ஏற்றிக்கொண்டதில்
அமைதியாய்
இருக்கமுயன்றும்
அவ்வப்போது
வெறுக்க நினைப்பதாய் நடித்து
இறுகிக் கிடக்கும் என்னை
இனியவனாய் வடிவமைக்க
உன் புன்னகை உளியுடன்
வந்து நிற்கிறாய்.
தெறித்துவிழும் துணுக்குகளில் தெரியும்
கண்ணீர்ச்சொட்டுகளும் குருதித்துளிகளும்
உன்னை அதிரவைக்கும்.
கல்தான் ஆண்
சட்டென் கலங்கிநிற்கவும்
அனுமதியாத உலகம்.
ஆசைகளை அசைபோட்டு பார்க்கமட்டுமே
அரும்பொருள்இல்லாத
அன்புமனங்களுக்கு சாத்தியம்.
உன் செதுக்கல் முடிவடைவதற்குள்
என் சுமைகள் குறையலாம்
கனவுகள் நனவாகலாம்.
சிலையின் கண்களை
கடைசியில் தான்
திறப்பார்களாமே?
Tweet | ||||
//
ReplyDeleteஅன்பினை அதிகம் தின்று
//
ஜெலுசில் எதாவது போட சொல்லுங்க ஜீரணம் ஈசியா ஆகும்!!
//
ReplyDeleteகாதலாக மாறியதைக்
கண்களால் சொல்ல
பெண்களால் இயலும்
//
ஆமாம் பெரிய
தில்லாலங்கடிங்கதான் பொண்ணுங்க!!
இதுக்கு விளக்கவுரை யாராவது எழுதுங்களேன்பா ஒண்ணும் புரியலியே!!
ReplyDeleteவிளக்கவுரை :
ReplyDeleteகழுதைக்கு தெரியுமா ? கற்பூர வாசனை.
மங்களூர் சிவா said...
ReplyDeleteஇதுக்கு விளக்கவுரை யாராவது எழுதுங்களேன்பா ஒண்ணும் புரியலியே!!
சிவா! ஓவர் குறும்புதான்:)
அன்பினை அதிகம் தின்று
//
ஜெலுசில் எதாவது போட சொல்லுங்க ஜீரணம் ஈசியா ஆகும்!!//
இது அதைவிட ஓவர்!!
//ஆமாம் பெரிய
தில்லாலங்கடிங்கதான் பொண்ணுங்க!!//
உங்க இனம் மட்டும் என்னவாம்?:):)
நன்றி கருத்துகளுக்கு
ஷைலஜா