
பெரம்பலூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அந்த புளியமரத்தடியின் கீழ் வந்து நின்றாள் ராஜேஸ்வரி. கைபிடித்து நடந்து வரவேண்டிய ஏழுவயது மகளை ஒருகிலோமீட்டருக்குமேல் தூக்கிவந்ததில் நிழலில் நின்றதும் மூச்சுவாங்கியது. அப்போதும் இடுப்பிலிருந்து தோளில் போட்டுக்கொண்டாளே தவிர மகளை கீழே இறக்கவில்லை. முதல்நாள் மதியத்திலிருந்து நடு இரவு வரை ஊரில் பெரியமனிதர்கள்...