Social Icons

Pages

Saturday, May 02, 2015

ஏலகிரிக்குப்போகலாம்!





வேலுர் அருகே   ஏலகிரிமலைக்கு   காலனியில் உள்ள குடும்பத்தினர் அனைவருமாக உல்லாசப்பயணம் சென்றுவந்தோம்.
 
வெயிலூராக மாறிவிட்ட வேலூர் மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1410.60 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கோடையில் இதமான, மிதமான வெப்பநிலையில் தென்றல் வீசுவது சிறப்பு.


  இதுமட்டுமன்றி, மொத்தம் இருக்கும் 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கும், காரி, பாரி, ஓரி, ஔவையார், கபிலர், கம்பர், இளங்கோ, திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் எனத் தமிழ் வளர்த்த புலவர்கள், அரசர்களின் பெயர்கள். சாலைகள் அனைத்தும் பளிச்சென, புத்துயிர் பெற்று, பள்ளம் மேடின்றி, அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன.
 
ஊட்டி கொடைக்கானல்போல  பணக்காரத்தனம் கிடையாது. அதற்காக ஏழ்மையின் சோகமும் இல்லாமல்  மத்தியதரக்குடும்பத்தினரின்  நிலையில்  உள்ள மலைவாசஸ்தலம் இது.
 
 
  வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர், பெங்களூர் பகுதி மக்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.  பெங்களூரிலிருந்து காரில் சுமார் 4 மணி நேர பயணத்தில் ஏலகிரியை அடைய முடியும் என்ற சூழல் இருக்கிறது. அருகில்  இருப்பவர்கள், மடித்துக்கட்டிய வேட்டியுடன், இரு சக்கர வாகனங்களிலேயேகுடும்பத்துடன்
மேலும் படிக்க... "ஏலகிரிக்குப்போகலாம்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.