மார்கழித்திங்கள் நாளில்
நாடெல்லாம் புதுமை செய்ய
காடெல்லாம் விளைந்து செழிக்க
தேடிவந்ததிங்கு தேன்சுவைப் புத்தாண்டு!
வீடெல்லாம் நிறைந்த தூசி
ஓடிடப் பெருக்கித்தள்ளி
பாடி நாம் பரவசமாய்
ஆடிக் கொண்டாடியே வரவேற்கும் புத்தாண்டு!!
செந்தமிழ் நாட்டிற்கென்றே சிறப்புற அமைந்தபொங்கல்
வந்ததும் விளைவுபொங்கத் தருவதும் புத்தாண்டு!
இத்தாரணியில் நாம் என்றும் இனிதே வாழ
புத்தாண்டில் உறுதிமொழி இப்படியே எடுப்போம்!
"அறிவெனும் நீரைப்பாய்ச்சி
அன்பெனும் பயிரை நடுவோம்
நெறி எனும் வேலி போட்டு
நெஞ்செனும் நன்னிலத்தில்
வெறி என வளரப் பார்க்கும்
வேற்றுமை களைந்திட்டு
அறுவடை நாம் செய்வதெல்லாம்
அளவிலா மகிழ்ச்சி தானே?"
(கவிதை முத்தமிழ் போட்டிக்கு சமர்ப்பணம்!)
Tweet | ||||
அர்த்தம் நிறைந்த கவிதை ;)
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் ;)
//நெஞ்செனும் நன்னிலத்தில்
ReplyDeleteவெறி என வளரப் பார்க்கும்
வேற்றுமை களை ந்திட்டு
அறுவடை நாம் செய்வதெல்லாம்//
கலக்கறீங்கோவ்வ்வ்வ்வ்வ்! :-)
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஷைலஜா!
நன்றி கோபி உங்களுக்கும் புதுவருட வாழ்த்து! கண்ணபிரான் ரவி! என்ன நீங்க மாதவிப்பந்தல்ல கலக்கறத விடவா நான் கலக்கறேன்?!! நன்றி நன்றி நன்றி!
ReplyDeleteகவிதை அருமை!
ReplyDelete\\"அறிவெனும் நீரைப்பாய்ச்சி
அன்பெனும் பயிரை நடுவோம்
நெறி எனும் வேலி போட்டு
நெஞ்செனும் நன்னிலத்தில்
வெறி என வளரப் பார்க்கும்
வேற்றுமை களைந்திட்டு
அறுவடை நாம் செய்வதெல்லாம்
அளவிலா மகிழ்ச்சி தானே?"\
அசத்தல் வரிகள்!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!