வெள்ளி அரும்புகள் விள்ளவே
மெல்லிய தென்றலின் வீச்சிலே
கள்ளத்தனத்தினைக் காட்டிடாக்
கன்னிப் பெதும்பையைப்போலவே
கொள்ளைச்சிரிப்புடன் மெல்லவே
கொத்தாய்க் குலுங்கும் மல்லிகே
என்ன மகிழ்ச்சியைக்கண்டனை
எள்ளத்தனைப்போது வாழ்க்கையில்
மலரத்தெரிந்த உனக்குத்தான்
மௌனம் தானே தாய்மொழி?
(மல்லிகை....)
வாடிடா காகிதமலரைப்போல நான்
வாழவும் விரும்ப நினைத்திலேன்
வாழும் காலம் சிறிதெனினும்
வாசம் பரப்பியேதான் மகிழ்வேன்
பாடிடும் வண்டினம் அத்தனையும்
பார்த்து மயங்கியே சுற்றிடவும்
சூடிட எண்ணியே நாடிடும்
சுந்தரக்கன்னியர் தேடவும்
ஆடுவேன் செடியில் சில கணமே
அப்புறம் நிரந்தர மௌனத்தில்
ஆழ்ந்தே போவேன் அதுவிதியே!
Tweet | ||||
மனிதன் - புரியுது..ஆனா புரியல..;))
ReplyDeleteமல்லிகை -
நல்லாயிருக்கு..
\\\அப்புறம் நிரந்தர மௌனத்தில்
ஆழ்ந்தே போவேன் அதுவிதியே!\\
பிடித்த வரிகள் ;)
அருமை
ReplyDeleteநன்றி கோபி மற்றும் திகழ்மிளிர்!
ReplyDeleteஅன்புடன்
ஷைலஜா
\\\அப்புறம் நிரந்தர மௌனத்தில்
ReplyDeleteஆழ்ந்தே போவேன் அதுவிதியே!\\
உண்மை. மௌனம் சில சமயங்களில் கை கொடுக்கிறது மனித வாழ்க்கையிலும்
கவிதை அருமை.